தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த
விளாங்குறிச்சி
(விளவை) காமாட்சியம்மன் பதிகம்
காப்பு
(நேரிசை
வெண்பா)
சீரார் விளாங்குறிச்சி
சேர்ந்தவிர்கா மாட்சிமிசை
நாரார் துதிப்பா
நவில்வதற்குப் - பாரார்
பலமதமும் போற்றும்
பரமகுரு நாதன்
சலசமலர்த் தாளே சரண்.
(1)
நூல்
(எழுசீர்
ஆசிரிய விருத்தம்)
பருவமா மதிநேர் முகமும்மெ
யருள்சீர்
பாங்குறு மிருவிழி மலருந்
திருவடித் துணையும்
பிறவும்நான் காணத்
நெரிசனை ஈயவுள் நினைவாய்
புருவமத் தியினி
லுனைநினைத் துணரும்
புண்ணியர் நண்ணும்மா தேவீ
கருவமற் றன்பர் திகழ்விளாங்
குறிச்சி
கவின்றகா மாட்சியம் பிகையே.
(2)
எற்றைநா ளினுமுன்
பொற்பதம் பரவி
ஏடணையெனச்சொலும் மூன்றின்
பற்றையு மறுத்து
வழிபடு மடியார்
பண்பெனக் கருள்செய லென்றோ
புற்றைவா ழிடமாக்
கொளும்பணி பணியாம்
புராரிகண் டின்புறும் பொற்பார்
கற்றையம் குழலா யெழில்விளாங்
குறிச்சி
கவின்றகா மாட்சியம் பிகையே.
(3)
கஞ்சனென் றனக்கோ
ருடல்சமை யாமல்
காமனம் பெனைக்கன லாமல்
நஞ்சமொத் தெமனென்
மீதெதி ராமல்
நல்குர வெனைநலி யாமல்
தஞ்சமென் றுனையேத்
திடல்மற வாமல்
தமியனைக் காப்பதுன் கடன்காண்
கஞ்சமற் றீவார் வாழ்விளாங்
குறிச்சி
கவின்றகா மாட்சியம் பிகையே.
(4)
முமலவா தனையால் வினைசெய்சோ
தனையால்
மெலிவடைந் துளமுடைந் துழல்வேன்
அமலமா தவம்செய் துன்திரு
வருள்பெற்
றவிர்வதென் றால்முடி வதுவோ
விமலனாம் பரமன் றன்னொடு
விடையின்
மீதுவந் தருள்செய விழைவாய்
கமலமா தேத்தும் குமரியே
விளவை
கவின்றகா மாட்சியம் பிகையே.
(5)
செங்கையி லாழி சங்கணிந்
திலகுஞ்
சீதரன் சோதரி யான
நங்கையே பச்சைக்
கிள்ளையொன் றேந்தி
நம்பனுக் கிடங்கொள்நா யகியே
கொங்கையூ றமுதந்
தந்துசீ காழிக்
குழவியை யாண்டகோ மளமே
கங்கையே உமையே யணிவிளாங்
குறிச்சி
கவின்றகா மாட்சியம் பிகையே.
(6)
விலைமதிப் பில்லாச்
செந்தமிழ்ப் பாட்டால்
வீணரைப் பாடி, நாண் ணழிந்து
குலைமதிச் சிறியேன்
நின்நிலை மதிக்குங்
கூர்மதி யிலேனெனக் குறியேல்
சிலைமதி குமுதம்
வள்ளைமீன் முல்லை
திகழ்திரு முகம்கொளுஞ் சிவையே
கலைமதி வாண ரவிர்விளாங்
குறிச்சி
கவின்றகா மாட்சியம் பிகையே.
(7)
சவுனகா தியர்நேர்
தவப்பெரி யோர்கள்
சந்ததம் வந்தனை புரிந்து
மவுனஞா னாநு பூதிபெற்
றமைவார்
மையல்மா னிடத்தனென் புரிவேன்
பவுரிமுன் தில்லைப்
பரனெதி ரியற்றும்
பார்வதி காளியா மளையே
கவுரியே வாலை யேவிளாங்
குறிச்சி
கவின்றகா மாட்சியம் பிகையே.
(8)
பன்றிகுக் குடம்மீன்
போன்றப லுயிரைப்
பாழ்படும் தமுடல் பருக்கக்
கொன்றிழி தசையைத்
தின்றிடு மவர்ச்சீர்
கொளத்திருத் தும்தவங் கொடுப்பாய்
தன்திரு மேனி யினிலொரு
பாதி
தந்துமு னிந்துட னிளமான்
கன்றினை யணிந்தார்
மகிழ்விளாங் குறிச்சி
கவின்றகா மாட்சியம் பிகையே.
(9)
வாமமாம் நெறியால்
மதுவுட னூனும்
வைத்துனைப் பரவுவார் தமக்குஞ்
சேமவாழ் வளிப்பாய்
யானது விழையேன்
சிறியனே னுன்னருள் விழைந்தேன்
சாமளா தேவீ சாம்பவீ!
மாரீ
சங்கரீ யைங்கனை தனைமுன்
காமனுக் களித்தா
யெழில்விளாங் குறிச்சி
கவின்றகா மாட்சியம் பிகையே.
(10)
மாசிலா மாலை மதியமுந்
தென்றல்
வாசமும் வீணையும் போலத்
தேசியை திருத்தாள்
நீழலில் பிறவித்
தீமையின் வெம்மைதீர் குவனோ
பூசிய நீறும் மஞ்சளும்
பச்சைப்
பொற்பும்முற் றிடவெதிர் வந்து
காசினி யினிலாண்
டருள்விளாங் குறிச்சி
கவின்றகா மாட்சியம் பிகையே.
(11)
நூற்பயன்
நந்தலில் வளஞ்சார்
சிரவைதோய் இராமா
னந்தமா தவனடி பரவுங்
கந்தசாமி மிக்கன்
பமைந்தசுந் தரமாம்
கவின்பெய ரவிரடிச் சிறியேன்
கந்தம்நீள் சோலை
திகழ்விளாங் குறிச்சி
கவின்றகா மாட்சியைப் போற்றும்
இந்தநற் றுதிப்பாட் டோதுவார்க் கெல்லாம்
இன்பமே தருமுமை யருளே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக