தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச்
செய்த
மேட்டுப்பாளையம்
இராமலிங்க சவுடாம்பிகை பதிகம்
காப்பு
(நேரிசை
வெண்பா)
ராமலிங்கப் பேருடனே
நண்ணுசவு டாம்பிகைத்தாய்
சேமம்நல்கும் பாட்டுவந்து
செப்புதற்கு - நேமமுடன்
எத்தகவோர் தாமும்முத
லேத்தவருள் முன்னவனாம்
மத்தகவே ழத்தைநினை
வாம்.
(1)
நூல்
(எண்சீர்
ஆசிரிய விருத்தம்)
கருணை தோயிரு விழிகளு
மருள்சீர்
காட்டு மின்கனி வாயுமஞ் சேலென்று
அருள்செய் சீரப யம்தெரித்
திடுகை
அழகுந்தோய, நல்சிலம்பொலி யார்க்கும்
இருப தங்களும் கவின்தரி
சனந்தந்து
என்னை யாதரித் திடுந்தின மெதுவோ
தருமம் நீடிய மேட்டுப்பா ளையத்தில்
சார்ந்த ருள்சவு டாம்பிகைத் தாயே.
(2)
நீற்ற ணித்திரு மேனியன்
வடிவில்
நிலவு பாதியுற் றாய்சிறு வனுக்காக்
கூற்ற னைத்தடிந்
தருள்பதம் உனதோ
கொண்கன் றன்னதோ கூறிட விழைந்தேன்
கீற்ற தாம்மதிச்
சடைப்பவா னியின்மேல்
கிளர்சி னம்கெடப் பவானிசார் பிருந்தாய்
சாற்ற நீடெழில் மேட்டுப்பா
ளையத்தில்
சார்ந்த ருள்சவு டாம்பிகைத் தாயே.
(3)
கண்டமென்பவ ரகண்டமென்
றுரைப்பார்
கடவுளின் றென்பார் தாமது வென்பார்
விண்ட வாதுகொ டெனதுன
தென்பார்
மேல கீழின வென்றுரைத் திடுவார்
மிண்ட ராமிவர் தமையெலாந்
தாயாய்
மேவி ஈன்றரு ளுனையெவ ரறிவார்
தண்ட லைக்கவின் மேட்டுப்பா
ளையத்தில்
சார்ந்த ருள்சவு டாம்பிகைத் தாயே.
(4)
கால பாசம்வந் தடுத்திடு
மென்னக்
கலங்கி வாடுறும் நிலைதவிர்த் தருள்வாய்
பால னாயினிப் பிறப்பதும்
வேண்டேன்
பாவி யேனுன்றன் பதம்சர ணடைந்தேன்
நீல மாகிரி தோயடி
வாரம்
நிலவிப் பல்வளத் தொழில்நிலை யங்கள்
சால மேவிய மேட்டுப்பா
ளையத்தில்
சார்ந்த ருள்சவு டாம்பிகைத் தாயே.
(5)
கஞ்ச மாமல ராயிரங்
கொண்டு
கண்ணு தல்ப்பரன் பூசைசெய் திருமால்
நெஞ்ச மோர்தின மொருமலர்
குறைகால்
நெடித யர்ந்துதன் கண்மலர் கொய்தே
தஞ்ச மென்றணிந் தரனருள்
பெற்றான்
சாற்றென் பூசையும் பூசைய தாமோ
சஞ்ச லந்தவிர் மேட்டுப்
பாளையத்தில்
சலர்ந்த ருள்சவு டாம்பிகைத் தாயே.
(6)
மரண முண்டென லறிகின்றே
னதுநம்
மாட்டெய் தும்ததி ஈதென அறியேன்
கரண வாதனை தீர்பெரி
யோரிக்
கணக்க றிந்துத வம்புரிந் துய்ந்தார்
திரண மாயுல கிடைச்சுழன்
றலையுந்
தீய நாயினே னுயுந்தின முண்டோ
சரணங் காத்தருள்
மேட்டுப்பா ளையத்தில்
சார்ந்த ருள்சவு டாம்பிகைத் தாயே.
(7)
நயம் மிகுந்தமிழ்ப்
பாப்பல பாடும்
நல்ல ருள்திறம் ஞானசம் பந்தர்
செயமு றத்தரும் பாலமு
தடியேன்
திறத்து மோர்துளி தெறிக்கிலுய் வேன்காண்
கயமு கன்தனைக் குமரநா
யகனைக்
கனிவி லீந்தருள் கருணைமெய் யுருவாந்
தயவு ளாய்வியன் மேட்டுப்
பாளையத்தில்
சார்ந்த ருள்சவு டாம்பிகைத் தாயே.
(8)
கூற்றம் பேய்எயன
மாதரார் தம்மைக்
கூறி மாதவம் புரிந்தனர் பல்லோர்
தோற்று மெப்பெண்ணி
னுருவமு னுனதாத்
துதித்து மாதவந் தோய்ந்தனர் சில்லோர்
போற்று சீருடை யாரெவர்
கொல்லோ
புந்தி தேரப்பு கன்றிட விழைந்தேன்
சாற்று சீர்மலி மேட்டுப்
பாளையத்தில்
சார்ந்த ருள்சவு டாம்பிகைத் தாயே.
(9)
கொங்கு நாட்டில்
வாங்கப்பேர் கொண்டு
குலவு செட்டியார் தங்குல தேவாப்
பொங்கு மாண்டறு பானுக்கு
முன்னர்ப்
பொருந்தி லிங்கம தாயமைத் தேத்த
அங்கண் மேவிய ருள்புரிந்
திட்டாய்
அன்பர் வேண்டிய வாறுருக் கொண்டு
தங்கு மம்மையே மேட்டுப்
பாளையத்தில்
சார்ந்த ருள்சவு டாம்பிகைத் தாயே.
(10)
கோவில் முன்னவிர்
மண்டப மாதி
குலவி டத்திருப் பணிவுவந் தியற்றி
மாவி யன்பெறச் செய்யுமா
லப்ப
வண்மை யோன்முத லன்பினர் கூடி
மேவு கும்பநீ ராட்டும்வி
ழாவை
வியன்பெ றப்புரிந் தாரவர் கட்குத்
தாவி லின்பருள் மேட்டுப்
பாளையத்தில்
சார்ந்த ருள்சவு டாம்பிகைத் தாயே.
(11)
கோவை மாவட்டத் தினிற்சிறந்
தோங்குங்
குளிர்ப வானிந திக்கரை யின்கண்
காவை மேவிய மேட்டுப்பா
ளையத்தில்
கவின்றி டும்சவு டாம்பிகைத் தாயைச்
சேவை செய்சிர வைக்கவு
மாரத்
திரும டத்தவி ரும்சுந் தரன்சொல்
பாவை நாள்தொறும்
பாடியின் புறுவார்
பரவும் நற்பயன் பலபெறு வாரே.
(12)
திருப்புகழ்
தாத்தத்
தானன தனதன தானன - தனதானா
ஊக்கத் தோடுனை
வழிபட லால்வரும்
- உயர்வாலே
ஊற்றுப் போல்வரும்
உனதருள்
மேவிடல் - பெறுவேனோ
ஆக்கப் பேறுகள்
பலநிதம் நீதர - இசைவோடே
ஆர்ப்புக் காளையின்
மிசைவரு
சேவையை - அருள்வாயே
நோக்கத் தேயனல்
பெறுபர னாரிடம்
- உறைதேவி
நோற்றற் சீர்திகழ்
தவசிகள்
நாடிய - வடிவாவாய்
மீக்குற் றேயடி
பணிபவர் மீதுசெய்
- தயையாளே
மேட்டுப் பாளையம்
அவிர்சவு
டேசுரி – உமையாளே.
விநாயகர்
துதி
(நேரிசை
வெண்பா)
பைங்கமுகு தோய்மேட்டுப்
பாளையத்தில் தோய்ராம
லிங்கசவு டாம்பிகைத்தாய்
நீள்கோயில் - தங்கணியார்
ஐங்கரனே முன்நின் றருள்புரிய வேண்டியிரு
செங்கரம்கூப் பென்னையின்பில்
சேர்.
முருகக்
கடவுள் துதி
(அறுசீர்
ஆசிரிய விருத்தம்)
சீறும்முகம் கொண்டுலகில்
சிந்தைவருந்
திடப்புரியும் தீமை யாலே
தேறும்முகம் காணாமல்
பரதவிப்பேன்
றனையருளில் சேர்க்கொண் ணாதோ
ஆறுமுகப் பெருமானே
மேட்டுப்பா
ளையத்துறையும் அரசே இன்பப்
பேறுமுகந் திடவடியார்க்
கருள்வானே
மலைதோறும் பிறங்கும் சேயே.
நவக்கிரகத்
துதி
(கட்டளைக்
கலித்துறை)
மேட்டுப் பதியில்
சவுடாம் பிகைகோவில் மேவியன்பால்
காட்டுணை போற்று
மவர்க்கிடை யூறு தவிர்த்தருள்சீர்
பூட்டுங்
கருணை நவக்கோள்க ளாமுமைப் போற்றுகின்றேன்
கூட்டும் நலம்பல
தந்தின்ப வாழ்வு கொடுப்பதற்கே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக