வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த
சிறப்பு நூல்
காப்பு
(நேரிசை
வெண்பா)
1.
திருவரு
ளானந்தன் சிறப்புநூ லீரெட்
டுருவக
மாக்கூற வுணர்வாம் – பருவமுற்றுத்
தந்தமுட
லாதியெல்லாந் தந்து பணிவோர்க்கே
சொந்தமெனுந்
தெய்வந் துணை.
1. தெய்வத்துதி யுருவகம்
2.
ஆனை
முதலெறும்பீ
றானவுயி ரத்தனையு
மேனையன்று
தம்முருவா னென்றெண்ணுங் – கோனைக்
கருதிக்
கருதியிரு கண்ணாரக் கண்டாற்
சுருதிமுடி
வெய்வதுமெய்ச் சொல்.
(1)
3. எவ்வண்ண மியாவ ரிசைவுற் றிறைஞ்சிடினு
மவ்வண்ணந்
தோன்று மருளினைவிட் – டிவ்வண்ணத்
தெய்வநன்று
மற்றனைத்துந் தீதென்போர் சிற்றறிவா
னைவது
கண்டொன்று நகும்.
(2)
4. எறும்பகட்டு நுண்புழுவிற் கெவ்வுலகும் போற்றப்
பெறும்புகழு
மீயவல்ல பெம்மான் – செறும்பகைஞர்
நெஞ்சங்
கிழிக்கு நெடுவே லரசருக்கும்
வஞ்சமற்ற
மாதவர்க்கு மன்.
(3)
5. ஒருகுடையிற் பூமி யொருங்காளு மன்னை
யருவருப்பி
லாதனவே யாரும் – பருகச்
செயற்குவல்ல
மெய்க்குருவைச் சிட்டித் தனுப்பி
யியற்றுதற்கும்
வல்லா னிறை.
(4)
6. பொல்லார்க் குறவுடையான் போன்றிருந்து பொன்றுவித்து
நல்லார்க்
கிகல்போன்று நன்றளித்தும் – வல்லாருக்
கெஞ்ஞான்று
மெய்யுடைய தென்றிலங்கு மியாவும்வல்ல
மெஞ்ஞானத்
தெய்வமதே மேல்.
(5)
7. ஒன்றைப் பலவென் றுலகுரைக்கு முண்மையுணர்
நன்றை
யவனளிக்க நான்பெற்றே – னென்றைக்கு
முள்ளா
னவனென் றுரைப்போ னெவனவனை
யெள்ளாருள்
வாழு மிறை.
(6)
8. எங்கு மிறைவ னிருப்பதுண்மை யானாலுந்
தங்குருவாத்
தோன்றிடினே தாழ்மைபோ – மிங்கு
வருமோவென்
றோது மடமையோர்க் கியாதுந்
தருமோ
தராதிதுமெய் தான்.
(7)
9. தற்சீவ சாட்சியது தானே தனையுணர்த்தல்
சிற்சீவர்க்
கெய்துமதிற் றேர்ந்தோரே – நற்சீடர்
போற்றுங்
குருவாம் புவியனைத்துந் தம்புகழைச்
சாற்றும்
பெருமையுள்ளார் தாம்.
(8)
10. குருவடிவே தெய்வமெனக் கொள்ளாதா ரெல்லாங்
கருவடிவிற்
றோய்வதுமெய் கண்டேன் – றிருவடியிற்
சென்றாரென்
றோதத் திரும்புநரும் பற்பலருண்
டொன்றாக்
கலந்தவரு முண்டு.
(9)
11. எந்தச் சமையத் திருப்போருங் கேளுங்கள்
சொந்தக்
கடவுளையான் சொல்கின்றே – னுந்த
முடலாதி
மூன்று முடைய குருவே
திடமா
மிதுசத் தியம்.
(10)
முற்றிற்று.
2.
அறிவுருவகம்
12. ஒவனே யாவு முடையானென் றோர்ந்து
சருவ
நலமுந் தருமென் – றுருவமொன்றைப்
பற்றிநின்று
காணப் பரிதாபப் பட்டுழலுங்
கற்றிடுநல்
லோரிறிவே காண்.
(1)
13. தெய்வ மிலையென்று செப்பிச் சினந்தொருவன்
வைவலிதோய்
வாளேந்தி வந்தாலு – மெய்வளமை
காண
விரும்புங் கடுந்துயரிற் றேரறிவா
ராணலங்குன்
றாதுளதென் பார்.
(2)
14. கூழிலாச் செய்ப்பகுதி கொள்ளுங்கோ னுற்றாலும்
வாழியென்று
தீயவர்பான் மற்றோர்போய்ப் – பாழி
லிரந்தலையக்
கண்டாலு மேதமற்ற நூலாற்
பரந்தறிவார்
தெய்வமுண்டென் பார்.
(3)
15. தெய்வமொன்றுண் டென்னத் தெளிந்ததே தீதொழியச்
செய்வதெனச்
சந்ததமுஞ் செப்புவோர் – பொய்வலிமைக்
கஞ்சாது
மெய்கண் டளிகூர நாடுவரா
னஞ்சாமற்
றுள்ள நலம்.
(4)
16. கல்லா ரெனினுங் கடவுளே தஞ்சமென்போர்
நல்லார்கற்
றாரெனினு நானென்போர் – பொல்லாரென்
றோதலறி
வென்பதன்றி யுள்ளதெல்லாம் பேதமையே
மேதகுசீர்ச்
சித்தர்சொன்னான் மெய்.
(5)
17. சித்தே பலனென்று தேராத சிற்றறிவோர்
மெய்ந்தேவொன்
றென்றிடினும் வீண்சொல்லே -யெத்தேவைப்
போற்றிடினுஞ்
சித்தே பொருளென்போர் பொய்யரன்றே
கூற்றிறந்த
பேரறிஞர் கோள்.
(6)
18. கற்றோ ரிறைஞ்சுங் கடவுளார் தாமிருக்க
மற்றோரைக்
கெஞ்சி மனமெலியப் – பெற்றோர்தா
மெத்தகவோ
ரேனு மறிவில்லாரே யென்றுரைக்கும்
வித்தகர்தம்
பேரறிவே மெய்.
(7)
19. ஆருயிர்கொன் றூனுண் டழிநரகிற் காளாகும்
பேரு
ளறிவிற் பெரியருண்டென் – றோருமவர்
தம்மை
யிகழச் சலியாத் தவத்தினருக்
கெம்மையினு
மியாமடிமை யே.
(8)
20. கொன்றருந்தார் குற்றங் குணமே கொலைப்புலைஞர்
நன்றனைத்துந்
தீதே நவில்கின்றே – மென்றதட்டும்
வாயுடைய
மேலோர் மலர்க்கரத்தாற் றொட்டெடுத்த
நாயுடைய
காற்றுகளே நாம்.
(9)
21. அறிவளிக்கும் பேறுபெற்றோ னம்புவியி லாரும்
பிறிதோ
ருடலருந்தாப் பெற்றிச் – செறிவடையக்
காண்பவ
னென்றெண்ணுங் கருத்தே திருத்தமிகு
மாண்பதா
மற்றதெல்லா மால்.
(10)
முற்றிற்று.
3.
அமைப்புருவகம்
22. ஆர்க்கும் பெரியோ னமைத்தபடி யன்றியதைப்
பேர்க்குங்
குணமவனும் பெற்றிலனா -நீர்க்குமிழி
யன்னவுடல்
வருந்த வாகுலத்திற் றோய்வதென்னே
பொன்னனைய
நெஞ்சே புகல்.
(1)
23. ஊழ்வினையி லேற்றி யுடையானு கைக்குமென்ப
தாழ்வினையர்
நெஞ்சே யறிந்தடங்கும் – பாழ்வினையிற்
சென்று
பரதவிக்குந் தீமையுமுற் செய்வினைவந்
தொன்றுதலி
னுண்டா வது.
(2)
24. ஞானம் பெறார்பிறப்பா னைவதுவும் பெற்றார்தாம்
வானம்போ
னின்றானை மன்னுவது – மீனம்
பிறிதோ
ருடலருந்தும் பெற்றி யெனலு
மறிவா
ரமைப்பேநன் றாம்.
(3)
25. வல்லார் பலருலகில் வந்து மனுவனைத்துங்
கொல்லா
நலம்பெறாக் கொள்கையே – பொல்லாப்
பழவினையைக்
காட்டுமெனும் பாவலரே மாளாக்
குழகனடி
சேர்வரென்றேன் கோள்.
(4)
26. அன்றைக் கமைத்தோ னழித்தமையா னென்றமொழி
யென்றைக்குங்
கேட்டு மெனையன்னா – ரொன்றைக்
குறியாமென்
றெண்ணிக் குளறுதலுஞ் சென்னிப்
பொறியாகு
மென்றே புகல்.
(5)
27. நாசிப் புழைவளிபோய் நம்முடலிற் புக்கவிடுத்
தாசிக்
கினியானின் றாடல்கண்டு – பேசிக்
களிகூர்வோ
ரத்தலைவன் கையெழுத்தைச் சற்று
மெளிதாமென்
றோதார்க ளே.
(6)
28. தேவே துணையென்று தேர்ந்தவருஞ் செந்தமிழ்தோய்
நாவே
யினியதென்னு நாவலருங் – கூவேகூ
வென்றலறி
யேற்போரு மீயக் கொடுப்போருந்
துன்றமைப்பே
மேலா யது.
(7)
29. நன்றனைத்து நல்கவல்ல நாதனவ னான்விரும்பி
நின்றநலந்
தேரா நினைவோனேற் – பொன்றனிகர்
சொல்லத்
துயில்விளைந்து சோருமோ வென்றுசொல்வோ
ரல்லற்
படுவதுமூ ழாம்.
(8)
30. உலகிற் குதவநண்ணு மூழுடையார் நெஞ்சத்
திலகுங்
கவலை தவிர்ந்தின்ப – மலகில்
புகழிடைதுய்த்
தொன்றிற் பொருந்தா விடிலவ்
விகழிறைக்கென்
றோர்வதரி தே.
(9)
31. விதிபோம் வழிப்பிறகே மெய்ய னடாத்து
மதிபோமென்
றூருரைத்து மாந்தர் – சதிபோக்கு
மாவன்
மிகையா லவனருளுக் காசைகொள்வோர்க்
கேவல்செய்வோ
ரீண்டுசில ரே.
(10)
முற்றிற்று.
4.
முயற்சி யுருவகம்
32. நடந்த படிநடக்கு நாமுயல்வ தென்னென்
றடங்கருதி
நாட்கழிக்க லாகா – மடந்தைநல்லார்
போகத்தி
னாசையற்ற போதநன்றென் றுன்னியதி
லேகற்கு
முண்டுமுயல் வே.
(1)
33. நல்லூழ் வருங்காலே நன்முயற்சி கைகூடும்
பொல்லூழு
மவ்வாறு போன்றதே – பல்லூழிக்
கொண்டன்
முயன்றுதவுங் கோவருந்து மானிடர்கா
ளுண்டணைந்து
தூங்கு தலது.
(2)
34. நல்லோ னருண்முயற்சி நாடிமனம் வாடுதலே
யெல்லோர்க்கு
மெய்தென்றா லெய்துமோ – பொல்லோர்க்கு
நன்றருந்தி
வாழு நலமு மரிதாமே
யொன்றனைத்துந்
தானா வது.
(3)
35. நல்லுணர்வே நன்முயற்சிக் காக்க நலங்கெட்ட
புல்லுணர்வே
நல்லருளைப் போக்குவிக்கும் – பல்லுரிஞ்சி
னல்லாற்
சுவையே தரும்பசியின் றீர்வேதென்
றில்லார்
முயற்சிசெய் வரே.
(4)
36. பத்து விரலதனாற் பாடுபட்டாற் பங்கயப்பூ
வொத்து
விளங்கு மொருகையாற் – றுய்த்துவப்ப
தாகுமெனக்
கேட்டு மறியா ரருட்குரவன்
பாகுரைபோற்
செய்யார் பரிந்து.
(5)
37. கயலாருங் கண்ணணங்கார் காம நலஞ்சற்று
முயலா
தயில்வதுண்டேன் முந்நீர்ப் – பயலாழி
சூழுலகு
முற்றுந் தொழும்புகழிற் றோய்ந்துமிக
வாழுநலந்
தானே வரும்.
(6)
38. கொல்லாத் தொழின்முயன்று கொற்றவர்தங் கோற்றிருத்தும்
வல்லானை
நாடி மறையனைத்துஞ் – சொல்லாமற்
சொன்னநிலை
கண்டு துயரொழிக்குந் தூய்மையொப்ப
தின்னமுயற்சி
யென்பாரி யார்.
(7)
39. வேண்டுவன யாவும் விரைந்தளிப்போ னண்டெனக்கண்
டீண்டு
கரங்குவிப்ப தேற்றமா – மாண்டுநல
மிங்குள்ள
வாறென் றியம்புநரும் பற்பலரே
யெங்குள்
ளவனுமவ னே.
(8)
40. எல்லா நலமு மிறைதருவா னென்றுணரும்
வல்லார்
முயற்சியே மாண்பதா – மல்லாதார்
சிந்தை
யவாவடங்கச் செய்தொழின்மற் றெல்லாமும்
விந்தைவிந்தை
யாவளர்க்கு மே.
(9)
41. ஊழ்வினைவந் தாளா வுறுக்கிடினு முள்ளத்தாற்
றாழ்வில்
புகழ்க்காத் தவஞ்செய்வோ – ரேழ்விதமா
நால்வகையோ
நிப்பிறப்பி னையார் நமைப்படைத்தோன்
பால்வசிப்பார்
சேர்வார் பதம்.
(10)
முற்றிற்று.
5.
தருமத்துருவகம்
42. உடலாதி மூன்று மொருவற் குதவுந்
திடமே
யறத்திற் சிறப்பாங் – கடவுளவன்
கொள்ளா
விடினுங் கொடுத்தேமென் றோதுநரை
யெள்ளார்
நனியுணர்ந்தோ ரே.
(1)
43. தம்முடல மாதியவை தற்பரன தன்றாயி
னெம்முடைமை
யன்றவன தென்பாரியார் – செம்மு
மறிவாற்
பகர்வதுண்டே லன்னோன் செயலிற்
பிறிதா
வனவுமுண்டென் பேம்.
(2)
44. அந்தந்த ஞாயத் தளவறிந்து போற்றுநலஞ்
சொந்தம்
புலமைத் தொழிற்கெனலும் – பந்தமற்றோர்க்
கெப்பொருளுந்
தம்முடைமை யென்றுபின்னாட் டோன்றுதலு
மெய்ப்பொருளா
குந்தரும மே.
(3)
45. எவ்வுயிருந் தம்புதல்வ ராமென்றே யெண்ணுநலந்
தெவ்வுயிர்கொல்
வேல்வேந்தன் சிந்தையினு - மிவ்வுலகே
யுண்மையென
நாடி யுருகாதா ருள்ளத்தும்
வண்மை
யுறத்தோய் வது.
(4)
46. உலகந் தழையுநல முன்னாத நெஞ்சா
ரலகில்
பெருந்தவஞ் செய்தாலு – மிலகுமருட்
பெம்மான்
முழுக்கருணைப் பேராற்றிற் றோய்தலுறா
ரம்மாவிது
நிசமே யாம்.
(5)
47. வல்ல பெருமான் மலர்த்தாளே தஞ்சமெனச்
சொல்ல
வுணர்ந்துமகிழ் தூய்மையோர் – நல்லருளுக்
காளானோ
ரெண்ண லனைத்து மறமேயா
மாளாப்
புகழினரா வார்.
(6)
48. புகழ்விரும்பி யெள்ளன்முற் றும்போக்குதலை யன்றித்
திகழ்தரும்
மில்லையில்லைத் திண்ண – முகழும்வளைத்
தெண்ணீர்க்
கடலுலகுஞ் செப்புமற மத்தனையு
மெண்ணீ
ரிதிலடங்கு மே.
(7)
49. வானத் துடுவினமா மற்றைய றங்களெல்லா
மேனற்
புனத்தெயின ரீட்டமுத – லானமனு
வத்தனையுங்
கொன்றருந்தா வாக்கமுறச் செய்யுமறஞ்
சுத்தமதி
யொப்பதெனச் சொல்.
(8)
50. கூண்டுபல ரோருயிரைக் கொல்லத் துணிந்ததனைத்
தீண்டுமுனங்
கண்டு சினத்தொருவன் – வேண்டும்
படையா
லவரைவெல்லும் பண்புங் கருவி
லடையாமற்
காக்கு மறம்.
(9)
51. ஈகை விரும்புநர்க்கு மின்பமே யிந்துவப்போர்
சாகையுற்றுஞ்
சாகாத் தகையோரே – யாகையா
லேன்றதெல்லா
நல்கி யிரப்பதெல்லா மீயுநலந்
தோன்றத்த
வஞ்செயென்றே சொல்.
(10)
முற்றிற்று.
6.
தத்துருவகம்
52. எண்ணிலா மாந்தர்க் கியம்பரிய சீரளிக்குந்
தண்ணிலா
வன்ன தவத்திற்கும் – புண்ணிலா
வூணே
மனுவனைத்து முண்ணவைப்பத் தன்னைநத்து
மாணேறொப்
பானருமை யா.
(1)
53. தவம்புரிந்து பேறுபெற்றுந் தாங்கு புகழ்தேரா
ரவம்புரிந்த
பாதகரே யாவார் – நவம்புரிந்து
கொல்லாமை
நாட்டக் குறிப்போ னெவனெனினு
நல்லானே
யென்றுரைப்போ நாம்.
(2)
54. மெய்யடியார் தாண்மலரின் மென்றுகளைச் சென்னியிடத்
தையமின்றித்
தாங்கி யருள்வேண்டும் – பொய்யழியு
மாதவப்
பேறுண்டா மனத்தே வசிக்குமிறை
யேதமற்ற
கீர்த்தியெய்து மே.
(3)
55. சமையத்தொடக் கர்சொல்லிற் சாராம லெல்லா
மமையப்
படைத்தளிப்போற் காளா – யிமையணையும்
போது
மறவாதோர் பொற்புருவம் பற்றிநிற்ப
தோதுந்
தவத்து ளுயர்வு.
(4)
56. சருவ பிரசாதந் தந்தருளத் தக்க
குருவடிவ
நாட்டங் குணமா – மருவமே
யென்றிருந்தா
லென்று மிருந்த படியிருக்கும்
வென்றிதருஞ்
சித்திபொய்யா மே.
(5)
57. மெய்த்தேவ னேவவந்து மேதினியிற் றோன்றுநரு
மத்தேவன்
றானாவந் தாளினே – பொய்த்தேவர்
தம்மடியார்
நாணித் தலைகவிழத் தாக்கிவென்றே
யெம்மருங்கும்
போய்வருவா ரே.
(6)
58. கொல்லும் புலையர்தவங் குன்றனைய தேனுமற்றோர்
சொல்லுஞ்
சொலானுந் தொலையுமே – யல்லும்
பகலுந்
தனதாய பண்ணவனைக் கண்டார்க்
கிகலும்
புகழுமெய்து மே.
(7)
59. தன்னை யுடலெனவே சந்ததமுஞ் சிந்திப்போ
ரன்னையிலாப்
பிள்ளை யனையாரே – யென்னைபட்டுந்
தந்தவமே
மிக்கதெனத் தாரணியுஞ் சாற்றலுறார்
மந்தரெனும்
பேர்பொருந்து வார்.
(8)
60. யார்க்குந் துணைவ னிறையென் றுணராத
பேர்க்குந்
தவமளிக்கும் பேறுண்டோ – பார்க்குட்
பிறவாத
முத்தியுண்டோ பேதந் தவிர்வுற்
றுறவாக்
கலப்பதுமுண் டோ.
(9)
61. இச்சைப் படியே யிசைவிக்கு மாதவந்தான்
கொச்சைச்
சிறுவர்செய்யக் கூடுமோ – பிச்சைத்
துறவோராற்
காரணத்தாற் றோன்றுநராற் றூய்தா
மறவோராற்
செய்யவல்ல தாம்.
(10)
முற்றிற்று.
7.
நன்மை யுருவகம்
62. பிறர்க்குதவாச் செல்வத்தும் பின்னொருவற் கீந்துண்
டுறக்கமுறு நல்குரவோ னோடு – சிறப்பதாஞ்
சொல்வினவாப் பெண்டிரின்பந் துய்ப்பதினுஞ்
சோரமின்றோ
ளல்விரும்பித் தோய்வதுநன் றாம்.
(1)
63. தன்வார்த்தை கேளாத் தனையரினுந் தாள்வணங்கிப்
புன்வா லசைக்குநாய் போதநன்றாம்
– பொன்வாரித்
தந்துபணி கொள்வதினுந் தாமருந்துங்
கூழ்பகிர்ந்து
நந்துணைவா வென்கை நலம்.
(2)
64. தானொருவன் வாழத் தவஞ்செய்வான் றன்னிலுமீண்
டியானொருவன் கெட்டேனு மிவ்வுலகோர்க்
– கான
வுபகாரஞ் செய்வதுண்டே லொப்புகின்றே
னென்னும்
விபகாரி நல்லவனா மே.
(3)
65. நன்றென்ப தத்தனையு நாணத் தகுநலம்
தொன்றென்றே நல்லோ ருரைசெய்வா -ரென்றென்று
மாளாப் புகழ்கொடுக்கும் வள்ளலருட்
பேறுபெறுந்
தாளாண்மை கொண்டுவருந் தல்.
(4)
66. பொருளின் முயன்று புரவலனாஞ் சீரி
லருளின் முயன்றழிவ தாற்ற – லிருளிற்
புணர்தற் கரமியத்திற் பூவை யெழிலுந்
துணர்மணமுந் துய்ப்பது நன்று.
(5)
67. கனவிற் கடவுளரைக் காண்பதினுங் கண்ணா
னனவி லவரருளே நாடித் – தினம்வருந்துந்
தொண்டர்களைக் கண்டு தொழனன்றா மிந்தமொழி
வண்டர்கட் குத்தீதா வது.
(6)
68. கல்லார் களாசியினுங் கற்றுணர்ந்தா ரேசனன்று
பொல்லா ருறவிற் புகழ்கொண்ட – வல்லார்
பகைநன்று பொன்விரும்பும் பாவையின்பந்
தன்னின்
மிகைதுன்று நோய்நலமா மே.
(7)
69. வித்துர மாண்மேதி விறலில்லான் மேழியினுங்
கொத்துழவன் கைத்தாற்றுக் கோனன்றாஞ்
– செத்துமொரு
தாய்கருவிற் சேரார்சொற் றள்ளுமன்னன்
கைக்கோலி
னாய்கன் றுலைக்கோ னலம்.
(8)
70. பொன்னானை கோடிநல்கும் புண்ணியத்தும் பொன்றாத
மன்னாங் கடவுளையே வாழ்த்தொருவன்
– றன்னாவி
யின்னற் படுமு னிருமூன் றுடனொருக்கா
லன்னம் பகிர்வதுநன் றாம்.
(9)
71. நல்லோர் விதித்தபடி நன்றிசைத னன்றாகும்
பொல்லோ ருடனுலகப் பொய்யைமெய்யென்
– றல்லோங்குங்
கூந்தன்மின் னார்க்காளாக் குலைதல்
கொடுந்தீதா
மாந்தர் வினைக்குண்டே வலி.
(10)
முற்றிற்று.
8. கல்வி யுருவகம்
72. தெய்வத் திருமொழியாச் செப்புஞ் சுருதிகளு
நைவற் றகல்விகற்ற நாவலோர் – செய்வதெனச்
சில்லோ ருரைப்பத் திகழ்வதென்றாற்
கற்றுணர்ந்த
வல்லோர்க் கிணையாரம் மா.
(1)
73. கல்வி முயன்றார் கவியனைத்துங் காடுறைந்தாற்
பல்விருகத் தோடு படியிடத்து – நல்வினைஞர்
தாமுந் திரிவரிது சத்தியமென் றோர்ந்துரைக்கு
மியாமுமவை பற்றியுய்ந்தோ மே.
(2)
74. ஒன்றினு யிர்வருந்த வொன்றருந்தற் காணின்மனங்
கன்றித் தவிர்த்துவப்பர் கற்றுளார்
– கொன்றிரையாக்
கொள்ளுஞ் சிதடான்றிக் கொன்றூட்டுங்
கொன்மினென்றும்
விள்ளுமளற் றூடழுந்து மே.
(3)
75. பன்னூற் பகுப்பிற் பதர்களையும் பக்குவத்தோர்
தொன்னூலென் றஞ்சார் தொகைக்கெல்லாம்
– பின்னூலென்
றெள்ளார் நலங்கண் டெடுப்பா ரிழிவுகண்டு
கொள்ளாரென் றோதல்கற்றோர் கோள்.
(4)
76. அருண்மிகுத்தோர் பல்லுயிர்கொன் றாகம் வளர்க்கு
மருண்மிகுத்தோர் கூற்றாகும் வாறு
– தெருண்மிகுத்தோர்க்
கன்றி விளங்கா தருளாட்சிக் காற்றலதே
யென்றிசைப்போர் தம்மினமே யாம்.
(5)
77. கல்லாத் தவர்பலருங் கற்றறிந்த மூடரினும்
பொல்லாரே யென்கை புதுமையோ – வல்லார்போற்
பேசா தலைந்துழலும் பேதமையும் பேறுபெற்றோ
ராசாரங் கூறலுமுண் டால்.
(6)
78. கற்றோர் துறந்தாற் கடவுளே தஞ்சமென்பார்
மற்றோ ரதுபெற்றால் வாய்மூடிப்
– புற்றோலு
மான்றோலுந் தாங்கி மயங்கிப் பொருள்பறித்துச்
சான்றோர் புகழ்கெடுப்பார் தாம்.
(7)
79. புல்லுங் கறித்தே புசிக்கும் விலங்கினத்துங்
கொல்லுந் தொழிலாற் குளிகையிட்டுச்
– செல்லுந்
துறவோ ரிழிந்தநலந் தோன்றுமட்டுங்
கற்றோ
ரறவோரென் றோதுநருண் டாம்.
(8)
80. நரிவேட்டை யாடிவந்து நாடறிய வாழ்ந்தோ
ரரிவேட்டைக் கேகநத்து மாவற் – குரியோரிற்
றாழ்ந்தவ ரென்றோராத் தரணியோர் சாற்றுபுகழ்
விழ்ந்தருளை நாடிலமியா மெய்.
(9)
81. கல்லார் பலர்புகழுங் காட்சியினுங் கற்றுணர்ந்த
வல்லார் சிலர்புகழ்தன் மாட்சியாம்
– பொல்லார்
பலரிகழுந் தீமையினும் பாசமற்ற மேலோர்
சிலரிகழுந் தீமைகொடி தே.
(10)
முற்றிற்று.
9. பெருமை யுருவகம்
82. எம்பெருமான் வல்லோனென் றெச்சமையத் தோருநத்து
நம்பெருமான் செய்யு நலத்தெல்லா
– நும்பெருமா
னானானென் றோதிவந்து நன்றுடையார்க்
கின்பநல்க
லானாப்பெரு மையின தாம்.
(1)
83. மானிடர்பாற் கேட்டபடி வாங்கிக் களிப்பதினு
மானியிலான் றன்பா லநுதினமு – நானிலத்தோர்
தாமுணரக் கேட்டுமவன் றாராத் தளர்ச்சிவிஞ்சிச்
சாமுவகை மேன்மை தரும்.
(2)
84. கொன்றருந்துந் தீயோர் குலந்துதிப்ப வாழ்வதினு
நன்றருந்தி வாழு நரர்வாயிற் – சென்றவர்தா
முண்டெறிதன் ஞானி யுடனருந்தி யூன்வளர்க்கக்
கண்டெறிகற் றாங்கல் களி.
(3)
85. கொல்வானென் றஞ்சிக் கொடுங்கோ லரசனுக்குச்
செல்வாவென் றாசிசொல்லுந் தீமையினு
– நல்வார்த்தை
சொல்லி வினவாக்காற் சோதியுண்டென்
றோதியவன்
வல்லியிற்கூர் வாளிலொன்றன் மால்.
(4)
86. போரஞ்சி மற்றோர் புரவலனைத் தாழுமன்னில்
வீரஞ் செலுத்தியுடல் விட்டோன்மேல்
– வாரஞ்சும்
பூணேயுங் கொங்கைநல்லாட் புல்லிமுத்தி
சேர்ந்தோனில்
வீணே துறந்திறந்தோன் மேல்.
(5)
87. தம்புகழைக் கொல்லுந் தனையர்களைப் பெற்றோரில்
வம்புடலந் தாங்கு மலடர்மே – லம்புவியோர்க்
கானந்த நல்கா ரருட்சீர்க் கமுதுகுங்கண்
மீனந்தம் பார்த்திருக்கை மேல்.
(6)
88. செல்லாதிக் கொல்கின்ற தீயோர் புனிதத்தும்
புல்லாவி நீக்கார் புலைமேலா – மெல்லா
மொருவன் செயலென் றுணரார் தவத்திற்
குருவன் றருளெனன்மேற் கோள்.
(7)
89. துறந்துந் தவம்புரியச் சோம்புமெனைப் போல்வார்க்
கறந்தவிராத் தொய்வசித்தி யாலே
– சிறந்துவள
ரில்லறத்தார் மேலாகு மீகையிலாச்
செல்வரினுஞ்
சொல்லறத்தார் கொள்வார்நற் சொல்.
(8)
90. பொய்ச்சித்தி காட்டிப் புவிபுகழ வாழ்வதினு
மெய்ச்சித்தி வேண்டுவது மேலாகுங்
– கைச்சித்தாற்
பொன்காட்டிப்
பொன்பறிக்கும் புன்மையினும் பொன்செயற்காத்
தன்கா சழித்தனன்மை தான்.
(9)
91. எந்தப் பெருமையினு மியாவும்வல் லானிவ்வுலகிற்
சொந்தக் குருவாகித் தோன்றிநின்று
– சிந்தனைபோ
லெல்லா விளையாட்டு மீந்துமுத்திக்
கேற்றநண்ணிச்
செல்லாறு மேலாய தே.
(10)
முற்றிற்று.
10. பத்தி யுருவகம்
92. பத்தியிலாப் பாவிகளைப் பல்சமையப் பக்குவருஞ்
சத்தியத்தைத் தேறுந் தவத்தோரும்
– புத்தியுள்ள
நல்லாரு மிக்குணர்ந்த நாவலரு மேசலன்றிக்
கல்லாரு மேசக் கடன்.
(1)
93. எத்திறமை யில்லா ரெனினுமிறை யிடத்துப்
பத்திகொண்டோ ராயிற் பழுதுறார்
– சித்தியெட்டுஞ்
செய்து களித்துத் திரும்பாத வீட்டினும்போ
யெய்துவரென் றோதுமுல கே.
(2)
94. உள்ளத்திற் றோன்றி யுலகனைத்து முண்டுவளர்
வெள்ளக் கடலனைய மெய்ப்பத்தி – யெள்ளப்
படுவதே போன்றிருந்து பற்றிலார்
தம்மைச்
சுடுவதேயென் கைமுன்னோர் சொல்.
(3)
95. சமையத் திருந்தொருவன் றன்னைப் பிடித்தாற்
சிமைய மெனவளர்ந்து தெய்வத் – தமைவுணர்த்திச்
சித்திதந்து முத்தியினுஞ் சேர்க்குந்
திறத்தினது
பத்தியென்றே சொல்லும் படி.
(4)
96. தாம நறுங்குழலார் தங்களுக்குங் காமுகர்க்கும்
பாமரர்க்கு நன்குணர்ந்த பண்டிதர்க்குஞ்
– சேமநல்கும்
பத்திகொண்டு நிற்கினல்லாற் பண்டைத்
தலைவனுண்மைத்
துத்தியந்தந் தாளான்மெய்ச் சொல்.
(5)
97. கந்த மலரிற் கலந்தாங்கு நின்றானைத்
தந்தங் குருவடிவாத் தாங்கண்டோர்க்
– கெந்தநல
மெய்தாது பத்தியொன்று மில்லையென்றா
லியாதுமில்லை
வைதாலு நல்கும் வரம்.
(6)
98. வாக்காதி மூன்றால் வழிபடுவோர் வஞ்சமறத்
தாக்காண்மை கொண்ட தனியருட்கோ –
னீக்கானென்
றெண்ணித்து ணிந்துமிடை யுமனத்தே
ழையன்ப
ருண்ணிற்கும் பத்தி யுயர்வு.
(7)
99. அண்ண லொருவனே யாருயிர்க்கு நேயனென
நண்ணவல்லார் பத்தி நலமன்றே – யுண்ண
லுறங்கன் முதலாந் தொழிலுமுள்ளனவுந்
தான்வந்
திறங்கலிட்டுக் கொள்ளுமவ னே.
(8)
100. வழுவா நெறியெனுங்கை வன்பர்க்கும் பத்தி
நழுவாக் கருணையங்கை நாடித் – தொழுவார்க்குங்
கொண்டகுரு வாணை யவன்கோலமிலா னள்ளானென்
றொண்டகைய நெஞ்சமுண ரும்.
(9)
101. அன்னோ னருள்பெற் றளிகூர்ந் தடற்புகழுஞ்
சொன்னோ ரனைவர்க்குந் தொண்டனா –
நன்னோன்பு
நோற்கின்ற பத்திசெய்யு நுண்ணியரே
யெண்ணிமகிழ்ந்
தேற்கின்ற பேறுமொன்றுண் டே.
(10)
முற்றிற்று.
11. வைராக்கிய வுருவகம்
102. சற்குருவைத் தேடித் தயங்குகின்ற தாபத்தாற்
கற்குவட்டி லேறிக் கவிபாடி – நற்குறியைத்
தூண்டியென்றூழ்
காணத் துணிந்துருண்டுந் தொண்டுசெய்யோட்
டாண்டிகளும் பூமியிலுண் டாம்.
(1)
103. வல்லானைத் தேடி வருந்திச் சகிப்பரிதா
யெல்லாரு மிவ்விதத்தா லென்றறியக்
– கல்லாதி
யேறி விழுந்துமெழிற் சிரநாக்கொய்
தும்வினை
மாறியவர் தாமுமுண்டு மாம்.
(2)
104. சாகத் துணிந்திருந்துஞ் சற்குருவைக் காணாமற்
றேகத்தை விட்டோர் சிலருண்டாற்
– பாகத்து
நங்கை மலர்த்து நளினமுகம் பார்க்கநண்ணித்
தங்கைகுவிப் போர்க்கேது தாள்.
(3)
105. புண்ணியத்தி னாசைப் பொருத்தத்தாற் புன்கொதுகின்
கண்ணிமைப்புங் காணுங் கடவுள்பா
– லெண்ணினைவைத்
தாகம் விடுத்தோ ரதிகமா மன்னவனாற்
றாகந் தவிர்ந்தோர் தமக்கு.
(4)
106. தன்னுடல மாதிமுற்றுந் தற்பரன் தென்போர்க்கு
மன்னுயிர் முற்று மகவாமாற் – கொன்னுலக
முற்று மவர்பேர் மொழியுமது வைராகம்
பற்றிமவர் பெற்றிடுதற் பாற்று.
(5)
107. அங்கிக் குழியி னகமூழ்கி மீண்டோரு
மங்கினருஞ் சுற்றினரும் வைராகந்
– தங்கியவர்
தாமன்றோ வென்றமொழி தன்னாற் றயங்காதார்க்
கியாமன் றடிமையென்னே னியான்.
(6)
108. மித்துருவெல் லாமுடைய வித்தகனே யென்றிருப்போர்
சத்துருவா லாகந் தவிர்வாரேற் –
சித்துருவாந்
தெய்வமெனுஞ் சொல்லழியுந் திண்ணமெனச்
செப்புமவர்
வைவதுவுந் தோத்திரமா மாம்.
(7)
109. வைராகந் தாண்டார் மனம்பிதற்று ஞானமுற்றும்
பொய்ராகந் தன்னிற் புதையுமாற்
– கைராகம்
பாடப் பரவுதலும் பாவனையைப் பற்றுதலுங்
கூடக் குறிக்கைகொ டா.
(8)
110. பத்திமுற்றில் வைராகப் பண்புவரு மன்றிவெந்நீர்த்
துத்திப் பணத்தல்குற் றோகைநல்லார்
– தித்திக்குஞ்
சொற்கேட் டுருகித் தொழுவோர்க்குந்
தோன்றுமதோ
வற்கேட்டுண் மிக்கதென்ப ரால்.
(9)
111. மின்னனிகர் வைராகம் விட்டகலா துட்பொலிய
வின்ன னுகர்வோ ரெளியரேற் – கன்னலஞ்சொன்
மாதரின்ப மானந்த மக்களே மெய்ப்பேறு
சாதன்முத்தி யென்பதுமெய் தான்.
(10)
முற்றிற்று.
12. ஞானத் துருவகம்
112. யானவ னென்றோது மிரண்டுந் திகழினல்லான்
மானவை ராக மறையாது – தானறிந்த
வுண்மையே மிக்கதன்றி யொப்பில்பெருஞ்
சித்தியற்றும்
வண்மையது மாயா மயம்.
(1)
113. உண்மைக் கழிவுமுள தாயினோ சைதரும்
வண்மையுறு ஞானத்தின் மாட்சியின்றாற்
– றண்மை
யுடையார் போனீயிருந்தா லுன்னையின்னம்
பூவிற்
படையா துயர்தற் பரம்.
(2)
114. தாயையொத்து நல்லோர் தமைக்காத்துச் சாரார்க்கோர்
தீயையொக்கு மெஞ்ஞானத் தெய்வமன்றி
– மாயையில்லை
யுன்னுணர்வி னீயிருந்தா லோரெட்டுச்
சித்தும்வந்து
மன்னுவதோ ராச்சரிய மா.
(3)
115. கொன்றருந்தி வாழுங் குணத்தோர்க் குவைராகம்
பொன்றலளித் தாலும் பூதலத்தி – லொன்ற
னுயிர்நீக்கா நல்லோர்க் குயர்ஞான
நல்கிச்
செயிர்நீக்கு மென்கை திறம்.
(4)
116. மெய்ப்பத்தி ஞானம் விளைவுற்ற மேலோர்தாம்
பொய்ப்பத் தரஞ்சும் புகழ்கேட்டா
– லைப்பரன்றா
னல்கா திருக்கிலவ னற்புகழ்ச்சி
குன்றுமென்கைக்
கொல்காதா ரஞ்சுவதுண் டோ.
(5)
117. பரிதி யெனப்பிறங்கும் பான்மையுற்ற ஞான
முரியோனைக் காணா வுலகிற் – கரிபோலு
நெஞ்சத்துந் தெய்வ நினைவேயென் றெண்ணுமட
மிஞ்சலுறு மேன்மேலு மே.
(6)
118. எல்லோருங் காண விலங்கும் புகழுடைய
வல்லோ னொருவன் வரானாயிற் – பல்லோருஞ்
சொல்லுங் கடவுளில்லைத் தொல்லுலகே
யுள்ளதென்போர்
வெல்லுங் கொடுமையுண்டா மே.
(7)
119. மெய்ப்பே ருடைய விமலனுக்கு மேதினியோ
ரெப்பே ரிடினு மிசையுமே – பொய்ப்பேரொன்
றென்னளவுஞ் சம்மதமன் றென்றுரைப்போர்க்
கிவ்வுலகுந்
தன்னளவு முற்றுந் தரும்.
(8)
120. என்றூழ் மதித்தோற்ற மாதி யியல்புகண்டு
நன்றூ ழுடைய நரரெல்லாங் – கன்றூழை
நீக்குதற்கும் வல்லதொரு நிச்சயமுண்
டென்பரது
போக்குவர வில்லாப் பொருள்.
(9)
121. மெய்த்தகைய சித்தி விளக்கொளியா மெஞ்ஞான
மித்தகைத்தென் றோதவல்லா ரியாவரே
– நித்த
னொருவனெனத் தேர்ந்தவன்பா லுள்ளதெல்லாம்
வேண்டிக்
குருவெனக்கொண் டாடலென்றென் கோள்.
(10)
முற்றிற்று.
13. துவிதத் துருவகம்
122. ஓவியமு நொச்சியனு மொன்றெனன் மெய்யானாலுந்
தேவிற்கு வேறன்று சீவனெனப் – பாவிகள்வாய்
சொல்லுஞ்சொற் பொய்யெனவே சொல்லுந்
துணிவுடையார்
நல்லுறவே வேண்ட னலம்.
(1)
123. எவ்வுயிர்க்குந் தாயா மிறையிருக்கப் போற்றாம
லிவ்வுயிரே மிக்க தெனவுரைப்போர்
– கௌவுமகல்
வாயுடைய நாயு மனுவாப் பிறக்குமுண்மை
மேயுடைய நெஞ்சரல்ல வே.
(2)
124. அண்ணலருட் பேற்றுக்கா சைகொள்ளா ரம்புவியி
லுண்ண லுறங்கலையு முன்னாமற் – கிண்ணமுலை
நெஞ்சுருக்கக் கண்டு முயிர்நீயேயென்
றோதியழற்
பஞ்சுருவிற் றீயுமுடம் பார்.
(3)
125. கற்பனை தீர்ந்த கடவுளே தஞ்சமென
நிற்பதா முண்மை நினைவாலே – பற்பலரை
வென்றோகை மிஞ்சமிஞ்ச விண்பதிக்கு
மேனியொடு
சென்றோரு முண்டே சிலர்.
(4)
126. தொண்டியற்றிப் பேறுபெறுந் தோற்றமே மிக்கதெனிற்
பண்டிதரும் பாமரரும் பற்றுவா –
ரெண்டிசையுஞ்
செய்தோனா னென்னிற்ச் சிரிப்பார்
சிலர்சினந்து
வைதோடக் குட்டிமகிழ் வார்.
(5)
127. ஆருயிரொன் றேனுமவ னானென்றோர்ந்த துண்டேற்
பாருலக முற்றுமதே பற்றாதோ – வோருருவிட்
டொன்றெடுக்கத் தக்க வுணர்வுங் கெடும்பிறப்பால்
வென்றெடுத்தாள் சோதியுண்டு மெய்.
(6)
128. எல்லாமும் வல்லா னிறையென் றுணர்ந்துநினைத்
துல்லாசத் தோத்திரமு மோதியப்பாற்
– சல்லாபக்
கேளியெனக் கலந்துங்கீழ் மையுன்னித்
தொண்டுசெய்வோர்
தாளிணையைச் சூட்டுந் தலை.
(7)
129. எந்த நலத்தை யிகழ்ந்தாலு மெம்பெருமான்
சொந்த வடிமைத் தொழில்செய்வோர்
– சந்ததமும்
வேண்டுவன நல்கி மிகக்களிக்கு மெய்யருளை
யாண்டுமிகழ வொண்ணா தே.
(8)
130. இல்லாப் பொருள்சிறிது மில்லானை யெப்பொழுதுஞ்
சொல்லாமற் சொல்லுந் துறவோரைப்
– பொல்லாரென்
றெண்ணுகின்ற குற்றமன்றி யெல்லாம்
பொறுக்கவொளிர்
கண்ணுநல்கிக் காக்குமவன் காண்.
(9)
131. மெய்யன்பு செய்வதுவும் வீணல்ல மெய்க்கடவுள்
பொய்யன்புங் கொண்டருளும் புண்ணியன்காண்
– பெய்ய
மழைபடைத்துப் பார்புரக்கு மன்னவன்காண்
கண்டீர்
விழைமினவன் றன்னையென்று மே.
(10)
முற்றிற்று.
14. அத்துவிதத் துருவகம்
132. தானுந் தனையுணராத் தன்மயத்தைச் சொன்மதுரத்
தேனுங் கசக்குமொரு தித்திப்பை
– யானுந்தா
னென்றதுவும் பொய்யா மிடத்தை யிரண்டென்போ
ரன்றருளின் மூழ்கா தவர்.
(1)
133. என்றுந் துணைவிருப்பி லேகனையென் றெல்லோருஞ்
சொன்றுந் துதிக்குஞ் சுயஞ்சுடரை
– நன்றுடனே
தீதுந்தா னான செயலைச் சிறப்பித்த
லேதுந்தா னானதென்ப தே.
(2)
134. எப்பொருளுந் தானா யிருந்ததன்பா லேதிருக்கு
மெய்ப்பொருளொன்
றென்றோது மெய்யிருக்குஞ் – கைப்பொருளுந்
தம்மலதென் றெண்ணுந் தவத்தோர் நினைவிருக்கு
மும்மலத்தோ ரெள்ளு முதல்.
(3)
135. ஒன்றன்றி மன்றொன் றுளதென்னா ருள்ளுவகை
தன்றன் கருத்தறிந்த தன்மையே – கொன்றன்றி
வாழாரு மொத்துரைக்கும் வார்த்தைக்
கயர்கைபற்றித்
தாழாப் புகழ்புரிவார் தாம்.
(4)
136. ஆற்ற லருளென் றறிந்துள்ளா ரத்துவிதம்
போற்றல் வரலும் புதுமையே – தோற்ற
லனைத்துமய லென்றிடலு மாகும் புவிக்குத்
தினைத்துணைநன் றெய்துவதுண் டேல்.
(5)
137. துய்க்கு மினிப்பறியான் றுய்த்துவக்குந் தூயவன்பாற்
கைக்கும் விதஞ்சொன்ன கதையாகு –
மெய்க்குளொரு
பொய்யணையா தென்பவர்பாற் போக்கு
வரவோது
மையச் சமயமற்றெல் லாம்.
(6)
138. காலங் கருதியுழல் கட்செவிநேர் சொய்ச்சமைய
மூலங் கருதின் முனிவோரே – சாலப்
புகழுரைக்கிற் சிற்றறிஞர் புந்தியஞ்ச
னாடி
யிகழும் பொருந்தவைத்தா ரே.
(7)
139. ஒன்றனைத்து மானவு பாயமறி யாருணர்ந்த
நன்றனைத்து நன்றல்ல நன்குணர்ந்தோர்
– குன்றனைத்தாங்
குற்றஞ் செயினுமது குற்றமல்ல வென்றுணர்ந்தா
ரற்றந் திருவருளுற் றார்.
(8)
140. சித்ததனை யும்பகுப்போர் சிந்தையொன்று சேராமு
னெத்தகையாற் சித்திநல மெய்துவார்
– தத்தமது
சாட்சி வடிவமே தற்பரமென் றோதிடினுங்
காட்சி வடிவுணரார் காண்.
(9)
141. சித்துருவை யொன்றாத் தெளிந்தடங்குஞ் செல்வருக்கே
யத்துவித ஞான மழகாகுங் – கத்துந்
துவிதமே நன்றென்று தொண்டுசெய்யப்
பெற்றோர்க்
கவிதத் தழகாகு மாம்.
(10)
முற்றிற்று.
15. சமரசத் துருவகம்
142. காணா வடிவத்தின் கற்பனையிற் கண்டதனை
நாணம லேத்துவது நன்றென்று – தோணாமற்
சொல்ல லுணராத் தொழும்பருக்கு நல்லோனே
வல்ல சமரசக்கோ மான்.
(1)
143. பூரணச் சீருண்மைப் பொலிவு புரைதீர்ந்த
காரணத் தார்நாட்டங் களிவாரி – யாரணங்கள்
போற்றுநலம் பொன்றாப் புகழ்ச்சிபுல
வர்கண்டு
சாற்றும்வி ரோதஞ் சமம்.
(2)
144. கற்றோர் சமரசமுக் கண்ணனைய தாமொருசார்
புற்றோர் நிலையொருகண் ணொக்குமே
– மற்றோ
ரெவருந் தமக்கினிய ரென்றுணர வாழுந்
தவருந் தரணியிலுண் டாம்.
(3)
145. குற்றங் குணத்துடனே கூடுங் கொடிதுணரப்
பெற்ற சமரசத்தோர் பேராண்மை – முற்றப்
புரியா திறையிருந்தாற் பூவுலகின்
மற்றப்
பெரியாரு முண்டெனல்வம் பே.
(4)
146. மற்ற நிலையான் மகிழ்வோரின் மாசற்றோர்
பெற்ற சமரசத்தின் பேராக்கங் – கற்ற
புலவ ருயர்ச்சியென்னும் போத முடையார்க்
கிலவங் கனியுமெய் துமே.
(5)
147. தந்தவமு மெம்பெருமான் றண்ணருளுஞ் சந்திக்கி
னெந்த நலமுமெய்து மென்றுணருஞ்
– சொந்தச்
சமரசமே தஞ்சமென்னுஞ் சத்தியத்தோர்
தாமே
தமரனையா ரென்பார் தவர்.
(6)
148. தெய்வச் சமரசத்திற் சிந்தையவா நீங்குமன்றிச்
செய்வதனா லுண்மை திகழாதே – பொய்வலிமை
மெய்வழக்கைத் தள்ளல்கண்டால் வேளைப்
பயனெனத்தேர்ந்
துய்வதற்கே நாடுநர்க் குண்டு.
(7)
149. சித்துடையார் சொல்லே திறனென்று ணர்ந்துரைப்போர்
வத்துநிலை தேறவல்ல மாக்களே – செத்துப்
பிறவாமை வேண்டிநிற்கப் பெற்றோ ரெவரு
மறவாத வரவரா வார்.
(8)
150. ஆகத் தடங்குவதே யாவியென்று மன்னைவயிற்
றேகத் தகுமுயிரே யில்லையென்றும்
– போகத்
துயர்ந்தசுக மில்லையென்று மோதுந
ராற்றானு
மயர்ந்தழியா தார்பொதுவோ ராம்.
(9)
151. எல்லாஞ் சமரசத்தி லெய்தலா லிந்நிலையி
லில்லா நலஞ்சிறிது மில்லைகாண்
– கொல்லா
நலமே யினியதென நாடிநிற்கு நெஞ்சே
நிலமேலும் வாழ்வதுண்டு நீ.
(10)
முற்றிற்று.
16. முத்தி யுருவகம்
152. எத்தகைத்து முத்தியென யாரியாரி சைந்தாலு
மத்தகைத்தே முத்தி யவர்க்காகு
– மித்தகைத்தென்
றோதரிய தென்பதென்னே யூன்விட்டோ
ரூனெடுக்கு
மேதந்த விர்வதென்ப தே.
(1)
153. முத்திச் சுகமே மொழிவரிய தென்றாலு
மத்திருவே மியாதென லாகாதோ – வெத்திசையும்
போற்று மொருவன் புகழே யுயர்வெனக்கண்
டாற்றுந் தவமுயற்சி யாம்.
(2)
154. வல்லானைச் சற்குருவின் வார்த்தைப் படிவிரும்பிக்
கொல்லாத தவத்தாற் குறிகண்டு – நல்லார்க்
குயிர்போன் றொளிர்பெரியோ ரோகைகொண்டு
மற்றோர்
செயிர்தீர்த் தளிக்கை சிவம்.
(3)
155. இல்லந் துறந்திரந்துண் டெல்லா மிறைவடிவாச்
சொல்லன்பர் தங்குழுவிற் றோய்வுற்றுக்
– கல்லன்ன
நெஞ்சுருகப் பாடி நினைவுகொண்டு
நிற்போர்க்கே
யஞ்சு பொறியடங்கு மாம்.
(4)
156. நமையறிந்து காக்குமொரு நாதனன்றிச் சற்று
மமையுந் துணையிலையென் றாய்ந்து
– சமையமுற்றுங்
கற்பனையென் றோர்ந்து நலங்கண்டு
களிகூர்ந்து
நிற்பதே முத்தி நெறி.
(5)
157. தெய்வமொன் றென்னத் தெளிந்துமற்றோர் சீவனுடற்
கொய்வ தருந்தலற்றுக் கோதகன்ற –
மெய்வலிமைத்
தொண்டு புரிந்தருளிற் றோய்ந்துமகிழ்
தூய்மையதே
பண்டுதொட்டுக் கூறும் பதம்.
(6)
158. சித்திபெற்றும் பல்பிறப்பிற் சேருந் திருவாய
முத்தியெ தென்றாய்ந்து மொழியுங்கா
– னத்தியவா
றெல்லா மிகத்திலடைந் தின்னுமொரு
தாய்வறிற்றிற்
புல்லாமை மற்றனைத்தும் பொய்.
(7)
159. மெய்யடியார் பொற்றாளின் மென்றுகளைச் சூடாத
பொய்யடியார் முத்தி புகுவாரோ –
வைய
மடைந்தா ரென்றோதவிறந் தன்னவரோ டீண்டுற்
றிடைந்தாரும் பற்பலருண் டே.
(8)
160. மாதவப்பே ரின்ப மயலகன்ற மெய்யுணர்வே
யேதமற்ற பேறுமுத்தி யென்பதே – போதமுற்றி
நானென் றழியா நலமே கருதிநின்றால்
வானென்ற வல்லோன் வரும்.
(9)
161. பெற்றயில்வுற் றேனும் பெறாம லிகழ்ந்தேனும்
பற்றறுக்க வல்லார்க்கே பந்தம்போய்ச்
– சொற்றறியா
வின்பம் பயக்குமுத்தி யெய்துமெனத்
தேர்ந்தோர்க்கே
துன்பம்போமென் கைவல்லோர் சொல்.
(10)
முற்றிற்று.
(நூற்பயன்)
162. சிற்றறிஞர் வேண்டாச் சிறப்புநூற் செந்தமிழ்ப்பாக்
கற்றறிய வல்ல கருத்தோர்க்கு – முற்றத்
துறந்துபிறி தோருயிர்க்குத் துன்பம்புரியா
திறந்துபிற வாமையெய்து மே.
குருபாதமே
கதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக