தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச்
செய்த
சென்னிமலை
வேளாளத்
தம்பிரான் சுவாமிகள் பதிகம்
(கொச்சகக்
கலிப்பா)
செந்தமிழ்நாட் டணியாகத்
திகழ்கொங்கு வளநாட்டில்
கொந்தலர்காச் சிரகிரியில்
குடவடபால் குலவுமியல்
நந்தலில்வேட் டுவநகரார்
நற்றவமா யவதரித்த
சந்தம்மலி சென்னிமலைத்
தம்பிரான் சுவாமிகளே.
(1)
வேட்டுவபா ளையந்தன்னில்
வேளாளக் குடியினிடைப்
பாட்டுயர்நல் லாக்கவுண்டர்
பத்தினியோ டாற்றுதவம்
நீட்டுயரச் சேயாகி
நேர்ந்துசென்னி மலைப்பெயர்கொள்
தாட்டிகமார் சென்னிமலைத்
தம்பிரான் சுவாமிகளே.
(2)
இளமையினில் சிறிதுகற்றிட்
டில்லறத்தை மேற்கொண்டு
வளமைமிகுஞ் சென்னிமலை
வாழ்முருக னருள்பெற்றே
உளம்நினையு மெண்ணமெலா
முள்ளபடி வுரைத்தருளுந்
தளர்விலிசைச் சென்னிமலைத்
தம்பிரான் சுவாமிகளே.
(3)
சென்னிமலைக் குகனருளால்
திருவருள்வாக் குச்சித்தி
மன்னிடலா லன்படியார்
வந்துபணிந் தேத்தவவர்க்கு
இன்னுரையால் நல்வழியை
இசைத்துபதே சம்புரியுந்
தன்நிகரில் சென்னிமலைத்
தம்பிரான் சுவாமிகளே.
(4)
கொங்கிலுயர் அவிநாசிக்
கோயிலம ரப்பனுக்குப்
பொங்குபுகழ்த் திருத்தேரைப்
பொலிவுடனே செய்தருளி
மங்காத வகையறங்கள்
வகுத்தருளி யடைந்தார்க்குச்
சங்கடம்தீர் சென்னிமலைத்
தம்பிரான் சுவாமிகளே.
(5)
சென்னிமலை வேலவர்க்குத்
திருப்பங் குனிமாதம்
பன்னுமுத்தி ரத்திருநாள்
பவனிவரத் திருத்தேரும்
மன்னிநடத் திடநிதியும்
வகைசெய்தீ ரறநெறியில்
தன்னைநிகர் சென்னிமலைத்
தம்பிரான் சுவாமிகளே.
(6)
தண்பழனப் பழனியிடைத்
தம்பிரான் மடமமைத்து
வண்மையுடன் நடத்துதற்கா
மாநிதியஞ் சேர்த்தருளிக்
கண்ணிமைபோல்க்
காத்திடற்காம் கட்டளைகள் தமையமைத்தீர்
தண்ணருளார் சென்னிமலைத்
தம்பிரான் சுவாமிகளே.
(7)
பெருந்துறையி
னிடையிருந்து பேணுசென்னி மலைசெல்லுந்
திருந்துவழி யினில்மடமுஞ்
செய்யதண்ணீர்ப் பந்தலுடன்
பொருந்தமைத் ததைநடத்தும்
புண்ணியமார் பூமிகளும்
தரும்தகையீர் சென்னிமலைத்
தம்பிரான் சுவாமிகளே.
(8)
சிவமலைவாழ்
முருகனுக்குஞ் சென்னிமலை யாண்டவர்க்கும்
நவமிகும்நல்க் கட்டளைகள்
நடக்கும்வணம் செய்தருளிப்
பவமலையைக் கடக்கும்மறை
பகலிரவாய்ச் செபித்திடும்நல்
தவமலையே சென்னிமலைத்
தம்பிரான் சுவாமிகளே.
(9)
சிந்தனையில் திருமுருகன்
சேவடியே கருதும்நிலை
வந்திருந்தும் மக்களுக்கு
வாக்கருளி யறஞ்செய்து
கந்தனது பாதமலர்
கலந்தருளிச் சமாதிகொளுந்
சந்தம்மலி சென்னிமலைத்
தம்பிரான் சுவாமிகளே.
(10)
மாற்றுயர்பொன் னாமுமது
மகிமைகொளுந் திருமேனி
சாற்றுமுயர் சமாதியிடைச்
சார்ந்தருளக் கோயில்கட்டி
ஏற்றமுடன் பணிசெய்த
வெல்லார்க்கும் நல்லாசி
சாற்றிடுவீர் சென்னிமலைத்
தம்பிரான் சுவாமிகளே.
(11)
திருக்கோயில் தனைப்புதுக்கித்
திருப்பணிகள் பலசெய்து
மருப்பொலியும் திருக்குடநீர்
வயங்கும்விழாச் செய்திடும்நல்
உருப்பொலியு மடியார்கட்
குமதுகடைக் கண்ணருள்சீர்
தரப்பணிந்தோம் சென்னிமலைத்
தம்பிரான் சுவாமிகளே.
(12)
வாழி
வாழ்கவணிச் சென்னிமலை வாழ்ககுக னருளாட்சி
வாழ்கவவர் திருநாமம்
வாய்ந்ததம்பி ரான்சாமி
வாழ்கசமா திக்கோயில்
வாழ்கதிருப் பணியன்பர்
வாழ்கவுல குயிரெல்லாம்
வாழ்கதிரு வருள்சீரே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக