இராமலிங்க வள்ளலார் அருளிச் செய்த
விநாயகர் துதி
(நேரிசை வெண்பா)
அஞ்சுமுகத்
தான்மகன்மா லஞ்சுமுகத்
தானருள்வா
னஞ்சுமுகத் தானஞ் சணிகரத்தா - னஞ்சுமுக
வஞ்சரையான் காணா வகைவதைத்தா னோரரையோ
டஞ்சரையான் கண்க ளவை.
(1)
வாதாகா
வண்ண மணியேயெம் வல்லபைதன்
நாதாகா வண்ண நலங்கொள்வான் - போதார்
வனங்காத்து நீரளித்த வள்ளலே வன்பா
லினங்காத் தருளா யெனை.
(2)
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
உலகெலாம்
தழைப்ப வருள்மத யருவி
ஒழுகுமா முகமுமைங் கரமு
மிலகுசெம் மேனிக் காட்சியு மிரண்டோ
டிரண்டென ஓங்குதிண் தோளுந்
திலகவாள் நுதலார் சித்திபுத் திகளைச்
சேர்த்தணைத் திடுமிரு மருங்கும்
விலகுறா தெளியேன் விழைந்தனன் சித்தி
விநாயக விக்கினேச் சுரனே.
(3)
உள்ளமு
முயிரு முணர்ச்சியு முடம்பு
முறுபொருள் யாவும் தனக்கே
கள்ளமுங் கரிசு நினைந்திடா துதவிக்
கழலிணை நினைந்துநின் கருணை
வெள்ளமுண் டிரவுபகலறி யாத
வீட்டினி லிருந்துநின் னோடும்
விள்ளலில் லாமல் கலப்பனோ சித்தி
விநாயக விக்கினேச் சுரனே.
(4)
நாதமுங்
கடந்து நிறைந்துநின் மயமே
நானென வறிந்துநான் தானாம்
பேதமுங் கடந்த மௌனராச் சியத்தைப்
பேதையேன் பிடிப்பதெந் நாளோ
ஏதமுஞ் சமய வாதமும் விடுத்தோ
ரிதயமு மேழையேன் சிரமும்
வேதமும் தாங்கும் பாதனே சித்தி
விநாயக விக்கினேச் சுரனே.
(5)
சச்சிதா
னந்த வடிவநம் வடிவம்
தகுமதிட் டானம்மற் றிரண்டும்
பொய்ச்சிதா பாசக் கற்பனை யிவற்றைப்
போக்கியாங் கவ்வடி வாகி
அச்சிதா கார போதமு மதன்மே
லானந்த போதமும் விடுத்தல்
மெய்ச்சிதாம் வீடென் றுரைத்தனை சித்தி
விநாயக விக்கினேச் சுரனே.
(6)
ஒன்றல
விரண்டு மலவிரண் டொன்றோ
டுரல வரல வுவட்ட
நன்றல நன்றல் லாதல விந்து
நாதமு மலிவை யனைத்தும்
பொன்றலென் றறிந்துட் புறத்தினு மகண்ட
பூரண மாஞ்சிவ மொன்றே
வென்றலென் றறிநீ யென்றனை சித்தி
விநாயக விக்கினேச் சுரனே.
(7)
சத்தசத்
தியல்மற் றறிந்துமெய்ப் போதத்
தத்துவ நிலைபெற விழைவோர்
சித்தமுற் றகலா தொளித்தநின் கமலச்
சேவடி தொழவெனக் கருள்வாய்
சுத்தசற் குணத்தெள் ளமுதெழு கடலே
சுகபரி பூரணப் பொருளே
வித்தக முக்க ணத்தனே சித்தி
விநாயக விக்கினேச் சுரனே.
(8)
மருள்உறு
மனமுங் கொடியவெங் குணமும்
மதித்தறி யாததுன் மதியு
மிருளுறு நிலையு நீங்கிநி னடியை
எந்தநா ளடைகுவ னெளியே
னருளுறு மொளியா யவ்வொளிக் குள்ளே
வமர்ந்தசிற் பரவொளி நிறைவே
வெருளுறு சமயத் தறியொணாச் சித்தி
விநாயக விக்கினேச் சுரனே.
(9)
கேவலசகல
வாதனை யதனால்
கீழ்ப்படு மவக்கடல் மூழ்கி
ஓவற மயங்கி வுழலுமிச் சிறியே
னுன்னரு ளடையும்நா ளுளதோ
பாவல ருளத்தில் பரவிய நிறைவே
பரமசிற் சுகபரம் பரனே
மேவுறு மடியார்க் கருளிய சித்தி
விநாயக விக்கினேச் சுரனே.
(10)
கானல்நீர்
விழைந்த மானென வுலகக்
கட்டினை நட்டுழன் றலையு
மீனவஞ் சகநெஞ் சகப்புலை யேனை
யேன்றுகொண் டருளும்நா ளுளதோ
வூனமொன் றில்லா வுத்தம ருளத்தே
வோங்குசீர்ப் பிரணவ வொளியே
வேல்நவில் கரத்தோர்க் கினியவா சித்தி
விநாயக விக்கினேச் சுரனே.
(11)
பெரும்பொருட்
கிடனாம் பிரணவ வடிவில்
பிறங்கிய வொருதனிப் பேறே
யரும்பொரு ளாகி மறைமுடிக் கண்ணே
வமர்ந்தபே ரானந்த நிறைவே
தரும்பர போக சித்தியும் சுத்த
தருமமும் முத்தியுஞ் சார்ந்து
விரும்பினோர்க் களிக்கும் வள்ளலே சித்தி
விநாயக விக்கினேச் சுரனே.
(12)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக