தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச்
செய்த
மருதமலை
தண்டபாணிக் கடவுள் பதிகம்
காப்பு
(நேரிசை
வெண்பா)
மஞ்சடருஞ் சோலை மருதமலை
வாழ்குமரன்
செஞ்சலசத் தாளிணையில்ச்
சேர்ப்பிக்க - நெஞ்சமையப்
போற்றுதுதிக்
கேற்றதுணை பொற்பார்தான் தோன்றிமுன்னோன்
மாற்றுந்து பொற்சே
வடி.
(1)
நூல்
(எழுசீர்
ஆசிரிய விருத்தம்)
அறுமுகம் புயமீ ராறுடன்
பிறவும்
அமையும்நின் பேருருக் கருதப்
பெறுதவ மில்லேன்
; தண்டுவே லணிந்து
பிறங்கும்நின் தெரிசனந் தருவாய்
குறுமுனி பரவத் தமிழிலக்
கணம்முன்
கூறிய குருபர குகனே
மறுவில்சீ ரடியார்
வருமெழில் மருத
மால்வரைத் தண்டபா ணியனே.
(2)
வேலுடைக் கருங்கண்
மாதர்பொன் புவியா
மேவும்மூ வாசையால் மெலிந்து
கோலுடைக் கிழமை யெய்தியுந்
தீராக்
கொடுவினை யணைவுறா தருள்வாய்
தோலுடைப் பரமன் வினவவோர்
பொருளைச்
சொற்றவா நல்தவக் குறமின்
மாலுடைக் குமர நாதனே
மருத
மால்வரைத் தண்டபா ணியனே.
(3)
தொண்டல தறியாத் தூயமா
தவர்தம்
துணையடி பரவிநின் புகழை
விண்டலர் தூவும்
மெய்த்தவ மடியேன்
மேவுமா றருள்செய விழைவாய்
விண்தலத் தமரர் தண்டலை
யிடத்தில்
விரும்பியின் புறும்பல வியனால்
மண்தலம் புகழும்
தண்டமிழ் மருத
மால்வரைத் தண்டபா ணியனே.
(4)
விடக்கொடி யவர்தம்
புகழ்சொலு மென்னை
வீறுறச் சிறகடித் தெழும்குக்
குடக்கொடித் திறமே
கூறுகௌ மாரர்
குழுவினில் கூட்டியாண் டருள்வாய்
நடக்கொடி மலைதோ றியற்றிடுங்
குமர
நாதனே வேதநூ புரத்தாள்
மடக்கொடிச் சிவைதன்
பாலனே மருத
மால்வரைத் தண்டபா ணியனே.
(5)
முந்துறும் பிறப்பில்
செய்தநல் வினையின்
முதிர்வினா லிப்பிறப் பிடையே
கொந்துறு மலரால்
பூசனை செயவுங்
குளிர்துதி செயவும்வாய்த் ததெனா
இந்துறு சடையாற்
போற்றுசம் பந்தர்
இசைத்தமாண் பெனக்குற வருள்வாய்
வந்துறு மன்ப ருந்துசீர்
மருத
மால்வரைத் தண்டபா ணியனே.
(6)
பழங்கண்ணா யிரத்தில்
பட்டுழன் றடியேன்
பாழ்மனம் படுந்துயர் தீர்த்துக்
கிழங்கயின் றிடும்மா
தவர்க்குமெய் தரும்நின்
கிளரருள் பேறுறப் புரிவாய்
முழங்கருள் பாட்டால்
காவடி சுமந்துன்
முன்வரு வோர்க்கெலா நலமும்
வழங்கருள் பரனே துலங்கெழில்
மருத
மால்வரைத் தண்டபா ணியனே.
(7)
காணரு முன்பொற் கழலினை
வணங்கக்
கருதிடா தகன்றிடும் பிரமன்
ஆணவ மறிந்து தளையிலிட்
டருள்வாய்
அடியனே னகவிருள் துடைப்பாய்
சேணகத் தமர ரமுதும்நாணி
டுசீர்ச்
செந்தமிழ்ப் புலவர்கள் புகலும்
மாணரு வளமை நீடுசீர்
மருத
மால்வரைத் தண்டபா ணியனே.
(8)
அயிலணி புயமுந் தண்டணி
கரமும்
அக்கமும் கோவண உடையும்
பயிலணி முழுநீற்
றுருவமுங் காணப்
பழையமா தவந்துணை செயுமோ
குயிலணி மொழியாள்
கோமள வள்ளி
குஞ்சரி யுடன்வரு முலாவில்
மயிலணிப் புரவிச்
சீர்திகழ் மருத
மால்வரைத் தண்டபா ணியனே.
(9)
பழுத்தமா தவர்போற்
றருணைமா தவமாம்
பாவலோன் வண்ணவாய்ச் சரபன்
விழுத்தமிழ்ப் பனுவல்
விழையும்நின் செவிக்கு
விளம்புமென் புன்சொலேற் றிடுமோ
கொழுத்தவூ ணுண்டு
குலவிய தகுவர்
குலமறக் களையும் வேல்படையாய்
விழுத்தருள் பெருக்கம்
மலிவுறும் மருத
மால்வரைத் தண்டபா ணியனே.
(10)
கொன்றுணா நெறியே
மனிதரெல் லோருங்
கொண்டிடச் செயும்நலம் வேட்டு
நின்றுண தருளை வேண்டிடு
கின்றேன்
நீயிதை யறிகிலாய் கொல்லோ
கன்றுமா னேந்திப்
புலியுடன் பாம்புங்
கண்டிடக் காளிமு னன்று
மன்றுளா டிறைவர்
மைந்தனே மருத
மால்வரைத் தண்டபா ணியனே.
(11)
குலசமேந் தியகைப்
பொன்நகர்க் கிறையுங்
குளிர்மறைப் பிரமனும் மாலும்
நலிவகன் றிடத்தீப்
பொறியென வந்தாய்
நல்லறம் தேய்ந்துதீ தவிரும்
கலியுக மாமிந் நாளில்நீ
யருள்சீர்
காட்டிட வேண்டிமிக் கிரந்தேன்
மலியருள் குமர குருபர
மருத
மால்வரைத் தண்டபா ணியனே.
(12)
பொங்குமின் சுவையார்
திருப்புகழ் முதலாப்
புகன்றுனைக் காணநாள் தோறும்
எங்குறு வாரும் வந்துவந்
தேத்த
இன்னருள் வழங்கிநீ யிருப்பாய்
கொங்குறும் வெட்சி
குராவணி புயத்தாய்
கொங்குநன் நாட்டினி லென்றும்
மங்குறா வருட்சீர்
தங்குயர் மருத
மால்வரைத் தண்டபா ணியனே.
(13)
நூற்பயன்
(நேரிசை
வெண்பா)
மருதமலைக் கோயிலின்கண்
வாழ்தண்ட பாணி
கருதணியபர் பாடல்
கழறும் - திருவமைந்த
சுந்தரநல் பேர்தோயுந்
தொண்டனேன் பாடல்கற்போர்
அந்தரத்தோர் சொல்புகழார்
வார்.
திருப்புகழ்
தனனதனத்
தந்த தானத் - தனதானா
கருமவினைத் தொந்தம்
மேவிப்
பலதுயருற்
றம்பொ னாவற்
கடலிலலைப்
புண்டு வாடித் - திரியாதே
கடினதவத் தொன்றி ஞானப்
பெருநிலையிற்
றங்கும் மேன்மைக்
கவினிசைவுற்
றின்பம் நீடித் - திகழ்வேனோ
பெருகுமெழிற் கண்கள்
தோகைப்
பரிமுதுகுற்
றண்டர் மாதைப்
பிரியகுறக்
கொம்பி னாளைத் - துணையாயே
பிறிதிணையற் றொன்று கோலத்
துடனென்முனுற்
றஞ்ச லோதிப்
பெரியசுகத்
தின்கண் மேவப் - புரிவாயே
குருவெனவுற் றன்று நால்வர்க்
கருள்பரன்நத்
தும்ப ராசற்
குணமலைமுற்
றுஞ்செ யாடற் - கிசைவேளே
கொடுமை மிகக்கொண்ட நீசத்
தகுவரையட்
டண்டர் பேணக்
குலவயில்வைக்
கும்பு யா மற் - றகரூர்வாய்
திருவருணைக் கண்கு
லாம்மெய்க்
கிளிவடிவத்
துங்க னோதத்
திகழ்கவிசெப்
பன்ப ராவற் - கிளியோனே
தெளிதமிழ்நற் றொண்டர் கூடிப்
பனிமருதக்
குன்றில் வாழ்சத்
தியவடிவத்
தண்ட பாணிப் – பெருமாளே.
வாழ்த்து
வெண்பா
(நேரிசை
வெண்பா)
வாழ்க மருத மலைத்தண்ட
பாணியன்பர்
வாழ்கதமிழ்ப் பாட்டுரைக்கும்
மாண்புடையோர் - வாழ்கவே
தொண்டுசெய்வோர் பூசைசெய்வோர்
தோயு மறம்புரிவோர்
மண்டுமின்பங் கொண்டு
மகிழ்ந்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக