ஞாயிறு, 18 அக்டோபர், 2026

கந்தசாமி சுவாமிகள் வாழ்க்கை வரலாற்று வண்ணம்

 

தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச் செய்த

கந்தசாமி சுவாமிகள் வாழ்க்கை வரலாற்று வண்ணம்

காப்பு

(நேரிசை வெண்பா)

மண்தலம்சால் சீர்ச்சிரவை மன்னுகவு மாரமடம்

கொண்டகந்த சாமிக் குருசரிதம் - தண்தமிழார்

வண்ணக் கவிதையினால் வாழ்த்தவவன் றன்னடியார்

தண்நளினத் தாள்காப்ப தாம்.

 (1)

நூல்

குழிப்பு

தானதத்த தத்ததத்த தானதத்த தத்ததத்த

                        தானதத்த தத்ததத்த தானதத்த தத்ததத்த

தனத்தன தந்ததன தனத்தன தந்ததன

                        தனத்தன தந்ததன தனத்தன தந்ததன

தானதன தானதன தானதன தானதன

                        தானதன தானதன தத்ததன தான

(தொங்கல்) தனதான தந்தந்த தானனா

 

மாமறைத்தி ரட்டுமொப்பில் ஆகமத்தி ரட்டும்மிக்க

            வேதனுக்கு மச்சுதற்கும், மாதவர்க்கு மெட்டலற்ற

மகத்துவமி லங்குசிவ னிகத்திலி லங்குயிர்கள்

            உயற்கென அம்பிகையொ டிருக்கும்வ ளம்குலவு

மாதலம தானவுயர் பேரைநகர் வாமமுறு

            வானமவிர் சோலைவள மைச்சிரவை யூரில்

மாமரத்து ருத்தரித்த சூரனைச்செ குத்தசத்தி

            வேலினைக்க ரத்தெடுத்த சேய்பலற்பு தக்கருத்தை

வகுத்திடு கின்றபொரு ளினைப்பல சங்கைபகர்

            அகத்திய னென்றுவரு குருப்பினர் வெங்கடசு

வாமியெனும் நாமமுட னேபுவியின் மீதுவரு

            சோதரன்மு னாள்செய்தவம் மிக்கபுகழாளன்

மானம்மிக்க கற்புபொற்பு நீடும்நற்கு ணப்பெருக்கு

            மேவுமுத்த  மக்குலத்து நாரிகுட்டி யத்தளுற்ற

மனைத்துணை கொண்டுபுரி தவப்பய னென்றுகுகன்

            அருட்கலை யொன்றுடனிவ் வகத்தினில் வந்தருளும்

மாதவமும் நீள்துறவு மானயிவை போல்வனவும்

            நீடஉமை யேயலது மற்றிணையிலாத

                        அணிநீடு கந்தச்சு வாமியே.

வாரமுற்ற நற்படிப்பை யாசியத்தி னிற்பயிற்று

            தீரமுற்ற தொட்டையப்ப னாரிடத்தி னிற்படித்து

வளப்பமி கும்புலமை தனைக்கொடு சந்ததமும்

            மிகப்புக ழந்தரரும் வியக்கும்வ ணம்குமரன்

வாழ்தளியை ஆனைமுகம் மேவுகண நாதனது

            கோயிலுட னேபுரித வக்குரவ னார்செய்

மாதவத்தி னர்க்குவப்ப தாம்மடத்தி லுற்றிறைக்கு

            வாசனைத்தி ரட்களிற்செய் பூசனைச்சி றப்பும்மிக்க

வனப்பமு றும்பணிகள் மிகச்செய்து கொண்டுதமிழ்

            மறைக்கவி யென்றுபகர் திருக்குற ளும்பெரிய

வாரணமு கேசர்புக ழோதிடுபு ராணமடி

            யாரதுபு ராணமொடு மற்றபல நூலும்

மாசறத்த னிப்படித்து ஞானசத்தி பெற்றிருக்க

            லானஅத்த திக்கணற்பு தாகரத்த வச்சிறப்பை

வளர்ச்சிசெ யும்பெரிய தகப்பனெ னுங்குரவன்

            மொழிப்படி யின்புலவர் தவத்தின ரொன்றுகவு

மாரசபை யூடூபுகர் நாளிலுளபேர் மகிழு

            மாறுகவி மேவுபொருள் வற்றுத லிலாமல்

                        அதியார்வம் மிஞ்சச்சொல் பேசுவீர்

தாமரைத்த டச்சிறப்பும் வானரக்கு ழுக்கள்பற்றும்

            ஆடல்பற்பொ ழிற்பெருக்கும் நீள்வயற்சி றப்புமுற்ற

தலத்தில்மி கும்பழனி மலைத்தலை யின்கண்ணருள்

            உளக்குர வன்கனிவி லளிக்கும கண்டநிலை

சார்தரும டாதிபதி யாம்நலமோர் காவியுடை

            ஆரம்மணி ஆதியன தக்கபெரி யோர்கள்       

வாழிசெப்ப மெய்ப்புகழ்க்கௌ மாரநற்ற வத்தர்பற்ப

            லோர்களித்த லத்திதொப்ப தானுற்ச வத்தைமற்றெம்

மனத்தும்நி னைந்திலமென் றுவப்புமி குந்துசொல

            மகிழ்ச்சியுடன் கொளெம தருட்குரு கந்தமுனி

மாமணிமெய் ஞானகுரு நாதமணி மாமுடிகொள்

            சேடன்நிக ரானபுல மைப்புலவர் ஏறே.          

தாருகற்தொ லைத்தவெற்றி வேலவற்கு வப்புமிக்க

            தாமருச்சு னப்பொருப்பு மேவிநற்க வித்திரட்கள்

தகச்செய்து பின்புகண பதிப்பெயர் கொண்டநகர்

            தனிற்றிகழ் விண்டுமிசை இசைத்திடு சந்தமொடு

தானமவிர் யானைமுக னார்யமக மாதியவும்

            வேலயிலின் மீதணித ரத்தகுதி யான

                        திணியான சந்தத்தை ஓதுவீர்

தாமதக்கு ணத்துடுக்கர் தாமும்மெத்த உத்தமத்தர்

            ஆகிடச்சொல் செப்புமொப்பி லாதகத்த சித்தர்முத்தர்

தமக்கிட மென்றொளிரும் மணிக்கிரி தங்குகுகன்

            அணிப்புய மொன்றும்வண மளப்பறு சுந்தரவி

சாலமுற லானகவி மாலைபகர் வீர்கரிய

            மேகமினல் நாணவொளிர் சக்ரதர னான

மாயனைக்க ருத்தில்வைத்த சீலமுற்ற பத்தர்பற்ப

            லோர்கள்நற்க தைப்பெருக்கை யாரியத் தினிற்சொல்தத்தன்

வழுத்திஇ ருந்ததனை யினிப்புறு செந்தமிழில்

            உரைக்குதி யென்றகுரு மொழிப்படி வெண்தவள

வாரிசமி னாள்மருவும் நாவதிலெ ழாயிரமுன்

            னூறெழுப தோர்கவிகள் மட்டிலிசை வாணர் 

தாம்வியக்க முற்றுபத்த மான்மியத்தை மெய்த்தவக்கௌ

            மாரநற்ச பைக்கணுற்று மால்வினைத்தொ டக்கறுத்த

தவத்தர ரும்புலவர் இகத்துமி குந்தசெல்வர்

            சிவப்பழ மென்றகுரு பதத்தைவி ரும்படியர்

தானைபுடை சூழரவ னேவலர்கள் வேதியர்கள்

            மானம்மலி மாதரிவர் தக்கதெனு மாறு                                                           திறல்கூறு மின்பத்த யாளரே

தேமலுற்ற பொற்தனத்து மாதரிச்சை சற்றுளத்தி

            னூடுபெற்ற குற்றமொற்றை யாலுயர்ச்சி பெற்றநித்தர்

சிறப்புமி கும்கயிலை மலைத்தலை நின்றிவ்வுல

            கிடத்தவிர் சுந்தரரு ளுவக்கும்வ ணம்பரவை

சேர்மனையி னூடுமறை காணரிய பாதமலர்

            தேயவோரு தூதெனந டக்கவிசைவான                    

வேன்மழுக்க ரத்தையுற்ற ஆனுடைப்ப ரற்கிருப்ப-

            தானபுக்கொ ளிப்பதிக்கண் மேவுமப்ப னுக்குமிக்க

விளக்கமு றுங்கருணை யுமைக்கும ரும்துதிகள்

            தகப்புனை யும்பெருமை யுடைப்பர தண்டமணி

வேன்முருக தாசர்குரு நாதர்குரு நாதர்கரு

            ணாநிதிம காபுலமை மிக்க வடலேறு             

தேவர்கட்கெ னப்பலற்ப ராடுகுக் குடத்தைவெட்டு

            தீமையற்றி டத்தவத்தில் நீடிநற்றி ருப்புகழ்ச்சொல்

சிறப்பர ருங்கவிக ளிலக்கம்வி ளம்பியவர்

            இகத்திடை வந்தவகை யனைத்தும் விளம்புகதை

சேரும்வண மோதியவை யூடுபல பேர்வினவ

            வேவிரிவ தானவுரை செப்பு மெமதார்ய

                        தணியாத சிந்தைத் தியானரே.

சீலருக்கி ருப்பெனச்சொல் பேரையுற்ற பட்டியப்பர்

            மீதுசொற் சிறப்புமிக்க தானதுத்தி யத்திரட்கள்

தொடுத்தக லம்பகம்நல் வனப்புறு சந்தநயம்

            மிகுத்திடும் இன்கவிக ளெழிற்பெறு மம்பிகையோர்

சேயில்வரல் கூறுதமிழ் கோவையென வோதுபெயர்

            தோய்பனுவல் மாலையிவை செப்பு மருளாளர்

மேன்மையுத்த மத்தர்பத்தர் மேவுமற்பு தச்சிறப்பு

            நீள்கௌசைப்ப திக்கணுற்ற தூயபொற்ச டைச்சிவற்கும்

விரித்தசெ ழும்கலப நடச்சிகி கொண்டமுரு

            கனுக்குமோர் ஐந்துகர இறைக்கும ரும்துதிகள்

வீசுகடல் சூழுலகர் யாரும்மகிழ் வாகதல

            மேன்மையது மோதியருள் வித்தக சுவாமி     

சீர்கொள்பத்தி ரச்சைலத்தி ராமநற்பெ யர்க்கொள்பத்தர்

            தாமியற்று மத்தளிக்கண் மேவுமச்சு தற்களப்பில்

திருத்திகொ ளுங்குழவி யெனப்புக லுங்கவிதை

            செழிப்புமி குஞ்சிரவை மடத்திலி லங்குகுரு

தேவன்முரு கோனிணையில் பேரையவிர் தேசிகனும்

            ஆமிவர்கள் சேய்தமிழ்சி றக்கஉரை பேசு

                        தவவாழ்வு மிஞ்சக்கொள் மேன்மையீர்!

காமனைத்த கித்தவத்தர் வேடன்வெட்ட லிற்பெருத்த

            சோரிகொட்டு வித்தும்மிக்க ஆழமுற்று மெட்டலற்ற

வளிப்புகழ் கொண்டவனி நகர்த்தளி யின்சரிதை

            உயர்ச்சிகொள் கும்பமக ரதொற்சவம் மிஞ்சலுறு

காரைமடை மான்மியமும் மாலைமுத லானகவி

            ஓதியவண் மேவிடு மவைக்க ணுரைபேசி                  

மாதையிற்கொள் சற்குருப்பி ரானுதித்த பத்துபத்தென்

            காலம்நற் கிளிக்கிசைத்த காதையச்சி யற்றியுற்று

நவிற்றிய நுந்தமுரை செவிக்கொடு மிஞ்சுவகை

            உறப்பெறு சுந்தரமெ னுயர்ச்சிகொ ளம்பைமொழி

நாடிமகிழ் வீர்குளிரும் நீலகிரி மீதுறையும்

            மாயனது மாலைபகர் நற்கவிசொல் வீறு

காணுமுத்த மத்தவத்தர் யாரும்மெச்சி டச்சொலப்பர்

            மேதகைச்சி வக்கிரிக்கு மாரனுக்கு யர்ச்சிமிக்க

கவித்தொடை தந்துவளர் தலுற்றவெ ளிங்கிரியின்

            மகத்துவம் விண்டுகவின் மிகுத்தகு ருந்தமலை

காமர்கொள்கு மாரன்மிசை சேயதமிழ் நூறுகவி

            கூறுதவம் நீடியம் கத்துவம் உளார்நல்

                        மணிநீறு துன்றக்கொள் மேனியீர்.

காரணத்த வச்சிறப்பை யோதுநற்ற மிழ்ப்பெருக்கை

            மாணருட்ப ணித்தொகுப்பை யானுரைத்து முற்றுவிக்கை

கணக்கில டங்கரிய தெனச்சொலல் வம்பலபல்

            பணித்தலை கொண்டவனு முரைக்கவ றிந்திலனு

காதவளம் நீள்சிரவை மேவுகவு மாரர்குரு

            நாதனடி யார்பரவு பத்மபத சீல          

நாளுமுத்த மத்ததொழிற்செய் கோயில்கட்செய் வித்தலொத்த

            சீலமற்பு தத்தியற்றி மேன்மைநற்ற வத்தொழுக்க

நடத்தைகொ ளும்புனித மலர்ப்பொழில் மிஞ்சுசிர

            வனப்பதி கொண்டகுகன் மிறைத்தமிழ் விண்டுகுரு

நாதனது நாதமய மானடி கூடியுள

            பேதமற வேமறையும் நற்பெருமை யாள        

காதலுற்று மைத்துதிக்க நாடெனக்கு முத்தமிழ்ச்சொ

            வாசகப்பெ ருக்கருட்செய் வீருமைக்க ருத்துள்வைத்த

கணத்தரு டன்குலவி உமைப்பணி சுந்தரமென்

            அடிச்சிறி யன்புவியி லினிச்சட லங்கொடொரு

காலமுமெய் தாதபர ஞானஉயர் வீடுபெற

            நாளும்விழை வேனிருக டைக்கண் அருள்மேவி

                        வளர்மேன்மை என்றைக்கும் வாழியே.

தொங்கல் தாழிசை

அணிநீடு கந்தச்சு வாமியே

            அதியார்வம் மிஞ்சச்சொல் பேசுவீர்

தினியான சந்தத்தை ஓதுவீர்

            திறல்கூறு மின்பத்த யாளரே

தணியாத சிந்தைத்தி யானரே

            தவவாழ்வு மிஞ்சக்கொள் மேன்மையீர்

மணிநீறு துன்றக்கொள் மேனியீர்

            வளர்மேன்மை என்றைக்கும் வாழியே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக