வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
அருளிச் செய்த
சதக
உந்தி
காப்பு
(நேரிசை
வெண்பா)
உதகம் புயல்பொழிவ
தொத்தோர் புலவன்
சதகவுந்தி நூலொன்று
சாற்ற – மதகயம்போற்
செல்லுங் கவிஞர்
பலர்செப்பிடி னுந்தீராத
சொல்லும் பொருளுந்
துணை.
நூல்
தெய்வம் பலவுந் தெளிந்தோருக்
கொன்றென்கை
மெய்வழக் காகுமென்
றுந்தீபற
வேதத்தி னந்தமென் றுந்தீபற.
(1)
பல்கோடி யாகப் பகுக்கின்ற
பத்தர்முன்
சொல்கோடி நாமமென்
றுந்தீபற.
தோய்வதோர் தெய்வமென் றுந்தீபற.
(2)
தற்பர மொன்று சமையம்
பலவினு
நிற்பதே யுண்மையென்
றுந்தீபற.
நீங்கா நிறைவதென் றுந்தீபற.
(3)
ஈகை யிரக்க மிரண்டு
மிதையத்தி
னோகை விளைக்குமென்
றுந்தீபற.
வுலகத் தருமையென் றுந்தீபற.
(4)
கொல்லுஞ் சமையங்
குணங்கெட்ட தாமென்று
சொல்லுஞ்சொன் மிக்கதென்
றுந்தீபற.
துறந்தோர் தொழிலதென் றுந்தீபற.
(5)
உள்ளத் திரக்க முடையா
ரொழுக்கமே
யெள்ளத் தகாததென்
றுந்தீபற
வெய்த லருமையென் றுந்தீபற.
(6)
எந்தச் சமைய மினினென்னிற்
கொல்லாத
சொந்தச் சமையமென்
றுந்தீபற.
சொல்லி லடங்காதென் றுந்தீபற.
(7)
எந்த வடிவு மெடுக்கும்
பொருளுக்குச்
சொந்த வடிவேதென்
றுந்தீபற.
தொண்டர் நினைப்பதென் றுந்தீபற.
(8)
குருவைப் பிரானென்று
கூறுஞ் சமையந்
திருவைப் பெருக்குமென்
றுந்தீபற.
செனமிக்க வொட்டாதென் றுந்தீபற.
(9)
இந்தச் சமைய மினிதென்று
கூறாத
தெந்தச் சமையமென்
றுந்தீபற.
வெங்கெங்கு மில்லையென் றுந்தீபற.
(10)
ஓர்வகை நாம முரைத்து
ரையாத
சீர்வரல் வேண்டுமென்
றுந்தீபற.
செப்பரி தாமென் றுந்தீபற.
(11)
சற்குரு நாதன் றனியனென்
றோதாத
சொற்குரு மூடனென்
றுந்தீபற.
சொல்லிற் றுலங்காதென் றுந்தீபற.
(12)
கோலங் குறித்துங்
குறியா நிலயமே
ஞாலத்தின் மிக்கதென்
றுந்தீபற.
நல்லோருக் கெய்துமென் றுந்தீபற.
(13)
ஊருடன் பேரு மொழிந்ததா
முண்மையை
யாருடன் சொல்வதென்
றுந்தீபற.
வடியாருக் காமதென் றுந்தீபற.
(14)
அண்டம் பலவு மமைத்த
வொருவனே
பிண்டத்து நின்றானென்
றுந்தீபற.
பேதாதி பேதனென் றுந்தீபற.
(15)
எல்லாமும் வல்லா
னியல்பை யுணர்ந்தவர்
வல்லாண்மை பேசாரென்
றுந்தீபற.
வணங்கித் துதிப்பாரென் றுந்தீபற.
(16)
சாத்திர மியாவுந்
தனியான தெய்வத்தைத்
தோத்திரஞ் செய்யுமென்
றுந்தீபற.
தொண்டர்தஞ் சொல்லதென் றுந்தீபற.
(17)
நாடருஞ் சோதி நமதென்னுந் நம்பிக்கை
தேடருஞ் செல்வமென்
றுந்தீபற.
தெளிந்தோருக் கெய்துமென் றுந்தீபற.
(18)
ஒன்றென்று சொல்லி
யுளத்தில் பகுப்பது
நன்றென்ப தாகுமென்
றுந்தீபற.
நாட்சென்று தேறுமென் றுந்தீபற.
(19)
பன்னூற் பகுப்பிற்
பரனொன் றெனக்கூறு
நன்னூ லுயர்ச்சியென்
றுந்தீபற.
நாமென்ன சொல்வதென் றுந்தீபற.
(20)
தானாக வந்து தனைச்சேரு
முண்மையை
யேன்நா முரைப்பதென்
றுந்தீபற.
விதயக் களிப்பாலென் றுந்தீபற.
(21)
எந்தச் சமையத் தினர்க்குந்
தலைவனே
சொந்தக் கடவுளென்
றுந்தீபற.
துட்டர்பொய் யென்பரென் றுந்தீபற.
(22)
தன்னைப் பொருளென்று
சாற்றுஞ் சமையங்க
ளென்னைத் தொடராதென்
றுந்தீபற.
விகபரந் தேறாதென் றுந்தீபற.
(23)
பொய்யைமெய் யென்று
புலம்பிடும் புல்லரைச்
செய்யபே றொன்றாதென்
றுந்தீபற.
தெய்வமே வல்லதென் றுந்தீபற.
(24)
எந்தச் சமையத் திருக்கின்ற
பத்தர்க்குஞ்
சொந்த மிரக்கமென்
றுந்தீபற.
சோர்வற்ற நாட்டமென் றுந்தீபற.
(25)
இச்சைப் பொருட்டேனு
மெம்பிரான் றன்னையே
நச்ச லுயர்ச்சியென்
றுந்தீபற.
நாமுற்ற துண்மையென் றுந்தீபற.
(26)
கொல்லுந் தொழிலைக்
கொடிதென்று கூறார்கள்
சொல்லுஞ்சொன் மாயையென்
றுந்தீபற.
தொலையாப் பவத்தோரென் றுந்தீபற.
(27)
மூர்த்தியைப் பற்றி
மொழிகூறி நிற்போனுங்
கீர்த்தி மெஞ்ஞானியென்
றுந்தீபற.
கிளரிளந் தன்மையென் றுந்தீபற.
(28)
பேறு பெற்றோரும்
பெருமான் விதியைவிட்
டேறு தற்றோர்ரென்
றுந்தீபற.
வெழுத்தே வலியதென் றுந்தீபற.
(29)
பொய்ப்பேறு கொள்ளும்
புதுமையின் மிக்கதே
மெய்ப்பேறு வேண்டலென்
றுந்தீபற.
மெய்யர்க்குத் தோன்றுமென் றுந்தீபற.
(30)
எவ்வகைத் தேவு மிறையென்
றிருப்போர்க்குத்
தெவ்வா நோவில்லையென்
றுந்தீபற.
சிறியோ ருணராதென் றுந்தீபற.
(31)
பன்மதங் கூறும் பழைய
சுருதியே
நன்மத மாகுமென் றுந்தீபற.
நல்லோ ருணர்வரென் றுந்தீபற.
(32)
கொற்றக் குரவன் குறியைக்
குறியார்கண்
முற்றத் துறவாரென்
றுந்தீபற.
மூதுணர் தன்மையென் றுந்தீபற.
(33)
எந்தத் தலத்து மிருக்கு
மிறைவற்குச்
சொந்தத் தலமெதுவென்
றுந்தீபற.
சொன்னாற் றெரியாதென் றுந்திபற.
(34)
சரிதாதி நான்குந்
தமதென்று கொள்ளும்
பெரியாரு முண்டுமென்
றுந்தீபற.
பெற்றோ ரறிவரென் றுந்தீபற.
(35)
பாடிப் பணிந்து பரகதி
வேண்டலோர்
வேடிக்கை யல்லவென்
றுந்தீபற.
வெறுக்கா வெறுக்கையென் றுந்தீபற.
(36)
நன்மையுந் தீமையு
நாடி யறிபவர்
புன்மையை வெல்வரென்
றுந்தீபற.
புவித்தெய்வ மாவரென் றுந்தீபற.
(37)
சாறாடும் வண்மைச்
சமையங்கள் பலகோடி
வீறார்வ தொன்றேயென்
றுந்தீபற.
மெய்யம்மை விளங்குமென் றுந்தீபற.
(38)
நண்ணுந் தவத்தோர்க்கு
நம்பரன் நல்குவ
தெண்ணுந் தகைத்தனறென்
றுந்தீபற.
வெல்லா மெனலாமென் றுந்தீபற.
(39)
ஈனக் குலத்தோ ரெனினுந்
தவஞ்செய்யின்
மானக் குலத்தோரென்
றுந்தீபற.
வழக்கத்து வாய்பாடென் றுந்தீபற.
(40)
சித்தாந்தம் வேதாந்தஞ்
சேர்ந்த சமரசம்
பத்தாந்த மாகுமென்
றுந்தீபற.
பழக்கத்தி லெய்தாதென் றுந்தீபற.
(41)
பூசை விருப்பம் பொருந்தாத்
தவசிகட்
காசையொன் றாகாதென்
றுந்தீபற.
வணிமாதி கொள்ளாரென் றுந்தீபற.
(42)
பிள்ளைநா னென்று
பெருமானைப் போற்றுதல்
வெள்ளைமதி யன்றென்
றுந்தீபற.
மேலோருக் கெய்துமென் றுந்தீபற.
(43)
மானிடத் தேவர் மகிதலத்
தின்றாயிற்
கோனிடர் மீறுமென்
றுந்தீபற.
குறிப்போ ருணர்வரென் றுந்தீபற.
(44)
கொற்றவன் கோலுங்
குருநாத னாணையுங்
கற்றவர்க் கொன்றேயென்
றுந்தீபற.
கல்லார்க்கு வேறாமென் றுந்தீபற.
(45)
அன்னமுந் நீரு மளிக்கு
மொருவனே
முன்னவ னாவனென் றுந்தீபற.
முனிவர்க் கெளியனென் றுந்தீபற.
(46)
எத்தேவை வேறொன் றிலையென்று
போற்றினு
மெய்த்தேவ தாகுமென்
றுந்தீபற.
மேதினிக் கொவ்வாதென் றுந்தீபற.
(47)
அந்தச் சமையத் ததீதமொன்
றில்லாத
தெந்தச் சமையமென்
றுந்தீபற.
வியல்பாகத் தோன்றுமென் றுந்தீபற.
(48)
மண்ணாதி மூன்றினும்
வாஞ்சித்த நெஞ்சமே
யெண்ணாத தெண்ணுமென்
றுந்தீபற.
விறைநாட்டங் கைப்பரமென் றுந்தீபற.
(49)
ஏதேனு மொன்றை யிறையவன்
பாற்கேட்கின்
மாதேனு ஞானியென்
றுந்தீபற.
மற்றெலா மையலென் றுந்தீபற.
(50)
அவ்வச் சமையத் தறவோ
ரவர்தெய்வ
மொவ்வக் கருதலென்
றுந்தீபற.
வொன்றை யுணர்ந்தோர்க்கென் றுந்தீபற.
(51)
பஃறெய்வ மென்பவர்
பாவல ராயினு
மஃறிணை யென்பதென்
றுந்தீபற.
வருட்பேறு கொள்ளரென் றுந்தீபற.
(52)
பொய்முத்தி சேரும்
புதுமையின் மிக்கதே
மெய்முத்தி வேண்டலென்
றுந்தீபற.
விற்பனர் தேவரென் றுந்தீபற.
(53)
இறப்பும் பிறப்பு
மியம்பிடு நூலே
சிறப்புற்ற தாகுமென்
றுந்தீபற.
சீக்கிரந் தோன்றாதென் றுந்தீபற.
(54)
பிள்ளை பெறலே பிறப்பென்று
சொல்வோர்கள்
வெள்ளைக் கருத்தோரென்
றுந்தீபற.
வினைத்திறந் தேராரென் றுந்தீபற.
(55)
ஞானிபோன் மற்ற நரரும்
பிறவாமல்
வானிற் கலவாரென்
றுந்தீபற.
வையமுஞ் சொல்லுமென் றுந்தீபற.
(56)
இன்னம் பிறவா திருக்க
விரும்புவோர்
சின்னம் புனைவரென்
றுந்தீபற.
செப்பரும் பேதமென் றுந்தீபற.
(57)
ஊரை விடுத்தே யொருவனைப்
போற்றுவோ
ராரை மதிப்பாரென்
றுந்தீபற.
வவசர மில்லையென் றுந்தீபற.
(58)
கண்ணுஞ் செவியுங்
கருத்துங் கொடுத்தோனை
நண்ணுதன் மேன்மையென்
றுந்தீபற.
நலமே பெருக்குமென் றுந்தீபற.
(59)
தண்டித் தளிக்குமோர்
தற்பர னின்றாயிற்
றொண்டிற் பயனியாதென் றுந்தீபற.
சூனிய மல்லவென் றுந்தீபற.
(60)
நான்றெய்வ மென்னு
நரர்பால் சுடர்செய்த
வான்றெய்வ மியாவனென்
றுந்தீபற.
மழைக்கோவு நீர்கொல்லென் றுந்தீபற.
(61)
தன்னை யுணர்த்துந்
தனியான தத்துவ
மென்னை விழுங்குமென்
றுந்தீபற.
யாவர்க்குந் தோன்றாதென் றுந்தீபற.
(62)
தேனுங் கசக்குந்
தெளிதமிழ்ச் செல்வரை
வானுந் துதிக்குமென்
றுந்தீபற.
வையம் வணங்குமென் றுந்தீபற.
(63)
பத்தியி னின்று பணிகின்ற
பண்பினில்
சித்தியுந் தோன்றுமென்
றுந்தீபற.
திரும்பாமற் செய்யுமென் றுந்தீபற.
(64)
யாவுந் தனக்குள்
ளிருக்கின்ற தென்போர்க்குத்
தேவுந் தனக்குளென்
றுந்தீபற.
சிற்சிலர் கொள்கையென் றுந்தீபற.
(65)
தானதற் குள்ளாய்த்
தனக்குள் ளதுவாகும்
ஞானம் பெரியதென்
றுந்தீபற.
ஞாலத் தரியதென் றுந்தீபற.
(66)
கண்ணினாற் காணக் கடவுள் வராதென்கை
நுண்ணிமை யல்லவென்
றுந்தீபற.
நூல்பல கல்லாரென் றுந்தீபற.
(67)
சித்தியைப் பெற்றுஞ்
சிலபிறப் பெய்தினே
முத்திவந் தொன்றுமென்
றுந்தீபற.
மொழிவா ரனேகரென் றுந்தீபற.
(68)
எண்சித்தும் வம்பென்
றிகழ்வோ ரிதற்குமுன்
வண்சித்த ரல்லரென்
றுந்தீபற.
வாசனை யேற்றுமென் றுந்தீபற.
(69)
எந்தத் தொழிலு மிறைவன்
கொடுக்கினே
சொந்தத் தொழிலாமென்
றுந்தீபற.
தொழுவாருக் கெய்துமென் றுந்தீபற.
(70)
பொல்லாப் பிறவியைப்
போக்க முயல்வோரே
வல்லார்க ளாவரென்
றுந்தீபற.
மற்றவர் மூடரென் றுந்தீபற.
(71)
ஈனப் பிறப்பே யெவர்க்கு
மிலையென்று
ஞானத்திற் றோன்றாதென்
றுந்தீபற.
நவில்வோரு முண்டுமென் றுந்தீபற.
(72)
யார்க்கு மொருவ னிறையென்
றுணர்வதே
தீர்க்கமெஞ் ஞானமென்
றுந்தீபற.
சிறியவர்க் காகாதென் றுந்தீபற.
(73)
எல்லா முடையா னொருவனென்
றெண்ணாத
பொல்லார் பலருண்டென்
றுந்தீபற.
புகன்றாலு மொப்பாரென் றுந்தீபற.
(74)
ஒன்றென்று நாடி யுருகுந்
தவத்தோர்க்கே
நன்றென்ப தெல்லாமென்
றுந்தீபற.
நானிலந் தேடுமென் றுந்தீபற.
(75)
எல்லாம் படைக்கு
மிறைவ னொருவனே
வல்லாள னாவனென் றுந்தீபற.
மற்றாரு மில்லையென் றுந்தீபற.
(76)
பிறக்கப் பயந்தே
பெரியோர் பிரானைச்
சிறக்கப் பணிவதென்
றுந்தீபற.
சித்திபெற் றுய்வரென் றுந்தீபற.
(77)
முத்தர்க்குச் சித்தியே
மொய்ம்பென் றுரைப்பது
பித்தர்க்குந் தோன்றுமென்
றுந்தீபற.
பிறந்தோ ரிறப்பரென் றுந்தீபற.
(78)
சித்திபெற் றுள்ளவன்
செத்தாலும் முத்தனென்
றெத்திக்கும் மெச்சுமென்
றுந்தீபற.
வெள்ளாத வாழ்வதென் றுந்தீபற.
(79)
சித்தியொன் றேனுந்
தெரியப் புரிந்திடான்
முத்தியுஞ் சாவேயென்
றுந்தீபற.
முன்னோர் மொழியிதென் றுந்தீபற.
(80)
தேவே துணையென்று
செப்பார் தமக்குமோர்
நாவேன் முளைத்ததென்
றுந்தீபற.
நல்லோரை யேசவென் றுந்தீபற.
(81)
மாதவப் பேறே வலிதென்று
தேரார்க
ளேதமுற் றாய்வரென்
றுந்தீபற.
யானென்கை நீங்காரென் றுந்தீபற.
(82)
மண்ணாதி யைந்தான்
மறைந்து மறையாத
விண்ணாங் கடவுளென்
றுந்தீபற.
வேடமுங் கொள்ளுமென் றுந்தீபற.
(83)
கண்டுகேட் டோன்றைக்
கருதுங் கருத்தோருக்
குண்டுபே ரின்பமென்
றுந்தீபற.
வுள்ளத்தி லூறுமென் றுந்தீபற.
(84)
மாதர் மயக்கால் வருந்தாத
வாழ்வதே
போத விளக்கமென் றுந்தீபற.
புண்ணியோர் வேண்டலென் றுந்தீபற.
(85)
சித்தியோ ரெட்டுந்
தெளிந்தோருக் கல்லாது
சத்தியந் தோன்றாதென்
றுந்தீபற.
சந்தேகம் மீறுமென் றுந்தீபற.
(86)
சந்தேகப் பேயாற்
றயங்குந் தவத்தோர்க்குச்
செந்தேனுங் கைக்குமென்
றுந்தீபற.
சித்தியே தேற்றுமென் றுந்தீபற.
(87)
பெற்றவர் போலப் பெறாதாரும்
பேசிட
வுற்றது ஞானமென்
றுந்தீபற.
வுண்மையே வண்மையென் றுந்தீபற.
(88)
பாராதி யண்டப் பரப்பெங்கு
மொன்றென்ன
வாராத னஞ்செயென்
றுந்தீபற.
வறிவுக் கறிவதுவென் றுந்தீபற.
(89)
பொய்ப்பாச மற்றுப்
புலையாட லற்றோர்க்கு
மெய்ப்பாசந் தோன்றுமென்
றுந்தீபற.
வேதாந்த வீடதென் றுந்தீபற.
(90)
கல்விக் கடலைக் கடந்தோருக்
கானந்தச்
செம்வமுண் டாகுமென்
றுந்தீபற.
தெளிந்துங் கலங்காரென் றுந்தீபற.
(91)
தெய்வத்தி னுண்மை
திகழத் தவஞ்செய்யி
லைவர்க்கு மோசமென்
றுந்தீபற.
வறிவுக் குவகையென் றுந்தீபற.
(92)
வேண்டுவ வெல்லாம்
விரும்பிக் கொடுப்பதொன்றி
யாண்டு மிருக்குமென்
றுந்தீபற.
வெல்லா முணர்வதென் றுந்தீபற.
(93)
தெய்வத்தை நாடிச்
சிறிதும் பயனின்றி
நைவது நன்மையென்
றுந்தீபற.
நம்பிடல் வேண்டுமென் றுந்தீபற.
(94)
அன்பருக் கன்ப னவனென்
றறிந்தோர்க்குத்
துன்பமு மின்பமென்
றுந்தீபற.
சோர்வின்றி வாழ்வரென் றுந்தீபற.
(95)
தத்துவ மொன்றென்று
சத்தியஞ் செய்பவன்
சத்துவ ஞானியென்
றுந்தீபற.
தானே விளங்குமென் றுந்தீபற.
(96)
ஈனத் தொழிலோர்க்
கிரங்கா திருப்பவர்
வானத் தலைவரென் றுந்தீபற.
வையகத் தெய்வமென் றுந்தீபற.
(97)
எந்நோ வினத்து மிறப்பும்
பிறப்புமே
வெந்நோ வதாகுமென்
றுந்தீபற.
வெல்வ தரிதேயென் றுந்தீபற.
(98)
எவ்விதப் சீரு மிறையருட்
பேறெனச்
செவ்விய தல்லவென்
றுந்தீபற.
தெரிந்தோர்க் கடிமையென் றுந்தீபற.
(99)
மெய்த்தெய்வ மன்றி
வெறுத்தேச வேண்டினும்
பொய்த்தெய்வ மில்லையென்
றுந்தீபற.
போகமு நல்குமென் றுந்தீபற.
(100)
நூற்பயன்
(கலி
விருத்தம்)
நிதமும் நண்ணு நிசத்தை
விளக்கிடு
மிதமி ரக்க மிசைந்திடச்
செய்யுமோர்
பதமி தென்று பகர்ந்திடக்
காட்டுமென்
சதக வுந்தித் தமிழ்க்கவி
நூறுமே.
சதக
உந்தி நூல் முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக