ஞாயிறு, 18 அக்டோபர், 2026

பெரிய நாயக்கன் பாளையம் சித்திபுத்தி விநயாகர் பதிகம்

 

தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த

பெரிய நாயக்கன் பாளையம் சித்திபுத்தி விநயாகர் பதிகம்

காப்பு

(நேரிசை வெண்பா)

சித்திபுத்தி யோடு திகழும் விநாயகனே

நத்தியுனைத் துதிக்க நாடினேன் - பத்திமலி

மெய்யடியார் போற்றும் வியன்சீர் அமையவருள்

செய்யவுளம் கொள்வாய் சிறந்து.      

(1)

நூல்

(கட்டளைக் கலிப்பா)

கோடி லங்கு மதகரி மாமுகம்

            கொள்ளு முன்னைக் குறித்துத் துதிசெய்வேன்

வாடி நொந்து மறுக லகன்றிட

            வாழ்த்து மென்முன் வருவதெந் நாள்கொலோ

பீடி யைந்திடும் மூடிக மேல்வரும்

            பெருமை யாயன்பர் பற்பலர் நாள்தொறுந்

தேடி யேத்தும் பெரியநாய்க் கப்பதிச்

            சித்தி புத்தி விநாயகத் தெய்வமே.                              

(2)

பாச மங்குசம் பற்றிரு கைகளும்

            பற்றொ டிந்திடு கொம்புறு கையும்நல்

வாச மோதகம் கொள்க ரமும்கொடென்

            மனதி லெண்ணிய வாறெதிர் வந்திடாய்

ஈச னாகிய தந்தைதன் தேரிலார்

            இருசொ டித்தநின்  சீரெவண் தேர்குவேன்

தேச மேத்தும் பெரியநாய்க் கப்பதிச்

            சித்தி புத்தி விநாயகத் தெய்வமே.                              

(3)

கொய்ய ணித்திரு ஆத்தியுங் கொன்றையுங்

            கூவி ளத்தொடு வன்னியுங் கொண்டுனை

வைய மீதருச் சித்திடு மன்பர்பால்

            வைகு மானை முகமுறும் வானவா

உய்ய வேண்டி யகவல்க் கவிசொலி

            உன்னை யேத்திடு மொளைவையக் கைலைசேர்

செய்ய னேநற் பெரியநாய்க் கப்பதிச்

            சித்தி புத்தி விநாயகத் தெய்வமே.                              

(4)

சீர்த்த நம்பியாண் டார்விருப் பப்படி

            செய்யும் பூசனை யுண்டியை யுண்டபின்

பார்த்தி பன்வின விப்புவி யோர்கள்பால்ப்

            பகர்தல் போல்வண்டி யில்ப்பல ரன்பினால்ப்

பார்த்த வர்வியக் கத்தகு முண்டிகள்

            படைத்த யாவையு மோர்கணத் தேயுண்டு

தீர்த்த வாநற் பெரியநாய்க் கப்பதிச்

            சித்தி புத்தி விநாயகத் தெய்வமே.                              

(5)

மெய்ப்பு கழ்த்தவ வேதவி யாசர்முன்

            விளம்பு பாரத வண்கதை மேருவில்க்

கைப்பொ ருந்தொரு கொம்புகொண் டேவரை

            கத்த னேநித்த னேமத்த வேழமே

இப்பு விக்கண்முன் தில்லையில் மூவர்சொல்

            இனிய பாட லிருக்கு மிடத்தினைச்

செப்பு வாயெழில்ப் பெரியநாய்க் கப்பதிச்

            சித்தி புத்தி விநாயகத் தெய்வமே.                              

(6)

பாவ னந்தம் வழுத்தி யுயர்தண்ட

            பாணி யோடிரா மானந்த நாதனும்

ஆவ லோடு முதலில் வழிபட

            ஆன்ற நல்லரு ளாட்சிநல்கும்பரா

காவ கத்துள இந்திர னாதியோர்

            கழல்ப ணிந்திடக் கண்டக ணேசனே

தேவ னேபுகழ்ப் பெரியநாய்க் கப்பதிச்

            சித்தி புத்தி விநாயகத் தெய்வமே.                              

(7)

கற்ப கத்தரு வோடவி ரும்பஞ்ச

            தருக்கள் போகப் பொருளை யுதவிடும்

நற்ப தம்பணி வோர்கட்குப் போகமும்

            ஞான வீடும்நல் கத்தகும் பீடுசால்

பொற்ப விர்ந்திடு மைந்துக ரம்கொளும்

            புண்ணி யப்பொரு ளாம்கண நாதனே

சிற்ப ராநல்  பெரியநாய்க் கப்பதிச்

            சித்தி புத்திவி நாயகத் தெய்வமே.                              

(8)

பல்வ கைப்படு மாறுசெ யல்செயும்

            பத்தர் யாரும் முதலுனைப் பூசிக்க

நல்வ ரம்தந் தருள்புரி விக்கின

            நாத னேயருள் போத முணர்த்துவாய்

கல்வ ரைக்குக னைத்துணை யாவுறுங்

            கண்ணி யாவெண் நிலாவணி யும்பரன்

செல்வ னேநல் பெரியநாய்க் கப்பதிச்

            சித்தி புத்தி விநாயகத் தெய்வமே.                              

(9)

கால வாதனை தீர்ந்துமெய் வீட்டினைக்

            கருது வாருக் கருள்செயும் கர்த்தனே

மூல காரண னான முதல்வனே

            முன்ன வாமொழி யும்துதி யேற்றருள்

நீல மேனிய னேமதம் மூன்றுளாய்

            நெற்றிக் கண்ணுறும் நின்மல மூர்த்தியே

சீல னேநல் பெரியநாய்க் கப்பதிச்

            சித்தி புத்தி விநாயகத் தெய்வமே.                              

(10)

அருவ மாயு முருவம தாகியும்

            அன்ப ருக்கருள் செய்திடு மப்பனே

பருவ மில்லவ னாயினும் நின்னருள்

            பற்றி டில்பெரும் பண்புறு வேனன்றோ

குருவும் தெய்வமு மாகிப்பல் லோர்க்கருள்

            குஞ்ச ரானனங் கொண்டருள் கோலனே

திருவருள் செய்பெரிய நாயக் கப்பதி

            சித்தி புத்தி விநாயகத் தெய்வமே.                  

                

(11)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக