தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச்
செய்த
விளாங்குறிச்சி (விளவை)
செல்வவிநாயகர் பதிகம்
காப்பு
(நேரிசை
வெண்பா)
நல்லவர்கள் போற்றும்
நலம்கொள் விளவைநகர்ச்
செல்வ விநாயகர்மேல்ச்
செந்தமிழால் - சொல்லுதமிழ்க்கு
ஆயதுணை யன்னோ னடிமலர்கள்
நாடுமன்பர்
தூயதிருப் பாதத்
துகள்.
(1)
நூல்
(எழுசீர்
ஆசிரிய விருத்தம்)
மருப்பணி துதிக்கைத்
திருமுகத் தெழிலும்
வழியருள் விழிகளும் பவளப்
பொருப்பணி மேனிப்
பொலிவும்மெ யடியார்
போற்றிடுந் திருவடி மலரும்
விருப்பணிச் சித்தி
புத்திமத் தியினில்
விளங்கருள் காட்சிதந் தருள்வாய்
திருப்பணித் தொண்ட
ரவிர்விளாங் குறிச்சிச்
செல்வவி நாயக மணியே.
(2)
தம்பிதன் பொருட்டா
ஏனலார் புனமேல்
சார்தரு முன்திரு வடிகள்
வெம்பிசை யடியேன்
மனத்தகத் தெய்தின்
வெதும்புமோ தொண்டர்துன் பகற்றக்
கொம்பிசை கையு மங்குச
பாசங்
கொண்டதிண் கரத்துட னவிர்வாய்
தெம்பிசை யன்பர்
திகழ்விளாங் குறிச்சிச்
செல்வவி நாயக மணியே.
(3)
மெய்யினைப் பெறற்காக்
கிடைத்ததாம் பலபல்
மெய்யினை வீணதாய்த் தொலைத்தே
உய்வகை யறியா தவத்திலே
வுழன்றேன்
உறுதியொன் றின்றியே கழித்தேன்
எய்திடக் கிடைத்த
விப்பிற வியினில்
ஏற்றமார் நின்திருப் பணிகள்
செய்யவைத் தாள்வா
யணிவிளாங் குறிச்சிச்
செல்வவி நாயக மணியே.
(4)
நற்றவத் தொண்டர்
போற்றுமுன் பாத
நாட்டமு முலகமா யையினில்
உற்றவத் துழலா வுயர்வையு
மடியேற்கு
உதவியாண் டருளிட வேண்டுங்
குற்றமற் றவர்கள்
கருள்குணக் குன்றே
குறித்திடார் முப்புர மதனைச்
செற்றவர் மதலாய்
திருவிளாங் குறிச்சிச்
செல்வவி நாயக மணியே.
(5)
உன்னையே கருதி வுன்னையே
துதித்துன்
உயர்பணி யேமிக வாற்றி
என்னையே மறந்த ஞானநிட்
டையினில்
எய்திட யருளும்நா ளுளதோ
இன்னலுற் றடைவார்க்
கிகபரச் சீர்த்தி
ஈந்தருள் புரிந்திடு மிறைவா
தென்னைமிக் கவிரும்
பொழில்விளாங் குறிச்சிச்
செல்வவி நாயக மணியே.
(6)
நறுமலர்ப் பொழில்சூழ்
நாரையூர் வந்த
நம்பியாண் டார்நம்பி திருமுன்
தருநிவே தனங்கள்
தன்னையுண் டுகந்த
தன்மையாய் நினைச்சரண் புகுந்து
பருவரல் கூறு மெனைக்கடைக்
கண்ணால்
பார்த்திட வேண்டின னிரங்காய்
திருவருள் வடிவா
யவிர்விளாங் குறிச்சிச்
செல்வவி நாயக மணியே.
(7)
இல்லையென் றடைவார்க்
கில்லையென் னாமல்
ஈயவுந் துன்புறு மவர்க்கண்டு
எல்லையி லிரக்க மெய்தவு
மவர்க்கஃது
ஏகுமா றியற்றவுங் கடைக்கண்
ஒல்லையில் புரிந்தாண்
டருளெனப் பலவாறு
ஓதுமென் விண்ணப்ப மேற்றாள்
செல்வமிக் கவர்கள்
வாழ்விளாங் குறிச்சிச்
செல்வவி நாயக மணியே.
(8)
பண்ணின்நேர் மொழியார்
சித்திபுத் திகளாம்
பாவைமார் நடுவில்மூ டிகமேல்
கண்ணின்நே தோன்றி
யாண்டிட வேண்டுங்
காசிமா நகரிடை வுதித்து
எண்ணிலா விளையாட்
டியற்றிய பெரும
எந்தையே சந்தமார் முடிமேல்
தெண்ணிலா தணிந்தா யணிவிளாங் குறிச்சிச்
செல்வவி நாயக மணியே.
(9)
வந்தவா பேசி நாத்திக
நெறியை
வளர்த்திடு மவர்களை யுனது
சிந்தனை யாள ராக்கிமெஞ்
ஞானச்
சிறப்பினில் திருப்பிடற் கான
செந்தகை வரமோன் றருளிட
வேண்டும்
சிறியனேன் முறைசெவி ஏற்பாய்
செந்தமிழ் நாட்டி
னணிவிளாங் குறிச்சிச்
செல்வவி நாயக மணியே.
(10)
அடிகள்நின் கோவில்
வலமுற வந்து,
அஞ்சலி செய்துநீ ராட்டி
கடிகமழ் மலரா லருச்சனை
புரிந்து
கவின்துதி செய்பவர் தங்கள்
குடிதழை வுறச்செய்
திகபர நலங்கள்
கொடுத்திட வேண்டின னிரங்காய்
செடிதவிர்த் தவர்கள்
வாழ்விளாங் குறிச்சிச்
செல்வவி நாயக மணியே.
(11)
உள்ளிடு மவர்கட்
கிடர்களைந் தின்பம்
உகந்தளித் திடும்பொருட் டாகத்
தெள்ளியர் விளவைக்
கோவிலி லமருஞ்
செல்வவி நாயக மணியை
விள்ளுசீர்ச் சிரவை
யருள்கவு மாரம்
விரும்படி யாரடிச் சிறுவன்
ஒள்ளிய பாடல் பத்திவை
யன்பால்
ஓதுவார் தீதிலா தவரே.
(12)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக