வண்ணச்சரபம்
தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த
கௌமார
முறைமை
பாயிரம்
கலி
விருத்தம்
1.
பருக
ருங்கட லுண்டவன் பைந்தமிழ்
பெருக
நாடுநா
பேசப் பிறங்குசீர்
முருக
றாக்கவு மார முறைமையிற்
குருக
டாட்சங் குறிப்பது தோன்றுமே.
(1)
2. கருமம் பத்தி கழிக்கரு ஞானமென்
றரும
றைச்சொ லறையுமென் பார்களென்
னொரும
னத்தி லுதித்தமட் டோதுவேன்
றரும
சீலத் தவருவப்
பெய்தவே.
(2)
3. உம்ப ரென்னினு மோருட லாயினு
மிம்பர்
மானிடத் தெய்திடி னல்லது
செம்ப
ரத்துட் புகாரெனச் செப்புசொல்
வம்ப
ரோர்வரி தாகிவ யங்குமே.
(3)
4. ஈன்று ளாரொ டெழிற்குரு நாதனு
மேன்று
நாடுந ரெய்துமெய்த தெய்வமும்
மூன்று
காண்ட முறைமையென் றெண்ணுவார்
வான்று
திக்க வருகவு மாரரே.
(4)
5. மற்றை நான்கு வகைப்படு பூதமு
முற்ற
வானி லுளநெறி யாவையும்
பெற்ற
டக்கும் பெருமத மியாதெனிற்
கொற்ற
வேற்கைக் குகன்கவு மாரமே.
(5)
6. உருவ நாட்ட மொருங்கிகழ் வார்களுங்
குருவுண்
டென்பரக் கொள்கையுந் தாண்டிநின்
றொருவ
யியாவரு மொப்பவென் றாலவன்
சருவ
வல்லபத் தற்பரன் மைந்தனே.
(6)
7. செல்வம் கல்வி திருவருட் பேறெனச்
சொல்வ
கைக்குட் சுரர்களுந் தோயொணா
வல்வ
ழக்கின தோர்பவர் வண்பதத்
தொல்வ
தாந்துக ளோர்வருந் தஞ்சமே.
(7)
முதலாவது
கரும
காண்டம்
(பொதுவியல்)
(எண்சீர்க்
கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
(கருமம்
– சரியை, கிரியை, தூல வழிபாடு)
8. உயிர்வருந்தப் படுத்தாமை கொலைசெய் யாமை
யூணுண்டு களியாமை
யுடையோர் தம்மைப்
பயிரனையா
ரெனலாகும் மற்றை யோரைப்
பாவமிகுங்
களையெனவே பகர லாகும்
செயிருறமீ
மாஞ்சன்மொழி தருபொய் வேள்வி
செய்கின்றோர் தம்மையெண்ணித் தேரிற்
சென்னி
மயிர்பறித்துக்
குரவர்களை வருத்தி, நீரான்
மலங்கரைத்துப்
பாயுடுப்போர் வண்மை யோரே.
(1)
9. மாதாவை யுடன்பிறந்த மடவார் தம்மை
மக்களைமற்
றனையாரை மருவும் பொல்லாத்
தீதாள
ரினுங்கொடியார் தம்மை யெண்ணிற்
றிலோத்தமையா
தியர்வலிதிற் சேர வேண்டி
வாதாடி
னாலுமொப்பாத் துறவோ ராயும்
மகக்கொலைநன்
றெனத்துணிந்து வசனிப் போரே
வேதாமுன்
வந்துபகர்ந் தாலு மொப்பா
விரதியர்க்கே
சித்தியெட்டும் வீடு முண்டே.
(2)
10. அக்கினியி லவிசொரியச் சொன்ன வேத
மாறுநெறி
கூறுதலா லறிஞர்க் கெல்லா
மிக்கினிதே
யதனுடனூன் பெய்யச் சொல்லல்
வேனனெனப்
பாகவதம் விளம்புங் கண்டீர்
திக்கிலுள்ள
வேதங்க ளெவையா னாலுஞ்
சீவவதைக்
கிழிவுரைக்கிற் றெய்வ வாக்கே
கக்கியுண்ணு
நாயனைய பாவ மாந்தர்
கள்ளிறைச்சி
யுண்கைபெருங் கடனென் பாரே.
(3)
11. ஒருவேதம் பலசமயஞ் சொல்லு மாகி
லுள்ளநெறி
யத்தனைக்கு மொருவன் றானே
குருவாகும்
விதமுணர்மெய் ஞானத் திற்கோர்
கொழுகொம்பா
மொன்றுரைக்கிற் குவல யத்திற்
பெருவாது
செய்யுமொரு மதநூ லாகும்
பிரான்மொழியென்
றவரவரும் பேச லுண்டு
திருவேத
மனந்தமெனப் பகர்கின் றோரே
சீரியோர்
மற்றெவருஞ் சிறியோர் தாமே.
(4)
12. சிற்றுயிர்கட் கொன்றருந்தச் சொல்லும் வேதம்
தெய்வமொழி
யானாலுஞ் சீவர் நூலே
சற்றுமதொன்
றாகாதென் றுரைப்ப தெந்தச்
சமயநூ
லானாலுந் தவத்தின் றாயே
முற்றுலங்கும்
சதுர்வேதத் துடனந் நாளின்
முடியொருபத்
துடையானேர் மூர்க்கர் சில்லோர்
செற்றுணலைச்
சேர்ந்துரைத்தா ருரைசெய் தோனுஞ்
சிற்றறிவா
லப்படியே செப்பி னானே.
(5)
13. சாதியென யுலகபரம் பரையிற் காணல்
சரதமெனக்
கூடும்வெறுந் தவறன் றுண்மை
நீதிமுறைத்
தொழில்வகையில் மேல்கீ ழோர்ந்து
நேரிழையார்
கற்பின்வழி நிறுவல் கண்டீர்
மாதிரத்தி
லதுபொதுவன் றாத லாலே
மாறுமே
தந்தைமதி மக்கட் குண்டா
மேதிலவர்
வினைமுயல்வார் பலரா னாலு
மியம்புமொரு
நால்விதமே யியல்பா மன்றே.
(6)
நால்வகை
மரபு
14. கற்றறிந்து மற்றவருக் குரைத்த லாதிக்
காரியங்கள்
வேதியர்தங் கரும மாகுங்
கொற்றநெடு
வாளேந்திப் பகைவென் றிந்தக்
குவலயமுற்
றாள்கைமன்னர் கொள்கை யாகும்
விற்றல்கொள்ள
லாதியவை வணிகர்க் காகும்
வேளாண்மை
யமைச்சுரிமை விநய மாதி
நற்றகைச்சூத்
திரர்க்காகு மென்ன நாளுந்
நான்மறையா
தியநூல்கண் நவிலு மன்றே.
(7)
(ஆச்சிரமம்
நான்கு)
15. தனித்திரந்துண் டுத்தமச்சீர் மனைவி வேண்டித்
தவம்புரிதன்
மனைவியோடு சகத்தொ டொத்துத்
தொனித்தபெரும்
புகழ்த்தருமம் விளைத்தல் சற்றுந்
தொல்லுலகி
லாசையில்லாத் தோகை யோடுஞ்
சனித்திறவா
நலம்விரும்பித் தெய்வம் போற்றற்
றற்பரமொன்
றல்லாது சாற்ற லெல்லா
மனித்தமெனத்
துணிந்தேக லென்னு நான்கு
மாச்சிரம
மென்றுரைப்பா ரறிவுள் ளோரே.
(8)
16. குலதரும மாச்சிரம தரும மாதி
கோடாநு
கோடிமுன்னூல் கூற லெல்லாம்
நலமெனவே
யொப்பியதா லவற்றை வீணே
நாமிதனில்
விரிக்கவில்லை நான்கு சென்னி
மலரவனா
தியரெவ ரேயெனினுஞ் சீவ
வதையுரைத்தா
லதனைமட்டு மதிக்க வேண்டாம்
புலவர்பிரா
னாவதெண்ணிக் குதிரை கொல்லும்
புரவலரு
மறிஞருக்கோர் புழுவொப் பாரே.
(9)
17. எக்கருமஞ் செய்வதனை விலக்கி னாலு
மிறைவனைமுன்
னிடுமவற்றை யிகழப் போகா
தக்கரும
மேயுயிர்க்குத் துணைய தாகு
மாசார
மிரக்கமொப்ப தனைத்தும் வேண்டும்
மக்களுருக்
கொண்டலையும் மிருகம் போல்வார்
வழியல்லா
வழியினிற்போய் மாழ்கிச் சாவார்
தொக்கமுன்னாட்
டவமுடையார்க் கிந்த ஞாயம்
தோன்றுமற் றோர்க்கிதுவுமொரு
சொல்லா மன்றே.
(10)
18. ஓருயிருக் குடலனந்த மென்னுஞ் ஞாய
மொப்பாத
சமயத்தோ ருலகிற் சில்லோர்
வாருறுமென்
முலையாரைப் புணர்ந்து பெற்ற
மதலைகளே
பிறவியென வகுப்பார் சில்லோர்
சாருமனச்
சங்கற்பத் தொகுதி யெல்லாந்
தம்பிறப்பா
மென்பர்சில்லோர் தவத்தோர் மெச்சுஞ்
சீருலவாப்
பொதுநூல்வள் ளுவனார் தாமுஞ்
செனனமுண்டென்
றுரைத்தவுண்மை தெரியா தாரே.
(11)
19. கருமபலந் தனைப்பெரிதென் றொப்பா தாரே
கண்ணிழந்தோர்
முதலாய கடையோர் தாமும்
பெருமையுறு
மாதவத்தோ ராதி யோரும்
பேசுங்காற் சமமாமோ? பிரான்மேற்
குற்றம்
வருமெனவுங்
கருதாமல் வாதிக் கின்றீர்
வம்பாகு
மிதனைவிட்டு வாய்த்த மட்டுந்
தருமமொடு
தவம்புரியத் துணிமி னந்தோ
சமணர்புத்த
ராதியருந் தழுவ லீதே.
(12)
20. பாவமிஞ்சி நாய்நரிபுற் பூடா வோரும்
பழிக்கரிய
புண்ணியத்தாற் பரலோ கத்திற்
றேவர்களா
வாழ்வோரு மனித ராகச்
செனித்தலது
முத்தியினிற் சேரொண் ணாதற்
காவலரா
தியராகத் தோட்டி யீறாக்
கழறுகின்ற
மானிடரிற் கருணை கொண்டு
சேவலங்கைக்
குகன்முகங்க ளாகு மாறு
திருச்சமயத்
தொன்றினிற்போர் சீரி யோரே.
(13)
21. தந்தசுத்தி செயுங்கொம்பி னீள மாதி
சாற்றுகின்ற
நூல்களுண்டு சடம்போல் வார்க்கே
யந்தவிதி
வகையினிக்கும் மற்றை யோர்க
ளமைந்தமட்டிற்
செயலாகு மதனாற் றுன்பம்
வந்தடையா
திப்படியே யாகு மெல்லா
வகைக்குமெனத்
துணிவதுவு மடமை யாகு
மெந்தநெறிக்
குந்தம்மிற் பெரியோர் தம்மோ
டிணங்கிநடப்
பதுமிகவு மேற்றந் தானே.
(14)
22. தெய்வமுண்டென் றொப்புகின்ற சமய மெல்லாந்
தெளிந்தோர்க்குக்
கவுமாரச் சேர்க்கை யேயாம்
பொய்வழக்கென்
றெண்ணிவம்பி லிகழ வேண்டாம்
புவனகோ
டிகண்முழுதும் பொலியச் செய்த
மெய்வலிதோய்
பொருளுருவா நேர்வந் தாலும்
வியன்குருவென்
றேதன்னை விளம்பு மந்த
வைவடிவை
யதன்புதல்வ னென்கைக் கொப்பா
ரறிவினரன்
றெனன்ஞாய மாத லாலே.
(15)
23. சமயநிலை நிறுவவல்ல குரவர் தாமே
தற்பரன்சே
யென்பர்சிலர் சந்தா னப்பே
ரமையவருங்
குரவரையுஞ் சொல்வார் சில்லோ
ரண்டபிண்ட
சராசரங்க ளனைத்துஞ் சேயென்
றிமையவரிற்
சீரியமெஞ் ஞானத் தோர்க
ளியம்புவா
ரிவையுணரு மியற்கௌ மாரர்
தமையடுத்தோர்
செய்கருமத் துண்மைச் செல்வந்
தழைக்குமன்றித்
தவறொன்றுஞ் சார்ந்தி டாதே.
(16)
24. அண்டத்தின் றோட்டுருவஞ் சிலையே யாகு
மாதலாற்
குறிச்சியன்றி யகில மில்லைத்
தொண்டர்க்குள்
வேண்டியவா றுருவங் கொண்டு
தோன்றுதற்குங்
குகனலதோர் தெய்வ மில்லைக்
கண்டத்தோ
டகண்டமெனு மிரண்டுந் தேறுங்
கவுமாரச்
சித்தரிதைக் காண்பார் மற்ற
வண்டர்க்கோ
ரபிமானச் சொல்லாத் தோற்று
மறுத்தாலுஞ்
சத்தியந்தான் மாய்வு றாதே.
(17)
25. நல்லபரம் பொருளையொரு வடிவ மாக
நாடினன்றிப்
பிழைக்கரிய ஞாயந் தேர்ந்தோர்
எல்லவருங்
கல்லதனா லமைக்குந் தன்மை
யாரறியார்
மயிலுகைக்கு மெழிற்கு மாரன்
வல்லதிரு
வடிமலைதோ றாட லன்றோ
மயிர்பறித்து
நின்றுண்போர் வகுத்து நூலிற்
சொல்லலபி
மானமெனக் கூடுங் கொல்லோ
சுப்பிரமண்
ணியமெனுஞ்சொற் சோர்வ தன்றே.
(18)
26. கலையனைத்துங் கற்றபயன் றெய்வத் தன்பே
கடைப்பிடியென்
றுணர்வரிது கைக்கொண் டாலுந்
தலைமைதருஞ்
சித்தியோடு முத்தி வேண்டித்
தவம்புரிவ
தரிததனைச் சார்ந்திட் டாலு
மலைகடற்பார் மகட்குதவுந் தரும மொன்றே
யதிகமெனத்
தெரிவதரி ததுபெற் றாலுஞ்
சிலையதனா
லுருவகுக்குஞ் சமய மெல்லாஞ்
சேயினதென்
றோர்வரிதாந் தெளிந்துய் வீரே.
(19)
27. நரகசொர்க்க நிவிர்த்தியின்மை நவின்று பொல்லா
நாயுணவு
முண்ணுநெறி நண்ணு வாருங்
குரவனருட்
கமாரனெனக் கூறு கின்றார்
கோலமயி
லிறகையொரு குறியாக் கொண்டார்
சரவணன்சண்
முகமாய சமயத் தொன்றைச்
சார்ந்தசைவ
ராதியர்தாந் தணவப் போமோ
பரவுகவு
மாரநெறி யெளிதன் றந்தப்
பரம்பரையி
லறிந்தமட்டும் பகர்கின் றேனே.
(20)
28. சூரியனே பிரமமெனச் சொல்வ தொன்று
சுடர்மழுவான்
றெய்வமெனத் துதிப்ப தொன்று
வீரியச்சத்
தியைப்பொருளா மொழிவ தொன்று
விட்டுணுவே
தலைவனென விளம்ப லொன்று
சீரியக
ணேசனெனக் கூற லொன்று
செவ்வேற்கைச்
சேந்தனெனச் செப்ப லொன்றென்
றாரியநூற்
றலைவருணர் சமய பேத
மாறுமெங்கள்
கவுமாரத் தணித்தா மன்றே.
(21)
29. ஆலயத்திற் போய்வணங்கல் சால நன்றென்
றௌவைசொன்ன
மொழிப்படியே யளக்கொண் ணாத
சீலமலைத்
தொகையுளொன்றிற் குகனைப் போற்றித்
தெண்டனிட்டுத்
திருப்பணியுஞ் செய்து வேடர்
போலரிசி
யுடனுதிரம் பெய்யா ராகும்
புண்ணியர்க்குச்
சாலோகம் பொருந்து மிந்த
ஞாலமிசை
வாழ்பலரு முய்யு மாறு
நல்விரத
மாதியவை நவில்கின் றேனே.
(22)
30. மகப்பேறு மணஞ்சாவு முதல வாய
வகைகளுக்கும்
விதிகள்பல வகுத்தார் முன்னோ
ரகத்தோங்கும்
பொருளளவிற் செயலே நன்றா
மதுகிடக்க
நூலிழந்திட் டனங்க னம்பான்
மிகச்சோரு
மடநல்லார் களவிற் றோய்ந்து
மேவுகருப்
பங்கெடுக்கும் வினையை யெண்ணிற்
சகத்தோர்க
ளறியமற்றோர் கொழுநன் றன்னைச்
சார்ந்திருக்கச்
சொன்னமுறை தவறா காதே.
(23)
(கௌர
சமயம், சூரியன்)
31. பிரணவமந் திரந்தருப்பை பசுவின் சாணம்
பிழையென்னா
நெறியாறும் பேணத் தக்க
வரமுதலாஞ்
சூரியனைக் குறித்திட் டந்த
வாரமதிற்
பொங்கலிட்டு வணங்கிப் போற்றி
விரதமிருப்
போர்கருணை யுடையோ ராகின்
மேனியிடத்
துள்ளனவாம் வியாதி யெல்லாந்
திரமெனநில்
லாமலதன் கிரணங் கண்ட
சிறுபனிபோ
லோடுமிது திண்ணந் தானே.
(24)
(சூரியன்,
கௌமாரத் தொடர்பு)
32. காசிபன்றன் மனைவயிறிற் பிறந்த வாற்றாற்
கதிரவனுங்
குமாரனென்றே கருத லாகு
மாசியுடைத்
தங்கடவுட் கிடம தாமென்
றறுசமயத்
தோர்களுநன் கறைந்திட் டாலும்
வீசியநீர்ப்
பெருங்கடற்சூர் மதலை யந்நாள்
வென்றதற்காக்
கொன்றமுதல் வீர னன்பாற்
பேசியமெய்த்
தெய்வமெனத் தன்னைச் சொல்லிற்
பிணங்கிடானு
வகைமிகப் பெருகு வானே.
(25)
(வழிபாட்டு
நாள்)
33. சருவகரு மங்களுக்குஞ் சாட்சி யெந்தச்
சமயத்தோர்
களுமிகழாத் தனிச்சொ ரூபம்
பொருவின்மதி
யந்தனையுண் டுமிழ்ந்திட் டெல்லாப்
புவனசரா
சரமுமல்கப் புரியுஞ் சோதி
வருவனபன்
னிரண்டுவகைத் தெருவென் றாலும்
வயமாவின்
விதியதன் வசத்த தாமான்
மருவுமந்த
மாதத்திற் றோற்று முன்னை
வாரமட்டி
லேனுமதை வணங்க னன்றே.
(26)
34. சகளமொடு நிட்களமுஞ் சொல்ப வாய
சதுர்வேத
சித்தாந்தச் சமயத் தோர்க்குண்
மகரசங்க
ராந்தியமா வாசை யென்ன
வழங்குமிரு
விரதத்தின் வண்மை யெங்குந்
திகழ்பரிதிக்
கேயாகு மந்தத் தெய்வத்
திருவருளாற்
றியாகிகளிற் சிறந்தோ னென்னப்
புகல்பெருமைக்
கன்னன்வந்தான் றிவாகரப் பேர்ப்
புலவன்வந்தோ
ரிலக்கியநூல் புதுக்கி னானே.
(27)
சைவம்
– சிவன் – கௌமார சம்பந்தம்
35. சத்திதரு சினைமூன்று ளொன்றில் வெள்ளைச்
சரசுவதி
யுடனுதித்த சம்பு வான
நித்தியனுங்
குமாரனெனச் சொல்ல லாகும்
நெடுங்கயிலைத்
தடங்குவட்டி னிலைத்து வாழ்வான்
பத்தினியும்
மலைமகளே வில்லுஞ் செம்பொற்
பருப்பதமே
யயன்றிருமால் பகைத்த நாளின்
மத்தியிற்போய்
மலையுருவ மாயு நின்றான்
வல்லாளன்
மனைமுலைப்பான் மாந்தி னானே.
(28)
(சைவம்
– சிவன் - கௌமார விரதம் சிறப்பு நாள்)
36. வெங்கணர வனையசின வேட னாகி
வில்விசய
னொடுபொருத விமல னுக்குத்
திங்களெனுங்
கிழமையினிற் பிரதோ டத்திற்
சீர்த்தவிர
தாதிமிகச் செய்வோர்க் கெல்லா
மங்களகோ
லாகலங்க ளனந்த முண்டாம்
மாதவஞ்செய்
வார்மனம்போல் வரங்க ணல்குந்
துங்கமுறு
தெய்வமவ னன்றி யில்லைத்
துலங்குபுரா
ணங்கண்முற்றுஞ் சொல்லு மன்றே.
(29)
(சாத்தேயம்
– சத்தி – கௌமாரி)
37. தக்கனிம வான்முதலோர் மனைக டோறுந்
தனயளென
வளர்ந்தபரா சத்தி தன்னை
மிக்ககவு
மாரியெனச் சொல்வ தன்றி
வேல்வடிவு
மவளெனவே விளம்ப லுண்டு
சிக்கமயி
லேயனைய சாயற் காரி
சிகரிநிகர்
முலையுடையாள் சீவர்க் கெல்லாம்
மைக்கருங்கண்
மாதாவாய் மனைவி யாகி
மகளென்றும்
விளையாடும் வண்மை யாளே.
(30)
38. தோற்றுகின்ற வடிவமுற்று மவள தாகுஞ்
சொல்லிறந்த
பொருளுமவள் சொந்த மேயாங்
கூற்றுதைத்தோ
னாதியரு முன்னா ளீன்ற
குமாரரென்றா
லவள்பெருமை கூறப் போமோ
போற்றுநர்க்குச்
சித்தியொடு முத்தி நல்கும்
புகழுடையாள்
செவ்வாய்நாட் பூசை கொள்வாள்
சாற்றுகன்னி
ரவியினவ ராத்தி ரிக்கட்
சகலலோக
மும்வணங்கத் தழைப்பா ளன்றே.
(31)
39. முழுமதியந் தோற்றுமெழிற் பருவ நாளின்
முனிவர்களுஞ்
சித்தர்களு முந்நீர் சூழும்
விழுமியபே
ருலகினிற்பல் பெரியோர் தாமும்
விதிமுறையிற்
பூசிப்பார் வீணர் சில்லோர்
கழுகருந்து
மாமிசமு மீனர் வேண்டுங்
கள்ளர்க்கும்
படைத்தறிவிற் கடைய ராவார்
பழுதில்புகழ்க்
கொங்கணன்சங் கரனே போலும்
பக்குவச்சாத்
தேயரிதன் பயனோர் வாரே.
(32)
(வைணவம்,
விட்டுணு, கௌமார இயல்பு)
40. பண்டுதித்த முட்டைகளி லொன்றே யான
பச்சையினிற்
பரையோடு பரிந்து தோன்றும்
விண்டுவையுங்
குமாரனென்றே வல்லோர் சொல்வார்
மேதியினிற்
பலவாறு மேவி மேவிக்
கண்டுறழ்சொற்
றாய்முலைப்பா லுண்டு பொல்லாக்
களையனையார்
வேர்களைந்து கருணை சாலுந்
தொண்டுடையார்க்
கினியநல முழுதுஞ் செய்யுந்
தொழிலுமவன்
றன்னதென்கை துணிவா மன்றே.
(33)
41. இரணியன்சேய் சடகோப னாதி யோர்போன்
றெட்டெழுத்தி
னதுபெருமை யாவுந் தேர்ந்தோர்
கரணமதில்
வேறுதெய்வந் தோற்றி டாது
கவுரவர்தம்
போர்க்களத்திற் கலபஞ் சூடிச்
சரணிரண்டுஞ்
செவிப்புறத்திற் றாங்கிப் பார்த்தன்
றனக்குநெடு
மாலுரைத்த சரதந் தேர்வார்
மரணமுற்றுப்
பிறந்துழலும் வினையுள் ளோர்கள்
வயிணவத்தும்
வெவ்வேறு வகைசொல் வாரே.
(34)
(வைணவம்,
விட்டுணு, கௌமார விரதநாள் சிறப்பு)
42. புந்தியெனுங் கோளினுக்கு மாலென் றோர்பேர்
புனைந்துபச்
சைநிறமெனவும் புகலக் கேட்டு
மந்திருமால்
விரதத்திற் கதனா ளாமென்
றறியாதா
ரிவ்வுலகி லனேக ருண்டு
பிந்தியசிற்
சிலர்முடவ னாளா மென்று
பேசலா
லவ்வழியிற் பிறழ்ந்து போனா
ரந்தியமாமது பொதுவாற்
சிறப்பெண் றெண்ணி
லதனிலுஞ்சற் றுண்டுபய னநுட்டிப் போர்க்கே.
(35)
43. நல்லேகா தசிவிரதம் பிடித்துப் பல்லோர்
நாரணனூர்க்
கதியடைந்தார் நான்சொல் வானேன்
வல்லேயொத்
திலங்குமுலை மச்ச கந்தை
மகனுரைத்துள்
ளானதன்றி வழங்க லுண்டு
கல்லோத்திண்
டோட்கனகன் மனைத்தூ ணூடும்
கலந்திருந்த
பொருணிலயங் கருதி டாராங்
கொல்லேதத்
தோரும்வயி ணவரியா மென்னக்
கூறிவெறி
நீர்குடித்துக் குதிப்பா ரன்றே.
(36)
காணாபத்தியம்,
கணபதி, கௌமாரத் தொடர்பு
44. ஆனையுருக் கொடுசிவனு முமையு’ஞ் சேர்கா
லதன்முகத்தோ
டுதித்தவனா மைந்து செங்கைக்
கோனையருட்
குமாரனெனக் கூறொண் ணாதோ
குவலயத்து
மணமுடிக்குங் கொள்கை யூடு
மேனையசாக்
காட்டபரக் கிரியை யூடு
மிலங்குகின்ற
தெய்வமவ னின்றி யுண்டோ
மானைவென்ற
விழிவலவை யோடு போற்றி
வரம்பெற்றோர்
கதைமுழுதும் வகுக்கொண் ணாதே.
(37)
காணாபத்தியம்,
கணபதி, கௌமார விரதநாள் சிறப்பு வழிபாடு
45. தனைநினைவார் செய்தொழிலிற் றடையூ றொன்றுஞ்
சாராமற் புரந்தருளும் தந்திக் கோமான்
பனைநிகர்கை
யாலொருபா வல்லாள் வெள்ளிப்
பருப்பதத்திற்
சேரவிடல் படியுஞ் சொல்லு
மனையவனைக்
குருவாரஞ் சதுர்த்தி நாளி
லாராதித்
திடலாகு மவலெள் ளுண்டை
நனையரிசி
பயிறுவடை தோசை யாதி
நல்லுணவெல்
லாமருந்து நசையுள் ளோனே.
(38)
கௌமாரம்,
குமாரன், முருகன்
46. ஆறாநா ளாயவெள்ளி வாரஞ் சட்டி
யாரனா
ளாமவற்றி லபிமா னிக்கும்
வீறாருங்
கவுமார சமயத் தோர்கள்
வேறுநெறி
யோர்கடம்மை விரும்பு வாரேற்
சீறாம
லுறவாடிக் கலந்து கொள்வார்
சினந்திகழத்
துணிவாரேற் செங்கை வேலாற்
கூறாடிக்
கொக்கரித்து வென்றிச் சேவற்
கொடியேற்றிக்
களிகூருங் கொள்கை யோரே.
(39)
47. சூரனைக்கொல் வதனிமித்தஞ் சிவனார் கண்ணிற்
றோன்றினான்
குமாரனெனச் சொல்லும் மார்க்கத்
தீரமுற்றுப்
பாடுபடு மிளங்கௌ மாரர்க்
கியல்பான
கவுமார மிலங்கி டாது
நாரணனா
தியர்த்தொழு முட்சமயத் தோர்க்கு
நஞ்சனைய
ராய்த்திகழ்வார் ஞாலந் தன்னி
லாரணநூல்
சொலுமாறு சமயத் தொன்றென்
றறைவதனுக்
கந்நெறியே யழகா மன்றே.
(40)
48. நவவீரர் ஆதியராம் பரிவா ரங்க
ணவிலரிய
பலவாறு நண்ணிச் சொல்வார்
தவராச
னானவகத் தியனும் முக்கட்
சங்கரனும்
பரவுகுரு சாமி யென்பார்
சிவபாத
விருதயன்றன் மதலை யாகித்
திருட்டமணர்
கழுவேறச் செய்தோ னென்பா
ருவராழி
நீர்சுவற வடிவே லேவு
முக்கிரபாண்
டியனென்று முரைசெய் வாரே.
(41)
49. மயிலொன்றுந் தகரொன்றும் வேழ மொன்றும்
வாகனங்க
ளாயமைந்த வல்லோ னென்பார்
குயிலென்ற
குறமகட்கும் விண்ணூர்த் தெய்வ
குஞ்சரிக்குங்
கணவனென்பார் குன்றந் தோறு
மயிலும்பல்
படைகளுங்கொண் டாடல் செய்யு
மாறுமுகக்
கடவுளென்பா ரறிஞர் முன்னாள்
பயில்கின்ற
சாத்திரபு ராணத் துள்ள
பலகதையு
நண்ணிமிகப் பகர்வா ரன்றே.
(42)
50. சம்பந்த மூர்த்தியினைக் குமர னென்னச்
சைவசமயத்
திலுள்ளார் சாற்று வார்கள்
கம்பங்கைத்
திருநெடுமால் சமயத் தோருங்
கனதிருவாய்
மொழிப்புலமைக் கவிஞன் றன்னை
வெம்பஞ்ச
பாணமுடைக் குமாரன் மாலை
விரும்பியணிந்
தானெனவே விளம்பு வாராற்
றம்பந்த
மறுப்போனே குமார னென்னச்
சாற்றுகின்றோர்
கவுமாரத் தவரா வாரே.
(43)
51. ஆறுசமயத் தோருள் வயிண வன்றா
னணிவதுமண்
சாத்தேய மதனிற் பாதிக்
கூறுடையான்
குங்குமமா மற்றை யோர்கள்
கொள்ளுவது
வெண்ணீறே குருவை நம்பித்
தேறுகவு
மாரனிவை யாவுந் தோற்றுந்
திருவேடம்
புனைவதற்குஞ் சிறிதும் நாணான்
மாறுபடும்
புலைச்சமயத் துள்ள மாந்தர்
மரையினம்போற்
குறியிலது வாழ்வா ரன்றே.
(44)
52. கருமமள விறந்தவித மாமென் றாலுங்
காரணபூ ரணனான கடவு ளுண்மைத்
திருவருட்காச் செய்வதொன்றே நன்மை
யாகுந்
தெரிந்தமட்டி லொருவாறு செப்பு கின்றேன்
பொருவிலவா மாறுவகைச் சமயங் கட்கும்
பொதுவேநா னென்றாலும் புவியோ ரொப்பார்
குருபரமென் றுணர்த்துகவு மாரந்
தொட்டே
குறிகண்டே னபிமானக் குணமு முண்டே.
(45)
53. ஒருசமய நிலையினின்று சாதித் தப்பா
லூறுதவிர் சமரசத்தி லுறுதன் மேலொர்
பெருநெறியா மதுசேர்சங் கரனை முன்னாள்
பேணியசாத் தேயனெனப் பேசு வாருண்
டருண்லந்தோ யப்பைய னரங்கந் தன்னி
லதீதவுண்மை பெற்றவிதம் மறையும் போது
தருணமதிச் சடையான்மேல் வாஞ்சை கொஞ்சந்
தழைத்ததென்றா னவைகருதிற் சரதந் தானே.
(46)
54. கொன்றுநிணந் தின்னுமிழி வில்லா ரெந்தக்
கொள்கையோ ரானாலுங் குமரன் றன்பா
லொன்றுநரே யெனத்தழுவிப் பொதுவா
மென்னை
யொருசமயத் தபிமான முளானென் றாலும்
நன்றுநன்றென் றொப்புகின்றே னன்றென்
றோதன்
ஞாயமல்ல வாதலினான் ஞால முற்று
முன்றுலங்கச் செய்தளித்துத் தொடைக்குந்
தெய்வ
முழுதுணர்ந்த புலவனெனின் முனிவா ரின்றே.
(47)
55. மேலவருக் கிறைவனாந் தெய்வ மன்றி
வேறுதெய்வ மில்லையதே விழைவா ரெண்ணம்
போலனந்தம் வடிவெடுத்துச் சமயங்
கோடி
புதலத்தில் வாழவைக்கும் புண்ணா நொந்து
காலனிக ரையமுற்றுச் சுழல வேண்டாங்
கடையாய கருமிகட்குக் கழறி னாலுஞ்
சீலமறைத் துணிவிதெனத் தேற மாட்டார்
தெண்டனிட்டு வழிபாடுஞ் செய்தி டாரே.
(48)
56. யானருணைக் கோபுரத்தி லிசைத்த தாமா
றெழுத்தலங்கா ரத்தினுக்கு ளியங்கு கின்ற
வானபல மந்திரத்து ளொன்றைப் பற்றி
யதன்வழியே முயன்றிருத்த லழகா மன்றித்
தியானவநு பூதியென்றோர் நூல்சொற்
றுள்ளேன்
றீவிரபக் குவர்க்கதொரு திருக்கண் கண்டீர்
மானமின்றிப் பலநூலும் பார்த்துப்
பார்த்து
வாணாளை வீணாளா மாய்க்கொண் ணாதே.
(49)
57. வேதமுடி வானவுப நிடதத் துண்மை
விளம்புமட்டுங் கற்றுணர்ந்தோர் மேன்மை யெண்ணில்
வாதமறா வொருசமயத் தினரே யொப்போர்
மந்திரசித் துள்ளான்றன் வண்மைக் கொவ்வா
தீதகிலத் தோரறியா ரிந்த மட்டு
மியம்பியது பொதுக்கரும மினிமேற் சொல்லல்
பூதலத்தோர் களுங்காணுஞ் சிறப்ப
தாகப்
பொருளுதவி யாற்புரியும் பூசை தானே.
(50)
சிறப்பியல்
: வழிபாடு
58. மானதத்தாற் பூசித்த லுயர்ச்சி யென்றோர்
வாய்பாடிவ் வுலகத்தில் வழங்க லுண்டு
தானருந்தல் பொருந்தலுமவ் வாறே செய்யத்
தக்கவர்க்கே யம்முறையாந் தன்னாற் செய்தற்
கானநிவே தனம்தூபந் தீப மாதி
யகத்தினாற் செய்தல்வஞ்ச மன்றோ முன்னோ
ரேனறிந்த தெய்வத்தின் வடிவந் தானு
மியற்றிவழி படச்சொன்னா ரெண்ணி டீரே.
(51)
வடிவம்
அமைக்கும் விதம்
59. தங்கத்தால் வெள்ளியினாற் செம்பாற் கல்லாற்
றாருவினால் சாந்தினாற் சித்தி ரத்தா
லங்கத்திற் குறைவின்றி விரும்புந்
தெய்வத்
தணிவடிவஞ் சமைத்திறைஞ்ச லாகுந் தன்னிற்
பொங்கத்த தாகின்மிக நன்றாந் தன்னைப்
போல்வதுமாங் குறைவுபடல் பூலோ கத்துஞ்
சங்கற்பம் போல்விளங்க விரும்பு
வார்க்குத்
தகுதியல்லப் பயனுண்டு தவறா காதே.
(52)
60. செம்புருவிற் புளியிடல்போல் வெள்ளி பொன்னிற்
செய்தவற்றிற் கிட்டாலும் தீதா காது
வம்புறுமெட் டயிலமம்மூன் றினுக்கு
மாகா
வண்சிலைக்கு மிகவுமது வார்க்க வேண்டு
நம்புமர மாதிகட்கு நனைவா காது
நானிலத்து வழக்கமிது ஞானம் போலுந்
தெம்புடையார் தெய்வனிறைந் தமையோ
ராமற்
றிருவுருவைப் போற்றலெண்ணிச் சிரிப்பா ரன்றே.
(53)
61. மதுரையிற்கல் லாடருக்காத் தலைய சைத்தல்
வண்டமிழ்ச்செந் தூர்த்தெருவில் வழுத்துந்
தொண்ட
னதுமுகமாத் திரும்பல்கச்சி யூரிற்
செட்டி
யானந்த முறப்பேச லழுத பாலன்
குதுகுலிக்கச் சோறுண்டல் புலியூர்
மன்றிற்
குருநமசி வாயருக்காக் குதித்த லாதிப்
புதுமைபல விக்கிரகத் தெய்வஞ் செய்தற்
பொய்யென்பா ரெரிநரகிற் புகுவா ரன்றே.
(54)
62. யாவும்வல்ல தெய்விடத்தும் நிறைந்த தாகு
மிணையில்பரம் பொருளெனுஞ்சொ லிசைத்துஞ் சில்லோர்
தேவுடைமை யென்றமைத்துப் பலர்கொண்
டாடுந்
திருவுருவைப்
பழிப்பதெண்ணித் தியங்கொண் ணாது
நாவுரை போனடத்தன் முதலெப் பேறும்
நல்குமெனத் துணித்துமிக நண்ண வேண்டும்
பூலகி லாண்டானைப் பூலி தன்னைப்
போன்றபல சாட்சியுண்டு புகலுங் காலே.
(55)
63. ஆதலினால் விக்கிரக பூசை மார்க்க
மரன்விதித்த வாகமங்க ளறையு மேனும்
வேதவிதி போலவையு மறைவே யாமால்
வேண்டியமட் டொருவாறு விளம்பு கின்றேன்
பூதசுத்தி பொருட்சுத்தி யெனுமி
ரண்டும்
புத்திசுத்தி யோடுமிகப் பொருந்த வேண்டு
மோதரிய பொருளினதாக் கைகா லாட்ட
லொருங்குநமக் காகாதென் றொழிக்க லாமே.
(56)
64. மஞ்சள்வெட்டி வேராதி கலந்த தெண்ணீர்
மதுவிளநீர் பாறயிர்பல் வகைப்ப ழத்திற்
பஞ்சதாரை யைக்கலந்த தரைத்த சாந்தம்
பரிந்தாட்டி மூர்த்திகடம் பரிசுக் கேற்ப
மிஞ்சலங் கரித்துமலர் மாலை சாத்தி
விதித்தநிவே தனமமைத்து விரும்பு மன்பாற்
கஞ்சமலர்க் கரங்கொடுநீ ரிரைத்துத்
தூபம்
காட்டியப்பாற் றீபமிடல் கடனா மன்றே.
(57)
65. அபிடேகந் தோறும்நிவே தனம்கற் பூர
மமைத்தாலு மந்தந்த மந்தி ரத்தை
செபியாமற் றொழிலளவிற் செய்கு வோர்க்குச்
சித்தியில்லை பூசிக்குந் தினங்க டோறுங்
கபிலாதி தானங்க ணல்க லாகுங்
கருணையின்றிச் செயலசுர கரும மேயாஞ்
சபியாத சாந்தகுணத் தினரா னாலுஞ்
சத்தியமொன் றில்லையென்றாற் றவறுண் டாமே.
(58)
66. ஆலயங்கள் மந்திரங்க ளமைக்குந் தன்மை
யத்தனையுஞ் சிற்பமுத லான நூல்கள்
சாலநுவன் றிடுமவற்றைக் கொள்ள லாகுந்
தகராதி கொலச்சொல்லற் றழுவொண் ணாது
சீலமுறு மெசமானன் விருப்பம் போலச்
செய்மினென்றந் நூன்முடிவிற் செப்ப லன்றி
மூலபர மானந்தத் தெய்வந் தானும்
முன்னியவாற் றிற்கிசையும் முறையொன் றுண்டே.
(59)
67. எந்திரத்தை யேமூர்த்தி வடிவ மாக்கொண்
டேத்துகின்ற மார்க்கமொன்றுண் டியல்பென் றாலு
மந்திரத்தி னெழுத்ததனி லமைந்தா
னன்றா
மாறுபட்டு மெழுதலுண்டு வண்மை யல்ல
விந்திரனூர் வாழ்வநித்த மெனத்தே
றாதார்க்
கெவர்சொலினும் பலதேவா யிலங்குஞ் செய்யுந்
தந்திரத்தை யேபொருளா மதிக்குந்
தன்மை
தவத்தினருக் காகாது சகத்தோர்க் காமே.
(60)
68. சக்கரந்தோய் தருதகட்டின் பெருமை யெண்ணிற்
றாவரமூர்த் திக்குமன்ன சரமூர்த் திக்கு
முக்கண்ணுடைக் காய்சுமக்குங் கும்பங்
கட்கு
மூர்த்திகர முண்டாக்கு முதன்மைத் தாகு
மிக்கதிரு நீற்றினைவெள் ளிலையில்
வைத்து
விதிப்படியே வரைந்தரிசி மிசைவைத் தப்பாற்
றக்ககும்ப மதன்மேல்வைத் தார தித்துத்
தகட்டில்விட்டால் மகிமையதிற் சாரு மன்றே.
(61)
சூரிய
பூசைக்கு யந்திர, மந்திரம் கூறல்
69. சூரியனைக் குருவடிவாப் புவியிற் கண்டு
தொடக்கறுக்க வேண்டுமெனிற் சொன்னத் தேனுஞ்
சீரியதாம் பிரத்தேனும் விருத்த
மாகச்
செய்தகட்டிற் பிரணவத்தைத் திருந்தக் கீறி
யாரியத்தா மென்றுள்ளிட் டிரண்டுங்
கூட்டி
யாதித்தா யநமவென வறைந்து பூசித்
தீரியல்பும் பெறலாகுந் குந்தி யாதி
யெண்ணில்பலர் பெற்றனர்வம்பெனக்கூ டாதே.
(62)
சிவ
வழிபாட்டுக்கு யந்திர மந்திரம் கூறல்
70. சமனைவென்ற சிவன்வடிவங் காண வேண்டிற்
சக்கரமை யைந்தறையாச் சமைத்துச் சூல
மமையவிட்டுச் சிவயந மென்னச் சொல்லும்
மைந்தெழுத்தை நடுத்தொட்டே யடுக்கா மாறி
யிமையவரும் போற்றுபிர ணவத்தாற் கட்டி
யிதைமுதற்கொண் டவைசெபித்திட் டிறைஞ்ச லாகுங்
கமலவட்டம் பூபரங்க ளிடுவார் தாமுங்
காசினியி லுண்டிடினுங் கழிக்கொண் ணாதே.
(63)
சத்தி
பூசனைக்கு யந்திர மந்திரம் கூறல்
71. நல்லசத்தி யருள்வேண்டிப் பலவா றாக
நவின்றிடுஞ்சக் கரங்களெண்ணி நலிய வேண்டா
மெல்லனைய வட்டத்துண் முக்கோண சூல
மிசையவிட்டுள் ளவ்வுமுவ்வு மவ்வு மிட்டுச்
சொல்லரிய பிரணவத்தாற் கட்டி யோர்பேர்
தோய்தரவுச் சரித்துவழி படலே போதும்
புல்லர்களுக் குண்மைநிலை சரிப்ப
டாது
புகலரிய டம்பமெண்ணிப் புழுங்கு வாரே.
(64)
திருமால்
வழிபாட்டுக்கு யந்திர மந்திரம் கூறல்
72. உலகளிக்குந் திருநெடுமால் கருணை வேண்டி
லொருபிறைபோ லெழுதியதின் மம்மென் றிட்டுக்
குலவுபிர ணவமதனால் வளைத்தோர் நாமங்
கூட்டிவழி படலாமுன் கும்பிட் டுய்ந்தோர்
பலருரைத்த வண்ணமெட்டக் கரஞ்சொன்
னாலும்
பழுதில்லைச் சந்தேகப் படுதல் வேண்டாங்
கலகமிடு மரக்கரன்னார்க் கெமனே போலுங்
கருத்துடையா ரிதன்பெருமை காண்பா ரன்றே.
(65)
கணபதி
பூசைக்கு யந்திர மந்திரம் கூறல்
73. கட்டமுற்றுந் தவிர்த்தருள வல்ல ஞானக்
களிற்றருளே தஞ்சமெனக்
கருது வார்கள்
வட்டமிட்டுட் பிரணவமிட் டதனுட்
கம்மென்
மகத்தான பீசமிட்டு வழங்கு நாம
மிட்டமுறச் சேர்த்துரைத்து வணங்க
லாகு
மிதன்மகிமை யாரறிவா ரியம்பப் போமோ
மட்டவிழுங் கொன்றையந்தார்ச் சிவனும்
முன்னாள்
வழிபட்டே புரமெரியும் வகைசெய் தானே.
(66)
முருகன்
வழிபாட்டுக்கு யந்திர மந்திரம் கூறல்
74. ஈறுதவிர் குகனருட்சீர் விரும்பு வார்க்
காறெழுத்தலங் காரத்திடத் தீரிரு வகைத்தாக்
கூறுசடாக் கரத்திலொன்றை யறுகோ ணத்திற்
குறித்திசையச் சூலமிட்டுக் குகர மேனு
மூறுபடாச் சகரமா னாலு முள்ளிட்
டோங்காரத் தால்வளைத்தேழ் சுழியேழ் வீட்டு
மாறுபடா திட்டவற்றைப் பகர்ந்து
போற்றி
வழிபடலா மியாவுமொரு வட்டத் திட்டே.
(67)
சமயாதீதம்
குரு வழிபாடு
75. குருவடிவ மன்றியொரு தெய்வ மில்லைக்
கூறிடினு மவனுளத்தின் குறிப்பென் றோர்ந்து
திருவருளை நாடிநிற்குஞ் சமயா தீதச்
செல்வருக்கும் பூசையது சிறப்பே யாகுஞ்
சருவசடாக் கரமலது வேறொன் றாகா
சட்கோண மாயகில சராச ரங்கண்
மருவகண்ட மிருந்தவித மறிகின் றோர்க்கு
மாறுபடு நெறியொன்றும் வயங்கா தன்றே.
(68)
76. கற்புடைய மடவார்போ லொன்றே தெய்வங்
கருதுநர்க்கிம் முறைபோதுங் கலங்கி வாடு
மற்பமதி யாற்பலதே வுண்டென் றெண்ணி
யாராதித் தாலுநன்றே யறிவு முற்றிப்
பிற்படுநா ளந்தநிலை விளங்குங் காதற்
பெருக்கமுறுந் தெய்வமொன்றை நடுவில் வைத்துப்
பற்பலவா மற்றவற்றை முறைபோற் சூழப்
பரிவார மாயமைத்துப் பணிய லாமே.
(69)
77. சட்சமய நூல்களினும் பரமென் றோதுந்
தலையாய தெய்வங்க ளன்றிச் சார்பா
முட்சமயப் பரிவாரங் களையுங் கூட்டு
முணர்வினரு முண்டுதிக்குப் பால ரானை
கட்செவியா தியகருது வாரு முண்டு
கருத்திலுள்ள வாறேசக் கரத்திற் பீசம்
பட்சமுட னிடவேண்டு மில்லா விட்டாற்
பரிந்துசெயும் பூசைமுழுப் பயன்த ராதே.
(70)
78. இருமையுந்தந் தருளவல்ல தாமென் றெண்ணி
யேதேனு மொருதெய்வத் தினையே நாடி
யருமையுடன் பூசிக்கி லுருமிக் கேறு
மன்புண்டாஞ் சுதந்தரமுண் டாகு மன்றி
யொருமைபடு மானாலும் பருவ மில்லா
ரொப்பிடா ரன்னவருக் கோத லோரிற்
கருமயினேர் சாயலுடைத் தருணி ஞாயங்
கன்னியினுக் குணர்த்துகின்ற கதையா மன்றே.
(71)
79. வாரத்திற் பட்சத்தின் மாதந் தன்னில்
வருடத்தி லொவ்வொருநாள் வகுத்த வண்ண
மீரத்தி னோடுவிர தாதி நோற்ற
லிருமூன்று சமயத்தோர்க் கியற்கை யாகுந்
தீரத்தால் வேதமுடி வுணர்ந்து ஞான
தேசிகன்பொற் பதத்தினிலை தெரிந்துஞ் சித்தி
வீரத்துக் காசையுற்றுக் கிரியை
செய்வோர்
விரதமுற்றா லொருநாளும் விலக்கொண் ணாதே.
(72)
80. கொல்லாத விரதமொன்றே மிகவு நல்ல
குணமான விரதமற்றுங் கூறு கின்ற
வெல்லாமு மதனையொக்கும் விரத மாகா
விருடியர்தம் மேற்பழியென் றியம்பிக் கொண்டு
பொல்லாதார் வேள்வியினுங் கள்ளு
மூனும்
புசித்தென்று மீடேறாப் புலைய ராவார்
நல்லார்தத் முயிரினுமிக் கினிய
வென்ன
நாடியுயி ரனைத்தினுக்கு நயம்செய் வாரே.
(73)
81. வேதமுத லாய்நன்னூ லொன்றுஞ் சொல்லா
வெறுநாம ரூபம்வைத்து
மேட மாதிக்
காதலொரு பூசையெனச் செய்வா ரெல்லாங்
கடையரே யவரினத்துங்
கடையா வாரை
யொதவெனத் துணிந்துநன்குற் றுணரி
லெந்த
வுலகமுமெய்ப் பிரமமென
வுரைக்கு நூன்மேற்
பாதகஞ்சொற் றிந்திரனா தியர்க்கா
மென்னப்
பகர்ந்தூன்வெந் தருந்துகின்ற
பாவி யோரே.
(74)
82. காசினியின் மானிடராய்ப் பிறந்தோ ருய்யக்
கருதிமுயல் கின்றனவாங் கரும பேதத்
தேசிலது பூசையைப்போ லொன்று மில்லை
யிழிவுயிர் கொன்றருந்திடல்போலி யாது மில்லை
கோசிகன்முன் னொருமதலை வேள்வி முன்பிற்
கொலைப்படா தளித்தவிதங் கூறக் கேட்டுந்
தேசிகன்றன் னருள்பெற்றோ ரெவரா னாலுஞ்
செய்யவொண்ணா தென்றதனைத் தீர்த்தி லாரே.
(75)
83. ஓருயிர்க்குந் தீங்கியற்ற வொண்ணா தென்னு
முணர்வுள்ளா னெவனெனினு முஞற்றுங் கன்மஞ்
சீருடைத்தே யெனத்துணிந்து கொள்ள
லாகுஞ்
செப்புமதொன் றில்லாதான் றேவ னேனும்
பாருலகிற் பசுமேட மாதி யாகப்
பைம்புலுண்ணு மரையினுங்கீழ்ப் படுவா னென்ன
யாருமறி தரத்துணிவுற் றெள்ள லாகு
மிவ்விதத்திற் கிசையாதா ரீனர் தாமே.
(76)
வேள்வியில்
கொலை, ஊன் உணவு தகாதெனல்
84. பாரதியாள் கொண்கனருட் புதல்வ னென்று
பலவுலகும் போற்றிசைக்கும் பரிசுற் றோனா
நாரதன்செய் வேள்வியிலோ ராடு தோன்றி
நாகநாட் டினர்நடுங்க நடக்கு மந்நாள்
வீரவடி வேற்குமரன் புரந்த வாறு
வியாசமுனி யுரைத்திருந்தும் வீணர் சில்லோர்
மாரன்விழா நலங்கருதிக் கொன்றூ னுண்டு
மகம்செய்வா ரிதுபோலும் வம்பொன் றின்றே.
(77)
85. கொலைமகநிட் காமியமாச் செய்து வீட்டுட்
குறுகலா மென்போருங் குரைக்கும் நாயூண்
மலைகட்குப் படைத்துமல ராகச் செய்தல்
வண்மையெனச் சொல்வாரு மலத்தைத் தெண்ணீ
ருலையினிற்பெய் தமுதாக்கிப் புசிக்கின்
றோருக்
கொப்பாவா ரெனத்துணிவுற் றொன்றுங் கொல்லா
நிலையினின்று தவம்புரிவா ரன்றித்
தெய்வ
நீணிலத்தோர்க் கில்லையிது நிசஞ்சொன் னேனே.
(78)
86. நால்வேதஞ் சொல்லுமெனக் கொன்றுண் ணாம
னானூறு கோடிமறை நவின்றிட் டாலு
மால்வேத னாதியரெல் லோரு நேரே
வந்துரைத்திட் டாலுமுயிர் வதைக்கொண் ணாதென்
றால்வேண்டும் பெருமானேர் வடிவத்
தோரா
யருந்தவஞ் செய்வார்கள்சில ரவர்க்கா ளாவோர்
சேல்வேலொப் பாயவிழி மடவா ரேனுந்
திரும்பரிய மெய்வீட்டிற் சேர்வா ரன்றே.
(79)
87. ஔவைதிரு வள்ளுவன்பட் டினத்துப் பிள்ளை
யாதியபல் பெரியோரு மார்க்குந் தோன்றச்
செவ்வையுறு நெறியருளே யெனப்பல வாறு
தெரிவித்துங் கொலைமுயன்றூன் றின்னும் பொல்லார்
கௌவைபடு மெனதுரையோர் பொருளா மென்னக்
காண்பாரோ யாவரையுங் கரும முன்னின்
றிவ்வையத் தசைக்குமெனு மொழிபொய்
யல்ல
யானிதுசொற் றிடலுமத னியல்பா மன்றே.
(80)
தீவினைப்
பயன் நுகர்ந்தே யாகுமென்பது
88. செய்தவினை செய்தாரைச் சேரு மென்று
சிவசமயத் தார்முதலோர் செப்ப லன்றிக்
கைதவராஞ் சமணர்களு
நண்டு தன்னைக்
காதலித்துக் கான்முறித்துத் தின்ற பாவ
மெய்தலுற்றாற் கையழுகுங் குறைநோய்
தோன்று
மெனத்தமது நூலிடத்தி லியம்பி னார்கள்
பொய்தவிராப் புலைச்சமயத் தினிலுள்
ளாரும்
புவியறிய வினையைநொந்து புலம்பு வாரே.
(81)
அந்தணர்
செய்ய வேண்டுவது
89. வேதியனோ ருயிர்க்குமிடர் செய்தி டாமல்
விதித்துளநற் கருமமுற்றும் விளைத்திட் டானேற்
றீதில்விண்ணூ ரிடத்தலொரு தேவ னாகிச்
சிரரம்பை யாதியரைச் சேர்ந்து வாழ்வா
னீதிமன்னர் தொழில்விரும்பிச் செய்தா
னேனு
நிலைக்கிழிவே மற்றிருவர் நெறியிற் சென்றான்
மாதிரத்தி லறிவினரா லிகழ்ச்சி யெய்தி
மறுமையினு நிரையமதின் மன்னு வானே.
(82)
செங்கோல்
மன்னன் சீர்த்தி
90. மாநிலத்தி லுள்ளவுயிர்த் தொகுதி யாவு
மகவினமா மெனக்கருது மனமும் வானோர்
தாநினைத்தற் கரியபெரு புகழுந் றோய்ந்து
தரணிமுழு தொருகுடைக்கீழ்த் தாங்குந் தன்மைக்
கோனிகழ்த்தற் கடங்காத பலபோ கங்கள்
குலகிரியின் பகைவனொடு கூடத் துய்த்தோர்
யோனியிற்புக் கவதரித்திட் டாலு
முத்தி
யுறுவதற்காம் படிமுயலு முரங்கொள் வானே.
(83)
கொடுங்கோல்
அரசன் நிலை
91. மன்னனெனப் பலர்கூடி வணங்கக் கண்டு
மகிழ்ந்திறுமாந் தறமுழுது மறந்து பார்மா
தின்னலுறத் தகுகொடுங்கோ னடத்து
கின்றோ
னெழுநான்கு கோடியென வியம்பத் தோன்றும்
புன்னரகிற் கொடிதாய வொன்றில் வீழ்ந்து
புவியொடுவா னுள்ளளவும் புலர்வா னோர்காற்
றுன்னகிலத் துருவாகி வந்திட் டாலுஞ்
சூகரத்திற் கடையாகிச் சுழல்வா னன்றே.
(84)
வணிகர்
மாண்பும் மறத்தின் தாழ்வும்
92. மட்டிபெரும் புகழுயர்வென் றுணர்ந்து கொள்ளும்
வணிகரெல்லா மளவையிற்போய் வாழ்ந்து மீள்வார்
கொட்டிவைத்த பொன்னிருந்துஞ் சிறிது
நல்காக்
குணத்தினரா யூதியமேற் குறிப்பு மீறி
வட்டியினிற் பலிசையிட்டு வழக்குப்
பேசி
மானமுளார் தமைக்கெடுத்து மகிழ்ச்சி கூறுஞ்
செட்டிகளெல் லாநிரையக் குழியில்
வீழ்ந்து
திரும்பாம லெந்நாளுந் தியங்கு வாரே.
(85)
வேளாளர்
தன்மையும் புன்மையும்
93. மழைவிரும்பிப் பயிர்விளைக்குங் குலத்தோர்
தம்மில்
வண்டமிப்பா வலர்முதலோர் மகிழ நல்கித்
தழைதருமெய்ப் புகழ்புனையத் தக்கோ
ரெல்லாஞ்
சந்ததமுஞ் சுவர்க்கதலந் தன்னில் வாழ்வார்
கழைமதனன் கன்னநெடு மால்கி ரீடி
காரியெனப் போற்றுநர்க்குங் கயவ ராகி
யுழைநிகர்கட் கணிகையர்க்கே யுதவும்
பொல்லா
ரொருநாளு நரசினைவிட் டொழியா ரன்றே.
(86)
மாதர்கள்
வண்மையும் வன்மையும்
94. கனியனைய செந்துவர்வாய் மடநல் லாரிற்
கணவனுரைப் படிநடக்குங் கற்பி னோரே
முனிவரினுந் தேவரினு மேன்மை யெய்தி
மூவுலகும் போற்றிசைக்கு மொய்ம்ப ராவா
ரனியருடன் கலந்தணையா ளெனினுங் கொண்க
னலமரப்பல வாறுதுய ரளிப்பா ளாகிற்
குனிதருமெல் லுடற்பாட்டி நூல்க
ளென்றுங்
கூறியவா றுள்ளபெருங் கூற்றன் னானே.
(87)
95. குலங்கடந்து திருவேடம் புனைந்தேற் றுண்டு
கூறரிய தவமுயலுங் கொள்கை யோரி
லிலங்குலகிற் குதவிசெய்கை விரும்பு
வோரே
யேற்றமவ ரேமுதல்வீட் டிடத்திற் சேர்வார்
கலங்கரிய கடலுடுத்தாள் வருந்தக்
காலி
கதறிடக்கொல் வார்மகிழக் கண்டிட் டாலும்
மலங்கலுறா மற்றனது நலமே வேண்டி
வருந்துவோ ரெதுபெறினும் வம்பா மன்றே.
(88)
மூர்த்தி
வணக்கத்தில் உயர்வும் தாழ்வும்
96. ஒருபரமே வளவிறந்த கோடி வண்ண
முருவெடுக்கு மெனுஞாய முணர்ந்திட் டாலுந்
திருவுருவ மத்தனையுஞ் சமமென் றெண்ணித்
தெண்டனிட்டுப் போற்றிசைத்துத் திரியொண் ணாது
குருவடிவ மாகவரு மேன்மை றோய்ந்து
கொல்லாத பூசைகொள்ளுங் கொள்கைத் தாகும்
பெருமகிமைத் தெய்வமுற்று நலமா மென்னப்
பேணலா மற்றவற்றாற் பிழையுண் டாமே.
மற்றவற்றால், கொலை புலை உடைய கோயில்.
(89)
முன்னைய
வினைப்பயனின்றன்மை
97. நன்மைமலி சிலர்தீமை நுகரக் கண்டு
நானிலமுற் றீன்றளித்து நசியச் செய்யும்
வன்மையுறு தெய்வமிலை யென்ப ரந்தோ
வரகரிசி நிறைந்திருக்கு மனையில் வாழ்வோன்
னென்மிகவும் பயிர்செயினு முணவ தன்றி
நிகழ்த்துமிது கொளப்போமோ? நிறைநா ளானாற்
பின்மகிழ்ந்துண் டிடற்காகு மென்ப
தோரார்
பிறிதினுக்கு மிதுசாட்சி பேசுங் காலே.
(90)
நல்வினை,
தீவினை, தவம் இவையெனல்
98. நல்வினையால் வரும்பயனிற் பெரிது கல்வி
ஞானமெனு மவைதாமே நணுகொண் ணாத
பொல்வினையா லுறுந்துயரிற் கொடிது
நோயும்
புன்மிடியு மேயருளில் பொய்யர்க் காகா
வல்வினையாந் தவம்தருமூ தியமெண்
சித்து
மாறியினிப் பிறவாத வாழ்வு மேயாஞ்
சொல்வினைமூன் றினுக்குமொரு துணைதன்
சிந்தைத்
துணிவென்றே யறிவறிந்தோர் சொற்று ளாரே.
(91)
99. நன்றனைத்துந் தந்தலைமேற் சுமத்திக் கொண்டு
நவைமுழுது மவனதென நவில்வார் சில்லோர்
கொன்றருந்த லாதியதம் வினையென் றொப்பிக்
குணமுழுது மவனதெனக் கூறல் வேண்டு
மென்றறைவார் சிலர்செயன்முற் றெமதே
யாமென்
றிசைப்பர்சிலர் சிலரேனை யென்றே சொல்வா
ரொன்றறமற் றொன்றுபிழை யென்றால்
வாத
முடனுண்டாம் பக்குவமொத் தொளிரு மன்றே.
(92)
100. மாந்தருக்கோர் கண்கண்ட தெய்வம் போன்று
மனுநீதி முறைநடத்து மன்ன ராவார்
தாந்தரையிற் பிழையணுகா வண்ணங் காக்குந்
தன்மைபோ லவர்கோன்மை தவறு மாகி
லாய்ந்தமறைத் துணிவதனாற் றவஞ்செய்
துண்மை
யருளடைந்த பெரியோர்க ளறங்க ளோதிச்
சாந்தகுணத் தாற்றிருத்தி லிசையா
ராகிற்
றண்டத்தாற் சீர்படுத்த றருமந் தானே.
(93)
101. இவ்வுவலகத் திடைநடக்கு நன்மை தீமைக்
கியன்றமுதற் காரணந்தா னீச னப்பால்
வௌவுபெருந் தவசியப்பா லரைய னப்பான்
மாந்தரெனச் சொலலாகு மதியில் லாதார்
தெவ்வுடல்கீன் றவிர்வேல்வேந் தனையன்
னோற்குந்
திடுக்கமுறு மன்பதையைச் செப்பு வார்க
ளெவ்வுலகத் தினுநிறைவுற்றி யாவுந்
தானா
யாதிடத்துந் தோயாம லிலங்க லொன்றே.
(94)
102. கோரவன்கட் புலியனைய கொடுங்கோன் மன்னன்
குவலயத்தைத் துயர்ப்படுத்தக் கொன்றூ னுண்ணு
நீரவரே கொக்கரிக்குங் காலம் வந்து
நேர்ந்ததென்றாற் சகிப்பரிதா நெடுமூச் செய்தி
யீரமுள்ளார்க் கவர்மனம்போற் கருணை
செய்யு
மெம்பிரான் றனைத்துணிவுற் றிகழ்தற் கஞ்சா
வீரர்களைச் சிறியவரென் றெண்ணொ ணாது
விளம்பரிதா நலங்கருது மேன்மை யோரே.
(95)
103. ஆனிளங்கன் றாதியவு மருந்தும் பொல்லா
ரரணழித்துத் தருசிறைகொண் டறத்தைப் போக்கி
நானிலமெல் லாங்கவரு நாள்வந் தாலு
நன்மழைகாண் பரிதாய நவையுற் றாலு
வானிடத்தும் பூதலத்தும் பிலத்து
மெங்கு
மருவியென்று மழியாது வாழு முண்மைக்
கோனிருக்கின் றானெனவே நம்பு மன்பர்
குழுவினது பெருமையவன் கூறற் பாற்றே.
(96)
104. வாதியெனப் பலர்கூடித் தருக்கஞ் செய்வார்
வங்கமெனு பெயருரைத்தான் மயங்கிச் சோர்வார்
நீதியுறு யோகியெனப் பல்லோர் சொல்வார்
நிசரூபம் வேறெடுத்து நிலவ மாட்டார்
தீதில்பர ஞானியெனப் பேசிக் கொள்வார்
செகத்தினுக்கா முதவிசற்றுஞ் செய்தற் காகார்
வீதிதொறும் வீரரெனத் திரிவார் செங்கோல்
வேந்தன்விடுஞ் சிற்றாட்கும் வெருள்வா ரன்றே.
(97)
105. பழிபாவ மெனுமிரண்டுந் றோய்வு றாத
பண்பினதாய்ச் சிறந்தோர்முன் பழகப் பெற்ற
தொழிலியாவுந் துணிந்துசெய்யத் தகுமென்
றாலுஞ்
சூத்திரனோர் வனத்தினிடை சூழ்ந்து செய்த
வழிபாடு கெடவாளா லிராமன் கொல்லும்
வம்பனைய வாமவற்றில் மருவொண் ணாதா
லழியாத பேரறிவிற் சீரி யோரை
யடுத்தவர்சொற் படிமுயல்கை யழகா மன்றே.
(98)
106. பலவிதமாப் பல்கலையிற் பகரு நூலின்
பயன்முழுதும் பகுத்தறியிற் பழுதி லாத
புலமையுடைப் பெரியோர்தம் பதத்திற்
காளாய்ப்
புகன்றபடி வினவியுய்யப் புகுதன் மேலா
மலநிகளந் துகளடையச் செகுத்தோ னான
வசிட்டனுமிப் படியுரைத்தான் மலரோ னாதிச்
சிலருரைத்திட் டாலுமுயிர் செகுத்த
லொன்றுஞ்
செயக்கூடா தெனத்துணிவோர் தெளிவுள் ளாரே.
(99)
107. உடலிடத்திற் பரிசுத்த வெண்ணீ றாதி
யுரைபிறழாத் தகைவாக்கி லொழியா வுண்மைத்
திடமனத்தி லுள்ளவரெத் தொழில்செய்
தாலுஞ்
சீரியதே யாகுமெனச் செப்ப லாகுங்
கடலனைய கருமமுற்று மிதனுட் டீருங்
காசினியெல் லாம்படைத்துக் காத்துப் போக்கு
மடலுடையான் பத்தியுபா சனையின் சீல
மவனருளா லறிந்தமட்டி லறைகு வேனே.
(100)
முற்றிற்று.
கரும
காண்ட முற்றிற்று.
தெய்வமே
துணை.
இரண்டாவது
பக்தி
காண்டம்
உபாசனைக்கு
உருவ நாட்டம் உயர்வெனல்
108. பத்தியென்கை தெளிந்தவுபா சனையே யாகும்
பாருலகி லுள்ளபல தீர்த்த மாட
றுத்தியஞ்சேர்
கோயிலெங்கும் வணங்கி யேன்ற
தொண்டுசெய்த லாதியவர்ச் சொல்வார் சில்லோர்
சிந்திநல்க மாட்டாது சமய வாதந்
தீர்ந்துகளி கூருவண்ணந் தெளிவி யாது
முத்தியெவ்வா றுதவுமவை கரும மேயான்
முன்னுரைத்த காண்டமதின் முறையா மன்றே.
(1)
109. கருமபலஞ் சித்திதரு மெனமுந் நூல்கள்
கழறுவது முண்டெனினுங் கருதிச் செய்யுந்
தருமமொடு பாவங்கண் முழுது மோர்ந்து
தக்ககயன் றருவதற்கோர் தலைவ னுண்டே
யிருண்மருவு தாருகா வனத்துள் ளார்போ
லில்லையென்றா லெவ்விதத்து மிழிவே யெய்துங்
குருமரபான் னன்குணர்ந்து தெளியா
ரெல்லாங்
குணிக்கரிய பலவாறு குளறு வாரே.
(2)
110. ஆலயத்தா லெந்திரத்தாற் கும்பந் றன்னா
லாராதிக் கின்றவரு மகத்தி னூடோர்
கோலமமைத் திருப்பாரே யாகி லன்னோர்
குறித்தபயன் சீக்கிரம்கை கூடு மிந்த
ஞாலமதைப் பார்க்கவந்த கண்ணே கண்ணா
நாடில்வெகு நாட்கழியு நலமா காது
சாலவுருத் தியானமொடு பாடு பட்டாற்
சாக்கிரத்துந் தோன்றுமிது சரதந் தானே.
(3)
111. எந்தவித நூலெனினுங் குருவா வந்தோ
ரெவரெனினு முருவமொன்றை யெண்ணிப் போற்று
மந்தநிலையே யுயர்வாஞ் சித்தி முத்தி
யனைத்துநல்கு மெனுமுறுதி யடைந்தி டாமன்
மந்தணங்க ளாயிரஞ்சொற் றிடினும்
பொல்லா
வஞ்சகமா மலதுமதி மயக்க மாகு
மிந்தநெறி சொல்லாம லுய்ந்தோ ரில்லை
யிதுசரத முக்காலு மியம்பி னேனே.
(4)
112. அக்கரத்தி னுருவமொன்று மறியா மூட
னானாலுஞ் சாத்திரங்க ளனைத்துந் தேறு
மிக்கபுகழ்ப் புலவர்சிகா மணியா
னாலும்
விளங்குமொரு மூர்த்தியினை விரும்பி நாடித்
தக்கவண்ணம் பிரசன்னங் கண்டா லன்றிச்
சகமறியச் சித்திமுத்தி சாரொண் ணாது
திக்கனைத்து நிறைந்தபர தெய்வத்
துண்மை
தெரிந்தவர்போற் பிதற்றுநர்வாய்ச் செருக்கு வீணே.
(5)
113. ஆயிரமா முழுக்கம்பந் தன்னி லேறி
யளவிறந்த கோடிவித்தை யாடி னாலு
மீயிருந்தே தியாகமதும் பெறக்கூ
டாது
மேதினியில் வரவேண்டு மென்பார் பல்லோ
ராயினதன் பயனுணரிற் சமயக் கூட்ட
மத்தனைக்கு மானதெய்வ மகண்ட மென்னும்
வாயினவ ரானாலும் பிறர்போன் மூர்த்தி
வடிவமொன்று பற்றியுய்யும் வழக்குத் தானே.
(6)
114. அநுபூதி யடைந்தவர்தந் நூல்க ளாராய்ந்
தநுட்டிப்போ ருபாசனையே யருமை யென்பா
ருனுநூலோர் கலையிலிருந் ததனை மற்றோ
னொருகலையில் மொழிபெயர்க்க வொருவன் பாடப்
பினுமோர்மா னுடனுரையாற் பொருள்சற்
றோர்ந்து
பிதற்றுவோர்க் கதன்மகிமை பிறங்குங் கொல்லோ
தனுவாதி யவைதருவா னுண்டென் றெண்ணிச்
சார்தருமெய்ப் பத்திநிலை தவறொண் ணாதே.
(7)
115. கரும்பினது சாற்றினைக்கற் கண்ட தாகக்
காணமுயன் றிடிற்சிறிது காலஞ் செல்லும்
விரும்புகற்கண் டினைச்சாறாச் செய்ய
நண்ணில்
விரைவிலா மதுபோலெவ் விடத்து மேவும்
பெரும்பரத்தைக் குருவடிவ மாகச்
செய்தல்
பிரயாச நாடுமவர் பிரியம் போன்முன்
வரும்புனிதக் குருவடிவை யகண்ட மென்ன
மதித்தலெளி திதுபழையோர் வாய்பா டாமே.
(8)
116. ஆனுடல முற்றுமதன் பாலுண் டாதற்
காதார மாமெனினு மகிலத் துள்ளார்
வேனுறுமென் மடிவழியிற் கொள்ளு மாபோல்
வேதங்க ளாகமங்கள் விளம்புந் தெய்வந்
தானுலக முழுமைக்கு மிடமா நிற்குந்
தனியகண்ட மானாலுந் தவஞ்செய் கின்றோர்
பானுநடுக் குலவுறுசற் குருவா நாடிப்
பணிந்திறைஞ்சிக் கண்டுபெரும் பதஞ்சேர் வாரே.
(9)
117. தெய்மொன்றுண் டதனடிமை யானென் றோதிச்
சித்தியொன்று மில்லாமற் றிரிகின் றோர்தம்
பொய்வழக்கை யாராயிற் பாட்டி வைத்த
புதையலுண்டென் றிறுமாப்போர் புந்தி போலு
மெய்வழிநின் றுபாசனையாற் சித்தி
பெற்று
விளங்குகின்றோன் சமயநெறி விழைவோ னேனுங்
கைவலியாற் பொருள்சேர்த்துக் கோடி
யாக்கிக்
காசினிசொல் லிடக்கொடியுங் கட்டி னோனே.
(10)
118. ஒளியில்லா மணிவிளக்கொன் றுண்டே யாகி
லுன்னியவா றிவ்வுலகத் துஞற்றுஞ் சித்திக்
களியில்லா வுபாசனையுண் டென்னத்
தேறுங்
கருத்தினரே கல்விநலங் கைக்கொண் டோர்க
ளளியில்லா நெஞ்சினரா யகண்ட போத
மடைந்தவர்போற் பலபிதற்றி யானை நன்னீர்த்
துளியில்லா வனவேட ராதி காணிற்
றுடிதுடிப்போ ருணர்ச்சிமுற்றுந் தோடந் தானே.
(11)
119. மூர்த்தியுருக் கண்டமென்று மருவ மாக
முன்னுவதே யகண்டமென்று மொழிவார் பல்லோர்
வேர்த்திலங்கு மேனியொடோர் கூலி யாளா
வியன்மதுரை யாற்றருகில் விளங்கி னானைச்
சீர்த்திமலி பாண்டியன்கைப் பிரம்பா
லந்நாள்
சினந்தடித்த வடியளவில் சீவர் மீதும்
பூர்த்தியதாப் பட்டவித முணர்ந்தி
டாத
புல்லறிஞ ரென்றவரைப் புகல லாமே.
(12)
120. ஒற்றிநகர்க் கோயிலுள்வாழ் தெய்வந் தன்னை
யொருமரத்தி னீழலில்வந் துறையு மாறு
சொற்றிடுவான் முதலையுண்ட மதலை வந்து
தோன்றிடவுஞ் செய்தான்மெய்ச் சோதி யெங்கு
முற்றிருக்கும் போக்குவர வில்லா
தென்ன
யுரைசெய்தோர் பலருடல்வீழ்ந் தொழிய மாய்ந்தார்
முற்றிகழக் காண்பதெண்ணி முயலா ரெய்து
மோட்சமெல்லா நன்குணரின் மோசந் தானே.
(13)
121. யாவும்வல்ல தெல்லவர்க்கும் பொதுவா மென்கைக்
கிசைவுற்றுஞ் சிலசமயத் தீன ராவார்
தேவுருவ மாகாதென் றிசைக்கின் றார்கள்
செகதலத்திற் கண்ணாரத் தெரிசித் தன்றி
மேவுமுத்தி யில்லையெனச் சொல்லு
நூல்கள்
வேணதுண்டு பிறந்திறக்கும் வினையுள் ளார்க்கப்
பாவுரையும் வெவ்வேறாத் தோற்று மந்தோ
பக்குவமில் லார்க்குரைக்கிற் பயன்ப டாவே.
(14)
122. வாதவூர ரடிகளுக்காக் குதிரை கொண்டு
வந்திடலு மமுதனைய மதுரச் செஞ்சொற்
போதமலி தருமருண கிரிக்காத் தூணிற்
புரவலன்முற் றோன்றியதும் பொருவப் பல்லோ
ரோதனந்தம் விளையாட்டும் பழுதென்
றெண்ணு
மூறுடையா ரருட்பெரும்பே றுறுவார் கொல்லோ
பாதகரிற் றலையாவார் மனித ரேனும்
பசுமரையிற் றாழ்ச்சியெனப் பகர லாமே.
(15)
123. முன்னுளதோர் காண்டத்தில் விளங்கு கின்ற
மூலமந்தி ரங்களுமெந் திரங்க டாமும்
பன்னுமுபா சனைக்குரித்தே யாமென்
றாலும்
பாவனையே முக்கியமாம் பகுத்துப் பேசா
ருன்னுதலில் பாவனா தீதம் நன்றென்
றோதுகின்ற மாந்தர்பல ருலகத் துண்டு
தன்னுளத்தை யொருகுறியி னிறுத்தச்
சொன்னாற்
சளப்படுவா ரதுபோலுஞ் சார்பொன் றின்றே.
(16)
124. ஆலயத்து விக்கிரகந் தனையே நாடி
யகங்களித்த லிளம்பருவ மறவோர் சொன்ன
நூலகத்தி லுள்ளபடி மனத்தாற் செய்து
நோக்குவது நடுப்பருவ நுவன்ற வாசான்
கோலமதே மூர்த்தியென நம்பி யன்பாற்
குறிப்பதுமுற் றியபருவங் கூறு மூன்றுஞ்
சாலநினைந் திடுவார்க்குச் சித்தி
முத்தி
தருபவே யொன்றுணர்வார் தவமுள் ளோரே.
(17)
125. விக்கிரக நாட்டத்தா லுய்ந்த பேரு
மிகவுண்டு சிலரைமுன்னம் விளம்பி யுள்ளே
னக்கிரகண் ணியமான குரவ னாட்ட
மறிஞர்சிலர்க் கேயாகு மனேகர்க் காகா
துக்கிரமாஞ் சரிதமொடு புராணங் கூறு
முருவங்களி யாவருக்கு முவகை நல்கு
மெக்கிரகங் களுமூர்த்தி வடிவ மேயென்
றியம்புநரு முண்டதனா லிலக்க மின்றே.
(18)
126. மந்திரத்தை மணியுருட்டிச் செபித்துக் கொண்டு
மனத்தகத்தி லுரியதெய்வ வடிவ மின்றித்
தந்திரவித் தைக்காரர் தமக்கு மொல்கிச்
சாத்திரம்பொய் யென்றிகழ்ந்து சலிக்கின் றோர்க்கு
மிந்திரனூ ராதியநற் பதங்க ளெய்துமி
யாதுமின்றி வீணாகா திகத்தி னூடுஞ்
சந்திரசூ ரியருளநாள் வரையுங் கீர்த்தி
தழைப்பதொரு குறியினின்று சாதிப் போர்க்கே.
(19)
127. ஓருருவந் தனைமுதலிற் றியானிப் போருக்
கொவ்வொரவை யவந்தோன்று மொருங்கு தோன்றா
தாருயிர்தத் தளிக்கமனஞ் சிதறி யோடு
மனந்தவிதச் சங்கற்ப மடுக்காத் தோன்றும்
பூருவபுண் ணியபலத்தான் மாறி மாறிப்
பொத்திமிகப் பாடுபடும் புந்தி யோர்க்கே
யூருமெறும் பாற்கருங்கற் குழிந்தாற்
போலாங்
கொருவாறு நிலைத்தின்ப முதிக்கு மன்றே.
(20)
128. பலர்நெடுநா ளாகவுபா சனைசெய் தாலும்
பயனொன்றுந் தோன்றாமற் பரத விப்பார்
சிலர்துவக்கு நாண்முதற்றெட் டதற்குத்
தக்க
சீர்பெறுவா ரிவ்விரண்டு திறத்தி னோர்க்கு
மிலகுறுமெய்ப் பயன்வருமென் றாலுஞ்
சோம்ப
லென்பதுவுந் திருத்தியுமே யிகலா மந்தோ
குலதெய்வஞ் சாக்கிரத்தில் வந்து
வேண்டல்
கொடுக்குமட்டுஞ் சாதிக்கை குணமா மன்றே.
(21)
129. நனவிலுள்ள சொற்பனமுந் தாண்டி நேரே
நாட்டமறி தரச்சிலகா னண்ணி னாலு
மினமெனத்தா னழைக்கும்போ தெல்லாந்
தோற்றி
யேகெனும்போ தேகுமட்டு மிளைக்கொண் ணாது
மனமகிழ்ச்சி யான்முயற்சி குன்று
மானால்
வந்தபடி யநுபவங்கண் மாறிப் போகுங்
கனகமுத லாம்பிரதி பந்தங் கோடி
காணுறினுந் துணிவைவிட்டுக் கலங்கொண் ணாதே.
(22)
130. கரவிலுபா சனையினின்று வெகுவாத் தேறிக்
கருத்தறிய வானந்தக் கடலில் மூழ்கிப்
பரவுதிரு வாக்கனைய சிலபே றுற்றும்
பந்தத்தாற் றடைபட்டுப் பதைப்பா ருண்டு
நரரிகழப் பட்டாலு மவரைத் தேவர்
நன்கறிவா ரொருசிறிது நாளில் வேண்டும்
வரமுழுதும் பெற்றாலும் பெறுவா ரன்றி
மறுபிறப்பில் வாழ்ந்தாலும் வாழ்வா ரன்றே.
(23)
131. வினையையொரு பொருளாக மதித்து வாடும்
வீணரெல்லா முபாசனைக்கு விலக்கே யாவார்
பனையனைய துயருறினுந் றெய்வந் தோன்றிற்
பஞ்சதுபோற் பறக்குமென்போர் பக்கு வத்தோர்
நனைமலர்ச்செங் கடம்பணியுந் திண்டோட்
கந்த
னல்லருளா லருணகிரி நாத னந்நாள்
புனையலங்கா ரத்தினிடை நாளென் றுள்ள
பொருவில்கவிப் பொருள்சாட்சி புகலு மன்றே.
(24)
132. பத்திநெறி யேயுயர்வென் றுணரா மாந்தர்
பதரனையா ரவர்பலரு பழைய கன்மம்
புத்தியினின் றாட்டுமெனப் புகல்வா ரந்தோ
புகலிநகர்க் கவுணியன்றன் புதல்வ னந்நா
ளத்தியைப்பெண் ணுருவாகச் செய்தான்
மற்றோ
ரருந்தவன்கன் மிதந்திடச்செய் தமண்போர் வென்றா
னித்திறல்போன் றுள்ளனவு வினையாஞ்
சொல்லோ
விலங்குதிரு வருள்வலியென் றியம்ப லாமே.
(25)
133. மானிடருக் கயனமைத்த வயது நூறே
மலையிலுள்ள சித்தரதை மறுத்தா ரன்றி
நானிலத்தோ ரறிந்தகுகை நமச்சி வாயர்
நன்கிருநூ றாண்டிருந்தார் நாறிப் போன
மேனியுடைச் சினையாடு பிழைக்கச்
செய்தார்
வேறுமிவை போல்வனவாம் விந்தை யாவு
மானியிலா மூர்த்தியுபா சனைச்சீ
ரேயென்
றறியாதா ரெவரெனினு மசடர் றாமே.
(26)
134. எச்சமயத் தோரெனினுந் தெய்வந் தன்னை
யேதேனு மொருவடிவா யெண்ணிப் போற்றி
யச்சமறுஞ் சித்திவழி முத்தி வீட்டி
லடைவதுண்மை யானாலு மகண்ட மென்னு
நிச்சயமுற் றிருந்தாலே பிறவி தீரு
நிகழ்த்துமது தருவதற்கா நெறிக ளாறே
பொச்சமில்லவ் விகற்பம்முன்னஞ் சொற்றே
னிங்கு
பொருந்துறுநற் றியானவகை புகல்கின் றேனே.
(27)
சௌரம்,
சூரிய மூர்த்தி விளக்கம்
135. ஆரியநூல் சொலுமூர்த்தியெ தையா னாலு
மநுட்டிப்போர் தவமுதிர்ச்சி யாகு நாளிற்
சூரியமண் டலத்தினையே நாடு வாராற்
சொல்லுமந்த மூர்த்திக்குத் தொண்ட ரெண்ணுஞ்
சீரியகோ லங்களெல்லாம் பொருத்த மாகுந்
தியானமின்றி யுள்ளபடி தெரிசிக் கின்ற
பேரிகத்து பரத்துநல முறுவா ரேனும்
பிறவாத வீடுமட்டும் பெறமாட் டாரே.
(28)
சூரியர்கள்
12 இருப்பினும் வேறுபாடில்லை என்பதாம். பரத்துவமும்,
உபாசிக்கும் முறையும்
136. சுடரவனே முதலாய கிரக மென்னுஞ்
சோதிடரு புராணவழி துணிகின் றோரு
மடலுறுபன் னிருவடிவஞ் சொல்வார்
மேட
மாதியவீ தியின்விகற்ப மன்றி யில்லைத்
திடமலிநெஞ் சுடனிரவு பகலு மாகத்
தியானிப்போர் பலவிதமாத் திகைக்கொண் ணாது
புடவியிற்சற் குருவடிவ மாதி யாகப்
புகல்பவற்றே தேனுமொன்றாப் போற்ற லாமே.
(29)
137. பகர்தருபன் னிருவடிவத் தொன்றை நெஞ்சாற்
பற்றிடலுஞ் சம்மதமே பதுமந் தந்த
மகனுணர்த்துஞ் சமயவிகற் பத்தின்
மூர்த்தி
வகைமுழுது மவற்றினுக்குள் வயங்குங் கண்டீ
ரிகழ்வுறுபுன் சமயத்தோ ரெவரா னாலு
மிரவிவெயிற் படலாகா தென்ன மாட்டார்
திகழொளியெல் லாமுமத னமுச மன்றோ
திங்களுஞ்செந் தீயுமதிற் சேர்ந்த தாமே.
(30)
138. முத்திவிழை வோன்குருவாக் கல்வி வேட்டோன்
முகிழ்முலைப்பா ரதியாப்போர் முடிக்கு மாசை
வைத்திருப்போன் வயிரவனாக் கருது
மாபோல்
வாஞ்சித்த வகைக்காமெவ் வடிவ மாயுஞ்
சித்திசெய்தற் கானதெய்வமி யாதென்
றாய்ந்து
தெரியுங்காற் செங்கதிரோ னன்றி யில்லை
யெத்திருவு மொருங்குபெறக் கருதி
னாலு
மேகமாப் பேதமின்றி யெண்ண லாமே.
(31)
139. முப்பொழுதின் மூர்த்தியொரு மூன்று மாக
முன்னுகின்றோர் பற்பலரம் முறையுந் தாண்டி
யெப்பொழுது மொருமூர்த்தி வடிவ மாயே
யெண்ணுகின்றோர் சிற்சிலரிவ் விரண்டு மன்றி
மைப்பொழுதைப் பகலில்வர வழைத்தோன்
போலு
மகத்தான சித்தர்தங்கள் வடிவாக் காண்பார்
மெய்ப்பொழுது காட்டுகின்ற தெய்வ
மொன்றே
விளம்புதெய்வமி யாவுமதுள் விளங்கு மன்றே.
(32)
140. ஒன்றுபொரு ளென்றுணரு முணர்ச்சி யின்றி
யொருகோடி தெய்வமுண்டென் றுழன்று நாளு
நன்றுநமக் கீதெனவோர் வடிவம் போற்று
நரரேனும் பரிதியெனு நாதன் றன்னைத்
தன்றுணைத்தெய் வத்தின்விழி யென்பார்
வாழுந்
தலமென்பா ரகிலசரா சரமுண் டாக்கும்
முன்றுலங்கப் படைத்தபொரு ளென்பா
ரன்றி
முரண்கொடுவே றிகழ்ச்சியொன்று மொழிந்தி
டாரே.
(33)
141. வெளிமுழுதுந் தன்னரசு நாடாக் கொண்டு
விதுவுடுவா தியபிறவும் விளங்கச் செய்து
களிபெறுமெச் சீவருக்குங் கண்க ளாகிக்
கருத்தாகிப் பொதுமுதலாங் கருணைத் தெய்வ
மொளிமலிசெஞ் சுடரவனே யென்னு ஞாய
முணராரை மனிதரென்று முரைக்கப் போமோ
புளிமுதலாம் மரமறியும் நெருஞ்சி
யாதிப்
பூடறியு மதன்மகிமை புகலொண் ணாதே.
(34)
142. வானத்தில் வருபரிதிக் கடவுள் பாரில்
வணங்குநர்க்கா குருவடிவா வரலுண் டென்னு
ஞானமின்றி நகைத்திகழு நரரே கேண்மி
னளிர்பொழிற்குந் தலத்தரைய னண்ணி யீன்ற
பானல்விழிச் சிறுமிமன விருப்பங்
கண்டு
பணைநெடுந்தோட் காளையெனப் படிவங் கொண்டு
தானணைந்தோர் மகவளிக்கை வினவி லீரோ
தவமுதிர்ந்த பெரியோர்பொய் சாற்றி டாரே.
(35)
143. பூவருக்கத் துயர்ந்தகஞ்ச மறியுந் தொல்சீர்ப்
பொலிதருசெஞ் சுடரதனுட் பொருந்த நெஞ்சாற்
பாவனைசெய் திடும்வடிவின் சென்னை
யொன்று
பதமிரண்டு தோணான்கு படையும் பூணு
மாவலுற்றார்க் கானபடி யென்னச் சொன்னா
லறுசமயத் துள்ளாரு மாமா மென்பார்
சேவலொலித் தல்லதுதி யாதென் றோதிச்
செருக்கடைவார் கவுமாரச் சித்தர் தாமே.
(36)
சைவம்,
சிவமூர்த்த விளக்கம்
144. சைவசம யக்கடவு ளெளிய தல்லச்
சதுர்வேத சித்தாந்தச் சமயம் மற்றை
யைவகையு மதிலடங்கும் பரிதி கண்ணா
மசலமகண் மனையாட்டி யடன்மா லூர்தி
கைவழுவை முகனும்மயிற் குகனும் பாலர்
கழறரும்பல் புறச்சமயக் கயத்தி லாழும்
பொய்வழக்கர் தாமுமட்ட மூர்த்தி
யன்றிப்
புகன்றிட்டா ரவற்றினயற் பொருளு மின்றே.
(37)
சிவ
வடிவ வகை, தட்சிணாமூர்த்தி (குரு வடிவம்)
145. சீலமறைக் கிழவன்மக்க ளொருநா லவர்க்குஞ்
சிவஞானச் செல்வமுறச் செய்ய வேண்டி
யாலநிழற் பாலொருசற் குரவ னாகி
யவிர்சடையுங் கண்டிகையு
மணிவெண் ணீறுஞ்
சூலமுஞ்சிற் றுடுக்கையுமுத் திரையுங்
காட்டித்
துணைப்பதத்தி லொன்றையொன்று சுமக்க வைகும்
கோலநினைப் பவரிறப்பும் பிறப்பு
நீங்கிக்
குலவுதனி வீட்டினிடங் குடிகொள் வாரே.
(38)
சோமாஸ்கந்த
மூர்த்தம்.
குழந்தை
முருகனுடன் உமை கூடி இருப்பது
146. மான்மழுவோ டபயவர தமுஞ்சேர் தோள்கள்
வயங்குமுக்கண் டிருக்கனிவாய் வளைதோய் காது
பான்மதியும் புனல்கொன்றை சடிலச்
சென்னி
பவளநிற நீலகண்டம் பதுமப் பூந்தா
டோன்மருவு முமைபாம்பென் பணிந்த
சீலஞ்
சொல்வனமற் றியாவுநன்கு துலங்கச் செங்கை
வேன்மதலை யுமைவாமத் திருந்த கோலம்
வெள்விடைமேற் கருதுநரை வினையண் டாதே.
(39)
147. சீகண்ட பரமேச னென்னு மந்தத்
திருவுருவே தவமுதிர்காற் சேணிற் றோன்றி
யாகண்ட லாதியர்க்கு மவரை மாய்க்கு
மந்தகனே ரவுணருக்கு மகிலத் தொன்பான்
மாகண்டத் தவத்தோர்க்கு மரசர் கட்கும்
வரங்களெல்லாந் தருவதென்கை வம்பன் றன்பாற்
றீகண்ட மெழுகதுபோ லுருகுஞ் சிந்தைச்
சீரியர்குற் றேவல்களுஞ் செய்யு மன்றே.
(40)
நடராசமூர்த்த
உபாசனை
148. முயலகன்றன் முதுகில்வலத் தாள்வைத் தேனை
முண்டகத்தா டூக்கிவலப் புறமாச் சாய்த்து
வியனுடுக்கை வலப்புறத்து மேற்கை
தாங்க
மேலிடக்கை யனலேந்த விரும்புந் தொண்ட
ரயர்வொழிக்கு மபயமற்றை வலக்கை காட்ட
வடுத்தசெங்கை யெடுத்துளதா ளதனைத் தூண்டக்
கயல்விழியாள் பாம்புபுலி முதலோர்
மன்றிற்
காணநடம் பயில்சிவனைக் கருத ன ன்றே.
(41)
உருவ
பாவனையை அன்றி அருவ நாட்டம் ஆகாதெனல்
149. ஆகமவே தங்கடந்த பொதுவ னாகி
யம்பலத்தி னடமாடு மரனை நாடிப்
போகமொடு வீடுபெற்றோர்க் களவா ராலும்
புகலரிதென் றாலுமருட் பொலிவுண் டாமு
னேகவெளி யென்றதனைக் கரைத்துப் பார்த்தா
லிளம்பிஞ்சிற் பழுத்தபழ மெனவீ ணாவார்
தேகமுமற் றவனாகத் துலங்கி னாலுந்
தியானம்விடார்க் கெப்பேறுஞ் சித்தி யாமே.
(42)
வயிரவர்
உபாசனை
150. உடையினொடு பத்தினியு மின்றி யீச
னுயர்கரங்க ளுடுக்கையொடு நாக மேந்தப்
படையிலுயர் திரிசூலம் பிரமன் சென்னிப்
பரிகலத்தோ டெடுத்தொருநாய்ப் பரியி லேறிச்
சடைகுறுகத் திருமேனி யிளமை காட்டச்
சஞ்சரிப்பான் வயிரவப்பேர் சாற்று வார்கள்
வடையினொடு தேனமைத்து நாடு வார்மேல்
வருபகையெல் லாங்கணத்தில் மடிக்கு மன்றே.
(43)
151. இத்தகைய
வயிரவரம் மூர்த்தி மேன்மை
யிகதலத்து மானிடருக் கிலங்கி டாது
சித்தரறி வார்களன்றி யுலகங் காக்குந்
திருநெடுமா லாதியராந் தேவ ரோர்வார்
புத்தர்முத லோரைவெட்டித் தொலைக்கும்
வீரம்
புனைகுவார் களுமுணர்வார் போற்று வார்பான்
மெத்தவுஞ்சீக் கிரத்திலருள் புரியுங்
கண்டீர்
வெறிநீரா தியபடைப்பார் வீணர் தாமே.
(44)
வீரபத்திரர்
உபாசனை முதலிய வேறன்றெனல்
152. பூதர்புகழ் வீரபத்தி ராதி யாவும்
புகலுமிவற் றுள்ளடங்கும் புறம்பொன் றில்லை
யேதமறு மிலிங்கமெனு மூர்த்தி யொன்றுண்
டெச்சமயத் தேவுமதி லிருந்து தோன்றும்
பேதமுறு பீசங்கள் பலவா றாகப்
பேசிடினு மைந்தெழுத்தைப் பிரிக்கொண் ணாது
சீதளசந் திரனெனவெண் ணீற்றாற் றோற்றுந்
தேசிகர்சொற் கேட்டுணர்ந்து தெளிதல் நன்றே.
(45)
153. ஒருபாதத் துருத்திரனென் றோது மூர்த்தி
வொன்றுளது நடுவிலர னொருபால் வேதன்
றிருமாலோர் பாலரையி லிருந்து தோன்றுந்
திரிமூர்த்தி யென்கைவம்பு தெய்வ மொன்றென்
றருணீதி யாலுணர்ந்தோர்க் காகுஞ்
சொல்லு
மறுசமயத் தோருமொப்பி டாரென் றாலு
மருவாரைச் சிரித்தெரித்தோன் சமயத்
துள்ளார்
மட்டுமொரு வேளையதை வணங்கு வாரே.
(46)
154. ஐந்துமுகம் பத்துத்தோ ளுடைய தாயு
மறிவகன்ற சிலபெரியோ ராரா திப்பா
ரிந்துமுடிச் சென்னியொரா யிரமுங்
தோள்க
ளிரட்டியுமா நினைத்திடுதற் கெவரா லாகும்
முந்துகவி களிற்பகர்ந்த மூர்த்தி
யொன்று
முன்னின்றாற் பின்காண்கை முறையா மேனும்
விந்துநிலை நாதநிலை விளங்கி னன்றி
விரிவான பேதபுத்தி விலகி டாதே.
(47)
சாத்தேயம்
– சத்தி வடிவம்
155. சகளவடி வானதெய்வத் தொகுதி யாவுஞ்
சத்திமய மேயெனுஞ்சாத் தேயன் றன்னை
யிகழ்வரிதென் றாலுமதற் கினிய வாறா
யெண்ணிடுத லேமிகவு மேற்ற மாகும்
பகரரும்நிட் களமனதிற் கெட்டி டாது
பழையதவ மில்லாத பாவ மாந்தர்
திகழ்தருதாய் முலைநீத்துத் தந்தை
மார்பின்
சிறுமுலைவேட் டயர்மகவிற் றிகைப்பா ரன்றே.
(48)
பாலை
– உபாசனை (குழந்தை வடிவில் தியானித்தல்)
156. மூன்றுவய தல்லதைந்து வயதுள் ளாளாய்
முத்திரையு முற்பலத்தின் முகுளப் பூவுந்
தோன்றுமிரு கையினளா யாயி ரத்தெண்
டோடுறும்வெண் டாமரையிற்
சுரர்கொண் டாட
வூன்றுதிரு வடியினளாய்ப் படிகம்
போலு
முருவினளா யுடையிலளா யுன்னு வார்க்கு
வான்றுதிக்கும் பெருவாழ்வுஞ் சித்தி
யெட்டு
மறுக்கரிய தனிவீடும் வாய்க்கு மன்றே.
(49)
157. ஈனமற்ற தத்துவமாம் வாலைத் தாயை
யியம்புமவற் றொன்றாமென் றிசைக்கொண் ணாது
ஞானபர யோகியருக் கான மூர்த்தம்
நான்முகத்தோ னாதியைவர் நண்ணுந் தெய்வங்
கானநறுங் கொன்றையணி சிவனந் நாளிற்
கனவேள்விக் கனலூடு கண்ட கோலந்
தேனவிழ்செந் தாமரைக்கை விரல்க ளான்முன்
றிருமாலீ ரைவர்களைச் சிருட்டித் தாளே.
(50)
புவனை
– உபாசனை
158. பாசமுடன் அங்குசமு மேற்கை தாங்கப்
பகரபய வரதம்வைத்துப் பசுமைத் தாகித்
தேசவிர்பல் பணியணிந்து வயதீ ரெட்டாய்த்
திகழ்வாளைப் புவனையெனச் செப்பு வார்கள்
பூசனைசெய் வார்க்குவர முதவு மாசைப்
பொலிவுள்ளா ளவண்மகிமை புகன்றோ யாது
நீசருண வவட்காமென் றமைத்துப் பல்லோர்
நீணிலத்தின் மடிந்தார்க ணிசஞ்சொன் னேனே.
(51)
சத்திக்கு
ஊன் படைப்ப தாகாதெனல்
159. பலராம னாதியர்மேற் பழிசொற் றிந்தப்
பாருலகிற் சிற்றிலரூன் பருகி யாங்க
ணலமீறுஞ் சாத்தேய ரென்னச் சொல்வார்
நல்லறிவன் றாதலினால் ஞான மெய்தார்
சிலவாறு வித்தைகளீண் டியற்றி னாலுந்
திரும்பாத பாழ்நாகிற் சேர்கை திண்ண
முலகோரா யிரங்கோடி யுதவு மம்மைக்
கூன்விருப்ப முண்டாமென்று ரைக்கொண் ணாதே.
(52)
துர்க்கை
வடிவ பேதங்கள்
160. வயிரவன்கைக் கொண்டசின்ன நான்குந்
தாங்கி
மழைமுகிலுங்
கண்டுவெட்கும் வடிவந்
தோன்ற
வெயிலுமிழும் வக்கிரதந் தாதி யெய்தி
வியனுரையோ டுலவுமவள் வீர துர்க்கை
கையிலபய வரதமுடன் சங்க மாழி
கவிந்தந்தால் விண்டுதுர்க்கை கையோ ரெட்டாப்
பயில்வடிவந் தானுமுண்டு கருதி யன்பாற்
பரவுமவர் விருப்பமுற்றும் பலிக்கு மன்றே.
(53)
வீரமாகானி
உபாசனை
161. ஆயிரஞ்சென் னியுமவற்றி னிரட்டிக் கையு
மணிந்தபல படைப்பெருக்கு மாளி மீது
மேயிலங்குங் கரியமலை யனைய சீரும்
விளங்குமகா காளியெனும் வீர சத்தி
வாயிகத்தாற் பரவினர்சிற் சிலர்க்கும்
வேண்டும்
வரமளித்தா ளெனவுலகோர் வகுத்துச் சொல்வார்
பேயினத்தி னரசாகிப் பாலை காக்கும்
பெற்றியினா ளென்றிடினும் பிணங்கி டாளே.
(54)
வாம
பூசனை நேமமல்ல எனல்
162. காளிதுர்க்கை யாதியவர் மூர்த்தி கட்குக்
கனபிரிய மூனிலென்னுங் கடைய ருண்டு
கோளிலுண வமைப்பதுவே நல்ல மார்க்கங்
கொலைமுயன்று வழிபட்டாற் குடிகே டுண்டா
மாளியெனும் வாகனமும் பலவா றாகு
மாயுதமுங் கொளுநிமித்த மறமில் லாதார்
கேளிரொடு நாசமுறக் கொன்று நல்லோர்
கிளைமுழுதும் வாழவைக்குங் கிருபை தானே.
(55)
கலைமகள்
உபாசனை
163. வாலையுறு மாதனமு நிறமுந் தோய்ந்து
வளர்புவனை வயதினளாய் மலர்க்கை நான்கா
யோலையிற்செய் திடுஞ்சுவடி படிக
மாலை
யொண்கலச முத்திரையொன் றொளிரக் காட்டிச்
சேலையும்பல் பணியினமும் வெண்மைத்
தாகித்
திருக்கருணை விழிபொழியச் சிறந்த வாணி
காலையென்று மறவாமற் றியானிப் போர்க்குக்
கவிப்புலமைத் திறமைமுற்றுங் கைக்கு ளாமே.
(56)
திருமகள்
உபாசனை
164. செங்கமலப் பூமிசைநாற் கையா ளாகித்
திகழிருமேற் கையினுமச் செழும்பூ வேந்தி
யங்கமல மனையமற்றைக் கரங்க டம்மி
லபயமொடு வரதமுற வாகம் போலுந்
தங்கமயச் சேலையுடுத் திரண்டு வேழந்
தாங்கியபொற் கும்பநன்னீர்த் தாரை வாய்ந்த
மங்களச்செந் திருமகளை மறவா தார்க்கு
மண்ணுலகத் திடத்தும்விண்ணூர் வாழ்வுண் டாமே.
(57)
பார்வதி
உபாசனை விளக்கம்
165. புவனையைக்கை யிரண்டினளாக் கருத லுற்றாற்
பொருப்புமக ளென்னநன்கு புகல லாகும்
பவளநிற மாகநினை வாரு முண்டோர்
பாவலவன் தனக்கமுது படைக்க நண்ணி
யவன்மகளாச் செல்லன்முத லான வாட
லாயிரமுண் டத்தனையு மகிலஞ் சொல்லுஞ்
சிவன்முயலு மாதவத்தான் மனைவி யாய்ப்பின்
செவ்வேலாய்க் குகன்மகிழுஞ் செயம்செய் தாளே.
(58)
பிற
சத்தி பேத விவரம்
166. யோகியர்க்கு நிலைபிறழத் தக்க மோக
மொருநொடியில் வரவழைக்கு முரங்கொள் வாளா
மோகினியோ டுள்ளபல சத்தி மூர்த்த
மொழிகுவா ரத்தனையு முன்னல் வீணே
தாகியா யொருமூர்த்தி வடிவைத் தொட்டுச்
சாதித்தாற் சகலசித்தும் வீடு மெய்தும்
பாகியற்சொன் மடநல்லா ரெவரு மான
பரைமகிமை யெவராலும் பகரொண் ணாதே.
(59)
வைணவம்
– திருமால் உபாசனை
167. சக்கரமுஞ் சங்குமிரு மேற்கை தாங்கத்
தனியபய வரதமற்றைத் தடங்கை காட்ட
மைக்கவினார் மேனியுஞ்செம் பவள வாயும்
மலர்விழியுங் குழைக்காது மகுட மாதி
மிக்கபணிப் பொலிவுமம்பொற் றானைச்
சீரும்
விளங்குதிரு வடித்துணையும் விரும்பி நாடித்
திக்கனைத்தும் புரந்தருளு மாயோன்
றன்னைத்
தெரிசிப்பார் வினைமுழுதுந் தீரு மன்றே.
(60)
168. அனந்தனெனு மாயிரம்வாய்ப் பாம்பின் மீதே
யலர்மகளு நிலமகளு மருகில் வைகி
மனந்தழைத்த பேருவகை யொடுதங் கையான்
மலரனைய திருவடிகள் வருடத் தேவ
ரினந்தமது குறைமுழுது பகர்ந்து
போற்ற
யாவுமறி துயில்கூர்வா னினிய கோலந்
தனந்தனிவீற் றிருந்துமிகச் சிந்தித்
துய்ந்தார்
தம்பெருமை யான்விளம்பத் தக்க தன்றே.
(61)
கண்ணபிரானைப்
பற்றிய சிந்தனை
169. வேவகிதன் வயிற்றுதித்து நந்த கோபன்
றிருமனையில் வளர்ந்தாயர் சேரி மாத
ரியாவருக்கு மொருகொழுந னானான் மஞ்ஞை
யிறகணிந்த மணிமுடியு மிருதிண் டோளும்
பாவவினைச் சகடுதைத்த பதுமத் தாளும்
பசியமர கதநிறமும் பவள வாயு
மாவனமற் றியாவுமிக நினைய வல்லா
ரைவர்களிற் பார்த்தனிக ரடல்கொள் வாரே.
(62)
170. தயரதன்றன் மகவாகி யரக்கர் கோமான்
றலையொருபத் தறத்தடிந்தோன் றடங்கை வில்லும்
வியன்மவுலி யாதியபூ ணணியுஞ் சீரும்
விரைமலிநீ லோற்பலநேர் மேனிப் பொற்பு
நயமருவு நகைமுகமும் பணைத்த தோளு
நளினமலர்ச் சேவடியு நாடி நாடிப்
பயமகன்ற வாழ்வடைந்து மகிழ்ந்து
பின்னர்
பரமபதத் துற்றதொண்டர் பலரா வாரே.
(63)
நரசிங்க
வடிவ நிலை
171. பெரும்பாவத் திரணியன்ற னுதிர முண்ணப்
பிரகலா தனனழைக்கும் பெற்றி கண்டோர்
கரும்பாரத் தூணில்வருஞ் சிங்க மூர்த்தி
கனவடிவந் தனைமனத்தாற் கருதப் போமோ
விரும்பார்வத் தினுக்கிசையச் சென்னி
யொன்றா
விளம்பினினைப் பார்க்குமத வேழக் கூட்டந்
திரும்பாமற் பயந்தோட வெல்லு மாண்மைத்
திறன்முதலா வனபொருந்தச் செய்யு மன்றே.
(64)
172. குதிரைமுகம் பன்றிமுக மச்சம் கூர்மங்
குலவுபதங் கொள்வனபோற் கோடி மூர்த்தம்
விதிவருபே ருந்தியினான் றனக்குண்
டந்த
விபரமுற்று முணர்ந்தெவர்தாம் விளம்பப் போகுந்
துதிபெருகு மானைமுகத் தாழ்வான்
புட்கோன்
றொல்லநுமா னாதியர்க்குத் தொண்டு செய்து
கதியடைந்தோர் தாமுமந்தச் சமயத்
துண்டு
காத்தருளற் கவனலதோர் கடவு ளின்றே.
(65)
173. புத்தசம யக்குரவ னாதி
யோரும்
புவியளந்தோ னமிசமென்கை பொய்யன் றேனுஞ்
செத்தபிணத் தூனருந்த லாதி யாய
தீயகுற்றஞ் சிலவற்றிற் றிளைக்கும் பெட்பா
லுத்தமமாங் கதியடைய வேண்டு நல்லோ
ரொருக்காலு முபாசிக்க வொண்ணா தல்லாப்
பித்தருக்கத் தகையினவே யினிதாத்
தோற்றும்
பிழையில்லா தனவுரைக்கிற் பிணங்கு வாரே.
(66)
காணாபத்தியம்.
கணபதி வழிபாடு
174. ஆனைமுக முனைக்கோடொன் றொடிந்த கோடொன்
றங்குசமும் பாசமுந்தோய்ந் தவிர்மேற் கைக
ளேனையகை களின்முந்நா ளொடித்த கொம்பொ
டினியமாங் கனியதனி லியைந்த பூட்கை
வானைநிகர் பெருவயிறு வனசப் பூந்தாண்
மணிப்பணிகள் பவளநிறம் வயங்கு செம்பொற்
றானைபெருச் சாளிவா கனத்தோ டெண்ணிற்
றனிப்பொருளாங் கணபதியின் தயையுண் டாமே.
(67)
வல்லபை
கணேசர் தியானம்
175. இளம்பிறைத்துண் டம்பொனெடுஞ் சடிலக் கங்கை
யிதழியறு காத்திதும்பை யென்ப யாவும்
வளம்பெறச்சங் கரனேபோற் றுலக்கிப்
பச்சை
வல்லவையை யிடப்புறமா மடியின் மேல்வைத்
துளம்பெரிது களிகூரத் துதிக்கை
தன்னா
லுரகபடந் தொட்டுறுமோ ரும்பன் மூர்த்தி
சளம்படவோட் டாதடியார் தம்மைக் காத்துச்
சகலவிளை யாடல்களுந் தருவ தாமே.
(68)
கணபதி
வடிவ பேதம்
176. தனியேநின் றாடுகின்ற மூர்த்தி யொன்று
தடங்கரத்தால் வல்லவையைத் தாங்கிக் கொண்டு
கனிவோடு நடம்பயிலும் வடிவ மொன்று
கரங்கள்பதி னொன்றாகக் காண்ப தொன்று
நனியார்வ முறுமனித வதன மாக
நண்ணலொன்றிவ் வாறுபல நவில்வார் மேலோர்
சனியாத வீடுபெற வேண்டு மாகிற்
றக்கதொரு மூர்த்தமெண்ணித் தவம்செய் வீரே.
(69)
கௌமாரம்
– முருகன் வழிபாடு
177. இந்துமுடித் தவிர்ந்தசடைச் சிவபி ரானு
மிமவான்றந் துளமகளு மீன்ற சேயா
யைந்துகரக் கணபதிக்கோர் துணையாய்ச்
சென்னி
யதனிடத்திற் சிறுசடில மமைந்த தாகிச்
சிந்துரவ னத்தினதாய்க் குலிச மோடு
திரிசூல மேற்கரத்திற் றிகழ்வ தாகி
யெந்துணையா மபயவர தமும்பொற் றாளு
மிசைவதா யொருபொருள்வெற் பிடந்தோ றுண்டே.
(70)
வள்ளி
தெய்வயானை சமேத முருகன் உபாசனை
178. பகருமிளங் குமரனுக்கு வயதைந் தாறு
பதினாறு வயதாயப் படிவங் கொள்ளி
லிகழ்வரிய குகமாரனெனச் சொல்ல லாகு
மேமநிறத் தொருமடவா ளிடத்தி னீல
மகளொருத்தி வலப்புறத்தி னிற்கக்
காணில்
வரந்தருசுப் பிரமணிய மாந்தோ ளாறாய்த்
திகழ்வாளுங் கேடகமு நடுத்தோள் கொள்ளிற்
றிறற்கார்த்தி கேயமெனச் செப்பு வாரே.
(71)
சண்முகமூர்த்தி
உபாசனை
179. இருதலைச்சூ லங்குலிசம் பாணஞ் சாப
மெழில்வாள்கே டகமாழி யிகல்வெண் சேவல்
பொருவிலங்கு சம்பாச மபய மேலோர்
போற்றிசைக்கும் வரதமெனப் புகலீ ராறு
மருவுதிண்டோ ளினனாச்சண் முகமுள்
ளானா
மனக்கமல மிசையிருத்தி வணங்கு வார்க்குத்
திருவருட்சத் தியின்மகிமை யுணர்ந்து
ஞான
சித்தியொடு முத்திபெறுஞ் சீருண் டாமே.
(72)
தண்டபாணி
மூர்த்தி தியானம்
180. முண்டிதமும் கோவணமுங் கீளுந் தண்டு
முழுநீறும் பாதுகையு முறுவல் வாயுங்
கண்டிகையுங் கதிர்வேலு மிரண்டு
தோளுங்
கமலமல ரடித்துணையுங் காட்டு மூர்த்தி
தொண்டினர்சிற் சிலர்மனத்திற் சடிலத்
தோடு
தோன்றலுமுண் டவன்பெருமை சொலவொண் ணாது
குண்டிகைக்கைத் தவமுனிவ ரறிவா ரன்னோன்
குமரகுரு பரனெனுபேர் கொடுநின் றோனே.
(73)
குருவடிவ
நாட்டம்
181. அரியகுரு பரன்மகிமை மொழியப் போமோ
வறுசமயத் தொன்றாயு மவிர்வா னப்பா
லுரியசம யங்கண்முற்று நானே யென்பா
னொன்றிடத்துந் தோயாம லொளித்துங் கொள்வான்
பெரியபொரு ளவனலது மற்றொன் றில்லை
பேசுகின்ற மூர்த்தமெல்லாம் பிறங்கக் காட்டித்
தெரியவல்ல பேரறிஞர் தம்மைத் தேற்றித்
திருவடியிற் கலந்துகொள்ளுந் திருடன் றானே.
(74)
182. உருநாட்ட மேகுறியா மென்னத் தேறு
முண்மையுபா சகர்கூட்டத் துயர்ச்சி யானோர்
குருநாட்டக் காரர்பிறர் தாமுங்
காணக்
கோயிலுக்குள் வாழ்வடிவைக் கும்பிட் டெண்ணி
வருநாட்டத் தோர்களிளம் பருவ முள்ளார்
வகுத்துரைக்கு மிவ்விரண்டும் வம்பன் றென்னுந்
திருநாட்டந் தோய்ந்தவரே சமயா தீதச்
சித்தரிது மற்றவராற் றெளியொண் ணாதே.
(75)
183. பூவுலக முழுதுமொரு சுமையாக் கொண்ட
புயங்கமுமை சிறுவிரலின் பூணா மென்றோர்
பாவுரைக்கு மதுபகர்வா யெளிய தல்லப்
பட்டமரம் பழுத்துதிரப்
பாடல் கண்டீர்
மேவுமெத்தே வுருவெனினு முள்ள வாறா
விரும்பிநினைந் திடற்குமன விசாலம் போதா
தியாவும்வல்ல குருவடிவைக் கருத
னன்றா
மியம்பிடினும் பருவமில்லா ரிசைந்தி டாரே.
(76)
உபதேச
குருவே உண்மைப் பரம் எனல்
184. காணாத தெய்வவடி வொன்றை நாடிக்
கருத்துருகு மிளம்பருவக் கார ருக்கு
மாணாருங் குருமகிமை யெடுத்துச் சொன்னால்
மனிதபா வனைதோன்றி வருத்து மாபோ
னாணாம லெச்சமயத் தினரும் போற்று
நல்லபொருள் குருவெனவே நாடு மேலோர்க்
கேணாரு மெத்தேவின் புகழ்சொன் னாலு
மிவனுளத்தின் கற்பனையென் றிலங்கு மன்றே.
(77)
185. பைந்தருவின் வனம்வரைநீள் சிகரி மீதோர்
பாரம்வைத்துப் பேணிடினும் பார்மின் னாளே
யந்தநெடுங் கோபுரமுங் கூட்டித்
தாங்கு
மதுபோலெக் கடவுளுக்கா ளாகி நாளுஞ்
சிந்தனைசெய் தாலுமெல்லாம் வல்ல
தான
தெய்வமே பயன்தருகை திண்ண மேனுஞ்
சந்தமுங் கண்டகுரு வடிவை நாடிற்
சனியான மனமதிகச் சளஞ்செய் யாதே.
(78)
நால்வகை
உபாசகரில் உயர்வு இவர் எனல்
186. மந்திரமட் டுரைப்போரிற் சிலைசெம் பாதி
வடிவநினைப் போருயர்ந்தோர் மற்றன னோரிற்
புந்தியினா லுருவமைப்போர் மேலா
வாரப்
புலவரினுங் குருவையெண்ணும் புனிதர் மிக்கோர்
தந்திரரிந் நால்வரினுஞ் சிறந்தோர்
நாளுஞ்
சலியாமற் சாதிக்குந் தவத்தின் பண்பா
லிந்திரவி யுள்ளமட்டு மழியாக் கீர்த்தி
யெய்தினோ ரெனத்துணிவுற் றியம்ப லாமே.
(79)
உபாசகர்க்குத்
தடையான ஆழ்நிலைகள் இவையெனல்
187. ஒருமூர்த்தி வடிவைநினைத் துபாசிக் கின்றோர்க்
கொவ்வாத மனமுடையா ருறவா காது
பொருள்வாதை யென்கைகன வினுமா காது
புலையினொடு கொலையுமன்ன பொய்யு மாகா
துருமேறொத் தார்ப்பரிக்குங் கோப
மாகா
தூர்கடோறும் போய்ப்பலவா றுழல லாகா
தருமாந்த மங்கையர்கற் பழிக்க நாடு
மதிமோக மாகாதென் றறைவா ரன்றே.
(80)
188. உருவேறத் திருவேறு மென்னு மாற்ற
முலகிலுள்ளார் களுமுரைப்ப துண்டென் றாலுங்
கருவாதை நீங்கியுய்கைக் கான ஞானக்
கண்விளங்கப் பெற்றோரே கருது வார்க
ளொருபீசாக் கரத்துக்கோ லிலக்க மென்ன
வோதுவார் பலரொவொன்றிறக் கொவ்வோர் கோடி
மருளாமற் செபித்தேனஞ் சித்தி செய்ய
வல்லோனே யறிவறிந்த மகனா வானே.
(81)
கடவுட்
காட்சி சித்தியாகுமுன் மகிழ்வு கூடாது
189. செபமொன்றே குறியாமென் றெண்ணிக் கொண்டு
சிந்தையடங் கிடுநிலையைச் சிந்தி யாமல்
விபரங்களி யாதொன்றுந்
தோன்றா வண்ணம்
வெகுவிரைவாச் சொல்லிடினும் வீண்போ காது
சபதங்கள் பேசிநன்றாய்ச் சித்தி
யாமுன்
தலைகொழுத்து வித்தையெண்ணித் தவிக்கொண்
ணாது
கபமிஞ்சு மரணமுண்டென் றஞ்சி வேண்டுங்
கடவுளைச்சாக் கிரவெளியிற் காண்கை நன்றே.
(82)
உபாசகர்க்கு
வேண்டிய உண்மை நெறி
190. ஆகாய மொன்றேயென் றறிந்தி டாம
லங்கத்தி னுட்கருதி யயர்வார் பல்லோர்
யோகாங்க மதுவேயா மென்றெந் நாளு
முலகினரு மொப்பிடுவ துண்டென் றாலுந்
தேகாதி யாவினுக்கு மிடமா நின்ற
திருவெளியிற் கண்டுதெரி சித்தா லன்றி
மோகாந்தம் போகாந்த மிரண்டுங் கண்ட
முனிவர்பெறும் வேதாந்த முடிவெய் தாதே.
(83)
191. பாவனைபோல் வருந்தெய்வ மொன்றே யென்னப்
பலகோடி வேதங்கள் பகர்ந்திட் டாலுந்
தேவருக்கு மேலாய பருவந் தோய்ந்த
சித்தர்களே நன்கதனைத் தெரிந்து கொள்வார்
பூவலயத் துழல்வோர்க ளொத்து வாயாற்
புகன்றாலு மந்தரங்கப் புலையாட் டோயா
தேவலுஞ்செய் திடப்பெறினு மறிவில்
லாரா
யிறந்துபிறந் திடற்கிசைந்தோ ரெண்ணி லாரே.
(84)
அருட்சித்தி
பெற்றவரினும் மேல்கீழ் உண்டெனல்
192. தெய்வசித்தி பெற்றாலு மேல்கீ ழுண்டு
சிலர்தமக்கு வேண்டுமட்டிற் செய்து போவார்
மைவளர்க்கு முலகினுக்கு வேண்டு
நன்மை
வகையனந்தஞ் செய்துசிலர் வானிற் றோய்வார்
பொய்வழக்கன் றாண்டானும் புகலி யூரிற்
புண்ணியனு புகன்றவற்றிற் பொருந்துஞ் சாட்சி
பைவனப்புக் கரும்பாம்பி லாடுஞ்
சித்தன்
பகருமிரு விதநலமும் படைத்திட் டானே.
(85)
அனுபவத்தால்
செருக்கடைதல் கூடாதெனல்
193. கனவிடத்திற் றெய்வமுன்னைப் பிறவி யாதி
கழறிடினுஞ் சிறிதுசொற்போல் கைவந் தாலும்
மனவெளியின் சாக்கிரசொற் பனத்திற்
காலை
மாலையில்வந் தேகிடினு மகிழொண் ணாது
தினகரனா தியரறியக் கண்மு னேரே
சேவைநல்கி வேண்டுகின்ற திறமுந் தந்தாற்
பனகநிகர் பொல்லார்க்கோ ருவணம் போன்று
பாருலகும் வானுலகும் பரிக்க லாமே.
(86)
உபாசனையின்
உயர்வு தாழ்வு
194. தொட்டவுபா சனைநலத்த தாகிற் கல்வித்
தோற்றமுண்டாய்ப் பனுவல்பல சொலுஞ்சீ ரெய்தி
யட்டதிக்கிற் றெய்வங்கள் பலவு மொன்றென்
றறிகின்ற பேரறிவு மமையு மப்பா
லிட்டமுற்ற படியாடுஞ் சித்தி யெட்டு
மியம்பரிய தனிவீடு மிலங்கு மின்றேற்
றுட்டனெனும் பெயர்கொடுத்துத் துன்ப மூட்டிச்
சுடுகனலா நரகினிலுந் தோய்க்கு மன்றே.
(87)
உபாசகர்க்கு
வேண்டும் உயர்நிலை
195. நல்லவுபா சனையெனினு மெளிய தல்ல
நனிவிலெனக் கனவினிலு நாட்டம் வேண்டுஞ்
சொல்லளவிற் களிக்குமைய லொழிக்க
வேண்டுந்
தொல்லுலகி னிலையுணருஞ் சூழ்ச்சி வேண்டும்
வல்லபர மித்தகைத்தென் றறிய வேண்டு
மகத்தான பெரியோரை வணங்கல் வேண்டும்
வில்லனைய நுதலாரை வெறுக்க வேண்டும்
வேற்றுயிர்க்கொல் லாவிரதம் வேண்டு மன்றே.
(88)
பெண்ணாசையைவிட
ஊன், உணவு கொடிதெனல்
196. வாளிநிகர் விழியாரே தவத்தோர்க் காகா
வன்பகையென் றளவில்பல வகைநூல் சொல்லுந்
தேளினைநேர் குணத்தாளா வலிதி லீர்த்துத்
தினமுபரி சுரதமுய றீயா டன்னைக்
கோளிலனென் றொப்புமொரு தவத்தோன்
றன்னிற்
கொன்றருந்து கின்றதவன் கொடியோ னந்தோ
மாளினுஞ்சோர் வடையாது சாதிக் கின்ற
மனவுறுதி பெற்றிடினும் வம்பா வானே.
(89)
வைராக்கியம்
ஒருபடி, அது அனுபவிகட்கு வேண்டுவதில்லை
197. மலைமுகட்டி லேறிநிலத் துருளத் தெண்ணீர்
வார்கடலி னடுக்குதிக்க வாட்கஞ் சாமற்
றலைகொடுக்கத் தீயில்விழத் தக்க
வீரத்
தன்மையுபா சகர்க்குரிய தரும மேனுஞ்
சிலையெழுத்தே நிகர்சமயா தீத ஞாயந்
திகழ்வுற்றா லந்தநிலை சிதறு மானாற்
புலைமுதலாந் தீநெறியிற் புகுமா
றோதிற்
போனபடி மீளவந்து பொருந்து மன்றே.
(90)
198. மானவயி ராக்கியத்தா லிறந்தோர் கோடி
மனங்களிக்குந் திருவருட்சீர் வாய்ந்தோர் கோடி
யானவித மிவ்விரண்டு மறிந்துற் றாலு
மந்நிலையிற் பெயராதா ரனேக ருண்டு
தானறிந்த தெய்வத்தின் வடிவ மெண்ணித்
தவம்புரிவ துத்தமமாந் தைய லாரி
லீனமொழி யொன்றுசகி யாமல் வீணே
யிறந்தவரும் பற்பலருண் டிகலோ கத்தே.
(91)
அருள்
பெற்றவன் செயல் போற்றப்பெறும்
199. தேடரிய தெய்வத்தி னருள்பெற் றுள்ளோன்
செய்வனபொல் லாதெனினுஞ் செகங்கைக் கொள்ளு
மாடனமுற்று மாடியவன் மறைந்த பின்ன
ரத்தனையும் விழவாயு மவிரு மேனு
மூடருவப் பதுகருதிப் பாவந் தன்னின்
முயல்வதழ கல்லமுன்னோர் முறைகுன் றாமல்
வீட்டைதற் கிடையூறொன் றில்லா நன்மை
விளைத்திடலே யுத்தமமாம் விளம்பி னேனே.
(92)
நல்லோர்
செயலும் தீயோர் செயலும்
200. தேவரென வசுரரும்பல வித்தை முன்னாள்
செய்தனரென் றேபலநூல் செப்பு மேனு
மூவர்முத லோரமரர்க் குதவி யாகி
மொழியுமற்றை யோர்க்கிகலாய் முடித்திட் டாற்போற்
சீவகரு ணையிற்சிறந்தோர் நிறுவு
மார்க்கஞ்
சிதைந்தாலும் பின்வருவோர் தேற்றிக் காப்பார்
பாவரமைத் திடுஞ்சமயம் வளர்த்திட்
டாலும்
பகைத்தொருவன் றவம்புரிந்து பாழ்செய் வானே.
(93)
உபாசனையில்
உக நன்மை உயர்வு, தன்னலம் தாழ்வு
201. உலகினுக்கு முதலாகித் துணையு மாகு
மொண்பரிதி மண்டலத்து முபாசிக் கின்றோ
னிலகுநல மத்தனையும் விளைத்துப்
பொல்லாங்
கியாவையுந்தீர்த் திடக்கருது மியல்பெய் தாமற்
சிலகருமந் தவிர்ந்துதன துயிரீ டேறுஞ்
சீர்பெறலே யருமையெனத் தியங்கு வானேற்
பலகறைப்பூண் விழைந்தரையன் புதல்வன்
வாடிப்
பரதவித்து வசமிழக்கும் பண்பொப் பாமே.
(94)
முத்திநிலை
யாவர்க்கும் ஒருவிதமல்ல
202. கல்லதனா லெறிந்தாற்குஞ் சிவனன் றீந்த
கழலிடமே நால்வர்களுங் கலந்தா ரென்கை
யெல்லவருஞ் சம்மதிப்ப தாமென் றாலு
மிருதிறமுஞ் சமமேயென் றியம்பொண் ணாதா
னல்லவுத விகளுலகுக் கியற்றி டார்சேர்
நற்கதியு மற்பமதா நாடிச் செய்வார்
மல்லலுறு சாலோகந் தனிற்சேர்ந் தாலு
வகுக்கரிய வண்மையதா வயங்கு மன்றே.
(95)
வைணவரிற்
பேதவாதம்
203. சட்சமய நெறிகளிலொவ் வொன்றைத் தொட்டுச்
சமரசநிச் சயமடைந்தார் சகத்திற் பல்லோர்
பட்சமின்றிச் சங்கரன்போற் பொதுவா
யாரும்
பகரவில்லை வயிணவத்திற் பழையோ ரெல்லா
முட்சமயக் குரவர்களுக் கொத்தே வாழ்ந்தா
ரொருவன்மட்டு முதவிசெய்வா னொத்துத் தம்மிற்
றெட்சணமென் றுத்தரமென் றிருகூ றாக்கிச்
சீரழிந்து பகைவிளையச் செய்திட் டானே.
(96)
உபாசனையுடையோர்
நிறுவியதே உறுதிபெறும்
204. ஔவையைப்போற் கணபதிக்கா ளாகி னோரு
மகத்தியன்போற் குகப்பெருமா னருள்பெற் றோருங்
கொவ்வையிதழ் வாய்மடவா ரெனினுமி
யார்க்குங்
குறுகியவ ரானாலுங் கோதொன் றெய்தார்
செவ்வைபடு சித்தியெட்டு மாடிப்
பின்பு
திரும்பாத வீட்டிடத்துஞ் சேர்வார் திண்ணந்
தௌவையுறு முகத்தொருபொய்ச் சமய மேனுந்
தவப்பயனில் லாதவராற் சமைக்கொண் ணாதே.
(97)
அறுசமயங்கள்
தொன்று தொட்டவை
205. நானிலத்திற் பலவாறா நூலி லொன்று
நவிலாத தாம்புதிய நாம ரூப
மானியிலாப் பரம்பொருளுக் கமைத்து
நாடி
யருள்பெறினுஞ் சம்மதமே யாறு பேத
மேனிகழ்த்த லென்பீரேன் முன்னோர்க்
கவ்வா
றிலங்கியதுண் டவ்வழிதொட் டேறு வார்க்கே
யூனிகத்து மானிடர்க்கு நஞ்சாம்
வண்ண
முஞற்றுவோ னுபாசனையே யுயர்ச்சி யாமே.
(98)
கடவுளின்
ஆறு குணமே ஆறு சமயங்கள்
206. பரம்பொருளின் பிரகாசம் பரிதிப் புத்தேள்
பலவுலகு மொடுக்கின்ற பண்பே யீசன்
கரந்தவற்றை யுதவுவது சத்தி யாவுங்
காப்பதுமா லடியவர்தாங் கருதுஞ் செய்கைக்
குரங்கொடுத்து முடித்திடுதல் கணேசன்
ஞான
வுபதேசம் புரிந்திடுத லொள்வேற் கையான்
வரந்தருமட் டுபாசித்துப் பெற்றோ
ரிந்த
வகையறிவார் மற்றையர்க்கு வம்பா மன்றே.
(99)
கடவுள்
வடிவத்தை உபாசகன் பெறுவதே முடிந்தநிலை
207. ஐயமின்றித் தெய்வவுருத் தியானிக் கின்றோ
ரதன்வடிவ மாவாரென் றறையு நூல்கள்
பொய்யலவென் றொப்பாதார் தாமுங் காணப்
புழுவெடுக்கும் வேட்டுவனும் புரியுஞ் சாட்சி
மெய்யருக்கா முபாசனையின் முடிவிம்
மட்டே
மேலவர்தா நகைப்பதெண்ணி வெட்கு றாமற்
செய்யவந்த நூனிமித்த ஞான காண்டஞ்
சிறிதொருவா றமைந்தமட்டிற் செப்பு வேனே.
(100)
பத்தி
காண்டம் முற்றிற்று.
மூன்றாவது
ஞான
காண்டம்
உண்மை
ஞானம் இது எனல்
208. ஞானமென்ப தளவிறந்த விதமாச் சொல்வார்
நவின்றிடுப வத்தனையும் நம்பொண் ணாது
வானவர்பற் பலருளரென் றுரைக்கின்
றோர்க்கு
மறையனந்த மென்னுமொழி வம்பென் போர்க்கு
மீனமுறு மாயையொன்று பரமல் லாம
லிருப்பதாப் பிதற்றுநர்க்கு மிரக்க மின்றி
யூனருந்தும் வேள்வியினை யொப்பு
வோர்க்கு
வொருநாளு முதியாத வுண்மை யாமே.
(1)
போலி
ஞானத்தின் தீமை
209. தேகமொன்று சீவனொன்று தெய்வ மொன்று
திகழுமிவை யொருமூன்றுந்
தெளிந்த பின்ன
ரேகமய மாவிளங்கு மென்னுஞ் ஞான
மில்லாதார் தங்களுற வெமக்கா காது
சோகமிக வுண்டாக்குஞ் சந்தே கத்திற்
றோய்விக்குங் குருபதத்திற் றொண்டு செய்து
யோகமுயல் வாரைவம்பி லிகழச் செய்யு
முலவாத பேரின்ப முதவி டாதே.
(2)
210. பந்தத்தும் பொருளொன்றாய்ச் சாதிப் போரும்
பரத்தினிலு மூன்றுபொருள் பகர்கின் றோரு
மந்தத்து மெய்ஞான மடைந்தோ ரல்ல
வதிலொன்றே யிதின்மூன்றே யறைய வேண்டும்
வந்தத்தை விடக்கூடா தென்ன வீணே
மனச்சாட்சி கந்நியமா வசனிப் பார்க
ளிந்தத்துர்க் குணம்சம யவாதத் தோர்க்கா
மிகலொழிந்த பொதுநாட்டத் தினர்க்கா காதே.
(3)
211. சீவன்முத்தன் றானுமொரு மூர்த்தி யாவான்
சித்தியெட்டுஞ் சார்ந்தோர்க்குஞ் சேரச் செய்வா
னாவலுற்ற படிவடிவ மெடுக்க வல்லா
னனைத்துயிருந் தன்மயமே யாமென் றாலும்
பாவகன்ம முடையார்க்கோ ரெமனே போல்வான்
பார்மகளன் னவன்திருத்தாள் பரிக்க வேண்டுந்
தேவரெல்லோர் களுமவன்சீர் விரும்பி
நாளுஞ்
சிந்திப்பா ரவன்பெருமை செப்பொண் ணாதே.
(4)
212. ஞானமடைந் துள்ளேமென் றிறுமாப் பெய்தி
நரபதியா தியர்க்கருதி நடுங்கும் பெட்பும்
பானல்விழிச் சிறுமியர்பூண் முலைகண்
டேங்கும்
பாசமுமற் றனையனவும் பரிப்பார்
பல்லோர்
வானவர்கோன் முதலோர்தம் வேட மிட்டு
வார்த்தைகளு மிசைந்தபடி வசனித் தப்பாற்
போனகமுந் தூசுமிரந் தலைவார் தாமும்
புலவனெனுந் திருநாமம் புனைதல் போன்றே.
(5)
213. வாசித்துக் காணரிதென் றருணை நாதன்
வகுத்ததிருப் புகழுரைத்து மதியில் லாதார்
நேசித்து மறையாதி நூல்க ளாய்ந்து
நிறைஞான முற்றதுபோ னிகழ்த்தி மாய்வா
ராசித்துக் குருபதத்தின் றொண்டு
செய்வார்க்
கடிமையா மவரடியார்க் காளா நின்று
பூசித்தைந் தாறெட்டு மூன்றொன் றென்னும்
பொறியினத்தொன் நினைமதிப்பார் புத்தி யோரே.
(6)
214. சருவசம யத்தினரும் பகருந் தெய்வத்
தன்மைமுற்றுங் குருவடிவந் தானே யென்னும்
பருவமனச் சாட்சியதாப் பெற்றுக்
கொண்டு
பாருலகும் வானுலகொப் பதுதா னென்னு
மொருவனுக்கே மெஞ்ஞான நிலைகை கூடு
மொருகோடி சாத்திரங்க ளுணர்ந்திட் டாலுந்
திருவருட்சித் திகள்சிறிது செய்திட்
டாலுந்
திரும்பாத மெய்வீட்டிற் சேரா ரன்றே.
(7)
215. உலகினுக் கதீதம்வத் தென்கின் றோரு
முலகமே பரமாமென் றுரைக்கின் றோரு
மிலகுமுண்மை நிலையறிந்தோ ரல்ல வன்னோர்க்
கிகலொழிந்த பரமசுக மெய்திட் டாது
பலபிறப்பிற் றவம்புரிந்த பேர்க்கே
யுண்டாம்
பழிக்கருஞ்சீ ரௌவைகுறட் பாவி னூடு
மலகிலவா மூழியருச் சிக்கும் பேருக்
கறிவுசற்றுண் டாகுமென யறையு மன்றே.
(8)
216. சித்தியெட்டுங் கைவரப்பெற் றிந்தி ராதி
தேவர்களு நடுங்கவெங்குந் திரிகின் றோர்க்கு
முத்தியரி தானவிதம் வாகீ சாதி
முனிவர்சரித் திரம்விளக்கு முந்நீர்ப் பாரிற்
பத்திநிலை யித்தகைத்தென் றறியா
தாரும்
பரஞான பெறமுயல்வார் பாய்கான் மந்தி
யுத்தியினு மெய்தருமொர் கணிணைச்
சேற்றி
லுழக்கியெழும் பகடுபெற வுன்னல் போன்றே.
(9)
217. சிவமாக்கி யெனையாண்டா னத்த னென்னத்
திருவாத வூர்முனிவன் செப்பக் கேட்டு
முவமான மற்றபரம் பொருளே யானென்
றுலகிலுள்ள பலமாந்த ருரைப்ப தன்றித்
தவமார்க்கச் சித்தியையும் பழிப்பா
ரந்தோ
தனமுடையார் வலியுடையார் தம்மைக் கண்டு
மவமானப் படுவாரிக் கொடுமை யெண்ணி
லாச்சரியத் தாச்சரிய மாகு மன்றே.
(10)
218. சீலமலி தருதவத்துக் குமார தேவன்
சித்திபெற்ற முத்திகளிற் சிறப்பே தேன்னிற்
றூலவுட லொடுகலக்கு மதுவே யென்னச்
சொல்லிவைத்தா னம்மொழியே துகளின் மாற்ற
ஞாலமிசை யனுபவமில் லாமல் வீணே
நவின்றுதிரி கின்றவர்க்கு நஞ்சே போலு
மாலநிழற் கீழ்ப்பிழைத்த முனிவ ராதி
யபரோட்ச ஞானிகளுக் கமுத மாமே.
(11)
219. சாத்திரங்க னாலின்நெறி நான்குஞ் சொன்ன
சாந்தலிங்க மூர்த்தியருந் தவத்தி னோர்க்கோர்
நேத்திரநே ரருள்ணெறியிற் கொன்று
வெந்த
நிணமருந்தும் வேள்விசெய நினைப்போர் மீது
மாத்திரங்கொண் டிகழாமை கொடிதென்
றாலு
மநுபூதி ஞானநிலை யடையத் தக்க
பாத்திரமூன் றுலகினுமொன் றரிதென்
றோர்ந்து
பகர்ந்தமொழி யறிஞர்மகிழ் பான்மைத் தாமே.
(12)
220. தந்தவமே மிக்கதெனச் சாற்று வாருஞ்
சகமுழுதும் படைத்தளித்துத் தகிக்குந் தெய்வத்
தந்தணரு ளேவலிய வருமென் போரு
மபக்குவரே வவ்விரண்டு மாமென் பேருரே
செந்தகைய ஞானத்திற் குரிய ராவார்
சேயிழையு மாடவனுஞ் சேர்ந்தா லன்றி
மைந்தனுதி யாமுறைமை யதற்கோர் சாட்சி
மனைவியுயிர் பரங்கணவன்
வகுக்குங் காலே.
(13)
ஞானம்
இவையென்பது
221. ஞானமென்னு மொழியினக்குப் பொருளே தென்னி
னல்லறிவே யெனப்பெரியோர் நண்ணிச் சொல்வார்
கானமறைப் பொருளறிதல் கல்வி ஞானங்
காதியொன்றைப் புசியாமை கருணை ஞானந்
தேனவிழ்பன் மலர்சொரிதல் பத்தி ஞானஞ்
சிந்தித்த படியாடல் சித்தி ஞானம்
நானவனென் னுரைக்குமிரு பொருளுந்
தோய்ந்து
நடுநிலையி னிற்பதுமெஞ் ஞான மாமே.
(14)
222. தன்னறிவுந் தற்சீவ சாட்சி தானுஞ்
சரிபாதி யென்றொருகாற் றாயு மானார்
சொன்னதுண்மை யேயெனினு மந்த வாறு
துணிந்துலகோர் களுமறியச் சொலக்கூ டாது
பன்னகத்தின் படமனைய யலகுன் மானார்
பளிக்கறையிற் கணவரொத்துப் பழகல் கண்டு
மன்னவித முலகறிந்த தெனினுந் தாங்க
ளடிமையெனப் பணிபுரியு மறமொன் றுண்டே.
(15)
223. அரசுரிமை யெய்தியதா லுவகை மிஞ்சி
யருந்தவத்தோர் தமைமதியா வநீதி வேந்துங்
கரவிலின்பம் விழைந்துகெஞ்சி யூடன்
மாற்றுங்
கணவனைத்தாழ் வென்றுளத்திற் கருது மாதும்
விரதமுன்னாள் புரிபலத்தாற் பரமல்
லாத
வேறலமியா மென்றுணரும் வியன்ப ரோட்சம்
வரலுமதைச் சூனியமென் றெண்ணிச் சற்றும்
வணங்காத தவசியும்பின் மாழ்கு வாரே.
(16)
உயிரும்
உலகமும் இறைவன் முதலாக உடையது
224. கடலினிடத் தலைகுமிழி திவலை யாதி
காணுறல்போற் பரத்தினிடங் காண லிந்தப்
புடவிமுத லாயபிர வஞ்ச மென்னப்
புகலலுண்மை யானாலும் புணரி போலுந்
திடமிலவா லவையதன் தென்னு மாற்றாற்
செகஞ்சீவம் பரத்தினதே சிறிது மஞ்சா
துடலினபி மானியையே முதன்மை யென்பா
ருயர்ச்சியுந்தாழ்ச் சியுமறியா ருய்க லாரே.
(17)
225. பங்கயன்சொல் லியவேதப் பயனீ தென்னப்
பராசன்மகன் பகர்ந்துளசூத் திரத்தைப் பல்லோர்
தங்களுக்கா மாறுருரைகள் செய்து
கொண்டார்
சங்கரமா முனியனைத்துந் தானே யென்றா
னங்கவன்சொற் படியாமுஞ் சொல்கின்
றேமென்
றலைகின்றார் சிலரந்தோ வவன்போற் றாமுந்
திங்கண்முடிச் சிவனுமைமான் முதலோர்ப்
போற்றிச்
சித்தியெட்டுஞ் செய்துலகைச் செயித்தி
லாரே.
(18)
226. எவ்வகைய சமயத்துக் குரவர் தாமு
மெள்ளளவா யினுஞான மெய்திச் சித்தாற்
றெவ்வரைவென் றியைந்தகதி யடைந்தா
ரேனுஞ்
சீரியரெ றியாவரையுஞ் செப்பொண் ணாது
பௌவநிகர் கலைமுழுதும் பரவுந் தெய்வம்
பரமேயென் றுணர்ந்துகொலை பயிலார்க் கெல்லா
மவ்வவர்தங் குரவரெனத் துலங்கிப்
போக
மனைத்துமயின் றசைவில்முத்தி யடைந்தோர் மேலே.
(19)
227. பொறியைந்து மொடுங்கவொரு குறியி னின்றாற்
பூதலத்து மானிடர்தாம் புரிதற் காகா
நெறியென்ற சித்திமிக வுண்டா மப்பா
னிசமான முத்திபெற நேசித் தாலுங்
கிறிதுன்று நிரையமெய்த முயன்றிட்
டாலுங்
கேள்வியில்லை பொருட்குவியல் கிடைக்கப் பெற்றோ
னறிவின்க ணின்றறங்கள் செய்திட்
டாலு
மலதுகள்ளூன் கொள்ளினுமா மந்த வாறே.
(20)
228. கொல்லாத விரதியராஞ் சமணர் தம்மைக்
குணப்படுத்தித் தம்மினத்திற் கூட்டி டாமற்
கல்லாற்செய் காணமதின் மரத்தி னாற்செய்
கழுவிலிடல் கொடுமையெனக் கழறற் கொல்கா
வல்லாண்மை வயிணவனுஞ் சைவன் றானு
மற்றவரில் வாதமிடன் மடத்திற் றீயாற்
பொல்லாங்கு செய்தபிழை யென்கின்
றோனும்
பொதுஞானஞ் சிலநாளிற் பொருந்து வோரே.
(21)
229. செவிமுதலா மைம்பொறியு மொடுங்கு மாறு
சிந்தையினாற் சாதனைகள் செய்வார் சில்லோர்
கவிபொழியுஞ் சீகாழிப் புலவன் போல்வார்
கழற்றுணைக்காந் தொண்டுசெய்து காப்பார் சில்லோர்
புவியிலிரு திறத்தோரு ஞானச் செல்வம்
பொருந்துநரே யானாலும் புரையோ டையந்
தவிருமுத்தி பின்சொல்லப் படுவார்க்
காகுந்
தனியாச்சா புரமறிந்த சாட்சி தானே.
(22)
கண்ணுடை
வள்ளல் கருத்து உயர் நிலையே
230. ஒழுவிலொடுக்கப் பெயர்நூற் காரன் சொன்ன
வுண்மையறி வறிந்தவர்க்கா முறுதி யேனுங்
கழிவருந்திக் காழிநகர்ப் புலவன்
கோலங்
கருதியெதிர் கண்டவிதங் கழற வில்லை
வழிபடற்காஞ் சதிதாதி மார்க்க மூன்றும்
வம்பெனல்போ லிகழ்ந்ததுண்டு வஞ்ச மின்றேல்
விழியருவி சொரிந்திலிங்க மாற்றி
னீர்மேன்
மிதந்துவரக் கண்டுமகிழ் விதமென் னாமே.
(23)
திருச்சிற்றம்பல
நாடிகள் திறம்
231. சித்திபெற்று முத்தியினுஞ் சேரத் தக்க
தேசிகனுக் காளாகுஞ் செல்வம் பெற்றோர்
புத்தியினால் வேறுதெய்வ நினைக்க
வேண்டாம்
புகல்வனமுற் றவன்வடிவே பொய்யன் றுண்மை
நத்தியவ ரெண்ணெண்மர்க் கொருவன்
முத்தி
நல்கியவா றுலகுரைக்கும் நடரா யன்பாற்
பத்திசெய்யச் சென்றோனும் மீண்டாங்
குற்ற
பண்பறிவார்க் கிந்தமொழி பகையா காதே.
(24)
232. குருபதமே கதியென்னச் சொல்லு மாற்றங்
குவலயமுந் தொன்றுதொட்டுக் கூற லுண்டு
பருவமில்லார்க் கிந்தமொழி கசப்பே
யாகும்
பரமருவே யென்றுணர்வார் பலவா றாய
வுருவமும தன்றாயில் வேறொன் றுண்டென்
றுளமலையா ரவர்கண்மட்டி லுடம்பி னோடு
பெருகொளியிற் கலக்குமுத்தி யதுவும்
பொய்யாம்
பெறுமாறொன் றுணராமற் பிதற்று வாரே.
(25)
233. பாமரர்க்கும் பண்டிதர்க்கு மனத்தால் நாடிப்
பரவியவா றெதிர்தோற்றும் பரம்மோ ராசான்
றாமடையுங் கதியடுத்தோர் தமக்கும்
நல்குஞ்
சத்தியசங் கற்பமுடைத் தவனோ ராசா
னாமவற்றொன் றுதிக்கினன்றி ஞான மெய்தா
தவ்வழிவிட் டுக்கரண மாதி கூறி
யீமமதற் குடல்போகும் முத்தி வீட்டுக்
கேகுமுயி ரெனுநூல்கட் கிசையொண் ணாதே.
(26)
234. உருவபர நாட்டத்தோ னெனினு மெங்கு
முற்றத்து வேயெனநன் குணர்வா னாகிற்
பொருவில்பர ஞானத்தின் முதற்பா தந்தோய்
புண்ணியனாம் புராணங்கள் புகல்ப வாய
திருவளர்பன் மூர்த்தியையும் வெவ்வே
றாகச்
சிந்திப்போ னகண்டபரஞ் செப்பி னாலுங்
கெருவமுறு சித்திசில செய்திட் டாலுங்
கிரியையினிற் கிரியையெனுங் கிளர்ச்சி யோனே.
(27)
235. சரியைகிரி யாயோக ஞான மொன்று
தாண்டியொன்று தோன்றுமெனச் சாற்று வார்க
ளெரியுறுகுங் கிலியமதாற் பணிசெய்
தான்றன்
னெழிற்சரிதை சிலர்ஞானத் தேற்ற மாமாற்
பெரியவன்றோட் டிடிற்சிறிதும் பெரிதே
யாகும்
பேதைதொடிற் பெரிதுமிகும் பிழையாங் கண்டீ
ருரியபரம் பொருளருவு முருவு மாகு
மோருடல்வே றெடுப்பவர்தம் முணர்வும் பொய்யே.
(28)
236. உத்தமச்சற் குருவாவான் றான்வாய்ந் துள்ள
வொருநிலையைப் புகழ்ந்துமற்று முள்ள மார்க்க
மத்தனையும் பிழையாமென் றிகழ மாட்டா
னடுத்தவர்தம் பக்குவங்க ளறிந்திட் டன்னோர்
தத்தமக்குத் தக்கவண்ண முபதே சித்துத்
தன்னிலைக்கு வருமளவுந் தழுவி யாள்வான்
சித்தமுயல் வழிகிடக்க வேறு ஞாயந்
தெரிவித்தா லொருக்காலுஞ் சீர்ப டாதே.
(29)
237. தானுமொரு மூர்த்தியென்றுள் ளறிவிற் றோன்றுந்
தயிரியங்கண் டப்பொழுதே சகள நாட்ட
மேனுளவா றதுபோது மென்னுந் தெம்புற்
றிடுவாருஞ் சிற்சிலருண் டியல்பன் றுண்மை
வானுருவிற் றம்முருவங் கரையச் செய்யும்
வலியடையு மட்டுமுயல் வதுநன் றாகுங்
கோனுலகை யாள்வதுபோ லவனுள் ளச்சங்
கொளவிளங்காத் தவர்பலருங் குருடர் தாமே.
(30)
238. கோசிகன்முன் னரசனொரு வனைக்கைக் கொண்டு
குலவுசொர்க்க மொன்றமைத்துக் கொடுத்த பின்னு
மாசில்பிர மத்துவம்சித் திக்க மாட்டா
தலமந்தா னானபின்னு மானா லாமென்
றேசில்வசிட் டன்பகர்ந்தா னென்னு
மாற்ற
மிகதலமுஞ் சொல்லுமிவை யாவுங் கேட்டும்
மாசில்பரம் பொருளேயா மென்னச் சில்லோர்
வாய்பிதற்றி நாட்கழித்து மடிகின் றாரே.
(31)
239. தன்னருகி லுளதொருசிற் றுயிராங் குன்னுஞ்
சங்கற்ப மறிவதற்குஞ் சத்தி யில்லார்
பன்னரிய பலவுலகு முணருந் தெய்வப்
பழம்பொருளியா மெனநினையும் பாவ மெண்ணிற்
கன்னல்வில்லி சேனைகண்டு கலங்கு
வாருங்
காசினியோர் களுமிகழக் கடைப்பட் டாரும்
புன்னரகே யுதவுகொடும் புலையுற்
றாரும்
புண்ணியரே யெனத்துணிந்து புகல லாமே.
(32)
240. ஐயமரு வாதுமற்றோ ரகத்தி லுள்ள
தறிவானுந் தெய்வமல்ல வனையா னென்ன
மையலறப் பெருந்தெய்வப் புலமை வாய்ந்த
வள்ளுவனார் தமிழ்வேதம் வகுத்து மந்தோ
பொய்யனந்தம் புலையனந்த முடையார்
தாமும்
பொருவில்பர மென்றுதம்மைப் புகல்கின் றார்கள்
வையமுற்றுஞ் சென்றுவென்று மீண்டா
ரேனு
மனிதர்மட்டி லென்றேனும் வைக்க லாமே.
(33)
241. மாநிலத்தி லளவிறந்த பலவா றாய
மதங்களுள வவைதோறு மனிதர் கூடி
மேனிலையீ தென்றுரைக்கும் வழக்கு
முண்டு
மெய்ப்பிரம மலதுபொருள் வேறின் றென்கை
யானியிலா நிலையெனலு மவற்றூ டொன்றே
யாண்குறியின் றோல்களையு மதுவு மொன்றே
சேனிகர்கண் மடநல்லா ளெனினும் வேண்டுஞ்
சித்திசெய்யும் வலியடைந்தாற் றெய்வந் தானே.
(34)
242. தவசியென்றும் பத்தனென்று ஞானி யென்றுஞ்
சாற்றுகின்ற மூவரிலெத் தகவோ ரேனும்
புவனிமுற்றும் போற்றிசைக்கத் தகுஞ்சித்
தார்வம்
பொருந்தியே முத்தியினிற் போக வேண்டு
மெவரெனினுஞ் சித்திநல மெனக்கேட்
டாலு
மிகழ்வாரே னீரிடைபாம் பென்னத் தோன்று
நவமுறுமீ னினமால முமிழும் பேழ்வாய்
நாகரினந் தனையிகழு நகைக்கொப் பாமே.
(35)
243. எள்ளளவி லெட்டிலொரு பங்கா னாலு
மிரக்கமின்றிக் கொன்றருந்து மீனர் தாகுங்
கள்ளநெறி முயல்கொடுங்கோன் மன்னா
வாருங்
கதியறியா மதத்தினருங் களிக்குங் காலம்
புள்ளகல்வாய் கிழித்தானைப் போலுஞ்
சித்தர்
பூதலத்திற் றோன்றார்கள் பொய்மை ஞானம்
விள்ளவல்லார் பலர்கூடித் தோற்றமி
யாவும்
வெறுமாயை யெனக்குதிக்கை மிகுக்கு மன்றே.
(36)
244. காலமிக வலியதெனப் பகர்வார் பல்லோர்
கதிரவனுக் கப்புறத்திற் கால மில்லை
ஞாலமிசை யுள்ளனவாஞ் சமய மெல்லாம்
நவிலுமத னுள்ளடங்கன் ஞாய மேனு
மூலபர மொன்றேயென் றுணர்ந்த மேலோர்
முன்னிடிவென் றிடக்கூடு முன்னா ளங்கோர்
வேலனைய கண்ணாளும் பசுமா வோரேழ்
விளங்கிரதந் தடைபடச்சொல் விளம்பி னாளே.
(37)
245. சலசமலர வன்புதல்வன் நால்வர் தம்மிற்
சனற்குமர னாலநிழற் றம்பி ரான்பான்
மலநிகளந் தறிபடுமெஞ் ஞானம் பெற்ற
வண்மையெண்ணி யிறுமாந்து மாயன் றன்னைக்
குலமுறைமை தானுமறந் திகழ்ந்த வாற்றாற்
குழவியுருப் பெற்றவிதங் குறித்து நாளு
மிலகுறுமே லவர்க்கடங்கிப் பணிகு
வார்க்கே
யிகழரிய பெரும்பேறுண் டென்ன லாமே.
(38)
246. வேதமொழிந் துள்ளானும் பிரண வத்தின்
வியன்பொருளோர்ந் திலனாகி வேள்கைக் குட்டாற்
போதவருந் தியவாறு மதனா லீசன்
புத்திரனைக் குரவனெனப் போற்று மாறுஞ்
சாதலற்ற வியாதமுனி நூல்க ளன்றிச்
சகத்தோரு மெந்நாளுஞ் சாற்றக் கேட்டும்
பேதமையாற் பலர்ஞான முற்றே மென்னப்
பெரிதிறுமாந் தலைந்துதவம் பிழைக்கின் றாரே.
(39)
247. சற்குரவன் கடைக்கணருள் பெறவே நாடித்
தவம்புரிய மாட்டாமற் சாத்தி ரங்கள்
கற்குமவ ரொருநாளு ஞான மெய்தார்
கல்விவம்பன் றதன்பயனைக் கழறு கின்றேன்
புற்குடம்பை யனையவுட லநித்த மென்றும்
போதபர மானந்தம் பொருத்தத் தக்க
நற்குணஞ்சேர் குருபதமே கதியா மென்று
நன்கறியத் தகுமுணர்வை நல்கு மன்றே.
(40)
248. பரஞ்சகள மாகுவதுண்டென் றொப்பி னாலும்
பாராதி யுள்ளனவாய்ப் பகர்ந்திட் டாலு
நிரஞ்சனநிட் களத்தன்மைக் கிழிவா
மென்று
நிகழ்த்துவா ரவர்க்குரிய நீர்மை யெண்ணிற்
சுரஞ்சன்னி தீர்கைநண்ணி யதற்குத்
தக்க
தூயமருந் தொன்றுதுய்த்தோன் சொந்த வாயாற்
கரஞ்சருவி டாதுபுளி யென்றிட் டாலுங்
கனநோய்தீ ராதெனுபொய்க் கதைக்கொப் பாமே.
(41)
249. எல்லையிலா மங்கையர்தம் மின்பந் துய்த்திட்
டெழிற்பிரம சாரியெனு மிசைபெற் றோனுந்
தில்லையின்கோ புரத்தேறி வீழ்ந்தோன்
றன்னைத்
திருவாரூ ரிருந்தளித்த சீரி யோனுங்
கொல்லையிற்பாற் பசுவதனைப் பிடித்த
வேங்கை
கொண்டுவந்து விடுமாறு கூறி னோனுங்
கல்லைநிகர் மனத்தார்க்குந் தோன்று
ஞானக்
காரரெனச் சொலுமொழியைக் கழிக்கொண் ணாதே.
(42)
250. இந்திரிய போகமொன்றுந் துய்த்தி டாதார்க்
கியம்பியறி விப்பதரி தென்ப துண்மை
தந்திரமு மந்திரமும் பொறியு நெஞ்சுந்
தாண்டியப்பா லுறுஞானந் தன்னைச் சொல்லால்
வந்திடச்செய் திடலாமென் றுழைப்பா
ரந்தோ
வத்துதந்தி ரத்ததென்றும் வாய்பா டுண்டு
முந்தியமா தவப்பயன்வந் தெதிர்ந்தா
லன்றி
முனிவர்சித்த ராதியர்க்கு முற்று றாதே.
(43)
251. காரியமுங் காரணமுங் கடந்த ஞானங்
கருதுமுபா சனைப்பலத்தாற் கைவந் தப்பாற்
சீரியவத் தல்லதொரு பொருளில் லாமை
திகழ்ந்ததுவே தானாகத் தேறி நின்றும்
பாரிலுள்ள தொண்டர்திரு வடியிற்
றோய்ந்த
பசுந்துகளைச் சந்ததமும் பரவு மேலோர்
வீரியமே சரியாகு மற்றுள் ளார்தம்
விருப்பனைத்துங் கருதிமுற்றும் வீணா மன்றே.
(44)
252. தூயமறை யாதியநூற் றொகுதி யெல்லாந்
தோற்றமுமெய்ப் பிரமமெனச் சொல்லு மன்றித்
தீயனவு நல்லனவும் பகுத்தி டாமற்
செருக்கடைந்து வாயளவிற் செப்பு கின்ற
மாயமனத் தோரைமட்டும் சொல்லி டாதம்
மாற்றமுண்மை யாமாகில் வங்கு வாய்ந்த
நாயதன்புன் மலத்திலுறுங் கிருமி
தானு
நவிலுமதென் றேனவர்தா நாணி லாரே.
(45)
253. எவ்வகைய வுயிர்தொகையுந் தானே யாகி
யிலங்குமொரு பரமென்னமெய் யானுங் கண்டே
னவ்வகைமட் டுணர்ந்ததனிற் றிருத்தி
யில்லை
யருட்சீருற் றிந்திரனூ ரதற்கும் போய்மீண்
டிவ்வகிலத் தினர்க்கான நலமெல் லாஞ்செய்
தினிப்பிறவா முத்தியெய்தற் கிச்சித் தெய்த்தேன்
பௌவநடுக் கிடந்ததையே கரையென் றெண்ணும்
பண்புடையார் சிலர்நகைத்துப் பழிக்கின் றாரே.
(46)
254. எத்தனையோ மாதவத்தோர் முத்தி சேர்ந்தா
ரெனப்பலநூல் விளக்கலன்றி யிசைத்து முள்ளா
ரத்தனைபேர் களிலெவரா னாலு முன்னென்
னான்மாவப் படியிருந்த தறிமி னென்ன
வித்தரையோர்
நன்கறியச் சொல்ல வில்லை
யிவ்விதத்தாற் பிறப்பிலையென் றிசைக்க வேண்டாம்
வித்தகமெஞ் ஞானிகளை யன்றி மற்றோர்
விரும்பியவா றுடலெடுக்கை மெய்மை யாமே.
(47)
255. தீர்த்தனெழிற் சடைமுடியிற் சிலையான் மோதிச்
சிவலிங்கத் தினுந்தழும்பு சேரச் செய்த
பார்த்தனுங்கண் ணப்பனெனப் பிறந்தா
னாகிற்
பத்திநெறி யினிற்சிறிதும் பழக்க மின்றித்
தூர்த்தகுண முழுமையையுந் தணந்தி
டாமற்
றூயபர மானந்தந் தோய்ந்திட் டோர்போல்
வார்த்தைமட்டிற் பேசுநர்க்குக்
கதியு முண்டோ
மானிடராய்ப் பிறக்கிலதோர் மகத்தாம் பேறே.
(48)
256. மெய்ப்பிரம நிலையுணர்ந்து மதுரச் செஞ்சொல்
வியன்றமிழாற் றுதிக்கவல்ல மேலோர் தாமு
மிப்பிறவி தப்பிவிட்டா லினிமேற்
சென்ம
மேதுவரு மோவெனமிக் கேங்கு கின்றார்
பொய்ப்பிரமை நீங்காம லுலக வாழ்விற்
புகுந்துழன்று பரதவிக்கும் புல்லர் பல்லோ
ரப்புவிடத் துப்புருவங் கரைந்தாற்
போலு
மரியமுத்தி சேர்வோமென் றறைகின் றாரே.
(49)
257. அருணலம்பெற் றுயநினைத்தோர் சகள மூர்த்தத்
தகநிலைத்துச் சமரசவாழ் வடைந்து
மாறாக்
கருணைவடி வாத்திகழும் பெரியோர்
தங்கள்
கருத்தறிந்த வநுபூதிக் காட்சி யெல்லாம்
பருவமுளார்க் குரைக்கிலின்பம் பயக்கு
மன்றிப்
பரமார்த்தஞ் செவிகேட்கப் பகர்ந்தா லந்தோ
விருவிழியு மில்லாற்குக் கொக்கின்
கோல
மியம்பியதோர் கதையினிலு மேற்ற மாமே.
(50)
258. காமநூல் சொல்கின்றோ னிருவர்
கூடுங்
கலவிவினோ தங்களெல்லாங் கழறி னாலு
மாமவர்தம் மனமறிந்த சுகத்தைச் சொல்லா
னதுபோல ஞானநூ லறைகின் றோனு
நேமவழி பாடுநிலை மட்டுஞ் சொல்வா
னிசமான பரத்தினிடை நெஞ்ச மாய்ந்து
போமதனை யெந்தவிதம் புகல்வா னந்தோ
புகன்றிட்டா லதுவிளைந்த பொய்யா மன்றே.
(51)
259. ஞானிகட்கு விதிநிடே தங்க ளில்லை
நயந்தபடி செய்திடலே ஞாய மென்று
நானிலத்து மானிடருஞ் சொல்லக் கேட்டு
நாவளவிற் கற்றோரு நடக்கொண் ணாது
மானிகர்கண் ணார்பலர்கற் பழித்த
தன்றி
மாமியையும் புணர்ந்துநெடு மாலு மானோன்
றானிகழ்த்துஞ் சத்தியம்பொய்த் தொழியா
தங்கோர்
தனையனுயிர் பிழைத்ததெண்ணிச் சார்கை நன்றே.
(52)
260. மூர்த்தியுரு வாய்ச்சிலநாள் விளங்கி யப்பான்
முடிந்தபரம் பொருளாகு முத்தர் தங்கள்
கீர்த்தியொன்றே நிசமாகுந் துவக்கும்
போதே
கிளர்பரமநா னென்றுரைப்போர் கீழ்மை யோரே
பூர்த்தியரே யாதலினா லாமா மென்னப்
புகல்வாருண் டன்னவரோர் புருடன் றிண்தோட்
சேர்த்தியிலாக் கன்னிகருப் பமுந்தோ
யாதோர்
சேய்தந்தா ளென்றுரைக்குஞ் சிலரொப் போரே.
(53)
261. அகண்டபர சச்சிதா னந்த மன்றி
யறைகின்ற மூர்த்தியெல்லா மன்பின் பெட்பாற்
றிகழ்ந்தசித்தி முத்திபெற்ற பெரியோ
ரென்னத்
தெளியாதார் ஞானமெல்லாந் திருட்டே யாகும்
பகர்ந்தபொரு ளுபாசிப்போர் மனதிற்
கூடிப்
படிவமாத் தோற்றுகின்ற பண்பு முண்டு
சகந்தனில்வாழ் வேந்தரெனப் புவனந்
தோறுந்
தங்குகின்றா ரென்கைபெருந் தவறா மன்றே.
(54)
262. யான்பரமென் றோதியிறு மாக்கின் றோன்பா
லெத்தகைய சமயத்தோ ரேனு மெங்கள்
வான்பரமொன் றுள்ளதென்றா லுடனே யந்த
வடிவமெடுத் தன்னவரை வணக்க வேண்டுந்
தான்பரிந்து மொப்பாரேற் றண்டித்
தேனுந்
தன்வசமாச் செயல்வேண்டுந் தவப்பே றின்றி
யூன்பருந்து போல்விழிப்பா னாகிற்
றேங்கா
யொருங்குண்டோன் களாக்காய்கண் டொல்க லாமே.
(55)
263. அவதார புருடனெப் பலபேர் சொல்ல
வகிலத்தில் வாழ்கின்றோ னாரா னாலுந்
தவமார்க்கந் தொட்டுரைக்கும் மூர்த்தி
தன்னைச்
சார்ந்துமுன்னைப் பிறப்பிலுய்ந்தோன் சரதஞ்
சொன்னே
னெவராலு மளப்பரிய பரமல் லாம
லியம்புதற்கு வேறுறெய்வ மில்லை யீனப்
பவநோய்தீர்த் திடுமலது தான்கொள்
ளாது
பகர்ந்தவரை வழிபடலாற் பாவ மின்றே.
(56)
264. கண்ணனெனும் பெயர்புனைந்து நந்த கோபன்
கடைத்தலையில் விளையாடுங் கருணைச் சித்தன்
விண்ணவர்பூ மாரிபெய்யக் குதிரை
வேள்வி
விளைத்திடுமன் னவன்சபையில் விண்டு வானான்
பண்ணமைந்த நாரதனைக் குமரி யாக்கிப்
பரிந்தணைதற் காமெயினப் படிவங் கொண்டா
னெண்ணருமிவ் வாறனந்தஞ் செயலு ஞானத்
தினுக்கடுத்த யோகத்தி னியல்பு தானே.
(57)
265. தங்கடவு ளுலகில்வந்து பிறப்பா னென்கை
சைவர்முத லோர்சிலர்க்குச் சரிப்ப டாது
செங்கமலக் கண்ணனது சமயத் தோரே
செப்புமச்சொற் காரர்களுட் சிறந்தோ ராவா
ரங்கவரி லதனையொப்பா ரேக தேச
மவர்மகிமை மற்றையர்க ளரிய மாட்டா
ரிங்கறையு ஞாயமெல்லாந் தெரிய வல்லா
ரிறையொருவ னென்பவரே யென்ன லாமே.
(58)
266. அறுசமயத் துள்ளவர்கள் பகரு நூலு
மாமென்று மல்லவென்று மமையு முண்மை
பெறுமவரே ஞானியெனச் சொல்ல லாகும்
பேசுமவற் றொன்றையொப்பிப் பிறிதை யொவா
ருறுதிகொண்டு சித்திமுற்று மெய்தி
னாலு
மொருவீட்டிற் புகுந்தாலு மொவ்வாப் பண்பே
மறுவில்புகழ்ச் சங்கரன்றத் துவரா
யப்பேர்
மாதவனா தியர்வழக்கு மாண்ப தாமே.
(59)
267. வஞ்சமற்ற மெஞ்ஞானங் கைவந் தாற்போன்
மகிழ்ந்திறுமாந் துள்ளபல மாந்தர் தாமு
மஞ்சடர்சந் தனச்சோலைப் பொதியைக்
குன்றின்
மாதவனா தியரையெங்ஙன் மதித்துள் ளாரோ
கொஞ்சரென் விகழ்ந்தாற்றம் முவகைக்
கொன்றுங்
குறைவில்லை சமமாகக் குறித்திட் டாலுந்
தஞ்சபைக்கன் னோர்வரலை யவரோ லக்கந்
தனிற்போய்மீள் கையைநினைத்துத் தயங்க லாமே.
(60)
268. மெய்ப்பரத்துட் புக்கவரைப் பலநாட் சென்று
வேண்டியவ ருபாசித்தால் விளங்கு வார்கள்
செப்பவரே யெனப்பல்லோர் சொல்வா ரன்னோர்
திருவுருவா யதுவாலாத் தெளிவார் சில்லோ
ரெப்படியா யினுநலமே யதனால் முன்னோ
ரியாவரையு நித்தியரென் றியம்ப லாமாற்
கைப்பருநீர்க் கால்சமைப்ப விரும்பிப்
போற்றுங்
கன்னடிய னகத்தியனைக் கண்டா னன்றே.
(61)
வரலாறுகள்
உடம்பும், தெய்வ இயல்பு உயிரும் போல்வது
269. வேதவியா சன்பகர்ந்த புராண முன்னா
மேதினியிற் சரித்திரநூன் மிகவுண் டானா
லோதன்முற்றும் பொய்யென்போர் நரகிற்
றாழ்வா
ரொருங்குநிச மெனக்கொள்வோ ருழன்று மாய்வா
ராதகன்ற தூலத்தைச் சூக்கு மத்தை
யனைவோர்க்குந் தோன்றும்வண்ண மமைத்த தாகும்
பேதமற்ற பெரியோர்சொல் வழியிற் றேறிப்
பிறப்பறுக்க முயன்றருளைப் பெறுத னன்றே.
(62)
முடிந்த
நிலை குருவடிவ நாட்டமே யென்பது
270. அலகிலவா கியசமய விகற்ப நூலு
மாராய்ந்து சந்தேகித் தழுங்க வேண்டா
மிலகுமவற் றுள்ளபயன் போக மோட்ச
மென்பனவே யவ்விரண்டு மினிது தோற்றுந்
தலமுரைக்கிற் குருபாதத் துணையே
யாகுஞ்
சத்தியஞ்சத் தியம்பிறிதோர் சார்பு மில்லை
பலபிறவி யெடுத்துழலும் வினையிற்
றோய்ந்து
பரதவிப்போர்க் கிந்தமொழி பயன்ப டாதே.
(63)
271. ஏகபர தத்துவமாந் றெய்வத் தின்பா
லியைதருவல் லபமாகி யிலங்குஞ் சத்தி
போகமுத்தி யென்னுமிரு கொங்கை யோடு
பொலிகின்றா ளவ்விரண்டும் புசிக்க நாடுந்
தாகமுடை யவரேமெய்த் தவத்த ராவார்
தக்கவண்ணம் பெற்றுமகிழ் தகையோ ரெல்லாந்
தேகமொடு வாழ்ந்தாலும் வான நாட்டிற்
சேர்ந்தாலுங் குமாரரெனத் திகழ்வா ரன்றே.
(64)
272. சித்திமட்டும் பெற்றோரு முத்தி யொன்றே
சேர்ந்தோரு மவ்விரண்டுந் திகழ வாய்ந்த
புத்தியினர் தாமுமுண்டென் றுரைப்பார்
பல்லோர்
புகலுமவை மெய்யாகிற் போர்வேன் மைக்கண்
ணத்திநிகர் மடவார்பற் பலர்தா மீன்ற
வருமைச்சேய்க் கொருமுலைப்பா லருத்தி யொன்றில்
வைத்திருக்கும் பாலமுதம் புரப்பா
ரென்னும்
வார்த்தையுமிம் மாநிலத்தில் வழங்கு மன்றே.
(65)
273. சுருதிமுடி வாகியவத் துவித ஞானந்
துலங்கும்வண்ணம் பாரதியைத் தொடர்ந்து வென்ற
பெருமுனிவன் சித்திமிகச் செய்தா
னென்கை
பிறங்குறுமிவ் வுலகிலவன் பேசு மாற்றில்
வருமவர்கள் போன்றசில ரதுவீ ணென்ன
வரைந்தவற்றைத் தெரிந்தசில மனித ரந்தோ
குருவருளை மறந்துவம்பிற் கூட்ட
மிட்டுக்
கொக்கரித்துயாம் பிரமமெனக் குதிக்கின் றாரே.
(66)
274. தடையறுமெய்ச் சித்திபெற்றே முத்தி சேர்கை
தருமமெனத் தவம்புரியுந் தன்மை யோருக்
கிடையிலிறு மாப்புவந்து கெடுக்க
மாட்டா
தேன்றமட்டி லநுபூதி யெய்தி னாலும்
விடையுகைத்தோ னாதியர்போல் விளங்கு
மாண்பே
விழைந்திடைவா ரேனையர்தாம் வெறுமை யோரில்
கடைபடுநா ளினுந்தமையே மதித்தே மாந்து
கரும்பகடூர் சமன்வலையிற் கட்டுண் பாரே.
(67)
275. மிக்கதுற வினைமதியா தருணைக் கோயில்
விலைமகளைப் பிடித்திழுத்த மேலோ னந்நாள்
வைக்கழுவிற் றீமூட்ட லாதிச் சித்தி
வாய்ந்தமையாற் சிவலிங்க வடிவ மானான்
மைக்கருங்கண் ணரசிவலி தணைய வேட்டு
மனமுருகா தோடினனவ் வலியில் பண்பாற்
றிக்கனைத்து மறியவுயி ரொடுசெந்
தீயிற்
றேகமெரி தரமாய்ந்தான் றெரிந்துய் வீரே.
(68)
276. அண்டங்க ளத்தனையும் படைத்த பெம்மா
னடிமையெனப் பலர்போற்று மாண்மைச் சித்தி
மண்டலத்தி லிழிவாமென் றிகழ்ந்து
முத்தி
வாழ்வடைவே மெனக்களிக்கு மாந்தர் தன்மை
புண்டரிகக் கண்ணனிகர் மன்னர் மன்னன்
புணர்ச்சிமட்டும் விழைந்தொருநற் பூசை தன்னைக்
கண்டவர்க ளவன்மனைவி யென்னப் போற்றிக்
கரங்குவித்தற் பழுதெனல்போற் கருதற் காமே.
(69)
277. செயற்கரிய செய்வாரே பெரிய ரென்னச்
சீரியவள் ளுவன்றருநூல் செப்பக் கேட்டுங்
கயற்கண்மட மங்கையொரு சட்டி தன்னிற்
கனியிரண்டு பெற்றமையுங் கருதா ராகி
யியற்புலவர் பலர்சரிதங் களையும்
பொய்யென்
றிகழ்ந்துபரோட் சத்தினையே யெதிரா நம்பி
மயற்கடலிற் குளிப்பவரைப் பழிக்க
வேதன்
வாயொருநூ றாயிரங்கள் வகுத்தி லானே.
(70)
278. பஞ்சவிட யங்களுமே ஞானத் துக்குப்
பகையென்பா ரதுகிடக்கப் பருப்ப தம்போன்
மிஞ்சவநு பவிப்பதற்கு ஞான மின்றி
விளங்காதிம் மாற்றமுழு விகற்பம் போலுங்
கஞ்சனுயி ருண்டவன்றா னளவின் மேனி
காட்டிமனை தொறுமயின்ற காமப் பேறு
மெஞ்சலற வாயரிட்ட வமுதெல் லாமுண்
டேப்பமிட்ட வாறுமற்றோ ரியற்றொண் ணாதே.
(71)
279. ஆடகம்பெண் மண்ணெனப்பல் பெரியோர் தாமு
மருமறையா தியநூலு மறைப வர்மூன்
றேடணைகள் பொல்லாவென் றஞ்ச வேண்டா
மேமகிரி யெனப்பொன்செ யிறுமாப் பெய்தி
மூடருங்கண் மடவாரும் வந்து வந்து
மோகிக்கும் விஞ்சைகற்று முந்நீர் சூழு
நாடனைத்துங் கொள்வானும் வணங்க வாழு
ஞானியைக்கண் டாற்பெரிது நடுங்கு மன்றே.
(72)
280. எச்சமயத் தேவர்களுந் தானே யாகு
மியல்புணர்ந்து மிகபரமா மிரண்டி னூடும்
பொச்சமுறா மெய்க்கீர்த்தி நிறுவ
வேண்டிப்
புலருகின்ற ஞானமுள்ளான் புந்தித் தன்மை
யச்சமொன்று மருவாமல் கண்ட மாகி
யாகமவே தத்தினப்பா லவிரு மென்னு
நிச்சயம்நன் குணர்வார்பொற் பதந்தோய்ந்
துள்ள
நிலத்துகளென் றலையவிட்டு நீங்கி டாதே.
(73)
281. ஈசனடி யவர்மனத்து ளொடுங்கி னானென்
றியற்றமிழ்ப்பா வலிக்கிழவி யிசைத்த தன்றி
நேசமுற்றுப் பலசமயத் தினருஞ் சொன்னார்
நிசமான ஞானமிதே நெறிவே றில்லை
மோசம்வரு மென்றுசற்று மலைய வேண்டா
முப்பொழுது மவர்பணியின் முயன்று போற்றிறி
பாசவினைக் கயிற்றினது பந்த நீக்கிப்
பழிக்கரிய முத்தியின்பம் பயக்கு மன்றே.
(74)
குமாரத்
தன்மையின் தோற்றுவாய்
282. தாசநெறி யாதியவா நான்கு மார்க்கந்
தவத்தோர்க்குண் டெனப்பலநூல் சாற்றி னாலு
மீசனுக்கெல் லாவுயிருந் தாச மார்க்கத்
தியைந்தனவே யவற்றினுக்கு ளிணையில் லாத
நேசவருட் சத்தியொடு கூடி யாண்டு
நிசஞானந் தரப்பெற்று நிகழும் பாகம்
பேசரிய புகழுடைக்கு மார ராமப்
பிராணிகளின் குணநான்கு பிரிவு மாமே.
(75)
நால்வகை
மார்க்கங்களின் விவரம்
283. அருளடைந்தும் பிறரேயொத் தவிர்வோன் றாச
னறநெறிகாத் தேனையவை யழிக்க வல்ல
தெருளுடையோன் குமாரனுள்ளத் திச்சை
யாவுஞ்
செய்துமுடித் திடதுணிவோன் றிறற்ச காயன்
சருவமுந்தன் மயமாகக் கண்டு தேறிச்
சாட்சியுமா நிற்பவனே சன்மார்க் கத்தோன்
மருவுமிந்த நால்வர்களுங் குமார
ரென்றே
வகுத்துரைப்ப தெம்மதுநூல் வழக்க மாமே.
(76)
284. தொல்லுலகி லெச்சமயத் தெவர்க்கெவ் வாறு
தோற்றுகின்ற மூர்த்திகளுந் தூய தாய
நல்லுணர்வா லாராயிற் குமார ரென்றே
நவில்வதற்கு ஞாயமுண்டு நாச மில்லா
வில்லுருவப் பரந்தனருட் சத்தி யோடு
மேவியப்பா லுருவமொடு விளங்கும் பண்பாற்
புல்லுமகல் பூமிக்குக் குமர னாமேற்
புகலுமவ ரெவரதற்குப் புறம்பா வாரே.
(77)
285. தந்தையே மகனாகப் பிறப்பா னென்னச்
சாற்றுகின்ற வழக்கொன்றுஞ் சகத்தி லுண்டு
விந்தைசேர் குணரூப மாதித் தன்மை
மிகக்காட்டு வள்ளுவனார் வேத நூலுஞ்
சிந்தையாற் றக்கோரைத் தகவி லாரைச்
சேயுணர்த்து மென்றுரைக்குஞ் செவ்வே ளானோ
னேந்தையே யென்றுரைக்கச் சைவர் நாணா
ரிவ்விதத்தாற் குருபரமென் றியம்ப லாமே.
(78)
286. குருவலது கதியிலையென் றுரைக்குஞ் சொல்லைக்
கோதென்னார் சமயமுற்றுங் கொள்ளு மெம்மைத்
திருவருளுக் கயலாமென் றிகழ்வா ருண்டோ
சிசுவருந்தக் குறியில்வடுச் செய்கின் றோரும்
வருகுரவன் பிறர்வதைப்ப மாண்டா னென்னும்
வம்பர்களு மொப்பலன்றி மங்கை நல்லார்
தருசுகமே மிக்கதென்போர் தாமும்
பொன்முன்
சதமகனுக் குரைத்ததென்னுந் தகையுள் ளோரே.
(79)
287. ஒருவேத் தொருஞாயத் தன்னைக் கைக்கொண்
டோதுவமற் றியாவுமிக ழுணர்வி னோரு
மருள்வாழ்வு பெற்றுவக்கு முலகத்
தோங்கு
மனந்தவே தப்பயனு மாமென் றொப்பி
மிருகாதி களைவதைத்துண் பதனை மட்டு
மிகுபிழையா மென்றிகழ்வேண் வீணா வேனேற்
சருவாதி காரமும்பெற் றுள்ள தெய்வத்
தத்துவமொன் றுயர்ந்ததென்கை தவறா மன்றே.
(80)
288. அவ்வவர்த மெண்ணம்போற் றொண்டரி யார்க்கு
மருள்புரியத் தகும்பெருமா னகிலந் தன்னி
லிவ்வறிவு தோற்றுமட்டுந் திருத்தி
யாண்டா
னிகபரசா தனத்தினிச்சை யிசையச் செய்தான்
றெவ்வடரும் வடிவேற்கைக் குமார னென்னத்
திருவுருக்கொண் டென்னதுபுன் சிந்தை யூடுற்
றெவ்வளவோ ஞாயங்கள் பகர்ந்தான் முன்னின்
றிடுநாள்வந் தாற்றிகழு மெனது மாண்பே.
(81)
289. வானுமற்றைப் புதங்க ணான்கு மாகி
வகுக்குமிவை யல்லாத மயமு மான
கோனுளனென் றுணர்ந்துகுக னாக நாடிக்
கும்பிட்டே னவனாகிக் கூறத் தக்க
வேனுறுமூர்த் திகள்பலவு மாகி யென்றன்
வேடமொடுஞ் சிலகாலம் விளங்கி னானா
லியானுமதென் றுரைக்குமட்டுந் தெளிந்தே
ணல்லா
லியானேயென் றிடுமிறுமாப் பெய்தி லேனே.
(82)
290. சதுர்வேத சித்தாந்தந் தன்னி லுள்ள
சட்சமயத் தெய்வமுமாய்த் தள்ளொண் ணாத
பொதுஞானக் குரவனுமாய்ப் பலவா றாய
புறச்சமயத் தேவருமாய்ப் போக மோட்ச
மிதுதானென் றுணர்த்தியென்னு ணிற்குந்
தெய்வ
மியாதுகொலோ வதனையன்றி யில்லைத் தெய்வ
மெதுவேனும் வேறுதெய்வ மிருக்கு
மானா
லிப்பொழுதே தலைவெடிக்கு மெழுகூ றாயே.
(83)
291. தெய்வமிக ழேலெனமுன் னௌவை சொன்ன
திருமொழியின் பயனுளத்திற் றிகழ்ந்த பின்னர்
பொய்வழக்க ரானசில சமயத் தோர்மேற்
புறங்கூறி னாலுமவர் போற்றுந் தெய்வ
முய்வளிக்கத் தக்கதல்ல வென்னப்
பேசா
வுணர்வுற்றேன் கௌமார மொப்ப வாயே
சைவவயி ணவகாணா பத்தி யாதிச்
சமயமிரு மூன்றினையுந் தழுவி னேனே.
(84)
மனத்தின்
இயல்பு
292. மூர்த்திசா ரூபமிந்த வுலகி லுள்ள
முனிவர்சித்த ராதியர்கண் முன்பிற் காட்டிக்
கீர்த்திசந்தி ராதித்த ருள்ள மட்டுங்
கிருட்டிணன்போற் பெறுமாறு கிடைக்கு மென்னக்
கார்த்திகைசேய் சொல்லியபின் சிவனு
மாலுங்
கணநாத னாதியருங் கழறி
னார்கள்
வார்த்திகநா யனையமன மவற்றைச் சற்று
மதியாமற் பொறிவழிபோய் மாழ்கிற் றன்றே.
(85)
இந்நூலைப்
பாராட்டற்குரியார் இவரெனல்
293. செம்புவெள்ளி பொன்னிரும்பு வங்கம் போலுந்
தெய்வமின்றென் றுழைத்துழலுஞ் சிறியோர் கேட்டு
நம்புவதற் காயிவைநான் பகர வில்லை
நாமகட்குத் தெரியுமிந்த ஞாயம் மிந்நா
ளம்புவியிற் கலிபுருடன் வயதொன்
றாயிற்
றவன்பருவ முதிர்ந்தாலு மரியூன் றின்னுஞ்
சிம்புணிகர் மாதவத்தோ ரேக தேசஞ்
செனித்திடலுண் டவருவப்பிற் றிளைக்க வென்றே.
(86)
294. கலிபுருடன் வயதொறுநூ றான போதுங்
கற்கிமுகத் துடனொருவன் கைவா ளேந்தி
வலிமலிபா தகர்குலவே ரறுப்பா னென்கை
வருகால நுவல்பனுவல் வார்த்தை யன்றோ
வொலிதரு மாதவர்காலத் தினுக்குள்
ளஞ்சா
ருமைகணவன் பதத்திலதற் குரியோன் மாய்ந்தான்
புலியதள்வாய் தருமவனுஞ் சித்தன்
கண்டீர்
புண்ணியபா வமுந்தவத்திற் பொன்றிப் போமே.
(87)
295. அறுசமயத் துளமூர்த்தி யனந்த பேத
மவற்றிலொவ்வொன் றினுக்குமவ்வா றாகு மென்கை
யிறுதியிலா மறையாதி நூல்கள் கூறு
மியம்புமவை யுடையாரு மேற்றுக் கொண்டார்
மறுவில்சம்பு பட்சமணு பட்ச மென்னும்
வழக்குமுண் டிவ்வகையனைத்தும் மதித்து நோக்கி
லுறுதியுட னுபாசிக்கு முயிர்க ளெல்லா
முரியதெய்வ வடிவாத லுண்மை யாமே.
(88)
296. சொந்தமென வொருமூர்த்தி தன்னைக் கொண்டு
சொல்லுமற்றை யவற்றையிகழ் துடுக்குத் தன்மை
யெந்தவிதச் சமயிகட்கு முதலி லுண்டா
மெதிர்காணல் வேண்டிமுயன் றிளைப்பா னாகி
லந்தவகை யத்தனையு மதுவா யப்பா
லனைத்துமொரு பரமேயென் றவிரு மந்நா
டந்தமது மூர்த்தியுருத் தாமே யான
சரதம்வெளி யாய்ப்பொதுவாந் தகையுண் டாமே.
(89)
297. பத்தியெனும் வித்தினிடை ஞான மென்னும்
பயிருண்டாய்ச் சித்திமுத்திப் பலங்கண் நல்கு
மித்திறமை தவமுதிர்ந்தோர்க் கன்றி
மற்றோர்க்
கிசைத்தாலும் விளக்கமுறா தீசன் வந்து
புத்தியினுட் கட்டுணலே ஞான மென்னப்
பொருவில்புகழ் வாதவூர்ப் புனிதன் சொன்னான்
சித்தியவன் றானாதன் முத்தி யின்னஞ்
செனியாது வாழ்வதென்கை திண்ணந் தானே.
(90)
298. தானுமதென் றுள்ளபடி யறிந்த ஞானத்
தவத்தோருஞ்
சிலநிமித்தஞ் சனிப்ப
துண்டு
நானுமதென் றவர்களுரை யாவிட் டாலு
நடையுணர்த்துஞ் சொல்லுணர்த்து ஞாலத் துள்ளார்
வானுலகுக் கேகிடல்போ லவர்க ளீண்டு
வரலுமுண்டென் றளவில்பல வகைநூல் சொல்லுந்
தேனுறழ்முத் தமிழ்விரகன் முதலோர்
சாட்சி
செனித்தாலும் புகழ்க்கடலிற் றிளைப்பா ரன்றே.
(91)
299. பத்தியினில் வரகுணன்போ லுயர்ந்தோ ரில்லை
பாருலகும் வானுலகும் பரவு மேன்மைச்
சித்தியினிற் றேவகிதன் மகனே மிக்கோன்
செனியாமற் சிற்பரத்திற் சேர்வ தாய
முத்தியினில் வாதவூர் முனியே மேலோன்
முழங்குதமிழ்ப் பாவலங்கன் மொழிந்து சூட்டுந்
துத்தியத்தி லருணகிரிப் புலவன்
றக்கோன்
சொல்லுமிவை நான்குமொன்றாத் தோய்ந்தா ரின்றே.
(92)
300. குன்றரும்பே ரகங்காரப் புலவ ராண்மை
குலைந்துநிலை தடுமாறக் கூறு நூலி
னன்றறிவார் களிற்கயவர் செல்வ ரென்ன
நவின்றமொழிப் பயனிசமே ஞான முள்ளார்
மென்றகைய முலைமடமார் தம்மைத் தோயும்
வேளையினு மரணமெண்ணி மெலிவார் மற்றோ
ரன்றழிக்குஞ் சேற்றுமம்வந் தீர்க்கும்
போது
மருமைமகன் பாலுமுண்மை யறைந்தி டாரே.
(93)
301. மேனிலைத்தொல் சீருணர்த்துந் தன்மைத் தாய
வியன்றிருவா சகப்புலவன்
விளம்பு மாறு
ஞானிகட்கெல் லாவுயிரும் புதல்வ
ராமா
னலம்விளைத்துத் தீங்கொழிக்கை ஞாய மாகும்
நானிலம்பொய் யெனப்பிதற்றி யுண்டு
தூங்கி
நடந்திறந்தா னெனப்பலபேர் நவிலச் சென்றால்
வேனிருபன் றன்னிலுந்தாழ் வாவ தன்றி
விரும்பியவா பெறும்வீடும் வெறும்வீ டாமே.
(94)
302. உடலாதி யவைமூன்றுங் குரவற் கீந்தா
லுபதேசம் பெறலாமென் றுரைப்பார் பல்லோ
ரிடல்போலும் பெரியநிலை மற்றொன்
றில்லை
யிந்தவித மநுபூதி யியைந்தாற் றோன்று
மடல்வேழ முகன்குகனா தியகு மார
ராரேனு மொருவருரு வதனை நாடி
விடல்வேண்டு மத்தனையு மொருங்கு
விட்டு
மிகத்துதித்தா லதுதனக்குண் மேவு மன்றே.
(95)
303. சகுணபர நாட்டமெளி தாமென் றெண்ணித்
தள்ளிவிட்டான் மோசம்வருஞ் சரதஞ் சொன்னேன்
முகுளமலர் வாவியரு கழுதன் றுய்ந்தோன்
மொழிந்தனவெல் லாம்பரமன் முக்கட் சீரும்
பகுகனல்வாய்ப் பாம்பணியுஞ் சூல
மாதிப்
பல்பொருளு மேயவன்றான் பரத்துட் போங்கால்
வெகுமனிதர்க் கப்பேறே யமையச் செய்தான்
வேற்றுநிலை யோரெவரவ் விதம்செய் தாரே.
(96)
304. உருவபர நாட்டமுற்றுஞ் சமய வாதத்
துள்ளனவே யெனவுமவை யொன்றுந் தோயா
வருவநிலை ஞானிகட்கே யெனவுஞ் சொல்வா
ரதனிலிதுண் டிதனிலதுண் டறையக் கேண்மோ
கெருவமுறு பார்த்தனடி பட்ட வேடக்
கிழவனெங்கு நிறைந்திலனோ கிறிக்கா மக்கா
பொருவுசிலர் பகரருவ நிறைந்த தாகிற்
பொய்த்தேவ ருண்டெனவும் புகல்வார் கொல்லே.
(97)
305. யாவருக்கு மொருபொதுவா யெங்கு மேவி
யிருக்குமந்தப் பரம்பொருண்மெய் யெவரெவ் வாறெங்
காவலுற்று நாடிடினுந் தவமே லிட்டா
லவர்க்கவ்வா றருள்புரியு மகிலத் துள்ள
சீவருக்கு நலஞ்செய்வார் முத்திப்
பேறுந்
தீங்கிழைப்பார் விழுநரகுந் திருப்பி டாதாற்
றாவரத்தொன் றினைச்செகுக்கு மதற்கு
மொப்பாத்
தவத்தோரை யதுவெனுஞ்சொற் றவனா காதே.
(98)
306. பாவபுண்ணி யங்களெனும் வினையிற் றோய்ந்து
பலவாறு சுழலுமுயிர்ப் பகுதிக் கெல்லாஞ்
சீவன்முத்தித் திசையடைந்து பிறவா
முத்தி
சேர்வதற்கு மேலான செல்வ மில்லை
யாவதுபெற் றிடற்கனந்த முயற்சி சொல்வா
ரவற்றினுக்கு ளருளொன்றே யதிக மாகுந்
தேவர்தம்மூர்த் தலைவாழ்வுங் கசக்குஞ்
சிந்தைச்
சீரியர்க்கே யிந்தவுண்மை திகழு மன்றே.
(99)
307. முன்னைமறை யாதியநூற் றொகுதி யாவு
மொழிதருமெஞ் ஞானத்தின் முடிவே தென்னிற்
றன்னையறிந் ததன்பின்னர் தலைவற்
கண்டு
சார்ந்தருள்பெற் றுடன்கலக்குந் தகவே யாகு
மின்னைநிக ரிடையார்க்கு மிதுவே
ஞாயம்
விளம்புமிவற் றொருபாதி மேவி வாடு
மென்னையுமோர் பொருளாக மதிக்கின்
றோரு
மிருப்பாரென் றேதுணிவுற் றியம்பி னேனே.
(100)
ஞான
காண்டம் முற்றிற்று.
நூற்பயன்
அறுசீர்க்
கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
308. தேன்றுளிக்கு மலர்சொரிந்து திருவாரா
தனம்புரியுஞ் சிறப்பு நல்கும்
வான்றுதிக்கு
பெருவாழ்வு மகத்தான
சித்தியெட்டு மருவச் செய்யுந்
தோன்றுபவுந்
தோன்றாவுந் துகளில்பரம்
பொருளாய சூட்சங் காட்டு
மூன்றுவகைக்
காண்டத்தான் முடியுமிந்தக்
கவுமார முறைமை நூலே.
கௌமார
முறைமை மூன்று காண்டம் கவி 300.
வேலும்
மயிலும் துணை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக