தவத்திரு
கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த
பெரிய
நாயக்கன் பாளையம் வேணுகோபாலர் பதிகம்
காப்பு
(நேரிசை
வெண்பா)
போதார் பொழில்சீர்
பொலிபெரிய நாய்க்கன்நகர்
ராதாவும் ருக்மணியும்
நண்ணிடும்மால் - பாதார
விந்தங் கரவிளங்
கும்வுயர் பாகவதர்
சொந்தமலர்ப் பாதந்
துணை.
(1)
நூல்
(எழுசீர்
ஆசிரிய விருத்தம்)
பூவினில்க் குடிகொண்
டிடும்திரு மகளும்
புவிமக ளும்பொருந் துன்னைச்
சேவியே னெனினுங்
கருணையா லென்முன்
திகழ்ந்தருள் புரியவேண் டினன்காண்
நாவிசைத் திடுசீர்ப்
பெரியநாய்க் கப்பேர்
நண்ணிய பதியினி லருள்சீர்
மேவிய இராதா ருக்மணி
யுடன்வாழ்
வேணுகோ பாலமா தவனே.
(2)
பொன்னும்நன் மணியும்
பொருளென நினைத்துப்
புண்படா வாறுநா யடியேன்
நின்னுள மிசையும்
பெரியபா கவதர்
நிறைகுழு விடைவுற நிறுத்தாய்
பன்னுசீர்ப் பெரிய
நாயக்கநற் பதியில்
பார்மகள் பூமக ளுடனே
மின்னும்இ ராதா ருக்மணி
யுடன்வாழ்
வேணுகோ பாலமா தவனே.
(3)
தளிரிலை கொண்டுன்
திருப்பெயர் பரவிச்
சாத்தியேத் திக்கண்ணீ ரன்பால்
துளிகொள வுருகிப்
பாடும்மாண் புதவத்
துணைப்பதம் தொழுதன னுதவாய்
குளிர்பொழில்ச் சீரார்
பெரியநாய்க் கப்பேர்
குலவிய பதியினில்க் கருணை
மிளிர்புகழ் ராதா
ருக்மணி யுடன்வாழ்
வேணுகோ பாலமா தவனே.
(4)
தொண்டுசெய் யன்பர்
தொழும்பர்தம் தொழும்பன்
எனநினைத் துதித்தநம் மாழ்வார்
கண்டுசொல் லடிமைப்
பண்புநா னெய்தக்
கடைக்கணித் தருள்வது கடன்காண்
பண்டுசீ தையினை மணந்துரா
கவனாம்
படிவினில் படியினி லவிர்ந்த
விண்டுவே ராதா ருக்மணி
யுடன்வாழ்
வேணுகோ பாலமா தவனே.
(5)
காரண வியநின் கோலமே
கருதுங்
கருத்துடன் சீதரா முகுந்தா
நாரணா கோவிந் தாவெனத்
திகழுன்
நாமமேத் தும்தவம் நல்காய்
சீரணை பெரிய நாய்க்கன்றன்
பெயரால்
திகழ்புகழ்ப் பதிக்கிறை யவனாம்
வீரனே! ராதா ருக்மணி யுடன்வாழ்
வேணுகோ பாலமா தவனே.
(6)
முமலாவா தனையால்
வேதனைப் பட்டேன்
வேதனைப்
பெற்றநின் னுடைய
அமலமே னியினில்த்
திருத்துழாய் கொண்டே
அர்ச்சனை விருப்பினால்ச் செயச்செய்
கமலமார் தடஞ்சூழ்
பெரியநாய்க் கப்பேர்க்
கவின்பதி யினில்குழல் பயிலும்
விமலனே ராதா ருக்மணி யுடன்வாழ்
வேணுகோ பாலமா தவனே.
(7)
களங்கமில் லாமெய்
யன்பினா லுருகிக்
காதலித் தேத்திடு மன்பர்
உளங்கவி னிடமா யிருந்தருள்
புரிவாய்
உரைக்குமென் கவிவிழை வாயோ
குளம்கமழ் பூஆர்
பெரியநாய்க் கப்பேர்
குலவிய பதியினி லென்றும்
விளங்கிடும் ராதா
ருக்மணி யுடன்வாழ்
வேணுகோ பாலமா தேவனே.
(8)
சென்றகா லத்தி லெப்பிழை
செய்தேன்
தெரிகிலே னுன்றன்ந லருளால்
நின்றவிந் நாளில்
நின்பதம் துதிக்க
நேர்ந்தனன் சார்ங்கபா ணியனே
நன்றவிர் பெரிய நாய்க்கன்றன்
பதிசேர்
நாதனே ராவண னழிய
வென்றவா ராதா ருக்மணி
யுடன்வாழ்
வேணுகோ பாலமா தவனே.
(9)
கஞ்சமா மலரோன் விதிப்பிழை
வராமல்க்
காப்பதுன் கடமையா மெனவே
நெஞ்சம திரங்கி யென்விழி
காண
நித்தியத் தரிசனை தருவாய்
வஞ்சமில் லார்சூழ்
பெரியநாய்க் கப்பேர்
வளநகர்க் கோயில்கொண் டிடுவாய்
மிஞ்சருள் ராதா ருக்மணி
யுடன்வாழ்
வேணுகோ பாலமா தவனே.
(10)
செயம்மிகும் பார்த்த
சாரதி யாகித்
தேரினை விசயற்காச் செலுத்திப்
பயமுடன் பாச மகற்றிக்கீ
தையினைப்
பகர்ந்தநின் சீரெளி தாமோ
நயமிகும் பெரிய நாய்க்கனூர்
மருவும்
நாரணா பூரணா நாளும்
வியனுறும் ராதா ருக்மணி
யுடன்வாழ்
வேணுகோ பாலமா தவனே.
(11)
இலிங்கோத்பவர்
துதி
பிரமனும் திருமா
லவனும்நான் தானே
பெரியவ னென்றுவா திடும்நாள்
திரமவிர் நெருப்பு
மலையுரு வானாய்
திகழுமவ் விருவரு மடியும்
உரமுறு முடியுங்
காண்கிலா தயர்கால்
ஒளிரிலிங் கத்திரு வுருவாம்
பரமனே பெரிய நாய்க்கனூ
ரதனில்
பரவுவார்க் கருள்செய் சிற்பரனே.
தட்சிணாமூர்த்தி
துதி
(எண்சீர்
ஆசிரிய விருத்தம்)
சனகன்முத லாம்பிரமன்
புதல்வரொரு நால்வர்
சாற்றுமறை நான்கினையுந் தக்கபடி கற்றும்
மனமொருமைப் படாமல்விரிந்
துற்றுவருந் திடும்நாள்
மருவுகல்லால் மரத்தடியில் தென்முகமா வயங்கி
அனகவடி வானவலக் கரத்தில்சின்
மயமாய்
அவிர்குறியா லவர்கள்மன மொருமைபெற வருள்வாய்
கணம்மருவும் பெரியநாய்க்
கப்பதியில் மேவும்
கண்ணுதலே நின்றனிரு கழலிணைபோற் றுவனே.
கல்யாண
நவக்கிரகத் துதி
(அறுசீர்
ஆசிரிய விருத்தம்)
பரிதி மதிசேய் புதன்குரவன்
பகரும் வெள்ளி சனியென்னத்
தெரியும் பெயரை வுறக்கொண்டு
திகழ்வீர் பெரிய நாய்க்கநற்பேர்
உரிய பதியில் கல்யாணம்
உற்ற நவக்கி ரகமென்பேர்
அரிய தாக்கொள் வீர்நும்மை
அன்பால் பணிவே னருள்வீரே.
நூற்பயன்
பெரிய நாய்க்கன்
பதியதனில்
பிறங்குஞ் சிவன்மால் கணேசனுமை
கரிய திருமால் தென்முகத்துக்
கடவுள் இலிங்கோத் பவர்நவமா
விரியும் கோள்கள்
துதியிவற்றை
விளம்பும் சிரவைச் சுந்தரனாத்
தெரியும் கவுமா ரன்புகல்பாச்
செப்பு மவர்மெய்த் தவத்தோரே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக