தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச்
செய்த
மணியகாரம் பாளையம்
கணபால விநாயகர் பதிகம்
காப்பு
(நேரிசை
வெண்பா)
காரார் பொழில்மணிய
காரனணிப் பாளையம்வாழ்
சீரார் விநாயகமெய்த்
தேவன்மிசைத் - தாராகச்
சூட்டுதுதிக் கான
துணையடியார்க் கின்பநிலை
காட்டுதிருப் பாதமலர்
கள்.
(1)
நூல்
(எழுசீர்
ஆசிரிய விருத்தம்)
சிந்துர முகமும்
இந்தணி சடையுந்
திருத்தரும் தருவினங் நாணும்
ஐந்துகைத் தலமும்
மணியணிப் பணியை
அணிதரு முதரமு மடியார்
வெந்தகைப் பவம்தீர்
செந்தகை யடியும்
மிளிர்தரத் திருவருள் காட்சி
தந்தருள் மணிய காரன்பா
ளையந்தோய்
தளிக்கண பாலவைங் கரனே.
(2)
கற்றநற் றவத்தர்
தங்குழுக் கலந்து
கவின்மலர்த் தூவிநின் திருமுன்
சொற்றமிழ் மாலை பாடியா
னந்த
சொரூபமெய் திடவருள் புரிவாய்
குற்றமற் றவர்க ளகத்துறை
விளக்கே
குணநிதீ பணபதிக் கச்சார்
தற்பரா மணிய காரன்பா
ளையந்தோய்
தளிக்கண பாலவைங் கரனே.
(3)
கஞ்சமார் வயல்சூழ்
நாரையூர் நம்பி
கவின்பெறு துதிகளை யணிந்து
மிஞ்சவே படைத்த பொருளெலா
முண்டாய்
மிகுவினைச் சிறியனேன் கூறுஞ்
செஞ்சொலும் படைப்பு
மேற்றடி யவரில்
சேர்த்தியாள் கைவிடேல் திருத்தாள்
தஞ்சம்யான் மணிய
காரன்பா ளையந்தோய்
தளிக்கண பாலவைங் கரனே!
(4)
பெருவயோ திகமுற் றியமனூர்க்
காவி
பிடித்தடித் துக்கொடு போங்கால்
தருவைநேர் பஞ்சக்
கரப்பெரு மானே
தகைமலி மூடிகப் பரிமேல்
திருவைநேர் சித்தி
புத்திமத் தியில்தோய்
சேவைதந் துன்பத நீழல்
தருவையோ மணிய காரன்பா
ளையந்தோய்
தளிக்கண பாலவைங் கரனே.
(5)
தீங்குசே ராங்கா
ரம்மம காரம்
சேர்ந்துல கிடைமயங் காதே
ஓங்குமோங் காரத்
துள்ளொளிக் குள்ளே
ஒளிர்திரு வடிவுகண் டின்பந்
தேங்கிடக் கடைக்கண்
பாங்கினி லருள்வாய்
திருவடிச் சரணடைந் தோரைத்
தாங்குவோய் மணிய
காரன்பா ளையந்தோய்
தளிக்கண பாலவைங் கரனே.
(6)
மரணமும் பிறப்பும்
மாறிவந் தலைக்க
வார்கடல் நடுவுறக் கிடந்த
திரண மொத்தலையு மென்னுளே
புகுந்து
சிந்தைநெக் குருகவுங் கருவி
கரணமுங் கடந்த புரணமா
னந்தக்
கடலிடை முழுகவு மருள்வாய்
சரணம்யான் மணிய காரண்பா
ளையந்தோய்
தளிக்கண பாலவைங் கரனே!
(7)
மென்மையார் கமல மனையநின்
தாளில்
மேன்மைகொள் பச்சறு கிட்டுத்
தன்மையால் பூசை புரிபவர்க்
கமரர்
தமக்கரி தானபே ரின்பச்
சின்மய வீட்டில்
புகவருள் புரிந்து
திருப்பொலி வாழ்வினை வழங்குந்
தன்மையாய் மணிய காரன்பா
ளையந்தோய்
தளிக்கண பாலவைங் கரனே.
(8)
தந்தமார் முகம்கொள்
தற்பரா சிவனார்
தந்தருள் மூத்தபா லிகனே
எந்தையாம் கந்த நாயகன்
தமையா
ஏத்துவா ரிடர்களை தலைவா
சிந்தையி லுன்னை
யன்றிமற் றொன்றுஞ்
சேர்த்திடா நிலையளித் தாள்வாய்
சந்தமார் மணிய காரன்பா
ளையந்தோய்
தளிக்கண பாலவைங் கரனே.
(9)
பரண்பொலி வள்ளி நாயகி
யார்பால்
பரலுறும் கானகஞ் சென்றாய்
முரண்மிகு யென்ற
னுளத்திடை சேர்தல்
முடிந்திடா தெனல்வழக் கன்றால்
அரணென வடியார்க் காவன அளிக்கும்
அண்ணலே யளியணை கமலச்
சரண்சரண் மணிய காரன்பா
ளையந்தோய்
தளிக்கண பாலவைங் கரனே.
(10)
முற்றருள் கருணை
வாரிதி யன்பர்
முன்னிய முடித்தருள் முதல்வா
சிற்றறி வினனைச்
சிறுபரு வத்தே
சேவடி பணியுமா பணித்தாய்
நற்றவ நிலையும் ஞானசித்
திகளும்
நன்கமை தரத்திருக் கடைக்கண்
சற்றருள் மணிய காரன்பா
ளையந்தோய்
தளிக்கண பாலவைங் கரனே.
(11)
நூற்பயன்
வந்துவந் தனைசெய்
யன்பருக் கிருமை
வளங்களும் வழங்கியி னருட்சீர்
தந்தருள் மணிய காரன்பா
ளையந்தோய்
தளிக்கண பாலவைங் கரனைச்
சந்தமார் சிரவைக்
கந்தமா முனிவன்
தாளிணைத் தொண்டனேன் புகல்பாச்
சிந்தையால் விரும்பி
ஓதவல் லார்கள்
தீதிலா நன்மையெய் துவரே.
திருப்புகழ்
தானதன
தானந் - தனதான
கானமயில் போலும்
சாயலனம் மானும்
காமர்நடை,
வேலம் - பகமானார்
காதலுட னேபொன் பூமிமய லாகுங்
காரியம
தேகொண் - டழியாதே
தேனலர்த மாலம் தூர்வையினம்
நீடுன்
சேவடியில்
நாளும் - பொழியேனோ
சீதரன்முன்
நேரும் கீதையுடன் ஞானஞ்
சேர்விசுவ
ரூபம் - தெரியேனோ
கூனல்மதி நேர்சிங்
காரநுதல் வீறுங்
கோலமஹ
மாதின் - கலியாணங்
கோரும்வடி வேலன் நாடவரு ளோடுங்
கூடவவ
ணேகும் - பகவானே
பானல்விழி யார்தம்
சேயனென மீளும்
பாவமற மோதும் - குருநாதா
பாரின்மிசை
நீளும் சீர்மணிய காரன்
பாளையம்நி
லாவும் – பெருமாளே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக