ஞாயிறு, 18 அக்டோபர், 2026

சிரவையாதீனம் அழகிய நாயகி பதிகம்

 

தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த

சிரவையாதீனம் அழகிய நாயகி பதிகம்

காப்பு

(நேரிசை வெண்பா)

சந்தம் மலிசிரவை சாரும் திருமடம்வாழ்

நந்தலில்சீர் நீடழக நாயகிமேல்ச் - செந்தமிழின்

சீரார் பதிகமொன்று செப்பவருள் செய்யுமெழில்க்

காரானை தன்பொற் கழல்.    

 (1)

நூல்

(பன்னிருசீர்க் கழிநெழிலடி சந்த விருத்தம்)

நவமணிகள் குயிற்றுபொன் முடியழகுந் திலகமவிர்

                        நன்னுதலின் செவ்வியழகும்,

             நாளுமடி யார்களிடர் களைந்திடக் கருணைபொழி

                        நயனங்கள் தோற்றுமழகும்

நவமதுர கவிவாணர் துதிகளொடு பண்டாய

                        நான்மறைகொள் செவியினழகும்

            நற்பவள மிடைவுற்ற நித்திலத் தொகையென்ன

                        நகைகொண்ட வாயினழகும்

உவமையறு புயவழகு மூறுசெய் திடுநஞ்சை

                        உண்டசிவ னுற்றகண்டம்

            உறுகண்டம் மட்டாக்கும் நாண்ணுறுக ழுத்தழகும்,

                        உத்தமத் தாளினழகும்

தவலறக் காட்டிநீ யாளுவாய் சிரவையவிர்

                        தண்டபா ணித்தளியினில்

            தழையுமழ கியநாதர் விழையுமழ கியதேவி

                        சங்கரிவு மாதேவியே.                        

 (2)

பங்கயா னனம்மேவும் பானலொடு முல்லையைப்

                        பார்த்திறைவன் சடையில்வாழும்

             பனிக்கதிர் பகலிரவை அறியாமல்த் தடுமாறிப்

                        பாவமொரு பிறையாகினான்

கங்கைமகள் தன்னுருவைக் காட்டவழி யின்றியே

                        கனபயம் கொண்டடைந்தாள்

            கண்களிற் படநாணி கையிலகு நவ்வியதன்

                        கழுத்தினை எதிர்திருப்புந்      

துங்கம்மிகு பச்சைநிறச் சாயலைக் கண்டுசிவன்

                        தோளணிக ளாமரவினந்        

            தோகையென வேமருண்டு மறைந்திடற் கிடம்நாடி

                        துன்றுசடைக் காட்டைநோக்கும்

சங்கரற் கெதிர்காட்சி இங்ஙனமோ சிரவையவிர்

                        தண்டபா ணித்தளியினில்

            தழையுமழ கியநாதர் விழையுமழ கியதேவி

                        சங்கரிவு மாதேவியே.                                    

 (3)

சங்கத்த மிழ்ப்புலவர் தங்கட்கு முன்நின்று

                        சங்கரனோர் கொங்குதேராம்

             தண்டமிழ்த் துறைசெப்பி வாதிட்ட மதுரையினில்

                        சந்த்ரகுல மகளாகியே

மங்குலூர் வான்கனலி காலன்வல் நிருதிவருணன்

                        மருத்துவன் மனுவாகனன்

            மழவிடைகொள் ளீசான னாமட்ட பாலகரை

                        மாவெற்றி பெற்றபின்னர்

துங்கமுடி சூடிநல் மங்கையர்க் கரசியென

                        தொல்லுலகு போற்றநின்றுஞ்

            சோமசுந் தரராள விட்டுநீ நின்றபுகழ்

                        சொல்லினிற் கடங்குமொன்றோ

தங்கம்நிக ரங்கயற் கண்ணியே சிரவையவிர்

                        தண்டபா ணித்தளியினில்த்

            தழையுமழ கியநாதர் விழையுமழ கியதேவி

                        சங்கிரிவு மாதேவியே.                        

 (4)

கஞ்சமலர் வாவிமலி கச்சிப்ப திக்குளயர்

                        கண்ணுதல ளித்திட்டதாம்

            கால்ப்படியி ரட்டியநெல் கொண்டுமுப் பத்திரண்டு

                        கனவறங் கள்வளர்த்தாய்

விஞ்சைதரு மங்கையொடு பங்கயம டந்தையினை

                        விழையுமிரு விழியாக்கினாய்

            வேண்டிவரு மன்பர்விழை காமகோ டிகளீந்து

                        விரிகருணை மிளிரநின்றாய்

விஞ்சிவரு வெஞ்சூர மாமுதல்த் தடிந்திட

                        வேலன்கை வேலாகினாய்

            விண்ணவரும் மண்ணவரும் போற்றவே ஐந்தொழில்கள்

                        விந்தையா கப்புரிகுவாய்

தஞ்சமா ளன்னைகா மாட்சியே சிரவையவிர்

                        தண்டபா ணித்தளியினில்

             தழையுமழ கியநாதர் விழையுமழ கியதேவி

                        சங்கரிவு மாதேவியே.                        

 (5)

கயலொடுவ ரால்வாளை துள்ளிவெடி கொண்டிடுங்

                        கங்கையாற் றங்கரையினில்க்

            காசினியெ லாம்புகழும் மாகாசி நகரிடைக்

                        கரண்டியோர் கையிலேந்தி

நயம்மிகப் போனகம் படைத்துயிர் காக்கின்ற

                        நல்லன்ன பூரணியெனா

            நஞ்சுண்ட கண்டர்பயி லீமப்பெருங் காட்டை

                        நவிலுமா னந்தவனமாய்ச்

செயவல்ல வித்தகீ வுயவல்ல தொண்டர்கள்தம்

                        சிந்தையினில் என்றுமுறைவோய்

            சிறியனேன் பிழைகளைப் பெரிதாக வெண்ணாது

                        திருவடிக் கடிமையாக்கத்

தயவுபுரி வாய்விசா லாட்சியே  சிரவையவிர்

                        தண்டபா ணித்தளியினில்

            தழையுமழ கியநாதர் விழையுமழ கியதேவி

                        சங்கரிவு மாதேவியே.                                    

 (6)

ஒலிநீள்ம றைக்கிழவ னஞ்சிடத் தோற்றங்கொள்

                        உக்கரம்மிகு மதுகைடபர்

            ஒழிந்திடத் தாமதக் குணகாளி யாகியே

                        உத்தமர்க் குதவிசெய்தாய்

கலிநீளும் மகிடாசு ரன்றனைய ழிக்கவே

                        கனராஜ சப்பண்பினில்

            கவினா ரிலக்குமிப் பெயரோடு வந்துநீ

                        கடவுளர்க் கருள்புரிந்தாய்

வலிநீண்ட சும்பனொடு விசும்பனுக் காற்றாத

                        வானவர்கள் கூடிவேண்ட

            வளர்சத்வ குணவாணி வடிவேற்றங் வவுணர்களை

                        மாபோரில் வீழ்த்திநின்றாய்

சலியாத சக்தியருள் சத்தியே சிரவையவிர்

                        தண்டபா ணித்தளியினில்த்

            தழையுமழ கியநாதர் விழையுமழ கியதேவி

                        சங்கரிவு மாதேவியே.                        

 (7)

ஆழாழி சூழ்புவியை யண்டலர்கள் பால்தோற்றொர்

                        ஆரணிய முற்றசுரதன்

            ஆடகப் பேராசை யால்ச்சொந்த மனைமக்கள்

                        அகற்றிடப் போந்தவணிகன்

ஊழாலி ணைந்துதவ முனிவனாம் சுமேதசன்

                        ஓதுமுப தேசத்தினால்

            உன்னையே மூவாண்டு வழிபட்டு நாட்டினொடு

                        உயர்முக்தி பெற்றிட்டனர்

பாழான வைம்புலப் பகையால்மெ லிந்திட்டுப்

                        பகர்ஞான மொன்றுமொன்றிப்

            பழுதையென நின்றனனுன் பாதமலர் போற்றுதவர்

                        பாலன்பு கொள்ளவைப்பாய்

தாழாத கவுமாரர் சார்கின்ற சிரவையவிர்

                        தண்டபா ணித்தளியினில்த்

            தழையுமழ கியநாதர் விழையுமழ கியதேவி

                        சங்கரிவு மாதேவியே.                        

(8)

விடையேறு விமலனார் தன்னடியர் கண்காண

                        மேவிடும் பொழுதிலெல்லாம்

            மின்னைநிக ருன்னைவுழை மன்னவே உள்ளிடுதல்

                        மிக்குனருள் சேர்ந்திடில்தான்

அடைவான பயனெலா மடைவார்க ளென்பதால்

                        அன்றியோ ரேதுளதோ

            அடல்சேனை அதிபரில்த் தலைமைபெறு முருகவேள்

                        அயிலாகி நின்றதாரோ          

கடையேனை ஆளல்நின் மாட்சிக்கு மாறெனக்

                        கருதத்த காதுகண்டாய்

            கருணைநீ செயவில்லை என்றிடில்க் காசினியில்க்

                        கதியாரும் இல்லையம்மா      

தடையேதும் சொல்லாமல் தயவுபுரி சிரவையவிர்

                        தண்டபா ணித்தளியினில்த்

            தழையுமழ கியநாதர் விழையுமழ கியதேவி

                        சங்கரிவு மாதேவியே.                        

 (9)

தந்தச் சிறப்புடைய களிற்றினந் திரிகின்ற

                        தண்சாரல் மலைநாட்டினில்த்

            தக்கசிவ  குருவார்யை செய்தவப் பயனாகித்

                        தரணிவுய வவதரித்தே

இந்தப் புவித்தலத்தின் நிலையாமை நோக்கியிதன்

                        ஏதுவைக் கூர்த்தமதியால்

            எண்ணியே மெஞ்ஞான மெய்தியுப தேசித்த

                        ஏந்தல்சங் கரமுனிவரின்

சிந்தையிற் குடிகொண்ட வன்னையே நின்னருள்

                        சிறிதேனும் பெறநாடிடாத்

            தீம்பனென் றென்னைநீ தள்ளிடில்த் துணையில்லை

                        சேய்யெனக் கருணைபுரிவாய்

சந்தநல்த் தமிழ்வலவர் திகழ்கின்ற சிரவையவிர்

                        தண்டபா ணித்தளியினில்த்

            தழையுமழ கியநாதர் விழையுமழ கியதேவி

                        சங்கரிவு மாதேவியே.                        

 (10)

சங்கையின் றியகவலை நலிவிக்க மெலிகின்ற

                        சடகசட மூடநாயேன்

            தவிர்வதற் கானவழி யாதெனத் தேறாது

                        சந்ததம் சஞ்சலித்தே

மங்கையர்தம் மாலினும் சதகோடி தீமைதரு

                        மாழைவேட் கையினிலுழல்வேன்

            மலரடியை நினையாத மடையனென மனதிலெனி

                        மறந்திடில்க் கதியுமுண்டோ

கங்கையின் கரையினில் நாவாய் கொணர்ந்திட்ட

                        கல்லாத குகனையன்பால்

            கலைகள்நிறை தவமுனிவர் கருதுமொரு தம்பியாய்க்

                        கருணைபுரி காகுத்தனின்

தங்கையே மயிலுலவு சோலைமலி சிரவையவிர்

                        தண்டபா ணித்தளியினில்

            தழையுமழ கியநாதர் விழையுமழ கியதேவி

                        சங்கரிவு மாதேவியே.                                    

(11)

நூற்பயன்

சதுர்வேத சித்தாந்த சண்மதச மயதீதத்து

                        அத்துவித கௌமாரமாய்த்

            தண்டபா ணிக்குரவன் சாற்றியருள் தூயநெறி

                        தரணியெல் லாம்பரவவே

சதுரரா மானந்தர் தாபித்த சிரவையவிர்

                        தண்டபா ணித்தளியினில்

            தழையுமழ கியநாதர் விழையுமழ கியதேவி

                        சங்கரிவு மாதேவியைச்

சதுர்முகன் நாவிலுறை வாணிமனம் மிகமகிழத்

                        தண்டமிழின் நூல்வகைகளைச்

            சரமாரி யாய்ப்பொழியோர் கந்தசா மித்தவசியின்

                        சரணகம லாலயத்தைக்

கதுவும்நல்த் துணையாக நம்பியநு தினமுமே

                        கந்தனைப் போற்றிவாழுங்

            கருத்தினன் சுந்தரம் கனிவினொடு புகல்பதிகம்

                        கற்பவர் களித்திடுவரே.                                 

திருப்புகழ்

தனதன தனதன - தனதானா

கருவமை பிறவியில் - அமையாதே

            கருமவல் வினையிடை - அலையாதே

திருவருள் புரியயென் - எதிரேநீ

            தினமுயர் தெரிசனை - தருவாயே

சருவமு முனதுரு - எனவோர்வார்

            தமையொரு பொழுதினும் - அகலாளே

திருமகள் கலைமகள் - உருவாவாய்

            சிரவையின் அழகிய – உமையாளே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக