தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளிச்
செய்த
நஞ்சேகவுண்டன் புதூர்
பரமசிவன் பஞ்சகம்
காப்பு
(நேரிசை
வெண்பா)
கற்றவர்வாழ் நஞ்சே
கவுண்டன் புதூர்மேவும்
நல்பரமன் பாடல் நயந்துரைக்கச்
- சொல்துணையாம்
கந்தக் கடவுளிரு
கால்மலரு மைந்துகரன்
சந்தத் திருத்தாளுந்
தாம்.
(1)
நூல்
(எண்சீர்
ஆசிரிய விருத்தம்)
விண்ணவர்கள் பணிந்தேத்தும்
விரைமலர்ச்சே வடியும்
விரிகொன்றை மாலையரா விளங்குதிரு மார்பும்
எண்ணுமவர்க் கருள்புரியு
மேற்றகர மலரும்
எழில்மருவும் நீலகண்ட மேத்துமவர்க் கருளுங்
கண்மலரும் திருநீற்றுக்
கவின்முகமும் மதியம்
கங்கையணி திருமுடியும் கண்டிட வந்தருள்வாய்
பண்ணிசைநஞ் சேகவுண்டன்
புதூர்க்கோயில் மேவும்
பசுபதியே வேல்வடிவாம் பரமசிவ பதியே.
(2)
இதமளித்தாள் பெருங்கருணை
இறையவனின் கோயில்
இச்சையுடன் திருப்பணிகள் இயற்றுநர்க்கு
நன்மைச்
சதமளித்தாண் டருள்புரிவாய்
பூசைபுரி வார்க்குத்
தக்கதிரு வாக்களிப்பாய் சார்சிவராத் திரியைச்
சுதர்மகிழக் கொண்டாடுந்
தூயபுக ழன்பர்
துக்கமெலாம் நீக்கியருள் மிக்களிப்பாய்
சரணம்
பதமளிநஞ் சேகவுண்டன்
புதூர்க்கோயில் மேவும்
பசுபதியே வேல்வடிவாம் பரமசிவ பதியே.
(3)
அணியாரும் வாக்கருளி
யன்பர்களைக் காப்பாய்
அலகில்லாத் திருவிளையாட் டாற்றிடுவா யக்க
மணியான திருமுருகன்
மாதங்க முகமார்
வள்ளல்களைத் தந்தருளும் மகாதேவ தேவே
பிணியாரு முலகமயல்
பிடிக்காத வண்ணம்
பிரசமலர்த் தாளிணையில் பிறங்குபத்தி யளித்தாள்
பணியார்நஞ் சேகவுண்டன்
புதூர்க்கோயில் மேவும்
பசுபதியே வேல்வடிவாம் பரமசிவ பதியே.
(4)
நாடவைத்தா யுன்னருளே
நம்பவைத்தாய் பதமே
நயந்துனையே போற்றுகின்ற நல்லடியார்க் கூட்டம்
கூடவைத்தாய் திருக்கோயில்
குறித்தபணி களையே
குலவிமகிழ் வுடன்செய்யக் கொடுத்துவைத்தா
யென்றுந்
தேடவைத்தாள் திருவடியை மறவாத பத்தித்
திடமமைத்தாய் இரவுபகல் சிந்தைநினைந் துருகிப்
பாடவைநஞ் சேகவுண்டன்
புதூர்க்கோயில் மேவும்
பசுபதியே வேல்வடிவாம் பரமசிவ பதியே.
(5)
கண்ணுதலே உமைமகிழுங் காரணனே விடைமேல்
காட்சிதரும் மாட்சியனே கணபணகங் கணமும்
விண்ணமையும் பிறைமதியும்
கொன்றையும்சூ டியவ
வேதியனே மாதவத்தோர் வினைதவிர்த்தாள் பவனே
உண்ணினைவார்க் கிகபரச்சீ
ருதவுதயா பரனே
உளக்கமலத் திடையமர்ந்திட் டுய்யவருள் புரிவாய்
பண்ணவநஞ் சேகவுண்டன்
புதூர்க்கோயில் மேவும்
பசுபதியே வேல்வடிவாம் பரமசிவ பதியே.
(6)
நூற்பயன்
தலமகிமைத் தமிழகத்தில்
தழைத்தகொங்கு நாட்டில்
சார்பேரூ ரென்றபெயர்த் தலத்தின்வட கீழ்ப்பால்
பலநலநஞ் சேகவுண்டன்
புதூர்க்கோயில் மேவும்
பசுபதியாய் வேல்வடிவாம் பரமசிவ பதியை
இலகுசிர வணபுரக்கௌ
மாரமடத் தேற்றம்
இசைகந்த சாமிமுனி இணையடியைப் பரவும்
நலமுறும்சுந் தரன்கூறும்
பாடலிவை படிப்பார்
நன்மையென்ப தத்தனையும் நண்ணிமகிழ் வாரே.
வாழி
வெண்பா
(நேரிசை
வெண்பா)
கண்ணுதல்வாழ் நஞ்சே
கவுண்டன்பே ரூர்வாழ்க
எண்ணும் பணிகள்பல
யேற்றமுறப் - பண்ணுமியல்
அன்பரெலாம் வாழ்க
அருட்பரமர்ப் போற்றுமவர்
நன்மையுடன் வாழ்க
நயந்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக