திங்கள், 19 அக்டோபர், 2026

கோ மாதா போற்றி

 

கோ மாதா போற்றி

1

ஓம் அடி கொம்புதனில் பிரம்ம விஷ்ணுவே போற்றி ஓம்

2

ஓம் அதர்மம் அழிக்கும் ஆங்காரியே போற்றி ஓம்

3

ஓம் அமிர்தம் பொழியும் அன்னையே போற்றி ஓம்

4

ஓம் அழகான சுந்தரியே போற்றி ஓம்

5

ஓம் அன்பாய் அருளிடுவாய் போற்றி ஓம்

6

ஓம் அஷ்டதிக்கு உருவம் நீயே போற்றி ஓம்

7

ஓம் அஷ்டதிக்கு பாலகர்களே போற்றி ஓம்

8

ஓம் அஷ்டலட்சுமியின் உருவே போற்றி ஓம்

9

ஓம் ஆபத்தில் காத்திடுவாய் போற்றி ஓம்

10

ஓம் ஆயுளை நீடிக்கும் அம்பிகையே போற்றி ஓம்

11

ஓம் இசையின் இனிமையே போற்றி ஓம்

12

ஓம் இடக்கண் தனில் சந்திரரே போற்றி ஓம்

13

ஓம் இதயம் தனில் எமனே போற்றி ஓம்

14

ஓம் இந்திரனே போபாற்றி

15

ஓம் இந்திராணி போற்றி ஓம்

16

ஓம் இயற்கையின் பிறப்பிடம் போற்றி ஓம்

17

ஓம் இன்பநிலை தருவாய் போற்றி ஓம்

18

ஓம் இன்னல்கள் தீர்ப்பாய் போற்றி ஓம்

19

ஓம் உடலினுள் வலம் தரும் நவகிரகங்களே போற்றி ஓம்

20

ஓம் உதடுதனில் உதய அதிஷ்டமன சக்திகளே போற்றி ஓம்

21

ஓம் உதிரம் தனில் பூதேவியே போற்றி ஓம்

22

ஓம் உமாதேவியே போற்றி

23

ஓம் உமையின் பிரியே போற்றி ஓம்

24

ஓம் உயிர்வளர்க்கும் மாதாவே போற்றி ஓம்

25

ஓம் உலகமும் உன்னுள் போற்றிலும் ஓம்

26

ஓம் உலகனைத்திற்கும் அன்னையே போற்றி ஓம்

27

ஓம் உள் நாசிதனில் நாகேஷா போற்றி ஓம்

28

ஓம் ஊங்காரம்தனில் சரஸ்வதி போற்றி ஓம்

29

ஓம் எங்களையும் காப்பாய் போற்றி ஓம்

30

ஓம் எலும்பில் எழுந்தருளும் யாகங்களே போற்றி ஓம்

31

ஓம் எல்லா அம்சமும் கொண்டாய் போற்றி ஓம்

32

ஓம் எழுவரின் சக்தியே போற்றி ஓம்

33

ஓம் என்குல தாயே போற்றி ஓம்

34

ஓம் ஏகாந்த ரூபமே போற்றி ஓம்

35

ஓம் ஏழ்மைநிலை போக்குவாய் போற்றி ஓம்

36

ஓம் கழுத்துதனில் இந்திரனே போற்றி ஓம்

37

ஓம் காதுகள் தனில் அஸ்வினி தேவர்களே போற்றி ஓம்

38

ஓம் காமதேனு தாயே போற்றி ஓம்

39

ஓம் காமதேனுவே போற்றி

40

ஓம் காயத்ரி ரூபமே போற்றி ஓம்

41

ஓம் குலம் காக்கும் குமரியே போற்றி ஓம்

42

ஓம் குழந்தையின் ரூபமே போற்றி ஓம்

43

ஓம் குளம்பில் வாழும் புண்ணிய மலைகளே போற்றி ஓம்

44

ஓம் கெண்டைதலம் தனில் இயக்கர்களே போற்றி ஓம்

45

ஓம் கேட்காமல் தரும் தாயே போற்றி ஓம்

46

ஓம் கேட்பதற்று இனிமையே போற்றி ஓம்

47

ஓம் கேட்பதை தந்திடுவாய் போற்றி ஓம்

48

ஓம் கேட்பதை தரும் கற்பகமே போற்றி ஓம்

49

ஓம் கோமயம் தனில் கங்கையே போற்றி ஓம்

50

ஓம் கோமாதாவே போற்றி போற்றி

51

ஓம் கோவடிகளில் வாழும் அனைத்து சக்திகளே போற்றி ஓம்

52

ஓம் கோவடிவில் காட்சி தரும் சக்திகளே போற்றி ஓம்

53

ஓம் சக்தி கோமாதா போற்றி ஓம்

54

ஓம் சதாசிவாய போற்றி

55

ஓம் சத்தியத்தின் ரூபமே போற்றி ஓம்

56

ஓம் சந்தானத்தை தந்திருவாய் போற்றி ஓம்

57

ஓம் சந்திகள் தனில் வசுக்களே போற்றி ஓம்

58

ஓம் சந்திரனே போற்றி போற்றி

59

ஓம் சாணம் தனில் யமுனையே போற்றி ஓம்

60

ஓம் சிரஞ்சீவி சக்திகளே போற்றி ஓம்

61

ஓம் சிரம்தனில் சிவனே போற்றி ஓம்

62

ஓம் சிவாய போற்றி

63

ஓம் சுகந்தமணம் தரும் சுந்தரியே போற்றி ஓம்

64

ஓம் சுபசகுன வடிவானாய் போற்றி ஓம்

65

ஓம் சூரியனே போற்றி

66

ஓம் ஞானசக்தி ரூபமே போற்றி ஓம்

67

ஓம் ஞானத்தை தந்திடுவாய் போற்றி ஓம்

68

ஓம் தர்மம் காக்கும் தாட்சாயிணியே போற்றி ஓம்

69

ஓம் தவிர்ப்பதை தவிர்த்திடுவாய் போற்றி ஓம்

70

ஓம் தாய்க்கும் தாயே போற்றி ஓம்

71

ஓம் தாய்ஸ்தானம் பெற்ற கோமாதா போற்றி ஓம்

72

ஓம் திமில்தனில் அருக்கரே போற்றி ஓம்

73

ஓம் தியாகத்தின் உருவமே போற்றி ஓம்

74

ஓம் தீயதை தீர்த்திடுவாய் போற்றி ஓம்

75

ஓம் தீர்க்க சுமங்கலி வடிவே போற்றி ஓம்

76

ஓம் தெய்வங்களின் இருப்பிடமே போற்றி ஓம்

77

ஓம் தேவர்களின் தெய்வமே போற்றி ஓம்

78

ஓம் நவகன்னியரின் சக்தியே போற்றி ஓம்

79

ஓம் நவகிரக நாயகியே போற்றி ஓம்

80

ஓம் நாசியின் மேலே கணபதி போற்றி ஓம்

81

ஓம் நாவில் வாழும் வருணணே போற்றி ஓம்

82

ஓம் நுனி கொம்புதனில் தீர்த்தங்களே போற்றி ஓம்

83

ஓம் நெற்றியின் நடுவில் உமையே போற்றி ஓம்

84

ஓம் பதினெட்டு சித்தர்கள் வாழும் பராபரையே போற்றி ஓம்

85

ஓம் பருகுவதற்கு சுவையே போற்றி ஓம்

86

ஓம் பரும்மனே போற்றி

87

ஓம் பல் தனில் வாயு பகவானே போற்றி ஓம்

88

ஓம் பழமைக்கும் பழமையே போற்றி ஓம்

89

ஓம் பார்ப்பதற்கு புண்ணியமே போற்றி ஓம்

90

ஓம் பின்கால் இரண்டில் பர்வதம் போற்றி ஓம்

91

ஓம் பின்பாகம் தனில் லஷ்மியே போற்றி ஓம்

92

ஓம் புறத்தின் நடுவில் கந்தர்வரே போற்றி ஓம்

93

ஓம் புறத்தின் நுனியில் நாகலோகத்தாரே போற்றி ஓம்

94

ஓம் பூமிதேவியே போற்றி

95

ஓம் மகாலட்சுமியே போற்றி

96

ஓம் மகேசுவரியே போற்றி

97

ஓம் மங்களம் தந்திடுவாய் போற்றி ஓம்

98

ஓம் மடிதனில் அமுத சாகரமே போற்றி ஓம்

99

ஓம் மருத்துவம் புரிந்திடுவாய் போற்றி ஓம்

100

ஓம் மலைக்கோடி வாழும் மரகதமே போற்றி ஓம்

101

ஓம் மனமிறங்கிவந்தருள்வாய் போற்றி ஓம்

102

ஓம் மன்னிக்கும் மாதவே போற்றி ஓம்

103

ஓம் மாருதியே போற்றி

104

ஓம் மார்புதனில் சாத்தியரே போற்றி ஓம்

105

ஓம் முட்டியின் மேலே பைரவா போற்றி ஓம்

106

ஓம் முப்பத்து முக்கோடி தேவர்களே போற்றி ஓம்

107

ஓம் முலைதனில் சமுத்திர ராஜனே போற்றி ஓம்

108

ஓம் முழங்கால் தனில் மருத்துவரே போற்றி ஓம்

109

ஓம் முன்கால் இரண்டில் இமைய விந்தியர்களே போற்றி ஓம்

110

ஓம் மூவுலகம் நீயே போற்றி ஓம்

111

ஓம் மேல் நாசிதனில் முருகா போற்றி ஓம்

112

ஓம் மேல்புறம் தனில் தேவர்களே போற்றி ஓம்

113

ஓம் ரோகிணியே போற்றி

114

ஓம் ரோமம் தனில் முனிவர்களே போற்றி ஓம்

115

ஓம் வருணனே போற்றி

116

ஓம் வலக்கண் தனில் சூரியதேவே போற்றி ஓம்

117

ஓம் வால் மயிர்தனில் சூரிய ஒளியே போற்றி ஓம்

118

ஓம் வாழ்வை வளமாக்கும் வித்தகையே போற்றி ஓம்

119

ஓம் விஷ்ணுவே போற்றி

120

ஓம் வெற்றி தரும் விமலையே போற்றி ஓம்

121

ஓம் ஜெகன் மாதாவே போற்றி ஓம்

122

ஓம் ஜோதி வடிவானவளே போற்றி ஓம்

 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக