செவ்வாய், 20 அக்டோபர், 2026

மருதமலை அலங்காரம்

 

தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அருளிச் செய்த

மருதமலை அலங்காரம்

(காப்பு)

சிலங்கா ரணைய குழல்மீ தணியுந்திரு வணையார்

குலங்கா ரணைய மயில்போல் நடனங்குயிற் றிசைசா

லலங்கா ரகன்புகழ்ந் தேத்தும் மருதவரைக் குகன்ற

னலங்கார நல்கும் ராமா னந்தன் பொன்னடித் துணையே.

(நூல்)

1.         நேசத் துவந்தினம் பேணு மன்பினர் நெஞ்சகத்தே

பாசத் துவந்துவஞ் சேராம லாண்டிடும் பண்பினாலல்

மாசத் துவப்பெரி யோரேத்துஞ்  சீர்கொள் மருதவெற்பில்

வாசத் துளவன்  மருகோன் றிருவடி வாரிசமே.

 

2.         மன்றங்க ளெங்கு நடமாடு மீசன்றன் மார்புடனே

குன்றங்க ளெங்குங் கமழ்ந்திடுஞ் சேய்பொன் குளிர்மலர்த்தாள்

மின்தங் கருட்சுன  வெற்பில் கண்டேத்தினர், விண்ணவர்கள்

மென்தங் கலர்பொழிந் தேத்தனன் னோன்புற மேவுவரே.

 

3.            கின்னம் பொருந்து மடவா ரகட்டில் கிருமியைப்போ

லின்னம் பொருந்த விடாதே; யடைக்கலம் யானடியேன்

சின்னம் பொருந்து மணிக்கவு மார்திற லெனவெள்

ளன்னம் பொருந்து மலர்த்தடஞ் சூழ்மரு தாசலனே.

 

4.         பொன்னை மதித்தழி வார்களை யோர்பொரு ளாமதியா

துன்னை மதித்த டைந்தே னடியேன் றனையொத்திடநீ

யென்னை மதித்த ருளில்துய ரொன்றுறெனை யெய்திடுமோ

பின்னை மதித்தணை வோன்றாழ் மருதப் பிறங்கலனே.

 

5.         நறவார் மலர்ப்பொழில் சூழரச்சுன கிரிநாத நின்றாள்

மறவா வரமடியேற் கீந்தினியு மோர்மா தகட்டில்

பிறவாத வண்ணம் புரிந்தா ளுனையன்றிப்  பேசின்மற்றோ

ருறவா னவரின் றுலகெவற் றூடு மெனதுயிர்க்கே.

 

6.         உன்றிருப் பாதந்துணை யேன்று பல்துதி யோதிடுமஃ

தன்றிமற் றொன்று மறிகின் றிலேன்மெய் யர்ச்சுனபேர்க்

குண்டிடத் தாயடியார் மாட்சி நல்குவை கொல்கருவூ

டொன்றிட செய்வைகொலோ? தெரியேன் நினதுற் குறிப்பே.

 

7.         பாடிடு மன்பர்க் கின்பீந்திடு நின்பத பங்கயங்கள்

கூடிடு மொப்பில் பரானந்த  இன்பம்,  குவலயத்தி

லூடிடு மங்கையர் பொய்ச்சுகம் வாஞ்சித் தொழிவிலிடு

காடிடு மாக்கை படைத்தேங்கு மானிடர் காண்பரிதே.

 

8.         சழக்குண்ட வஞ்சக் கொடு மாயையின் வன்தளை யிடைப் பட்டு

உழக்குண் டயரு மடியேனுக் குன்றா ளுபயநெஞ்சில்

பழக்குண்ட தொண்டர் பெறும்பே றருளச்  சம்பந்தமிக்க

வழக்குண் டுனக்னின் றெனிலெனக் குண்டு மருதையேனே.

 

9.         கண்ட மட்டும் கறுத்தார் குருநாதனை கார்முகிலில்

கொண்ட மட்டும் கறுத்தோன் றாழு மர்ச்சுனக் குன்றிடத்தில்,

தண்ட மட்டும் புரிவாரையுங்  கார்நிறச் சண்டன்முனங்        

கண்ட மட்டுந்திறல் தீர்வான் பிரமன் கதிநினைத்தே.

 

10.       அல்லாக்குஞ் சோலை யதனிடைப் பாம்பி னரதனங்க  

ளெல்லாக்குஞ் சீர்கொள் மருதா சலனையு ளெண்ணிலுடன்

மல்லாக்கு மைம்புலன் மல்லாக்கும் வஞ்ச மனவடிவா  

யில்லாக்கு மாயையை யில்லாக்கு மானந்த மீந்திடுமே.

 

11.       மருதா சலன்பொன் னடிகளை யன்பின் மனத்திருந்தக்

கருதா தநித்தப் புவிவாழ்வை மெய்யெனக் கண்ணியென்றும்

விருதா வினிலுழல்வார் நரசென் மத்தின் மிக்கதுகாண்

வருதா ரணிமிதித் தற்கஞ்சு பேய்பெரும் வன்பிறப்பே.

 

12.       திருவளி க்கும்பெருங் கல்வியும் நல்கிடுஞ் சேணுலகார்

தருவ ளிக்கும்பதம் யாவையு மீந்திடுந் தன்னனைய 

வுருவ ளிக்குந் தொண்ட ரெண்ணிய யாவு முடனளிக்கு

மருவ ளிக்கும் பொழில்சூழ் மருதாசலன் வண்பதமே .

 

13.       தானந்த மாதியிலா தோங்குநின் திருத்தாள் துணையா

மானந்த சாகரத் தெந்நா ளணைய வருள்புரிவாய்

பால்நந்த மேந்துங்கை மாயனில் மேகம் படிந்தணியார்

வானந்தந் தோய் மரு தாசல மேவிய வானவனே.

 

14.       உன்னை யொப்பா முயர்வுள் ளாருமெந்த வுலகிடத்து

மென்னை யொப்பா மிழிவுள் ளாருமின் றிவ்விருவகையால்,

தன்னை யொப்பா  நிலைபெற்ற னம்யா மிந்தத் தன்மையினா

லன்னை யொப்பா யுகந்தென்னை யொப்பாய் மருதாசலனே.

 

15.       அகோர யிகல்புரி மாயை  வலைப்பட் டரிவையர்தம்

பகோத ரத்தில் தொடக்குண் டழியாது கண்பார்த்தெனையுன்

சுகோத யப்பொ னடியூ டொன்று மாறென்று தோய்த்தருள்வா

யகோதெ னும்பல் வளஞ்சால் மருதாச லாண்டவனே.

 

16.       வானாருந் தேவர்  துயரொழிந் தாண்ட வைவேலரசே!

தேனாரு மினியக் கவிகொண் டுனைத்துதி செய்திடுவேன்

யானாருந் துன்ப றிந்துந் தாமதித்த லியல்புகொலோ?

கானாரும் பூம்பொழில் சூழ்மரு தாசல காவலனே.

 

17.       என்பற்ற புழுயெல் முன து டித்தலி னிவ்வுலகத்து

இன்பற்ற வாழ்வில் துடித்தோ ரற்றிரங் கெளியேற்கு

உன்பற்றல் லால்பற்று வேறுளதோ சொல்முன் னும்பர்கொண்ட

துன்பற் றிடச்செய் திடுமரு தாசலத்  தூமணியே.

 

18.       கல்லை புரையு மனத்தீ னச்செல்வரைக் கண்டுவந்து

செல்லை புரைகைய னேயென்று பல்கவி செப்பியுறும்

பல்லைப் புரைபடக் காட்டுந ரேளனம் பண்ணவென்றன்

சொல்லை புரைபடுத் தேல்மரு தாசலச் சுந்தரனே.

 

19.       அனங்கன் றிசைமுக னந்தக னாமிவ ராட்சியினால்,

மனங்கன்றி, யெண்ணரி தாந்துயர் கொண்டுமெய் வாடக்கண்டு

முனங்கன்றி லாண்ட முறைமறந் தாய்முறை யோமுருகா

கனங்கன்றில் மேயும் மருதா சலவருட் கணருளே.

 

20.       படைத்தலை யாற்றுவன்  வேண்டாதுஞ் சூட்டும் நின்பாதமென்ற

னுடைத்தலை மேல்வைத் திடயி ரந்துஞ் சற்றுதவுகிலாய்

மடைத்தலைக் கொக்கஞ்சப் பாய்சேல் தண்வாவி மருதவெற்பா

ளுடைத்தலை வாவருள் சிந்தேயென் றன்னை யுகந்துகொள்ளே.

 

21.       பொல்லாத தீமைக் குணங்கோடி கொண்டுநம் பொன்னடிக்கன்

பில்லாத பாவியென் றென்னைப் புரந்தள்ள யெண்ணுதியேல்

கல்லாத பேதைக் கருள்வா ரெவர்கரு ணைக்கடலே

பல்லாத வரில்வ யங்குவை வேற்கைப் பரஞ்சுடரே.

 

22.       வாளார்ந்த வஞ்சகக் கண்மட மாதர் வடிவினையே

கோளார்ந்த எண்மனத் தூடுநின் னுள்ளங் குளிர்தவமெய்த்

தாளார்ந்த தொண்ட ருளந்தொறுந் துன்னடி சார்தலுண்டோ

வேளார்ந்த யின்பில் பணிமரு தாசல வித்தகனே.

 

23.       பகடேறி வந்ததட் டுங்கொடுங் கூற்றனும் பாவையர்த

மகடேறி டப்புரி மாரனும், வேதனு மான்றதையில்

சகடேறிடும் மருதா சலன்றா ளன்றி , சாற்றுமண்ட

முகடேறி னாலும் விடார்மன மேசற்றுள் முன்னுதியே.         

 

24.       இந்தி யத்தில் மனஞ்செல்லும் பொழுதி லிசைத்துளதாம்

புந்தி யில்காண் தருசொப்பன மாமிப் புவிப்பொருளை

நந்திற வாழ்வென் றுழல்வீ ரறிவில் மெய்நாடியன்பின்

முந்தியுள் தோயு மருதா சலனடி முன்னுமினே.      

 

25.       தன்னை யொப்பாம் வடிவேலா! நின்றாள் துணைதான்நினையா

தன்னையுந் தந்தையு முற்றா ரென்றோர் கணத்தாயிரர்த்தோய்

மின்னை யொத்தோடிடு , பொன்னை நத்தென் விவேகந்தனை

யென்னை யென்றோ திடுவேன்? மருதாசலத் தெம்மிறையே!   

 

26.       ஊனானெ னச்சொற் றுழன்றதல் லாலுன துண்மையருள்

ஞானா நுபூதி நிலையோர் சிறிது நயந்தறியேன்

மானா ரகடு புகாவகைக் கென்செய்வேன் மலர்பொழியுந்

தேனார் தடம்பொலி சீர்மரு தாசல சிற்பரனே.

 

27.       வேடம் புனைந்தெதிர் காண்போர்க ளுள்ளம் வெருளமெத்த

ஆடம் பரஞ்செய் திடுவே னுன்பாத மடைவதுண்டோ

தோடம் பரந்திழி வேன்றலை மீதடி சூட்டிடுவாய்

நீடம் பரந்தொட் டிடுமரு தாசல நின்மலனே.

 

28.       மலையிடத் தாடல்செய் நின்றிருத் தாளென் மனமெனுமவன்

சிலையிடத் தாக வமைந்திட நீயுளஞ் செய்யிலுட

னுலையிடத் தாமெழு கேபோன் றிடற்கைய மொன்றுளதோ

தலையிடத்து ஆம் மணி நாகம்குலாம் மருதாசலனே!

 

29.       போதென் றுவமை  பொருந்துநின் பாதம் புகுந்தொண்டர் 

கோதென் றுவிட்ட குணங்க ளெல்லா மொன்று கூடியென்பால்

வாதென் றுஞ்செய்ய, மனந்தளர் வேனைநின் வாரிசத்தாள் 

மீதென் றுகூட நினைவா யருச்சுன வெற்பரசே.

 

30.       மாயை யென்றொன் றுனையல் லாதுண் டென்ன மதிக்கிலனுன்

சேயை யிவ்வாறு செயலே னகலச் சினத்திடினுந்

தாயை யல்லா லிளஞ்சேய்க் கிடம்வே றிச்சகத்திலுண்டோ

வேயை யொப்பா  மனத்தேற் கருள ருச்சன வேதண்டனே.

 

31.       காமன் றனதலர் வாளிக் கயர்ந்திளங் கன்னியரை

மாமன் றலாற்ற மதிக்கும் நெஞ்சொன்று வழுத்திடக்கே

ளேமன் றருதுய ரெல்லை யில்லாதன யெண்ணியருள்

சேமந் தருமரு தாசலற் தோய்யின்பஞ் சித்திக்கவே.    

 

32.       உருவாழ்வு கொண்டி டாரமு தான வுணவுகொள்ளுந்

தருவாழ்வு தானு மோர் வாழ்வன் றெனிலிச் சகநித்தக்

கருவாழ்வு கண்டிறு மாத்தல் நன்றோ வுள்கலந்தழியாப்

பெருவாழ்வு சீர் மரு தாசலன் தாளவை பேணுநெஞ்சே.

 

33.       விரவுஞ் சத்தாகிய வாமரு தாசல வேலநின்றாள்

பரவுஞ் சத்தார் குணவீ ரர்கள் தாரகப் பாதகனால்

கிரவுஞ் சத்தார் தருபெற்றி யுற்றே னெ னைக்கிட்டுவாழ்

தரவுஞ் சுதாள்பெற நல்குநின் செம்பொன் சரண்சரணே.

 

34.       செய்வனை யொன்றறி யாதே, யுலகச் சிறுநடையில்

நைவனை மிகவுழன் றேன்மரு தாசல நாயகயான்

வுய்வனை கொள்ளநின் பாலடுத் தேனரு ளுற்றுனைத்தோய்  

மெய்வனை யன்ப ரன்பீந் தாளுனை மிகவேண்டினனே.

 

35.       அல்லும் பகலு மறியா யிடத்தி லமர்ந்தடியேன்

சொல்லும் பொருளுமற் றுன்பத பங்கயந் தோய்சுகத்தி

லொல்லும் படியெற் கருளுந் தினமெமான் றுளதுகொலோ

செல்லும் பரிதியுந் தோய் மரு தாசல சிற்பரனே.

 

36.       மனமென்று பாவி, மயல்கொண்டு, தீவினை மங்கையர்தம்

தனமென்று வெற்பி லிவர்ந்திழி யல்குல் சலதிபுக்கு,

கனமென்ற னந்தம்  பிணிமழை பெய்பொய்க் கடங்கடக்குந்

தினமென்றென் றேனுஞ் சொல்வாய்  மருதாசல சேவகனே.

 

37.       வனங்காத லிக்குஞ் சடையானுங் கும்பனும் வாழ்த்துபுதம்

மனங்காத லிக்கு மருதேசன் பாதம் மறந்துவன்பே

யினங்காத லிக்கு மினமான மாதரொ டேதமிக்க

தனங்காத லிக்கு மனமே வுனக்கென்ன சால்புடைத்தே.

 

38.       தேனூறு மின்ப மருதா சலன்புகழ் செப்பெனவே

நானாறு கோடி தரமுனைப் போற்றி நவிலினும்விட்டு

ஊனூறு வுடையபொய் வாழ்விலின் புண்டென் றுழன்றனையா

லேனூறு வுனைவிட் டகலும் நெஞ்சே மதித்தெண்ணுதியே.

 

39.       பவந்தோறு மென்மன மே!யுன் வழியில் படர்ந்தளவில்

அவந்தோயுந் துன்புழந் தேன்;பிறப் பொன்றிதி லாயினும்யான்

உவந்தோது மாற்ற மதித்தன் பினோடென வுடனிணங்கி

சிவந்தோயும் மாமரு தாசலன் தாள்துணை சேர்ந்துருகே.

 

40.       பெருகும் பரசுகத் தேன்நல் குன்றாள் துணைபேணியுள்ள

முருகுஞ் செயல்சற் றடையாத பாவி யோதியணையேன்

பொருகுஞ் சரநிகர் மெய்த்தொண்டர் பான்மை பொருந்தலுண்டோ

முருகுந் தண்டலை சூழ்மரு தாசல முன்னவனே.

 

41.       முன்னந் தரங்கக்  கடல்தாண்டி, சூரை முடித்திமையோர்

மன்னந் தரங்கவி னெய்தச் செய்தாளு மருதவெற்பா

யென்னந் தரங்க மறிந்துஞ் சிறிது மிரங்கிலர்போ

லின்னந் தரங்கம் பெறக்காண்டல், நின்னருட் கேற்பதன்றே.

 

42.       பழிக்கே பிறப்பிட மாமட மாதர்தம் பாலமுத

மொழிக்கே, கலக விழிக்கே, யிடையில் முடைகொளுந்திச்

சுழிக்கே விருப்பம் பெறுவ தல்லால் சிற்சுகங் கொளநின்றாள்

வழிக்கே வராமனத் தாலிளைத் தேன்மரு தாசலனே!

 

43.       வகையோன்றுந் தேர்கில னாயாண வாதி மலங்களினால்

மிகையொன்றும் வெம்பவத் தின்னல் மிக்கெய்த்த னன்வேதவருள்

சிகையொன்று நின்பதஞ் சூட்டிமெய்த் தொண்டர்கொள் சீர்பெறவே

தகையொன்று மாமரு தாசல சற்றெனைத் தாங்கிக்கொள்ளே.

 

44.       வெப்பின்றிய தண்விளக்கா யெனதுள மேவியநின்

ஒப்பின்றிய துணைத்தாள் நாடிச் சற்று முருகலின்றி

துப்பின்றி யவத்த லையுமென் நெஞ்சநின் தொண்டரொப்பாத்

தப்பின்றிய நெறிதாங்க லெந்நாள் மருதா சலனே.

 

45.       காலத்தை  வீணில் கழித்ததல் லாலருட் காட்சிபெறுஞ்

சீலத்தை யோர்சற் றறிகின்றி லேன்வெஞ் சினத்தோடிருள்

கோலத்தை மேவி வருநம னுக்கென் குயிற்றிடுவேன்

சலத்தை நீக்கி யருள்மரு தாசல தற்பரனே.

 

46.       சின்னஞ் சிறுபரு வத்தில்வந் தாண்டின்று தேர்கிலர்போல்

பென்னம் பெரியதுய ருறக்கண்டும், பேசா திருந்தாய்

கன்னங் கரிய நிறத்தந் தகன்கொளக் காட்டிவிடேல்

தனித்தனிப் பொருளே மருதா சலசண் முகனே.

 

47.       தருவாகி நின்றம ரர்க்குறு போகந் தருதலில்சற்

குருவாகி வந்தடி யேற்கருள்ச்  சீலங் கொடுத்தின்னங்

கருவாகி டும்வழி யென்னெஞ்ச மோட, கறங்கிலெய்த்தேன்

அருவாகி வாழவ ருளேமரு தாச லாண்டவனே.

 

48.       பண்டுண் டொன்றினை நாளும் புதிதெனப் பற்றுமிஞ்சி

உண்டுண் டலைமனத் தேன்நீ யருள்சற் றுதவினன்றி

தொண்டுண்ட  மெய்யடியார் போல நின்சிற் சுகக்கடலில்

மொண்டுண் டமையேன் நிசமரு தாசல முத்திவித்தே.

 

49.       உலைக்கண் ணிடுமெழுகு போல நெஞ்ச முருகுனன்பர்

முலைக்கண் ணில் பால்பெரு வாரிதி தோன்றும் முறையிலின்ப

அலைக்கண் ணியைந்தனர்; நானேழை; வஞ்சக யைம்புலப்பொய்

வலைக்கண் ணிருந்துயர் கொண்டேன் மருத வரையரசே.

 

50.       நானுடன் நீயென்றிடும் பேதம் முற்று நசிக்கநறுந்

தேனுடன் பால்கலந் திட்டது மொப்பில்  மெய்சிற்சுகத்தி

லூனுட னுள்ள முருகும் படிக்கென் றுதவியென்னை

மானுட பேறு பெறப்புரி வாய்மரு தாசலனே.

 

51.       மீனென்று மானென்றும் வேலென்று நீளென்றும் வேடனம்பு

தானென்று மாதர் கண்ணைப் புகழ்மோகந் தவிர்த்தவனி

வானென்று மேத்து மருதாச லேசநின் வண்புகழ்ச்சீர்

நானென்றுந் துத்தியஞ் செய்துய்யு மாறருள்  நல்குவையே.

 

52.       விடந்தீண் டிடுந்தகை போலெனைச் சற்றும் விடாதுமயற்

சடந்தீண் டிவாதனை தந்திட , சாலத் தளர்ந்தனன்வா

னிடந்தீண் டியமரு தாசல மீதிலி லங்குனின்ப

நடந்தீண் டிய பத நான்றீண்ட வென்றருள் நல்குதலே.  

 

53.       வழியாது மோர்கில னாயா ணவவன் மலத்தினுள்கண் 

விழியா தழுஞ்சிறு சேய்போல் கிடந்து வெதும்புகின்றேன்

சுழியா தருளிலுய் வேன்சோதிப் பான்நீ தொடங்கிலுய்யேன்

பொழிவார் மதுபொழில் சூழ்மரு தாசலப் புண்ணியனே.

 

54.       புண்ணியர் யாருநின் பொன்னடி போற்றிப் பொருவிலின்பாங்

கண்ணிய மெய்திக் களிதூங் கினரிக் கடையவனடிவலன்

மண்ணியல்  வாழ்க்கையை மெய்யென்று நாடிமதியிழந்து

புண்ணியல் மாயையி லாழ்ந்தேன் மருதப் பொறுப்பிறையே.

 

55.       அந்தோ! யிவ்வேழைச்  சிறியேன் சகித்தற் கரியதுன்பால்

நொந்தோல மிட்டரற்றும் பான்மை தன்னையுள் நோக்கில்நிற்கச்

சந்தோடம் மேவுவதோ மேவிடி லதுவென் சம்மதங்காண்

பைந்தோகை  யாடல றாமரு தாசலப் பார்த்தியனே.

 

56.       கவலைகள் யாவுங் கழிந்தே, நின்செம்பொன் கழல்துணையா

முவமை யில்மெய்ச் சச்சிதானந்த வாரிதி  யுண்டெழுந்தது

நவரச பாடல் பல்கோடி பெய்தாடல் நவிலவென்னுள்

தவவிழைந் தேன்மரு தாசல வாழ்கை தருவதென்றே.

 

57.       வார்க்குங் குமமுலை யாரநு  ராக வழியிலென்னை

யீர்க்குங் கொடுமனப் பேய்க்கோட் பட்டெய்க்கு மென்னின்னலறத்

தீர்க்கு படியென்று நீநினை வாயுயர் சேணையெட்டிப்

பார்க்குஞ் சிகரி குலாமரு தாசலப் பார்த்திபனே.

 

58.       திருந்துங் குணமலி மெய்த்தொண் டடியவர் சென்னிமிசை

பொருந்தும் பதமலர்க் கென்சென்னி சாலப் பொருத்தமின்றோ

முருந்துந் தளவ அரும்பும் பொருங்கதிர் மூரல்வள்ளி

வருந்துபு யடவி புகுமரு தாசல வானவனே.

 

59.       கீர்த்தி யென்றூழ் மருவெல் நேரருண கிரிப்பெயர்சால்

மூர்த்தி புகலுன் றிருப்புகழ்ப் பாக்கள், முதிருமன்பி

லார்த்தியி லோதித் துதிக்கா தவத்திலவை யென்னைகண்

பார்த்திடு தற்கிசை வாயோ மருதப் பருப்பதனே.

 

60.       பனையென்று நீள்துயர் பல்கோடி நல்குமிப் பார்நடையில்

மனையென்று மைந்த ரென்றுஞ் சுழன்றெய்க்கு மென்வஞ்சநெஞ்ச

நினையென்று மன்பில் நினையென்று சால நிகழ்த்தினும்யான்

தினையெஎன்றுங் கொள்கில தேமரு தாசல சிற்பரனே.

 

61.       கண்துண்ட மாதிய கொண்டுநின் றாளில் கலந்தயின்ப

மொண்டுண் டகிலச் சிறுநடை தோயு முயக்கறுமெய்த்

தொண்டுண்ட பேரன் பினர்போ லடியேன் றுலங்கிடுநா

ளுண்டுண்டு கொல்மரு தாசல வேலவ வோதுதியே.

 

62.       வேதாகம முடிமீதே முடியில் விளங்குநின்பொன்

பாதார விந்தமல் லாதுன தாணையிப் பாரிசையோ

ராதாரங் காண்கில னீதுன் னுளமறி யாச்செயலோ

மாதாபி தாகுரு  வாமரு தாசல வானவனே.

 

63.       மட்டாரு நின்பொன் சரண்சர ணென்று மதித்தவெனை

யெட்டாத பேரின்ப ஞானா நுபூதி யிசைத்தருளில்

விட்டாலு மல்லது மாபாவி யென்றுள் வெறுத்திருளி

னுள்தாழ வைக்கினும் பாரம்நிற் கர்ச்சுகன வோங்கலனே.

 

64.       மயல்நிறை வுற்ற பொய்ப்பார் மிதில்தந்தை மரபமைந்தார்

இயல்நினைக் குந்தோறுஞ் சோதனை நீமிக் கியற்றிடினும்

வியனிலக் குற்றென் னோர்நெஞ் சத்துளோகை மிகுக்கின்றதால்

கயல்நிலவுஞ் சுனையார் மருதா சலகந் தப்பனே.   

 

65.       தேனென நின்புகழே பாடுமாசை செறிந்தவெனை

யானெனக் கூவி யணையாமல் நெஞ்சத் தருளிலர்போல்

யேன்னெடுஞ் சோதனை பலவா றியற்றியுள் ளேய்க்கவைத்தாய்

கானெழுந் தண்டலை  சூழ்மரு தாசல காங்கெயனே.

 

66.       பித்துலகத் தவர்தம்மை யுற்றா ரெனப்பெற் றவரோ

டொத்துழ லுங்கொடு மாயப் பிணிமுற் றொழிந்தறவே

நத்துல வுங்கட லுண்டாற் கருள்மொழி நல்கிடுவாய்

சத்துமுன் முப்பொரு ளாமரு தாசல சற்குருவே.

 

67.       எற்றுங் கொடும்புலக் கோள்ப்பட்டு யானீண் டிரங்குசெயல்

முற்றுந் தெரிந்து மிரங்கா திருத்தல் முறைமைகொல்லோ

எற்றுன் பநின்றுனை யல்லா லெடுப்பவர் யாரிசையாய்

வில்துன்று மண்டிலந்  தோய்மரு தாசல வித்தகனே.

 

68.       மானிட ரானவர் யாவரு மர்ச்சுன  வள்ளல்நின்றாள்

வானிடந் தோய்ந்த திறப்பின்றிய வானந்த மன்னினர்யா

னூனிதிலே யாசை மிகுத்தே வுணர்வற் றுழன்றிடும்வெம்

கானிடத் தார்விலங் கொத்திழிந் தேன்கதி காண்பதென்றோ.

 

69.       மனங்கண்ட குற்றங்கள் பற்பல கோடி மலைகடல்போல்

தினங்கண்ட பாவிக் கொடிய னென்றுன் மெய்த்திருவுளத்தில்

சினங்கண்ட னையெனில் நாயேன் றனக்கொரு திக்குளதோ

கனங்கண்ட கவும்சிகி மருதா சலகந் தப்பனே.

 

70.       எப்படி யாகினு நம்மைவிடா னெந்தை யென்றுதின

மிப்படி மீதெதிர் கண்டோ ரிடத்துமி சைக்குமென்சொல்

பொய்ப்படி யாகிடு மாறரு ளாது புறக்கணியேல்

முப்படி யுந்தொழுஞ் சீர்மரு தாசல முன்னவனே.

 

71.       வம்புந்து மைம்புல வேடர்க ளால்மிக மாழ்கிநொந்து

வெம்புந் தகையுடை யேனா யினுநின் விரைமலர்த்தாள்

நம்புந் தகையு முடையே னெனைக்கை நழுவவிடேல்

கொம்புந் துதேன் கொட்டி டும்மரு தாசலக் கொற்றவனே.      

 

 

72.    வேண்டா திகழ்ந்துரைக் குஞ்சமன் றன்பதி மேவநம்மைச்
கூண்டா ரொடும்வந் தழைக்குமக் காலுளங் கோயில்கொண்
டாண்டான் மருதப் பிறங்கலில் வாழ்நம் மருட்கடல்தான்
வீண்தா னிருத்திடு வானோ? யவன்துதி விள்மனமே.

 

73.       கற்பனை பற்பல கோடி கொண்டொவ் வோர்கணத்துமுயர்

மற்பனை போல்துயர் கொண்டுகொண் டேங்கென் மடநெஞ்சமே

அற்பனை மார்க ளனந்த ரில் சர்த் தருள்மருத

வெற்பனை நாடுதி யேலெய்து மின்பம் விளம்பரிதே.

 

74.       கோதுசெய் வஞ்சக் கொடுமாயை யின்னங் குவலயத்தில்

காதுசெய் வஞ்ச விழியார் கரங்கொளக் காட்டிடுமோ

யாதுசெய் யுங்கொலென் றேங்கிடு வேற்குள் ளிரங்கியெந்தப்

போதுசெய் வாயருள் மாமரு தாசல புண்ணியனே.

 

75.       ஆனந்த வாரிதி மேலெழுந் தார்க்கு மலையெனவே

நானந்த மின்றிநின் சீர்கோடி யாக நவின்றுதியா

வானந்த மெய்திட வாஞ்சித் தனனந்த வண்ணநல்கா

தேனந்த யீண்டலைக் கின்றா யருச்சனத் தெம்மிறையே.

 

76.       பேய்யென்று மேலவர் தாம்வெறுத் தோதிய பேதையர்தோள்

வேய்யென்று மங்கதைத் தோய்யென்றுஞ் சால விளம்பியென்னை

நோய்யென்றுஞ் செய்மன மேமரு தேசனை நோக்கியன்பில்

சேய்யென் றுரைத்தறி வாயெனில் மற்றிதைச் சீயென்பையே.

 

77.       எங்கெங்கு போஞ்சனிகட் பற்றி சுற்றமென் றெண்ணியிகத்

தங்கங்குஞ் சென்றுபொரு ளீட்டி ,மற்றவர்க் காக்கிமிகு

பங்கஞ்சு மந்துமடி வேற்கு ஞானம் பலித்திடுமோ

துங்கம்பொ ருந்து மருதா சலத்தமர் தூமணியே.

 

78.       நசைசான்ற தொண்டர்கள் தோய்மரு தாசல நாயகநின்

இசைசான்ற பக்தி  யில்லா ரிறுமாக்கு மிகல்கலியில்

வசைசான்ற யிவ்வுல கத்திருந் தற்குள் மதிக்கலனித்

            தசைசான்ற துன்பம் பொறையொழித் துன்பதஞ் சார்த்தருளே.

 

79.       பணமென்று மாடென்றுங் காடென்றும் வீடென்றும் பாவைநல்லார்

மணமென்றும் பேசி யிருந்தே சுவாச வழக்கொழியில்

பிணமென் றெடுத்திடு காட்டிட் டழுதமை பேயர்நட்பை

கணமென்றும் வேண்டுகி லேன்மரு தாசல காத்தருளே.

 

80.       அம்பர மோயெனங் கண்மட வார்மிசை யாசைமிஞ்சி
            பம்பர மோவென வோயாது சுற்றுமென் பாவிநெஞ்சஞ்

செம்பர மோக்க மவாயுனை நாடுமோர் தினமுளதோ
            வம்பர மோடணை யுங்கோ புரமரு தாசலனே.

 

81.       ஞானத் திருப்புளஞ் சாலரு ணைச்சுக நாதன்நவில்

கானத் திருப்புக ழோதியோர் சற்றுங் கசிந்துருகா

யீனத் திருப்புள வஞ்சனை யுன்னடி யெய்துமன்பர்

மானத் திருப்புகண் டாய்மரு தாசலம் வாழ்குகனே!

 

82.       முன்னெஞ்ச லின்றி யருளாடல் கோடி முயன்றதன்பர்

நன்னெஞ்ச மேவிய தன்மையி னாலென நன்குணர்ந்தேன்

என்னெஞ்ச மேவிய தன்மையில் நிற்கு மிரங்குகிலா

வன்ஞ்ச மாகிய தால்மரு தாசல மாமணியே.

 

83.       மதிகொண்ட தொண்ட ருளத்தோடு முயரு மருதவெற்பில்

குதிகொண் டாமரைத் தாள்சிரஞ் சூட்டியென் கோதொழித்து,

பதிகொண்ட வாழ்வில் பதித்தரு ளாய்செழும் பங்கயந்தோய்

சுதிகொண்ட நான்மறை யோனா தியர்தம் தொடர்பறவே.

 

84.       தேக வபிமானத் தளையுண் டநித்த செகப்பெயர்கொள்

மோக வடவியில் சுழல்பாவி வன்கொடு மூர்க்கனிவ

னாகா தவன்நமக் கென்றுளத் துன்னி யகற்றுதியேல்

ஏகா வருட்கட லேமரு தாசல யார்கதியே.

 

85.       தாயாத ரிக்கிலளேல் பிள்ளைக் கேதொரு சார்பதுபோல்

நீயாத ரிக்கிலை யேல்மரு தாசல நெஞ்சுயர்ந்திட்

டோயாத ரிக்கும் புலனா லலைப்புண் டொழிவதல்லால்

சேயாத ரிக்கும வகை யேது நீயுள் தெரிவதிதே.

 

86.       முருகாவென் றுன்னருள்  நாமம் மெய்யன்பின் மொழிந்திடுவாட்

கருகாகி, நீகர மீந்தாண் டருள்கை யறிந்திருந்தும்

பெருகாத ரங்கொடுன் பேரோதி நின்னடி பேணிலராய்

வருநாசிக் கால்மறிப் பார்மதி யென்மரு தாசலனே.

 

87.       மையுற்ற வையக் கடத்தில் மின்னாரென் வனசரரென்

கையுற்ற ஞானப் பொருளா றலைக்கக் கலங்கிநொந்தேன்

மெய்யுற்ற நின்னரு ளாந்துணை தன்னை விடுக்கிலுய்வேன்

வையுற்ற வேல்படை யாய்மரு தாசல வானவனே.

 

88.       கரணத்தொ டைம்பொறி யாதியு மெத்தக் கலங்கவரு

மரணத்தொடு பவமென் றெனத்தொ டர்பிணி மாற்றவுன்பொன்

சரணத்துணை சரணத் துணையா மெனச்சார்ந் தனன்பைங்

கிரணத்தொ கரப்பரி யூர்மரு தக்கிரிக் கந்தனே.

 

89.       வன்புள மாயை வடிவா மனமென் வசமகன்றே

துன்புள யைம்புலப் பால்கணந் தொறுஞ்சு ழற்றவெய்த்தே

னன்புளத் தொண்டர் பெறும்பே றெனக்கென் றளித்தருள்வாய்

பொன்புணர் கஞ்சத் தடஞ்சூழ் மருதப் பொருப்பிறையே.

 

90.       உலைமீ துறுமெழு கேபோல நெஞ்ச முருகிடவென்

றலைமீ துன்பொன் னடிசூட்டி மெய்த்தொண் டர்கள் சார்ந்தவின்ப

நிலமீ தமையப் புரிந்தருள் வாய்நிக லில்மருத

மலைமீ தமைகுரு வேசற் றுனது மனமுவந்தே.

 

91.       தாள்தா மரைத்துணை யென்சென்னி மீதில் சதுமுகன்கை

தீட்டா மல்சேய் கொள்ளி நாட்டாம லுள்ளஞ் சிறிதிரங்கி

சூட்டாமல், மெய்ந்நிலை காட்டாம லின்னமுஞ் சோதனையா

சேண்தா மருவு மருதா சலத்தெம் சிவக்கொழுந்தே.

 

92.       விரத வித் தார மெய்த்தொண்டர்க ளொத்திட மேல்நடிக்கும்

பரத வித்தார முடையே னெனினுநின் பங்கயந்தோய்

சரத வித்தாகிய வாஞ்சை யுளேன்மரு தாசலஞ் சால்வரத

இத்தா லென்னை யாட்கொள்ள நிற்குமோர் வழக்குளதே.

 

93.       எனைத்த டுக்குந்தடை யெல்லாந் தடுத்துனை யெய்தநெஞ்சில்

நினைத்த டுத்தேனடி யேற்கருள் செய்ய நினைத்தடுக்கில்

நினைத்த டுக்குந்தடை யொன்றுள தோகொல் நிகழ்த்திடுவாய்

கனைத்த டுக்கும்புயல் தோய்மரு தாசலக் காவலனே.

 

94.       வெதுப்புஞ் சகலத் தொடுகே வலத்தில் விழாமலுன்பொன்

மதுப்புண் டரிகத் திருத்தாளி லென்றெனை வைத்தருள்வாய்

சதுப்புந்தும் மாயைப் புவிவாழ்வி லிச்சை தவிர்த்தருள்

விதுப்புந்து சீர்மரு தாசல மேவிய வித்தகனே.

 

95.       மின்கவின் மேனி யருள்குரு வாக விளங்கியருள்

நின்கரு ணைத்திறஞ் சற்றேனு மன்பில் நினைந்துருகா

வன்கருங் கலன்ன நெஞ்சகத் தேன்வயக் கும்பிழைகட்

கென்கட வேன்கழு வாய்மரு தாசலத் தெம்மிறையே.

 

96.       சும்மா யிருசொல் லவென்று நீமுனஞ் சொற்றலுமே

அம்மா பொருளொன்று மறிந்தில னென்னரு ணையெங்கோன்

விம்மா னந்த வபவஞ் சிறியேற்கு விளக்கிடுவாய்

கைம்மா வுலவும் பொழில் மருதாசல காரணனே!

 

97.       மலவாகக் கானடைந் திட்டே னடைக்கல மல்புரியும்

புலவேட ராலரிப் புண்டே னடைக்கலம் புன்மனச்சஞ்

சலவாழ்க் கைக்குள் சலித்திட்டே னடைக்கலந் தாங்கியருள்

நலமேற் றடைக்கல நான்மரு தாசல நாயகனே.

 

98.       வள்ளி தெய்வப் பிடிநாதா யபய மணங் கமழுங்

கள்ளியல் நீபத் தொடையா யபயங் கலாபவெழில்

புள்ளிமயில் பரியானே யபயம் பொருதுசத்தோடு

ஒள்ளிய வேல்மரு தேசா யஅபய முனதடிக்கே.

 

99.       படைக்கலந் தாங்கிப் பொரும்வேள் சமன்றம்  பகைபெறும்பார்

நடைக்கலந் தோர்புகலுங் காண்கிலது நின்னாள் மலர்த்தாள்

கடைக்கல மாயினன்; நாயேனை யுன்ற னருளடியார்

புடைக்கலந் தின்றுறப் பார்மரு தாசல போற்றியவே.

 

100.    திசையாறு மேமுக மாய்சம யங்கள் திருப்புயமாய்,

இசைவேத யாகம நிச்சயந் தாங்களி ரண்டெனக்கொண்

டசையாப் பரந்தன் னிடமேந்து கைக்தேசிக னாமுருவாய்

நசைதோ யடியர் தொழமரு தாசல நண்ணியதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக