வெள்ளி, 25 செப்டம்பர், 2026

மனுநெறித் திருநூல்

                  வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த

மனுநெறித் திருநூல்

அறத்துப்பால்

பாயிரம்

1.தெய்வ வணக்கம்

1.         ஓம்புலகா யாகா வொருவன் றிருவருளே

யாம்புகநூற் குந்துணையா மே.

(1)

2.         சிந்தையொடு கண்ணுந் திகழத் திகழ்விக்குந்

தந்தை மலர்த்தாளே சரண்.

(2)

3.         வாழ்த்துநர்க்கு வேண்டும் வரமளிக்க வல்லாற்கே

தாழ்த்துவது மேலோர் தலை.

(3)

4.         யமன்வருமுற் றாயனையாற் கேன்றபணி செய்து

தமமொழிக்கை நல்ல தவம்.

(4)

5.         குலவுபல கோடியாண்ட கோளகமுந் தன்னு

ளிலகவைத்துள் ளானே யிறை.

(5)

6.         உருவ மறவாதா ரூறொழிக்கு முண்மைப்

பெருமையன்றா னாதிப் பிரான்.

(6)

7.         வேட்கை யறக்கொடுத்து வீட்டுள்வைக்கு மெய்க்குரவன்

றாட்கருதும் வாழ்வே சமம்.

(7)

8.         நந்தவொன்றைக் கொன்றருந்தா நன்றெறியோர் பாலிறைவன்

வந்தருள்வான் றானே வரம்.

(8)

9.         மனமறியப் பொய்த்துவக்கா மாதவர்க்கு வாய்க்குங்

கனமுழுது முன்னோன் கலன்.

(9)

10.       அஞ்சலளித் தாண்டருளு மம்மானுண் டென்பவரே

வஞ்சமறப் பெற்ற மனு.

(10)

2. குரு வணக்கம்

11.       அமிழ்தக் கடலொருமூன் றன்ன மதுரத்

தமிழ்வகுத்தோன் நந்தமக்கோர் தாய்.

(1)

12.       வேத முனிவோனு மெய்ச்சரிதம் பற்பலசொல்

சூதமுனி வோனுந் துணை.

(2)

13.       பல்லின் முதுவாயாற் பலநீதி யுந்தொகுத்துச்

சொல்லினளை யெள்ளார்சொற் சொல்.

(3)

14.       இப்பா ருலகறிய வேழெழுவர் தம்மைவென்றோன்

முப்பால்வெண் பாட்டே முதல்.

(4)

15.       ஆறுநெறிக் கும்பொதுவா யப்பா லருணெறியைக்

கூறுமவ னேநங் குரு.

(5)

16.       கொல்லா நெறியே குணமா மெனக்கூறு

நல்லார் பலரும் நமர்.

(6)

17.       ஏழு வகைப்பிறப்பி லியாதொன்று மெய்தாரா

வாழுநர்க்கெல் லாமியான் மக.

(7)

18.       சித்தியொடு முத்தியென்னுஞ் சீர்பெறவே நாடுமுண்மை

யுத்தியுளார் நம்ம துயிர்.

(8)

19.       ஆவி யெனவுடலு மம்பரத்துட் போங்கதிச்சீர்

கூவினரெல் லாநங் குழாம்.

(9)

20.       வல்லபொரு ளுண்டெனுஞ்சொன் மாறாத வாக்குடைய

நல்லவர்க்கெல் லாமடிமை நான்.

(10)

3. உலக வாழ்த்து

21.       நீரிற் பொலிகார் நிறமேகம் வந்தளபிற்

பாரிற் பொழிக பரந்து.

(1)

22.       ஈச னருட்பேற்றா லெச்செயலும் வல்லதவ

நேசர்மிக வாழ்க நிலத்து.

(2)

23.       கல்விக் கடலின் கரைகண்ட வந்தணர்தாஞ்

செல்வியொடு வாழ்க தினம்.

(3)

24.       கொடுங்கோ லரசர் குலுமழிக்குங் கொற்ற

நெடுங்கோன்மன் வாழ்க நிதம்.

(4)

25.       வட்டியினி லூதியத்தில் வஞ்சகஞ்செய் யாவணிகர்

நட்டியின்றி வாழ்க நயந்து.

(5)

26.       உதவச் சலியா வுழுதொழிலோ ரெல்லா

மதகயம்போல் வாழ்க மகிழ்ந்து.

(6)

27.       கொன்று நுகர்வேடர் குணுங்கர் முதலோரு

நன்றுநுகர்ந் தெய்துகமெய்ந் நார்.

(7)

28.       மாடாடு கோழிபன்றி மச்சமுத லெவ்வுயிருங்

கோடாது வாழ்க குளிர்ந்து.

(8)

29.       குன்றுமுத லைஞ்ஞிலத்துக் கோயிலினுங் கோதில்விழா

வென்று நடக்க விசைந்து.

(9)

30.       நன்மைமுற்று மோங்கி நவையாவு நாசமெய்தித்

தொன்மைநிலம் வாழ்க தொடுத்து.

(10)

4. நூன் மாட்சி

31.       முன்பனந்தம் நூல்கண் மொழிந்தேன் மனுநெறிப்பே

ரின்பத் திருநூ லிது.

(1)

32.       அறமுதலா முன்னோ ரறைந்தபய னான்கின்

றிறம்விரித்துச் சொல்லுந் தெளித்து.

(2)

33.       எவர்மகத்துங் கொல்லவொண்ணா தென்னுந் துணிவே

நுவலுறுநூ லியாவுமென்முன் னூல்.

(3)

34.       எண்முகந்தாய்ந் தோதென் றிசைத்தோன் குமரபுரிச்

சண்முகப்பேர் வண்மைத் தவன்.

(4)

35.       வருக்கக் குறட்குரைசெய் வாய்த்தவசி தானுந்

தருக்கமிடா தாமாமென் றான்.

(5)

36.       ஏய விதுபகர்தற் கேற்றுத் துணிந்துளநான்

றூயதிரு நெல்லையில்வந் தோன்.

(6)

37.       என்பேர் பலவா றிசைப்பார்க ளானாலுந்

தன்பேர் முருகதா சன்.

(7)

38.       பன்னிருபே தச்சமயப் பத்தரையுங் கொன்றருந்தா

நன்னிலையெய் திற்பழியே னான்.

(8)

39.       காமநலங் கைப்பக் கவிதையின்பங் காட்டுறும்வெண்

டாமரையா ளேயென் சகா.

(9)

40.       வல்லா ரெனையிகழ வாஞ்சித் தருட்செயலே

யெல்லாமென் னீர்மைவிடா ரே.

(10)

ஆகச் செய்யுள் 40.

பாயிர முற்றிற்று.

 

 

அ. அறத்துப்பால்

5. கொல்லாமை

41.       அறத்தி லறங்கொல்லாமை யாமென் றறியுந்

திறத்தினர்க்கே வுண்மைத் திரு.

(1)

42.       இரக்கமிலா மாந்தர் கியலுணர்ந்தோர் கூடி

யரக்கரெனப் பேரிட் டனர்.

(2)

43.       கொல்லா விரதங் குறியாதார் செய்ததவ

மெல்லாம் பயனிலவ மே.

(3)

44.       வேதங்கொல் வேள்வி விதிக்குமென நம்புமவர்

போதங்க ளத்தையும் பொய்.

(4)

45.       தன்னைக் கொலற்கிசையான் றானொன்றைக் கொல்வதுபோற்

பின்னைமற்றொன் றுண்டோ பிழை.

(5)

46.       எவ்வுயிரு மீசற் கிருப்பிடமா மென்றுணரான்

கௌவுபெழ்வாய் நாயிற் கடை.

(6)

47.       கொல்லா நலம்வளர்க்குங் கூர்ப்பிலவ ரெத்தகைத்தாம்

வல்லாண்மை யெய்திடினு மால்.

(7)

48.       கொலைபோலும் பாவமொன்று கூறுதற்கின் றென்பார்

தலையாவா ரென்னத் தகும்.

(8)

49.       ஈசனெதிர் வந்துமற்றோ ரின்னுயிரைக் கொல்லெனினு

மாசகன்ற சீரியரொப் பார்.

(9)

50.       கொல்லா நெறியிற் குழம்பாதார் குற்றமுற்று

நல்லாறே யென்பார் நமர்.

(10)

6. புலையாடாமை

51.       காய்ந்தமலந் தின்னுங் கரம்பன்றி யிற்கடையே

மாய்ந்தபிணத் தூனருந்து பார்.

(1)

52.       கொன்றுவிற்குந் தீமைக் கொழுகொம்பே யாகின்றார்

றின்றுகளி கூறுஞ் சிலர்.

(2)

53.       தெய்வங் களிக்குமெனத் தீயூன் படைக்குமவ

ருய்வதின்றென் றோர்ந்தனர்நல் லோர்.

(3)

54.       புண்ணுண்பா ரியாரும் புலையரெனத் தேர்ந்தொருவார்

கண்ணுணர்ச்சி யாவுங் கடை.

(4)

55.       சேயி லினிதாத் திகழ்சிலவற்றூ னுமுண்பார்

நாயி லிழிந்த நரர்.

(5)

56.       தன்னுடற்புண் சிந்துந் தசைநுகரா வாறென்னோ

வன்னபல வுண்ணு மவன்.

(6)

57.       போதன்மனு வாதியரைப் புன்புலைய ராக்கினரே

சீதமுந்நீர்ப் பாரிற் சிலர்.

(7)

58.       சங்கமத்தூ டொன்றன் றசையருந்தச் சொல்லியவன்

பங்கயத்தோ னேனும் பதர்.

(8)

59.       ஊனருந்தா வாறிவ் வுலகத் தினர்த்திருத்து

மானமுற்றோன் பேறே வளம்.

(9)

60.       தம்மவுட லன்னவற்றைத் தாமருந்தா ராமாகி

லெம்மதத்தோ ரேனுமுய்வா ரே.

(10)

7. வருத்தாமை

61.       மிக்கோர் வருந்தி வெறுக்கத் தகாதனசெய்

தக்கோர் தகையே தகை.

(1)

62.       தம்மைமதித் தஞ்சுமவர் தங்களைப்பல் வாறழச்செய்

பொய்ம்மையிடை நல்லோர் புகார்.

(2)

63.       சேவு பரிபகடு செப்பு மிவைமுதல

யாவும் புதல்வரொப்ப வே.

(3)

64.       காதரிதல் பீசநைத்தல் காயிரும்பி னாற்சுடுதல்

பாதகமே யென்னப் படும்.

(4)

65.       உலகுடையான் செய்தவற்றை யூறுசெயற் கொப்பா

ரிலகு முணர்ச்சி யினர்.

(5)

66.       கையாற் கவணதனாற் கார்முகத்தாற் கல்லெறிதல்

செய்யானே நல்லோர்தஞ் சேய்.

(6)

67.       வெறிவிளைக்கை வஞ்சகத்தால் வேறொருவர்க் கீவா

னறிவில் விளையாட் டகம்.

(7)

68.       தன்னடலாற் சம்மதியாத் தையலைத்தொட் டாலிழிவு

மன்னனுக்கு மெய்துறுமம் மா.

(8)

69.       கைந்நீட்டி நக்குவார்க் கான்முளையைக் கைக்கொளலுஞ்

செய்ந்நீதிக் காகாத தே.

(9)

70.       வௌவு தனதுயிர்போன் மற்றவறைக் காணுமவ

னெவ்வுயிர்க்கு மூறுசெய்யா னே.

(10)

8. உண்ணாமை

71.       கொல்லுந் தொழிற்செய் கொடியோர் மனையகத்து

நல்லுணவுந் துய்க்கை நவை.

(1)

72.       கஞ்சா வரக்கபினி கள்ளா தியமுழுது

நஞ்சாமென் றோர்கை நலம்.

(2)

73.       காளான்முள் ளங்கி முதலியன கற்றுணர்ந்தோர்க்

காளானா ருண்ணா தவை.

(3)

74.       கந்த மருந்துநரிற் காயிலையுண் பார்கணல்லா

ரிந்தவிதந் தேர்வ தெளிது.

(4)

75.       வஞ்சித் தொருவன் மனமெரியக் கொண்டுணுமூ

ணஞ்சிற் கொடியதென்ன லாம்.

(5)

76.       இவ்விதத்தீ துண்டாய தென்றுணரா வொன்றையுண்ணார்

செவ்விதினோர்ந் துள்ள சிலர்.

(6)

77.       பெரிதிரக்க மென்றுநித்தம் பேசாத் தவத்தோர்

பரிகலமுங் கொள்ளப் படா.

(7)

78.       வேள்வியினிற் கொன்றுணும்பொய் வேதியரூண் வேண்டாமை

தாள்விழையும் மேலோர் தகை.

(8)

79.       மிக்கிறைகொண் டார்வமுறும் வேந்தன்மனைச் சோறுணலிற்

குக்கன்மலந் தின்னல் குணம்.

(9)

80.       கள்ள வணிகர் களத்துமிடாக் காராளர்

வெள்ளமுதெண் ணிற்கரும்பாம் வேம்பு.

(10)

9. செயல்வகை

81.       தாய்தந்தை யாசான் றவத்தோர் புலவர்மன்னன்

காய்தலின்றிக் காக்கை கடன்.

(1)

82.       மனைவி மகவடிமை வான்சுற்றம் மாடா

டனையவற்றைத் தாங்க லறம்.

(2)

83.       தக்கோ ருரைத்திடினுந் தன்சரதந் தப்பாதான்

மிக்கோர் குழாத்தினுக்குண் மேல்.

(3)

84.       எத்தகவோ ரேற்றாலு மீவதறிந் தீயு

மத்தகவே நல்லோர்க் கணி.

(4)

85.       ஈத லறமென் றிளஞ்சேய்பா லெஃகளித்தா

லேத மிகவிளையு மே.

(5)

86.       கோறுபழி யெய்தாக் கோயிறொறுங் கும்பிடுத்

றேறு மனத்தார் செயல்.

(6)

87.       மட்டு மலரால் வரன்றா ளருச்சனைசெய்

திட்டுண்டு வாழ்த லிதம்.

(7)

88.       ஓருயிரை மன்றொன் றுணத்துவக்கி னால்விலக்கல்

சீருடைய மேலோர் திறம்.

(8)

89.       எவ்விதத்தா லேனு மிறைவனருட் பேறடைய

வௌவிமுயல் வாரே மனு.

(9)

90.       எந்நூன் மொழியுநன்றென் றேமாந் திடாதுயர்ந்தோர்

மெய்ந்நூ லுணர்ந்தொழுகன் மேல்.

(10)

10. கள்ளாமை

91.       கொல்லத் துணியுங் கொடியவரல் லார்களவில்

செல்லத் துணியார் திறம்.

(1)

92.       உயிர்வெறுத்துக் கள்ளுமவ னுள்ளமற்றோ ரெய்துஞ்

செயிர்குறித்துச் சோர்வடையா தே.

(2)

93.       நச்சி யொருவர்புணர் நாரியின்ப நாடுமவ

னெச்சிலென்று நாணாத தென்.

(3)

94.       சூது முயன்றுபலர் துன்புறக்கண் டின்புறுவார்

வாதுபுரி கள்வரொப்பா வார்.

(4)

95.       ஒன்றாத வொன்றை யுளதாகக் காட்டுதலுங்

குன்றாப் பெருந்திருட்டுக் கோள்.

(5)

96.       உறுக்கிப் பறிப்பார்க் கொருகோடி மேலே

யிறுக்கிவரி கொள்ளு மிறை.

(6)

97.       வாய்கனியப் பேசி வருவார் பொருள்கவரு

நாய்கரெல்லிற் கள்ளு நரர்.

(7)

98.       ஆலயத்துப் பொன்றிருடி யார்வமுற வார்பலருங்

கால்படா கைத்தொழினீங் கார்.

(8)

99.       குரவர் பொருள்கவருங் கோதுடையார் தம்பால்

விரவுதுயர் கூறறியே மெய்.

(9)

100.    பாடன்மறை கூறும் பயனியாவும் பற்றுநர்பொய்

யாடலினுங் கள்ளா தவர்.

(10)

11. பெண்மைச் செயல்

101.    தாய்தந்தை யாதியர்தற் காகான் றனைக்கொளென்னில்

வாய்துணிந்தொப் பேனெனலா மாது.

(1)

102.    கற்புநெறி நிற்குங் கடனுடைய மாதர்மற்றைப்

பொற்பினர்தஞ் சேர்க்கை புகார்.

(2)

103.    ஈசன் வடிவாத்தன் னின்கொழுநற் கொள்வாளே

மாசகன்ற ஞான மகள்.

(3)

104.    கல்வியறி வாதியசீர்க் காளைமணந் தோய்வாளே

நல்வினைப்பெண் ணென்பார் நரர்.

(4)

105.    தற்கொண்டு தாயிற் றயையினனாத் தாங்குகொண்கன்

சொற்கொள்ளன் மானார் தொழில்.

(5)

106.    நல்வழியிற் சோர்வடையா நாயகனைச் சேர்ந்தொழுகுஞ்

செல்வமின்னே தெய்வத் திரு.

(6)

107.    கொண்கன் பிழைதிருந்திக் கூர்ப்படையக் கோயிறொழும்

பெண்களுக்க தன்று பிழை.

(7)

108.    பற்றிழந்த மேலோர் பகர்ந்த பலநூல்கள்

கற்றிடலு மின்னார் கடன்.

(8)

109.    வழுநடையாற் செய்யு மகக்கொலையின் மற்றோர்

கொழுநனைக்கைக் கொள்ளல் குணம்.

(9)

110.    தன்னுயிரிற் சீர்த்தகொண்கன் றன்னை யிழந்ததையல்

பின்னுமுயிர் வாழ்க்கை பிழை.

(10)

12. செய்யாமை

111.    வித்தனைய மாதவத்தோன் வெவ்வேறு தெய்வமுண்டென்

பொய்த்தகையிற் சார்தல் புரை.

(1)

112.    அந்தணர்க்குத் தன்னுடலொப் பாமென் றறியாதூன்

வெந்தருந்தல் பாவ வினை.

(2)

113.    தீயவரி கூழறுபாழ்ஞ் செய்யுடையார் கையிறுத்தல்

பேயனைய மன்னர் பிழை.

(3)

114.     பொய்த்துலையும் பொய்ப்படியும் பொய்ச்சரக்கும் பொய்ம்மொழியும்

வைத்துவிற்கை நாய்கர் மறம்.

(4)

115.    ஈகையின்றிச் செட்டி யெனப்பொருள்மிக் கிட்டிமகி

ழோகை யுழுதொழிலா னூறு.

(5)

116.    தன்னை மிகவிழையத் தக்கமனை நோவமற்றோர்

மின்னையணை வான்பிறப்பு வீண்.

(6)

117.    தன்கொழுந னல்லான் றனைமருவ நாணாத

மின்கொடுமை யேபழிப்பின் மேல்.

(7)

118.    சற்குருவாந் தந்தைபகர் மாற்றந் தவறுமக

னற்குணத்தா ரெள்ளு நரன்.

(8)

119.    நூல்பெரியர் மன்னரன்னார் நூறுதரஞ் சொற்றிடினு

மால்பெருக்கல் செய்யார் மகர்.

(9)

120.    செய்யாமை தேறுந் தெளிவெளிய தல்லவுண்மை

பொய்யாதார் நெஞ்சிற் புகும்.

(10)

ஆகப் பாயிரமுள்பட அதிகாரம் 12க்குச் செய்யுள் 120.

 

13. பொய்யாமை

121.    மெய்யுணர்வா னெங்கும் விரவியுறு மாறுணாவார்

பொய்யுரைக்கு நீரிற் புகார்.

(1)

122.    கொலைகளவு காமமுதற் கூறு மவற்றிற்

றலைமையுறச் செய்வதுபொய் தான்.

(2)

123.    பொய்யா விரதமுடைப் புண்ணியர்பாற் போயொதுங்கு

மெய்யா மவைமுழுது மே.

(3)

124.    செய்யுநவை யுரைக்கிற் சீரியருந் தேர்வேந்தும்

வெய்யுறுகண் செய்யார் மிக.

(4)

125.     பொய்தணந்து வாழ்வான்பாற் புன்மைமுற்றும் போய்ப்பொருவின்

மெய்தழையு மேன்மேலு மே.

(5)

126.    பொய்த்த லுணரிற் புரைதீர்ந்த புண்ணியர்தஞ்

சித்தமுஞ்சற் றெய்துஞ் சினம்.

(6)

127.    நல்லோ ரிடுக்கணற நாரியர்தம் மூடல்குன்றச்

சொல்லோர்பொய்க் கில்லைத் துயர்.

(7)

128.    வான்மதியை வேண்டு மகர்க்கதெய்தா தென்னுமொழி

மேன்மதியோர் சொல்லார்மெய் மெய்.

(8)

129.    பொய்யுலகென் றான்ற புலவோ ருரைப்பதொக்கு

மெய்யுணர்வார்க் கில்லை வினை.

(9)

130.    பொய்யாமை நோற்கிற் புகழெய்தும் புண்ணியத்தோர்

வையார்மெய் வீடும் வரும்.

(10)

14. இன்சொல்

131.    முன்சொல் லறங்கண் முழுமையினு மிக்கதெண்ணி

லின்சொல் லுணர்ந்துரைப்ப தே.

(1)

132.    வன்சொல்லா னீகையினு மாண்புடைய தாராயி

னின்சொல்லான் கொள்ளு மிசை.

(2)

133.    தோகை மயிற்கழகாத் தோற்றுதலிற் றோமறுநல்

லீகைக் கணிசொல் லினிப்பு.

(3)

134.    சொல்லினிமை யில்லாள் சுரமடந்தை யானாலுங்

கல்லினிற்செய் பெண்ணிற் கடை.

(4)

135.    இன்சொல் வழங்கு மியல்புடையா னியாவும்வல்லான்

றன்சொல்லுங் கேட்கத் தகும்.

(5)

136.    இன்சொற் பயனறியா னென்செயினு மன்னவற்குப்

புன்சொல்லே நல்கும் புவி.

(6)

137.    ஆய்வா ரறிவி லமைவா னருட்பெருக்கந்

தோய்வாரே சொல்வாரின் சொல்.

(7)

138.    புன்சொற் பொறுப்பதஞ்சும் போர்வீரர் நேர்வார்சொல்

வன்சொற்கே யின்பமுறு வார்.

(8)

139.    இனிமை பகரறியா னேற்றமுற்று மெண்ணிற்

றனிமுலைப் பெண்போலுந் தகை.

(9)

140.    காம முதனோன்பு காறுளசீ ரியாவிற்கு

மியாமறிபூ ணின்சுவைச்சொல் லே.

(10)

15. புறங்கூறாமை

141.    புறங்கூற வானொருவன் புன்மை முழுது

மறங்கூறு மாண்டபின்ன ராண்டு.

(1)

142.    புந்தி யுடையார் புறங்கூறார் போதும்வசை

வந்திகத்துஞ் சார்தன் மதித்து.

(2)

143.    முற்கூறி யெள்வார் முரணிற் கொடிதுமன்னோ

பிற்கூறும் பொல்லார் பிழை.

(3)

144.    நட்பின் முகமன் வினறயல்போய் நக்கிகழ்வான்

பெட்பிலுயர் மாண்புடைத்தாம் பேய்.

(4)

145.    புறங்கூறல் கேட்டுவப்பார் போய்த்தமக்கு மந்தத்

திறங்கூற லோராச் சிலர்.

(5)

146.    போகமுத்தி யென்ப பொருந்தா வொருவர்புறம்

பாக மொழியு மவர்க்கு.

(6)

147.     தம்மை யொருவரெள்ளுந் தன்மையெண்ணா தென்கொன்மற்றோர்

செம்மைமறைத் தோதுஞ் சிலர்.

(7)

148.    புறத்தியலுயர் தீமையினைப் போல்வதொன்று நாடா

தறத்திலுப்ப நூலோ ரகம்.

(8)

149.    கொடுங்கோன்மன் கொன்றுண் குரவான னார்நிந்தை

நெடுங்காலஞ் சொல்லு நிலம்.

(9)

150.    பின்னுரைக்கும் பொல்லாப் பிழைவெறுக்கும் பெட்பினர்பான்

மன்னுமுண்மை யாவும் வரும்.

(10)

16. கல்வி

151.    கல்விக் கடலைக் கடந்தவரல் லார்க்குயர்ந்தோர்

சொல்விற் பனந்துலங் காது.

(1)

152.    எல்லா வலியு மெளிதியற்றப் பெற்றாலுங்

கல்லா னுணர்ச்சி கடை.

(2)

153.    போதங் கடந்த புனிதன் புலவோனா

வேதம் பகர்ந்தான் விழைந்து.

(3)

154.    சித்திமுத்தி யெய்தினரிற் செய்யுணுவன் றார்புகழே

நித்தியமா மன்னு நிலத்து.

(4)

155.    கல்வி யுடையாரே கண்ணுடையா ரென்றுலகோர்

சொல்விளக்கு நூலுஞ் சொலும்.

(5)

156.    கற்றோர்தம் வாய்நரர்வாய் கல்விநலம் பயிலா

மற்றோர்வாய் புள்விலங்கின் வாய்.

(6)

157.    கல்லா வொருவன் கடலுலகை யாண்டாலும்

பொல்லா நரகம் புகும்.

(7)

158.    மாதிரத்து மாதவர்க்கு மன்னருக்குங் கற்றுணர்ந்தோ

ரோதினன்றிக் கீர்த்தி யுறா.

(8)

159.    உலகியற்கை பற்பலகற் றொள்ளியசொற் கல்லா

ரிலகெழிலா லெப்பயனு மில்.

(9)

160.    கல்வி யழகமையாக் காளையருங் கன்னியரும்

வல்விருகத் தாண்பெண் வகை.

(10)

17. பயனில் சொல்லாமை

161.    உலகைத் துறக்கு முணர்வுடையா னுண்மை

விலகுறுமா றோதுநர்சொல் வீண்.

(1)

162.    கள்ளூ னுகர்மதத்தோர் காதன்முற்றும் வேறியல்பிற்

கொள்ளூகஞ் சொல்லிற் கொளார்.

(2)

163.    நிலமழச்செய் வேந்தனுக்கு நீதி யுரைக்கிற்

குலவுகதிர் வாளாற் கொலும்.

(3)

164.     பொய்த்துப் பொருள்விளைப்பான் புண்ணியர்சொற் கேளான்வேல்

வைத்துறுக்கு வார்க்கொருங்கீ வான்.

(4)

165.    சூது முயல்வார்க்குஞ் சோரம் புரிந்துவக்கு

மாதுநல்லாட் கும்பகர்சொல் வம்பு.

(5)

166.    பொய்வழியிற் சென்று புலருமத வாதிகட்குத்

தெய்வமிக ழேலெனுஞ்சொற் றீது.

(6)

167.    முக்குணமு மும்மலமு மூன்றுடலுந் தாண்டுநிலை

பக்குவமில் லார்க்குரைத்தல் பாழ்.

(7)

168.    கூரம் பனையார் குளிர்சாந்த நீரவர்க்கு

வீரம் புகட்டுமொழி வீண்.

(8)

169.    நாய்மலந்தின் றாங்கூ னயப்பார் செவியினல்லோர்

வாய்மறுக்குஞ் சொற்புகுதா வாம்.

(9)

170.    வியனுலகிற் றேவரன்ன மேன்மக்க ளியாரும்

பயனில்லை சொல்லார் பரிந்து.

(10)

18. ஆசை

171.    ஆனை நிகர்தீங் ககிலலோ கத்திலையென்

றோசைபெறு நூல்பலசொல் லும்.

(1)

172.    பிறப்பறுக்க வேண்டிப் பெரிதிடைவீ ராசை

யறப்பெறிற்றா னேயஃ தறும்.

(2)

173.    பேராசை யென்னும் பிணிவிட் டொழியாமுன்

றீராது தீநேர் சினம்.

(3)

174.    மண்ணாசை மன்னர் மகுடம் பலதுணிந்து

விண்ணாடர் காண விழும்.

(4)

175.    மங்கையர்தம் மாசை வலைப்பட் டிறந்தவர்க்கோர்

சங்கை யுரைக்கத் தகா.

(5)

176.    பொன்னாசை போலும் புலையாட்டொன் றில்லையெனச்

சொன்னார்தஞ் சொல்லே துணிவு.

(6)

177.    பூசைவிழைந் தாளும் புனிதனரு ளுற்றார்க்கே

யாசையெனு நோய்முற் றறும்.

(7)

178.    எல்லா முதவவல்லா னிச்சையின்றி யாதொன்று

மில்லாதா ராசையற்றோ ரே.

(8)

179.    இச்சை யழியி லிதய மொடுங்குமிச்சீர்

பிச்சைப் பெரியோர் பெறல்.

(9)

180.    வேண்டாதார்க் கியாவும் விரைதளிக்கும் வீறுடைய

தாண்டானை நீங்கா வருள்.

(10)

19. கோபம்

181.    கொடுங்கனலு நாணவருங் கோப முழுதும்

விடுங்குணமே மேலினுக்குண் மேல்.

(1)

182.    கோபமொன்று மின்றிக் குளிர்ந்த மனத்தகத்திற்

பாபமுற்று நீங்கும் பரிந்து.

(2)

183.    தீபம்போற் றோன்றிச் செறிகாட்டுத் தீயனைத்தாங்

கோபம் பயக்குங் கொலை.

(3)

184.    செஞ்சிலைக்கை வேளனையான் றீயசினத் தானாகில்

வஞ்சியன்னார் நாடார் மதித்து.

(4)

185.    கொங்கை வனப்புங் குணக்கேட்டாற் குன்றுமென்பார்

மங்கையர்சூழ் மாரனொப்பா வார்.

(5)

186.    கொல்லுந் தொழிலோர்மேற் கோபமிகக் கொண்டொறுத்த

லொல்லுந் தவத்திற் குரம்.

(6)

187.    நீதியற்ற கோப நெடியபழி யீந்திடல்போன்

றேதிலது நல்கு மிசை.

(7)

188.    பொல்லார்தம் மேற்சினவாப் புண்ணியரும் போர்வேந்து

நல்லார்மேற் கொள்ளார் நசை.

(8)

189.    இடனறிந்து கோபித் திசைவளர்க்கு மேந்தல்

கடலுலகிற் கோர்பெரிய கண்.

(9)

190.    அறிவுடைய கோபத் தறம்வளரு மாபோற்

பிறிததனா லுண்டாம் பிழை.

(10)

20. வஞ்சம்

191.    எஞ்சலற வெங்கு மிறைவனுள னென்றுளஞ்சா

வஞ்சரையே சேரு மறம்.

(1)

192.    உள்பவரை யாளு மொருவனுள னென்றுணர்ந்தா

ரெள்பவற்றுள் வஞ்சமொப்ப தில்.

(2)

193.    வஞ்சமிலா மாந்தர் மறங்கொலைபொய் யாதியவை

கொஞ்ச மெனினுங் கொளார்.

(3)

194.    யாவருளத் தில்வஞ்ச மில்லையோ வன்னவரே

தேவரினுஞ் சிர்த்த சிலர்.

(4)

195.    வஞ்ச மொழிநுவலா மாதவத்தோர் மாண்பறியு

நெஞ்சர் சிலரே நிலத்து.

(5)

196.    ஈச னருட்டிறந்தேர்ந் தெய்தநண்ணு மிடினர்தந்

நேசம்வஞ்சி யாதே நிசம்.

(6)

197.    பக்குவமுண் டாக்கப் பழையோர் பகரல்வஞ்ச

மொக்குமென்பா ரன்றே யுது.

(7)

198.    மன்வஞ்சஞ் செய்யின் மகிதலமெல் லாங்கெடுமற்

றென்வஞ்ச மியார்செயினு மென்.

(8)

199.    வஞ்சகர்தம் முள்ளு மறைந்திருந்து காண்பானே

யஞ்சலன்பர்க் கீயு மவன்.

(9)

200.    வஞ்சமறக் கற்றமைந்து மாதவஞ்செய் வார்க்கெளிதே

நெஞ்சமறு முண்மை நிலை.

(10)

21. நன்றியறிதல்

201.    குன்றின்மேற் றோன்றுங் குலவிளக்குப் போல்வாரே

நன்றி யறிந்த நரர்.

(1)

202.    கண்ணாதி நல்குங் கருணை யுடையானை

யெண்ணாரே நன்றி யிலர்.

(2)

203.    நன்றி மறப்பார் நவைகுறித்து நல்லோர்நூ

லொன்றிடத்துஞ் சொல்லா துறா.

(3)

204.    திகழ்ச்சி பெறவொருவர் செய்ந்நன்றி யுன்னா

ரிகழ்ச்சி விரிக்கிறயே மியாம்.

(4)

205.    இரந்தாராப் பெற்றநன்றி யிற்றெனினு மொல்கிக்

கரந்தாரே நாயிற் கடை.

(5)

206.    நன்றினத்தின் மாண்புடைந்து நன்றி யறிதன்மை

யென்றிடுஞ்சொற் கொள்ளா ரிலர்.

(6)

207.    சீரியனா முன்னொருவன் செய்ந்நன்றி கூறுநனைப்

பாரிடத்துஞ் சொல்வார் பலர்.

(7)

208.    நன்றி மறக்குமவ னால்வகைச்சீ ரெய்திடினும்

பொன்றி மறையும் புகழ்.

(8)

209.    நன்றி விழைவார்க்கே ஞாலமளித் தாண்டழிக்கு

மொன்றினுக்கு ளொன்ற லுறும்.

(9)

210.    மறக்கரிய நன்றி மதித்தாரே யென்று

மிறக்கரிய சீரெய் தினர்.

(10)

22. அழுக்காறு

211.    இளிசா லழுக்கா றிகபரத்தி லியார்க்குங்

களிகொன்று வாட்டுங் கலி.

(1)

212.    அழுக்காறொன் றில்லா னமைந்த வளவி

லொழுக்கா றுவப்பெய் துறும்.

(2)

213.    அருள்விருப்ப மின்றி யழுக்கா றுயர்த்து

மருள்விளைக்கிற் றுன்பே வரும்.

(3)

214.    தன்கே டுணரான் றனக்கிசையா தானெய்தும்

வன்கே டுவக்கு மகன்.

(4)

215.    பொல்லா ருவகை பொறாமற் புழுங்குவதோர்

நல்லா றெனவுணர்ந்தோம் நாம்.

(5)

216.    கல்விதவஞ் சித்திமுத்திக் காதலர்க்க வழுக்கா

றல்விளைக்க மாட்டா தறம்.

(6)

217.    பொருந்தார்மேற் கொள்ளும் பொறாமையினு மேன்மை

தருந்தாள் புரியத் தகும்.

(7)

218.    அறங்கெடுப்பான் கொள்ளு மழுக்காற்றிற் றீதோ

மறங்கொடுங்குங் கூற்றின் வலி.

(8)

219.    அருவருப்பின் மிக்க தழுக்காறென் றாய்ந்தோர்

திருவருட்பாங் கெய்துஞ் சிலர்.

(9)

220.    பொல்லாப் பொறாமைப் புலர்ச்சியறப் போக்கினரே

வல்லாண்மை யெய்திமகிழ் வார்.

(10)

23. மறப்பு

221.    மறப்பிற் றழையு மயலொழிந்தோர்க் கில்லைப்

பிறப்பிறப்பென் றோதும் பிணி.

(1)

222.    சிறப்பிற் சிறப்பாய செல்வமெதென் றாயின்

மறப்புமுற்று நீங்கு மனம்.

(2)

223.    மனத்தின் மறப்புயர்ந்த மானிடரை மான்புள்

ளினத்தினொடு கூட்ட லிசைவு.

(3)

224.    புறப்பொருளு மேனையவும் போத வுணர்ந்து

மறப்பறலே மோன வரம்பு.

(4)

225.    ஈச னருள்வலியா லீபவற்று ளேற்றமெண்ணி

னேசம் மறவா நினைப்பு.

(5)

226.    வல்லா னுயிர்தொகைக்கு மாயமறப் பால்வினைப்பாங்

கெல்லா மருத்துகின்றா னே.

(6)

227.    இறப்பொழித்திட் டெங்கணும்வா ழீச னருளான்

மறப்பொழிவே வீட்டிலெய்தும் வாழ்வு.

(7)

228.    சிறியார் பிழைமறக்குஞ் சீரியர்க்கே யெய்து

நெறியோர்ந் துவக்கு நினைப்பு.

(8)

229.    பாவப் பயன்மறப்பாம் பண்புணர வல்லாரே

யாவற் பெருக்கிலமி ழார்.

(9)

230.    பரக்கு மறதியின்றேற் பாவித் திறைபா

லிரக்குநரு மியாண்டு மிலா.

(10)

24. சோம்பல்

231.    சோம்ப லுடையார் துயிற்காவார் கொல்லுலகத்

தாம்பயன்மற் றொன்றுமெய்தி டார்.

(1)

232.    ஊழூழென் றோது மடிச்சொல் லுலகிகழத்

தாழூழிற் சார்வார் தம.

(2)

233.    தம்முயற்சி யூழாத் தயங்கும் விதமறியா

ரெம்முறையோ ராயினும்வீ ணே.

(3)

234.    சோராது நாளுந் துணிந்து முயலவல்லா

ராராத போகமில்லை யாம்.

(4)

235.    இடியன்னா ரின்றெனினு மேற்றமுற நாடி

மடியின்றிச் செய்வான் மகன்.

(5)

236.    தவவலி முன்னூழுந் தடுமாறு மென்னு

மவர்பலவா நோற்றிட் டவர்.

(6)

237.    கல்வி யறிவதனாற் காசினியின் றாய்போல்வார்

சொல்வினவில் சோம்பற் றொடா.

(7)

238.     போர்விழைவான் கொண்டுவிற்பான் பூமியுழு வான்முதலோர்க்

கேர்விளைக்குந் தாளே யினிது.

(8)

239.    நெஞ்சதனா லொன்றை நினைப்பதற்குஞ் சோம்புநிலை

தஞ்சமென் பார்க்குமுண்டே தாள்.

(9)

240.    எள்ளிலொரு மாவளவு மிச்சையிலா ரெத்தொழிலுந்

தள்ளி யிருக்கத் தகும்.

(10)

25. நாணம்

241.    பாக்குமுலை மங்கைநல்லார் பற்றுநாண் பற்றலரைத்

தாக்குரத்தார் கொள்ளத் தகா.

(1)

242.    கிளியனையார் நாணமுற்றுங் கேளி வினோதக்

களியில்விடல் வேண்டுங் கடன்.

(2)

243.    சோறிரக்க நாணுந் துறவோனித் தொல்லுலகின்

மாறிப் பிறக்க வரும்.

(3)

244.    சவைக்கோழை யாற்புலமைத் தாழ்ச்சியுறும் வாயான்

கவைக்காகார் தம்மிற் கடை.

(4)

245.    நவைநிறுவும் வாதாட நாணா வொருவன்

சவைநகைக்கப் போய்மீள் சவம்.

(5)

246.    பூணணிமென் காழகத்தாற் பூத்தும் புலையாட

நாண்முறா தார்பலரு நாய்.

(6)

247.    வல்லா ரடைந்தபயன் வாய்த்ததின்றென் றொல்குநரே

நல்லாரி னல்ல நரர்.

(7)

248.    இல்லாப் பெருமை யிசைத்துளதாக் கூறுநர்வாய்

பொல்லாங்கு வாழும் புழை.

(8)

249.    குன்றொடொக்குந் தீமை கொடுக்குங் குறைதீர்ந்த

நன்றொருக்கா னல்குமந்தோ நாண்.

(9)

250.    நாணுமா றிற்றென்றும் நாணாவா றிந்றென்றுங்

காணுறுவார் கற்றோர்க ளே.

(10)

26. பேதைமை

251.    உலகளித்துக் காக்குமவ னுண்டிலையென் றோதுங்

கலகர் மடமைக் கலன்.

(1)

252.    பகலை யிரவென்று பானாளி லார்க்குங்

ககமனையார் கொள்ளார் கலை.

(2)

253.    செத்தாரைக் கண்டுஞ் சிறிதுந் திடுக்கமுறாப்

பித்தாரே பேதமைநோய்ப் பேய்.

(3)

254.    ஆறிரண்டாண் டாளென் றளிப்பா ரறுபதெனக்

கூறிடென்பார் பேதைமையென் கொல்.

(4)

255.    மாதை நிலத்தை மணிமாழை யைமதிக்கும்

வாதைமுற்றும் பேதைமையின் மாண்.

(5)

256.    ஓருயிரே பல்வா ருடலெடுக்கு மென்றுணரார்

பேருணர்ச்சி யாவும் பிழை.

(6)

257.    தெய்வமொன்றென் றோதிற் சினந்து பலவென்னும்

பொய்வழக்கர் நெஞ்சிலுறும் புண்.

(7)

258.    கடகமதி யனையாள் கண்ணருட்சீர்க் கல்வி

மடமைநோய் தீர்க்கு மருந்து.

(8)

259.    முலையாள்வான் பொய்சொலினு முற்றுநம்பிச் சற்று

மலையாமை மாதர்க் கணி.

(9)

260.    பிறந்த பயனடைந்தார் பேதைமைநோய் தீர்ந்தா

ரிறந்தயர்வார் தீர்கின் றிலார்.

(10)

27. அச்சம்

261.    நெஞ்சகத்து நீங்கா நிமலன் றிருவருளுக்

கஞ்சலே மேலோர்க் கணி.

(1)

262.    நற்றவர்க்குங் கற்றவர்க்கு நானிலத்தோர் சொல்பழிக்குங்

கொற்றமன்ன னஞ்சல் குணம்.

(2)

263.    முன்னவனுக் கஞ்சா முரணுடைய மானிடரு

மன்னவனுக் கஞ்சல் வழக்கு.

(3)

264.    ஓகையுற்றுத் தேரை யுளமுலையப் பற்றரவந்

தோகைமயிற் கஞ்சுவ துண்டு.

(4)

265.    தோற்றமறு சிற்றிடையார் தூநகைவேட் டுள்ளுருகார்

கூற்றனுக்குள் ளச்சங் கொளார்.

(5)

266.    செஞ்சா றொழுகுஞ் செருக்களத்திற் செத்தொழிதற்

கஞ்சாமை வீரர்க் கழகு.

(6)

267.    அஞ்சுவ திற்றென் றறியு மறிவுடையார்

தஞ்சுகத்திற் கில்லைச் சமம்.

(7)

268.    பொற்பில் வலியிற் புகழின்மிக்கோ னானாலுங்

கற்பினருக் கஞ்சல் கடன்.

(8)

269.    அஞ்சத் தகாதவற்றிற் கஞ்சுமவ னாண்மைகுன்றிக்

கொஞ்சத் திகழ்ச்சி கொளும்.

(9)

270.    அனைத்துலகுஞ் செய்தபிரா னஞ்ச லளித்தாலுங்

கனைத்துவக்கார் நன்குணர்ந்தோர் கள்.

(10)

28. இரக்கம்

271.    கருணை நலஞ்சிறிதுங் காட்டாத் தொழிலோ

ரிருளடைந்த நெஞ்சத் தினர்.

(1)

272.    ஈசன் றனைப்பெரிய னென்றெவரு மேத்தவைத்த

தாசகன்ற தாம்பே ரருள்.

(2)

273.    தானோ ருயிர்க்கிரங்கான் தன்மேற் சகம்படைத்த

வானோ னிரங்கானம் மா.

(3)

274.    இரங்கலுறா நெஞ்சரினு மேற்றமே யாகு

மரம்கன் முதலாம் வகை.

(4)

275.    ஓருயிர்மற் றோருயிரா லூறுபடக் காணின்மிகச்

சோருவது மேலோர் தொழில்.

(5)

276.    தன்னுயிர்க்கொப் பாகுஞ் சதகத்துயிர்முற் றென்றுணர்வான்

மன்னுயிரை யோவான் வரன்.

(6)

277.    கொல்ல லொழிக்குங் குணத்தார்ச் சுமக்கநச்சு

மல்லன் மலிபார் மகள்.

(7)

278.    முத்திவீட் டேற்று முதற்படியா குங்கருணை

நத்தினர்க்கெல் லாமடிமை நாம்.

(8)

279.    பல்லுயிர்கட் கொல்லும் பதிதர்க் கிரங்காரே

நல்லுணர்விற் சீர்த்த நரர்.

(9)

280.    இரக்கம் பெரிதுடையா ரிச்சைமுற்று மீசன்

றரக்கடவ னீதுசர தம்.

(10)

29. அன்பு

281.    அன்பே பரமென் றறிவறிந்த மேலோர்கள்

முன்பேச லுண்மை மொழி.

(1)

282.    அன்பொன் றிலாதா னரியபல வாற்றிடினுந்

துன்பொன்றி வம்பினிற்றுஞ் சும்.

(2)

283.    இன்ப மினிப்பென் றிசைப்பா ரெவற்றினுக்கு

மன்பல தில்லை யது.

(3)

284.    பேரன்பிற் றோய்ந்த பெரியோரே பெற்றறியாச்

சாரஞ்சேர் முத்தியடைந் தார்.

(4)

285.    வேதத்தாற் காணரிய மெய்ப்பொருளு மன்பரது

போதத்திற் றானே புகும்.

(5)

286.    வன்பாளர் செய்யும் வலியதொழி லத்தனையு

மன்பாளர்க் கோரணுவே யாம்.

(6)

287.    அன்பினிலை யெற்றென் றாயி னருணாடித்

தன்பிரிய முற்றற் றது.

(7)

288.    காமமட்டி லன்புவைத்த கன்னி கனற்குதித்தா

லியாமதனை யென்னெனச்சொல் வேம்.

(8)

289.    அன்பி லருள்வந் ததிலுதிக்கு மானந்தந்

துன்ப முழுதுஞ் சுடும்.

(9)

290.    தாயனையா ரன்பறிந்து தாமவர்தந் தாள்வணங்கி

நாயனையா ராயிருக்கை நன்று.

(10)

30. பொறை

291.    நிறைநீர்ப் புவியில்விண்ணி னேடினு மெய்தாதே

பொறைபோலும் வண்மைப் பொருள்.

(1)

292.    உரியாள் கலைகவர்கா லுள்ளம் பொறுத்த

பெரியான் பெருமை பெரிது.

(2)

293.    பொறுத்தார் புகழவர்தாம் பொன்றிடினும் பொன்றா

நிறுத்தாய்ந் துரைக்கு நிலம்.

(3)

294.    குறைதீர்ந்து சாலக் குளிர்ந்து மணக்கும்

பொறையேமெஞ் ஞானிகட்காம் பூண்.

(4)

295.    கள்ளப் பொறுமை யெனினுங் கனன்றிகழ்வா

ருள்ளத்திற் கோடி யுயர்வு.

(5)

296.    ஆலயத்தை மேலவரை யானாதி யைக்கெடுப்பார்

பாலனலார் தம்பொறுமை பாழ்.

(6)

297.    பொறுக்கும் விதமும் பொறாவிதமுந் தேரார்

சுறுக்கு மவர்தம்மிற் கடை.

(7)

298.    பொறுப்பா ரெளியரெனப் புண்படுத்தி லோர்கா

லொறுப்பா ருலகழிப்பா னொத்து.

(8)

299.    பொறுக்குந் தறையுமுச்சிப் போது மணற்சூட்டா

லொறுக்குமுயிர் கோடி புக.

(9)

300.    பொறையின் புகழும் புவனமுற்றும் போற்று

மிறையின் செயலுமொப்பா மே.

(10)

31. அறிவு

301.    அறிவின் பெருமை யறியு மறிவே

பிறிதிணையின் மாதவத்தின் பேறு.

(1)

302.    அட்டமா சித்திமுதலாகு மனைத்தினுமேல்

பட்டதறி வென்னப் படும்.

(2)

303.    அறியாமை யன்ன வழுக்கு மறிவொத்

தெறிபே ரொளியு மில.

(3)

304.    எல்லா மறியு மறிவே யிறைவனெனச்

சொல்லாதா ரில்லைத் துணிந்து.

(4)

305.    எத்திருவி னும்பெரிய தீடிலருட் பேரறிவே

சத்தியந்தா னென்றார் தவர்.

(5)

306.    அறிவி லரெத்தனைபே ராக்க மடைந்தாலுங்

கிறிவிளைப்ப ரிச்சொற் கிடீர்.

(6)

307.    அண்ண லருள்பே ரனைத்தினுமே லாமறிவே

திண்ண மிதுசத் தியம்.

(7)

308.    மையனைய நெஞ்சத்து மானிடருந் தாமறிந்த

மெய்யரெனச் சொல்வார் மிக.

(8)

309.    அறிவுள்ளார்க் கின்னலும்பே ரானந்த மாமாற்

பிறிதுரைப் பதேனோ பிரித்து.

(9)

310.    ஒன்றென்று மூன்றென் றுரையாதா ருள்ளுணர்ச்சி

யென்றென்றென் றெண்ணுமொளி யே.

(10)

32. மானம்

311.    வானம் பெரிது வகுத்துரைக்கும் பல்பொருளின்

மானப் பெரிது மகர்க்கு.

(1)

312.    ஆன பயன்முற் றடைந்தமைந்த ரானாலு

மானமொன்றில் லாரேன் மரை.

(2)

313.    ஈன முழுதற் றிலங்குபெரு மைக்கமைத்த

மான மெனும்பேர் வளம்.

(3)

314.    வல்லா னருளை மறவாத மானமொன்றே

கொல்லா நெறித்தவத்தோர்க் கு.

(4)

315.    கொற்றவர்க்கு மற்றொருவன் கோற்கீழ்ப் படல்போலுங்

குற்றமில்லை மாய்தல் குணம்.

(5)

316.    மான மிலாதவற்றை மான மெனமதித்தீண்

டீனமுற்ற மாந்தருமுண் டே.

(6)

317.    மானம் வரிற்சில்லோர் மடிவார் சிலருழைத்தவ்

வீனமறக் காண்பா ரிகத்து.

(7)

318.    பன்றியன்னார் தம்பார் பசுவன்னார் கைகுவித்து

நின்றிடலு முண்டே நிலத்து.

(8)

319.    மலைச்சுற் றரையாய் வயிறு கடலாய்

விலைப்பட் டுழலாரே மேல்.

(9)

320.    ஒப்பார்மற் றில்லா வொருவனுக்கு மானமுண்டு

செப்பா ரறிவார் சிலர்.

(10)

33. அடக்கம்

321.    அடக்க மனத்தினரை யான்றவஞ்ச ரென்பார்

மடக்கருத்து வாய்ந்த மகர்.

(1)

322.    அடக்க முறுமனத்தா ராக்கங் கருதிற்

கடக்களிற்றின் றூக்கங் கரி.

(2)

323.    மண்கலமொத் துந்தொனியா மாழைக் கலமொலிசால்

வெண்கலத்திற் றாழ்ந்தல்ல வே.

(3)

324.    இடக்கர் துடுக்கரெஃக மேந்தினரின் மிக்கா

ரடக்கமுறு நெஞ்சத் தவர்.

(4)

325.    ஆன்ற வுணர்வே யடுத்தாருங் காண்பரிதாச்

சான்ற வடக்கந் தரும்.

(5)

326.    நவம்பொலியப் பெற்று நவிலா வடக்கந்

தவம்பொலிவுற் றோர்தந்த கை.

(6)

327.    கடற்புவிகொண் டாளுமின்பங் காதலித்த மாந்தர்க்

கடக்க மொருநல் லணி.

(7)

328.    ஆடவர்பான் முந்தா வரிவையர் நேரா மடக்கந்

தேடலினா லெய்தாத் திரு.

(8)

329.    தமகுணத்திற் சீர்த்தமைந்தர் தம்மை யடங்குஞ்

சமரசத்தோ ரென்னத் தகா.

(9)

330.    அடங்க லடங்காமை யாமிரண்டுந் தேறித்

தொடங்கலறி வாளர் தொழில்.

(10)

34. கண்ணோட்டம்

331.    பண்ணோட்டத் தார்தெளிசொற் பாவல ராதியர்பாற்

கண்ணோட்ட மில்லான் கடை.

(1)

332.    எல்லா நலமு மிசைந்தாலுங் கண்ணோட்ட

மில்லாதார்க் கில்லை யிசை.

(2)

333.    குரவர் தவர்முதலோர் கோதொருக்காற் செய்யி

லரவமொத்துச் சீறிடலா கா.

(3)

334.    கண்ணோட்டத் தார்க்குக் கடல்சூ லுலகிலன்றி

விண்ணாட்டுங் கீர்த்தி மிகும்.

(4)

335.    நாயுங் குருளை நருக்கென்று கவ்விலதன்

வாயுரங்காட் டாது மறந்து.

(5)

336.    அறிவிலெறும் பொன்றுடன்மே லாயினுங் கொல்வாரோ

செறிதருகண் ணோட்டத் தினர்.

(6)

337.    கொட்டிய தேளினையுங் கொல்லாது கொண்டப்பால்

விட்டிடல்கண் ணோட்டமதின் மேல்.

(7)

338.    கண்ணோட்ட மில்லார் கடவுளரே யானாலும்

புண்ணாக்கும் பெழ்வாய்ப் புலி.

(8)

339.    அறம்பயக்குங் கண்ணோட்ட மாகா தனவா

மறம்பயப்பார் தம்முள் வரா.

(9)

340.    கண்டுணர்ந்து செய்வதுவே கண்ணோட்ட மேனையது

மண்டுகனற் போற்சுடும்பா வம்.

(10)

35. நீதி

341.    நீதிமுற்றுந் தேறிமுய னெஞ்சகத்து மேலவரை

யாதியின் தங்கமென்ன லாம்.

(1)

342.    மதியனைய தண்கருணை வானவன்ற னீதி

கதிரவன்போற் காயுங் கனன்று.

(2)

343.    ஏதி லவர்க்கு மினியார் தமக்குமொரே

நீதி முயல்வதுண்மை நீர்.

(3)

344.    நெஞ்சுருக்குஞ் சேயை நெடுந்தே ருருளிலிட்டா

னெஞ்சுறா நீதி யிறை.

(4)

345.    தன்னவர்க்கோர் நீதிமற்றோர் தங்களுக்கோர் நீதிசெய்யு

மன்னுழலுங் கூற்றுவனூர் வாய்.

(5)

346.    பொன்னுறழ நீதியினைப் போற்றிப் பொதுவினிற்கு

மன்னுறவு கூர்த்தகதிர் வாள்.

(6)

347.    ஈட்டிய நீதி யினத்துணர்ச்சி தாழ்ச்சியுணர்

தாட்டிகனே மாநிலத்தின் றாய்.

(7)

348.    வல்லார் வகுத்த மனுநெறியின் மாறுசெய்யும்

பொல்லாரே பூமிப் பொறை.

(8)

349.    நீதிகொன்று வாழ்வார் நெடுந்திறலோ ராயினவர்

மீதிகலு மீசனுரு வேய்ந்து.

(9)

350.    கருணையினு நீதி கனத்ததெனக் கொள்ளு

மொருவனைத்தா ளெள்ளா துலகு.

(10)

36. ஊக்கம்

351.    ஊக்க மிலாதா ரொருபயனு மெய்தாரென்

பாக்க ளுலகிற் பல.

(1)

352.    ஆக்கப் புரக்க வழிக்கச் சலிப்பிலவ

னூக்க முணர்வா ருளார்.

(2)

353.    மோக்க விழையு முனிவர்முத லைவருக்கு

மூக்கமே நல்ல வுரன்.

(3)

354.    உள்ளூக மில்லா னூடையா னானாலுங்

கொள்ளூறு கோடி குழாம்.

(4)

355.    ஊக்கந் தருஞ்சே யுதார மொழியாவுள்

ளேக்கமுளார்க் கெய்தாத தே.

(5)

356.    ஊக்கத் தெளியார தொன்றாத செல்வரொல்கத்

தாக்கவல்ல தன்மையினர் தாம்.

(6)

357.    உணர்வினுட னூக்க மொன்றியவ ருன்னிற்

புணர்வரிய தில்லையென்னும் பூ.

(7)

358.    மண்ணாட்டி லூக்கமுறு மானிடர்பால் வந்தணைவார்

விண்ணாட்டு மாதரென்சொல் மெய்.

(8)

359.    மாக்ககன மெங்கும் வளர்வா னருளொருவர்க்

கூக்க வடிவா வுறும்.

(9)

360.    உருதிரன்மா லாதியர்சே ரூக்கமே யுண்மைக்

கருத்தின் றலைச்சே கரம்.

(10)

37. தவம்

361.    தவம்போலும் மேன்மையிலைத் தன்னை மறக்கு

மவம்போலுந் தாழ்மையுமின் றாம்.

(1)

362.    வானவர்கள் வந்து வணங்கிப் பணிசெயுஞ்சீர்

தானவர்க்கு மீயுந் தவம்.

(2)

363.    மானிடரி லுள்ளம் வருந்தித் தவமுயல்வா

ரானிடத்தூர் வானையனை யார்.

(3)

364.    தவம்புரியச் சோம்புநரே தாமுன் புரியு

மவம்பெரிதென் றோது மவர்.

(4)

365.    ஈசனரு ணிதியையு மேற்றபடி திருத்தும்

பாசமற்ற மாதவத்தின் பண்பு.

(5)

366.    நத்தி யுழல்பொறிப்பின் னாய்போன் றலையாமற்

சத்தியத்தை நாட றவம்.

(6)

367.    பாவித்த வண்ணம் பயனுதவு மெய்த்தவமே

யாவித் துணையென்ன லாம்.

(7)

368.    நெஞ்ச மொருகுறியி னிற்க நிறுத்துவதே

சஞ்சலம்தீர்த் தாளுந் தவம்.

(8)

369.    அருவா மவனுருவ மாய்வரவுஞ் செய்யும்

பொருவாத் தவமே புகல்.

(9)

370.    ஆக மெலிய வகமுருகச் செய்தவமே

போகமுத்தி நல்கும் பொருள்.

(10)

38. பதி புண்ணியம்

371.    அறத்துப் பொருட்கேயறி வறிந்தோ ரெள்ளு

மறத்திற்சென் மார்க்கம் வரா.

(1)

372.    குரவ னுளத்தின் குறிப்பறிந்து செய்யும்

விரகர் பொருளருளா மே.

(2)

373.    சத்தியத்தை நம்புந் தவர்பாற் றரும்பொருளான்

முத்திநெறி தோற்றன் முறை.

(3)

374.    அத்திமக மெள்ளு மந்தணர்க்கீ யாடகமும்

பத்திநெறிக் கேற்றும் படி.

(4)

375.    தவத்தோரு மந்தணருந் தற்பரனை நாடா

தவத்தே யமுதருந்தா தார்.

(5)

376.    ஆலயங்க டீர்த்தமட மாதியவற் றைத்திருத்துஞ்

சீலர்பொருட் குண்டே சிறப்பு.

(6)

377.    எந்திரத்தாற் கும்பத்தா லேற்றவடி வத்தாற்செய்

தந்திரத்தா லெய்துந் தவம்.

(7)

378.    பூசனைக்காம் பல்பூப் பொலிநந் தனவனஞ்செய்

நேசர்பொருட் குண்டே நிறை.

(8)

379.    வழுவில் பயனுரைக்கு மாநூல்கண் மாயா

தெழுதுவிப்பார் பொன்னுமுயர் வே.

(9)

380.    கதிபயனா மென்னக் கருதிநல்க லெல்லாம்

பதியறமா மென்பார் பலர்.

(10)

39. பசு புண்ணியம்

381.    அன்னதா னத்தினுமே லாவதொன்று மில்லையெனச்

சொன்னமொழி நல்ல துணிவு.

(1)

382.    மங்கைப் பருவ மகளைநல்ல மைந்தனெய்த

வங்கையிற்பொன் னீத லறம்.

(2)

383.    இன்னநலஞ் செய்வா ரிவரென் றறிந்துதங்கைப்

பொன்னளிப்பார்க் கெய்தும் புகழ்.

(3)

384.    சத்திரங் கூபந் தடாகம்வழிச் சாலையன்ன

வைத்தியற்ற னல்லதரு மம்.

(4)

385.    கொலையுண்ணப் போமுயிரைக் கோடிபொன்னா னாலும்

விலைகொடுத்து மீட்டல் விதி.

(5)

386.    ஆனருந்தப் புல்லளித்த லாறுகரை யேறவிடன்

மானலெல்லாஞ் சொல்லவச மா.

(6)

387.    எல்லா வுயிர்க்கு மிதமே புரியுமொரு

நல்லானைச் செல்வனென்ன லாம்.

(7)

388.    தன்னனைய சீவர் தவிக்குந் தளர்வகற்று

மன்னவனே நல்லறத்திற் காள்.

(8)

389.    சீவபுண்ணி யத்தாற் சிறந்த வொருவனையே

தேவர்பிரா னாளுந் தெளித்து.

(9)

390.    ஈசன் றிருக்கோவி லெவ்வுயிரு மென்றறிந்த

நேச னறமே நிசம்.

(10)

40. பாச புண்ணியம்

391.    தாய்தந்தை யாதியராச் சாற்றுந் தமரவரை

மாய்தலின்றிக் காப்பவன்செல் வன்.

(1)

392.    தன்போலுஞ் செல்வன் றனக்கிடையூ றொன்றெய்தி

லன்போடு தாங்க லறம்.

(2)

393.    முன்னோர்க் குதவி முயன்றார் குடிப்பிறந்தோன்

றன்னோ வொழிப்பதறந் தான்.

(3)

394.    மெலியு மரசனுக்கு வேண்டுவன செய்து

வலியவரா னார்பன் மகர்.

(4)

395.    நன்மனைவி மக்கண் ணிநம்பி னார்ப்புரப்பர்

னின்மறைச்சொன் மீறலுமா மே.

(5)

396.    தன்னை விழைவார் தமக்கினிய செய்யாதான்

மன்னெனினு மெட்டி மரம்.

(6)

397.    போற்றும் புலவர் பொருவரிய கூத்தனைய

வாற்றுமவர்க் கீத லறம்.

(7)

398.    சபதமுற்றப் பொன்னழிக்குந் தன்மையினுந் தக்கோர்க்

குபகரித்தல் கோடி யுயர்வு.

(8)

399.    கபிலையொடு கன்றழச்செய் கண்டகர்க்கு முண்டே

யபிமானித் தீயு மறம்.

(9)

400.    எவ்விதத்து மீயாதார்க் கேற்றமே யேதுவொன்றை

வௌவியறஞ் செய்யும் மகர்.

(10)

41. போலிப் புண்ணியம்

401.    பெரும்பான்மைப் புண்ணியமாப் பேதையார் செய்யு

மரும்பாவம் போலி யறம்.

(1)

402.    பொன்செய் தளித்துமென்கை போல்வநுவல் பொய்க்குரவன்

றன்சொற் கிசையத் தகா.

(2)

403.    கள்ளரக்கூ னுண்பார் கனவேடங் காட்டிடினு

மெள்ளளவு மீயவொண்ணா தே.

(3)

404.    மாடாடு பன்றியன்ன மாய்வுறும்பேய்க் கோயில்களை

நாடாமை கோடி நலம்.

(4)

405.    வேள்விக் கொலைநலமென் மீமாஞ்சன் வெய்யமொழி

கேள்வியுற்றார் கெட்டார் கிடீர்.

(5)

406.    கோயி லிடித்துக் குளமா தியசமைப்பார்

நாயிற் கடையா நரர்.

(6)

407.    நந்த வனத்தினையான் ததுறுபைம் புற்றரையைப்

பைந்தண் வயலாக்கல் பழி.

(7)

408.    பல்கொலைசெய் தானைப் பணங்கொடுத்து மீட்டல்முதற்

சொல்கொடுமை பாவத் தொழில்.

(8)

409.    எண்ணில்பல தோள்புணர்வாட் கீந்துவக்கு மீகையினாற்

புண்ணியமுண் டென்கை புரை.

(9)

410.    திண்ணியர்சொற் கேளாமற் சிந்தையினிற் றோன்றிவர்

புண்ணியஞ்செய் தாலவமாப் போம்.

(10)

42.  உலோபம்

411.    உலகத் துணர்காலு லோபரைப் போற்றிய

ரிலகுமனுக் கூட்டத் திலை.

(1)

412.    ஈகைமுய லாதசெல்வ னியாரோ வொருவன்மன

மோகையுறக் காவலசெய்துள் ளோன்.

(2)

413.    பாவலரி லீகையிலாப் பாதகரை யேசாதா

ரியாவர்கொலோ யாமறிகி லேம்.

(3)

414.    நகக்கண்டோ றூசிநட்டு நாறுமட்டுஞ் சுட்டா

ருகக்கக்கொ டாதாருண் டோ.

(4)

415.    ஈவா ருவகையென வீயர்தார்க் கெப்பொழுது

மோவாத் துயர முறும்.

(5)

416.    ஈயாத செல்வனிலு மெள்ளனைத்தா கும்பொருளும்

வாயா மிடியனுறும் மாண்பு.

(6)

417.    வல்லை யுதவாது வழங்குநன்போற் காண்பானி

லில்லையென்பான் றன்மை யினிது.

(7)

418.    ஈசனருன் சற்றேனு மெய்தினன்றி யீந்தும்கீழ்

நேசமுதி யாது நிசம்.

(8)

419.    கொடாத கொடுங்குணத்தாற் குத்துமொத்துண் டந்தோ

படாதனபட் டார்பற் பலர்.

(9)

420.  நல்குகிலான் செல்வம் நபுஞ்சகன்கைந் நூலணிந்தா

ளல்குல் வளம்போல்வ தாம்.

(10)

43. தாய்

421.    அறத்தினின்பங் கற்பி னருந்ததியே போல்வாள்

பெறத்தகுஞ்சே யாகும் பிறப்பு.

(1)

422.    வறந்தகுணஞ் சாரா வளமுலையாள் சேயாப்

பிறந்திடலு நல்லறத்தின் பேறு.

(2)

423.    நெஞ்சுருகி நோற்றிளைத்த நேரிழைகைச் சேயாதல்

விஞ்சுபுண்ணி யத்தினர்க்காம் வீறு.

(3)

424.    பல்சேய் பெறுந்தாயும் பாவமறு புண்ணியச்சீ

ரொல்சேயைப் போற்று முவந்து.

(4)

425.    சேயருமை தேராச் சிறுமியர்கைச் சேயாகி

யாயவிடா முன்செய் யறம்.

(5)

426.    கல்விமட்டிற் சேய்கட் கணவன் வழிநடவுஞ்

செல்வி யுடற்றாய்வாந் தே.

(6)

427.    நிந்தையறுங் கல்வி நெறியு மறிதாயைத்

தந்தையென்றுஞ் சொல்லத் தகும்.

(7)

428.    எத்தகைய பொல்லாளே யென்றாலு மீன்றாளைக்

கைத்தலின்றிக் காத்தல் கடன்.

(8)

429.    தீயநெறி யானெனினுஞ் சேய்விரும்பு நன்னெறியிற்

சாயவியைந் தாலவளே தாய்.

(9)

430.    பாவவுண வூட்டலன்ன பண்புடைய தாயைநற்சே

யாவல் வழிதிருத்த லாம்.

(10)

44. தந்தை

431.    சிந்தைநலங் கல்வி தெய்வபத்தி யாதியசேர்

தந்தைமைந்த னாத றவம்.

(1)

432.    தந்தை யறிஞனெனிற் றாய்கெடினுந் தோடமில்லை

விந்தைமலி சேயுதிக்கு மே.

(2)

433.    பெற்றான்சொற் சற்றும் பிழையாத பிள்ளையறி

வுற்றானென் றோது முலகு.

(3)

434.    தந்தை குரவனெனுந் தன்மையறி தக்கோனே

நிந்தையில்சீ ரெய்து நிலத்து.

(4)

435.    கல்வி தவந்தீய வென்னக் கழறுமப்பன்

சொல்விரும்பொண் ணாது துணிவு.

(5)

436.    தகப்பன் களிகூரத் தக்கமொழி சொல்வான்

குகப்பெருமான் போலுங் குரு.

(6)

437.    தகவுடையா ரியாவருக்குந் தம்மிற் சிறந்த

மகவே யுதிக்கை வழக்கு.

(7)

438.    ஈன்றாள் கணவ னிழிந்ததொழிற் கைக்கொள்ளார்

வான்றாழ வாழு மகர்.

(8)

439.    புன்னெறியிற் றந்தை புகுந்தாற் பொருவினற்சேய்

நன்னெறிகூ றித்திருத்த லாம்.

(9)

440.    தந்தையினைத் தானறியான் றாயறிவா ளென்றமொழி

முந்து பொதுநூன் முறை.

(10)

45. உடன் பிறந்தார்

441.     கொம்பொன்றிற் காய்த்தபைங்காய்க் கொத்தனைய பாலர்தம்மில்

வம்பொன்ற லேயறத்தின் மாறு.

(1)

442.    உடன்பிறந்தார் தம்மை யுடலுறுப்பிற் றாங்குங்

கடன்பிறழார் சுற்றறிந்ததோர் கள்.

(2)

443.    முன்னோனைத் தந்தையொப்ப மூத்தாளைத் தாயரொப்பப்

மின்னோர் நினைத்தொழுகல் பீடு.

(3)

444.    ஒருவனுற்ற நன்மை யுடன்பிறந்தா ரெல்லா

மருவ முயலல்பெரு மாண்பு.

(4)

445.    அறத்திலொத்த வைவர் நீதியிற்சார் பல்லோ

ரிறத்தல்கண்டு வாழ்ந்தா ரினிது.

(5)

446.    கலக்கமின்றி முன்பின் கலந்திருப்பக் காண

லுலகத் ததிசயத்தி லொன்று.

(6)

447.    தங்கையராற் றம்பியராற் றாழ்ந்தோர்க்கும் வாழ்ந்தோர்க்குஞ்

சங்கையில்லைச் சொல்லுஞ் சகம்.

(7)

448.    நாடறிய வுண்மை நவின்றுமொன்பாச் சோதரரை

வீடணன்போ னீங்கல் விதி.

(8)

449.    சிங்கன் குடக்காத னன்னார் சிதைந்ததுவுந்

தங்களுக்கா குந்தருமஙந தான்.

(9)

450.    அறிஞ ருடன்பிறத்த லான்றவறத் தார்வம்

பிறிதுமுன்னாட் பாவப் பிணி.

(10)

46. மனைவி

451.    தன்னுயிரிற் பாதி தனையிழந்த பின்னுமுயிர்

மன்னுலகில் வாழா மனை.

(1)

452.    ஆவற் குரியா ளறத்திலொரு பாதிகொண்டு

பாவமுற்றுந் தற்சேர்ப் பவள்.

(2)

453.    மனையினுமிக் காரு மாநிலத்துண் டென்பார்

தினையுமுணர் வில்லாச் சிலர்.

(3)

454.    பொற்புமத னேர்வரினும் புந்தி தடுமாறாக்

கற்புடையா ணல்குங் கதி.

(4)

455.    சொற்றவறாள் கொங்கைத் துணைதோயுந் தோளுடையார்

நற்றவரும் போற்று நரர்.

(5)

456.    மானம் புறக்கு மனைதோ ளணைவானே

யீனஞ் சிறிது மிலான்.

(6)

457.    உவக்குமின்ப நல்கி யுடன்போய்ச்சின் மாதர்

தவத்தினிலும் பங்குகைக்கொண் டார்.

(7)

458.    கொண்கனொரு வற்குக் கொடுக்கினும்பின் போமவரே

பெண்களவர் மாட்சி பெரிது.

(8)

459.    தவம்பெருக்கு மாடவரிற் றாழ்ச்சியன்று கற்பி

னவம்பெருக்கு மாதர்ந லார்.

(9)

460.    தன்னத் வையவநேர் தன்மையுறு தையனல்லாட்

பின்னமுறக் காண்பானோர் பேய்.

(10)

47. மக்கள்

461.    இருவகைய நன்மகவு மீன்றுவக்கப் பெற்ற

வொருவன் றவமே வுயர்வு.

(1)

462.    பொய்யாது தந்தை புகழ்வளர்க்கும் புத்திரனே

மெய்யாய வீட்டுக்கோர் வித்து.

(2)

463.    மாதவஞ் செய்து மரபோ ரனைவருக்கு

மோதரும்வீ டீந்தமக்க ளுண்டு.

(3)

464.    தவத்தோர் விழைவிற் றனையர்களை நல்கிச்

சிவத்தே கலந்தார் சிலர்.

(4)

465.    தவமுடையான் றோண்மருவத் தக்கமகட் பெற்றா

னெவனவனே விண்ணாட் டிறை.

(5)

466.    இறந்த கணவனுட னேழ்கடனீ ராடிச்

சிறந்தவட்க தீந்ததொர்பெண் சேய்.

(6)

467.    முனிவர்பன்னாட் டேடுமுதன் முத்தியினைப் பற்பன

மனிதர்கட்கீந் தானோர் மகன்.

(7)

468.    பத்தியொடு கல்விப் பயிற்சியுறு சேய்பயந்தார்க்

கெத்திருவு மெய்தலெளி தே.

(8)

469.    உடலோ டுயிர்க்கு முலப்பி லுவகைக்

கடலீயத் தக்கதுநற் கால்.

(9)

470.    மக்க ளறத்தில் வழுவாத வாறொழுகத்

தக்கவரைப் போற்றுந் தறை.

(10)

48. சுற்றம்

471.    நாயருந்து மூன்விழையா நல்லசுற்றத் தார்நடுவின்

மேயவன்றன் புண்ணியமே மேல்.

(1)

472.    புன்குலத்தில் வந்தோன் புனிதநடை மேற்கொளினு

நன்கு மதியார் நரர்.

(2)

473.    நற்குலத்தோன் செய்யு நவையொழுக்க நாடுங்காற்

கற்கிபொதி தாங்கல் கரி.

(3)

474.    சுற்றம் முழுதினையுந் தூயதாக்க நாடுமன

முற்றவனை யெள்ளா துலகு.

(4)

475.    அறநெறியிற் சுற்றத் தவர்க்கடங்கு மாபோன்

மறநெறியி னீங்குதலு மாண்பு.

(5)

476.    குலத்தொருவன் றாழ்ந்து குடியோட நாடிற்

றலத்தமைப்பார் நல்லசுற்றத் தார்.

(6)

477.    தீயகுலத் தார்கடம்மிற் சீர்த்தொருவன் வாழல்கண்டா

னேயங் கொதிப்பார் நெடிது.

(7)

478.    எறும்பாடு கொக்கனைய தெக்குலமா னாலும்

பெறும்பார் மதித்திறைஞ்சும் பீடு.

(8)

479.    கோழிநாய் பூனை யனைய குலமுழுதுங்

கீழினுங்கீ ழாகிக் கெடும்.

(9)

480.    செல்வ னினத்தார்போந் தீய வழியடைத்து

நல்வழியி லோச்சு நயந்து.

(10)

49. நட்பர்

481.    நட்பனைத்தா மிக்கபொரு ணாமறியே நான்மறையி

னுட்பயன்முற் றஃதா லுறும்.

(1)

482.    நட்பர் நலந்தீது நம்மவென நாடுமவர்

பெட்பசல வேந்திற் பெரிது.

(2)

483.    தோழர் நிமித்தந் துணிந்துயிர்விட் டந்தரத்தில்

வாழலுற்றா ரெண்ணின் மகர்.

(3)

484.    எப்பொருளீண் டெய்திடினு மிச்சை வழியொழுகு

மெய்ப்பொருளா நட்பரிதா மே.

(4)

485.    கள்வர் வெறியர் கவற்றாள ராதியரை

நள்வதனா லெய்து நரகு.

(5)

486.    தீயவழி விட்டுத் திருந்தா வொருவனது

நேயந் தணப்பதுநன் னீர்.

(6)

487.    வன்பாவஞ் சீவ வதையென் றுணராதூன்

றின்பா ருறவுபெருந் தீது.

(7)

488.    வஞ்சஞ் சிறிதுமில்லா மாதவத்தோர் தம்முறவே

தஞ்சமெனக் கொள்ளத் தகும்.

(8)

489.    உறவர் பிழைசெயிற்கை யூறுசெய்தாங் கெண்ணுந்

திறமுடையார் பாரிற் சிலர்.

(9)

490.    நட்பர் பிழைதீர நாளு முயலாதா

னுட்பகையுற் றார்களையொக் கும்.

(10)

50. உடலீகை

491.    அறத்துமுத்தி யாயி னதற்கிடையூ றெய்தா

திறத்தலுக்குஞ் சமம்மதித்த லே.

(1)

492.    மூர்த்தி யொருவன் முழங்கையினைத் தேய்த்ததனாற்

கீர்த்தி யடைந்தான் கிளர்ந்து.

(2)

493.    மன்ன னொருவன் வருபுறா வாழும்வண்ணந்

தன்ன துடற்றசையிட் டான்.

(3)

494.    உடலைச் சிதைத்தறத்தி னூறொழியச் செய்தோர்

கடலின் மணலனையார் கள்.

(4)

495.    கொடைதருமங் குறைவு படாவா றுடலின்

றுண்டளித்துங் காப்பது நன்று.

(5)

496.    தரும மரியாது தன்னுடல மோர்நா

ளருமை தவிர்ந்துபிண மாம்.

(6)

497.    உடலிற் றரும முயர்வென் றுணர்ந்தா

னடலைசெய்ய மாட்டா னமன்.

(7)

498.    தன்னங்கத் துந்தருமந் தானுயர்வென் றோர்ந்தவர்முன்

மன்னனறு ரும்பையொப்பா வான்.

(8)

499.    உடலன்று தானென் றுணர்ந்தா னதனை

விடலோ ரருமையல்ல வே.

(9)

500.    உடல்வெறுத்தார் போற்பகர்வா ருண்டவர்தம் முண்மைத்

திடமறியுந் தெய்வச் செயல்.

(10)

51. உயிரீகை

501.    நண்ணியவா றீந்தருளு நாதனருட் சீரினுக்கென்

றெண்ணிலப  ராவியிட்டா ரே.

(1)

502.    அறந்தவிரா வண்ணந்தம் மாவி யிழந்தார்

சிறந்தபுகழ் மாய்ந்தொழியா தே.

(2)

503.    வயலிடத்துச் சென்னிகொய்த வாட்டாயன் போல்வார்

செயல்விரித்துச் சொல்லின்முற்றா தே.

(3)

504.    மிக்கினிய கொண்கனுயிர் விட்டதெண்ணி மெல்லியலா

ரக்கினியிற் பற்பலர்வீழ்ந் தார்.

(4)

505.    தன்னுயிருஞ் சற்குரவன் றாளிணையிற் சாரநல்கான்

பன்னு தவம்பாழ் படும்.

(5)

506.    உயிரை யொருபொருளென் றுன்னா வுறுதி

செயிர்வினையோர் தம்மையெய்தா தே.

(6)

507.    நஞ்சருத்திச் சாதன் முதலா நவையனைத்தும்

வஞ்சகத்தார் செய்யு மறம்.

(7)

508.    சாதலினுந் தன்னைத் தருமத்திற் காளாமென்

றேதமற விற்றிடனன் றே.

(8)

509.    முற்றுந்தன் னாவி முதல்வனதா மென்றுணர்ந்து

பற்றுவிட னல்ல பதம்.

(9)

510.    ஆவி நலமோர்ந் தமைத்தாற் களிப்பதொன்றே

தாவி லறத்தின் றலை.

(10)

52. அறத்தினாற்றல்

511.    அறமே முதற்றுணையென் றாய்ந்தோர் பலருந்

திறமாகச் சொல்வதுண்டுண் டே.

(1)

512.    அறங்கசக்கும் பாவநெஞ்ச ராடகந்தொட் டோதப்

பிறங்குமற்றை மூன்றும் பெறார்.

(2)

513.    தருமஞ் சாதமெனத் தண்கடற்பைந் தானை

யிருநிலத்தா ரும்பகர்வா ரே.

(3)

514.    ஈசனருட் சீர்சற் றியைந்த வுயிர்க்கறத்தின்

பாச முதிக்கும் பரிந்து.

(4)

515.    முதல்வன் மழையளித்தன் முன்னா மறத்தான்

மதமுழுதும் போற்றமகிழ் வான்.

(5)

516.    வேண்டினர்க்கு வேண்டியவா றீயா விடிலிறைவன்

மாண்டிரிந்தா னென்பார் மகர்.

(6)

517.    அறம்போலு மாக்க மில்லையா மென்றறியின்

மறம்போமெய் வீடும் வரும்.

(7)

518.    இரக்க முதலாகு மெண்ணினலம் வாய்ந்து

பாக்கு மறமே பரம்.

(8)

519.    பாவ மலையாய பஞ்சைப் பழுதிலற

மாவதுசெந் தீயொத் தடும்.

9)

520.    பகல்போ லுயிர்விளங்கப் பண்ணுமறத் தார்பா

லிகலான்றண் டேந்து மெமன்.

(10)

53. பாவத் தன்மை

521.    பாவ மனைய பகைமற்றொன் றில்லையென்னுஞ்

சீவ ருணர்வே திறம்.

(1)

522.    பொல்லாத பாவப் புணரிகடந் தார்க்குமின்ப

மெல்லார்க்கு மெய்துவதின் றே.

(2)

523.    பாவங் கொடியதெனப் பல்கோடி நூலின்முந்

தீவம்போற் காட்டுந் தெளித்து.

(3)

524.    பாவம் முயல்வார் படியிடத்தின் றாயினெம

னேவலார்க் கில்லை யிசை.

(4)

525.    சீவர் வருத்தமுறச் செய்கின்ற செய்கைமுற்றும்

பாவமென்று சொல்லப் படும்.

(5)

526.    கொல்வார் முதலாங் கொடியார்க் கிதஞ்செயலுஞ்

சொல்வார்சொல் பாவத் தொடர்பு.

(6)

527.    பாவமெளி தன்று பகல்போலும் புண்ணியத்தின்

மாவண்மை காட்டு வது.

(7)

528.    கருப்பத்தூன் றின்பாருங் கண்டறிந்த பாவ

விருப்பமுறார் மெய்யேமெய் மெய்.

(8)

529.    கொலச்சலியார் பாவமொன்று கூறிடல் புன்நாற்ற

மலச்சட்டி கண்டிகழ்ந்த வாறு.

(9)

530.    பண்ணி மகிழாது பாவமிகழ் பண்புற்றாற்

புண்ணியம்வந் துள்ளிற் புகும்.

(10)

அறத்துப்பாலி லறமுதலிய நான்கு முற்றிற்று.

 

ஆ. பொருட்பால்

54. எழுத்து

531.    பொருளிலறம் பன்முயற்சி போற்று மவற்று

ளிருளிலவை கல்வி யெழுத்து.

(1)

532.    வழுத்து மறைமுதலா மற்றெந்த நூலு

மெழுத்துருவே யென்கைவம்பன் றே.

(2)

533.    எழுது மவருலகி லின்றேலெந் நூலும்

பழுது படுமுலகாம் பாழ்.

(3)

534.    மலைகடன்முன் னாக வகுப்பவெல்லா மீந்தோன்

றலையி லெழுதுமவன் றான்.

(4)

535.    கொழுத்த பகடுகைப்பான் கொற்றவொற்றர் தாமு

மெழுத்தமைந்த வோலையின ரே.

(5)

536.    கண்டெழில்வேட் காய்ந்தானுங் காசினியி வன்பர்கட்காப்

பண்டெழுது மோலை பல.

(6)

537.    வெற்றிவேன் மன்னவரும் வெள்ளோலை தொட்டெழுதும்

பற்றினரை யெள்ளார் பயந்து.

(7)

538.    எல்லா நலமு மெழுத்தி லடக்கமெனச்

சொல்லாத ரில்லைத் தொகுத்து.

(8)

539.    எழுதுந் தொழிலேமிக் கேற்றமெனத் தேர்தன்

முழுதுங் கடந்தோர் முறை.

(9)

540.    ஏதானு மொன்றை யெழுதிப் பொருள்விளைக்கை

மீதாய நல்ல வினை.

(10)

55. உழவு

541.    உழவுத் தொழிலே யுயர்ந்ததெனச் சொன்னார்

கழகமுற்ற மெய்ப்புலவோர் கள்.

(1)

542.    உழவர்  மனமழைநீ ரூற்றுநனை யன்றித்

தொழநன் கிசைவுபெறா து.

(2)

543.    ஓதுவார் பல்லோ ருழுவார் தலைக்கடையிற்

போதுகழித் தீவார் புகழ்.

(3)

544.    மன்னவர்தங் கைக்கோல் வளர்ப்ப துழவரது

கொன்னவில்செங் கைத்தாற்றுக் கோல்.

(4)

545.    எத்தொழிலாற் பொன்பெறுவா ரியாரேனு மேருழவர்

கைத்தொழிலூ ணன்றியுய்யார் கள்.

(5)

546.    தவத்தினர்க்கு மேருழவார் தஞ்சோற்றூ ணுண்டே

லவத்தரிங்கென் துய்ப்பாரம் மா.

(6)

547.    வித்தும் பகடும் விளைநிலமு மெய்வலியுங்

கொத்துமுள்ளா னேரே குணம்.

(7)

548.    வேலியிட நீர்நிறைப்ப வெய்ய களைகளையக்

கூலியிடச் சோம்பி னொய்தாங் கூழ்.

(8)

549.    ஏற்பார்க் கிடுகையில்லா னெப்பருவஞ் செய்திடினும்

பாற்பாய்ச் சினும்நோம் பயிர்.

(9)

550.    விழவுமண மாதி விளக்கம் பலவு

முழவுவுடை யானல்கு முரம்.

(10)

56. வாணிபம்

551.    கரவிலன்பு கொண்டு கதியளிக்கும் பான்மைப்

பானு மொருவாணி பன்.

(1)

552.    செட்டிமனைச் சிற்றூமைச் சேய்புலவர் வாழவைத்தான்

மட்டில் கலக மறுத்து.

(2)

553.    ஒன்றுகொடுத் தீடாமற் றொன்றுகொண்டு வாழாதா

ரென்றுமில்லை வானிலிகத் தில்.

(3)

554.    கொண்டுவிற்குந் தன்மை குவலயத்தொவ் வோரிடத்து

மண்டுகலி தீர்க்கு மருந்து.

(4)

555.    நீதி யளவின் மழைநீ ரளிப்பானீர் மையுணர்ந்

தோதிலதோர் செட்டேன்யன் றோ.

(5)

556.    ஊதியத்திற் சற்று முயராச் செலவுடையான்

கோதில் வணிகர்குலக் கோன்.

(6)

557.    மானங் கெடினு மணிமாழை வைத்துவக்கு

மீனங் கொளான்வணிக ரேறு.

(7)

558.    விற்கவரு பண்டத்தின் மேல்கீ ழறிந்துகொள்ளாப்

பொற்கயவ னாய்கனென்கை பொய்.

(8)

559.    வட்டியிச்சை விஞ்சி வழக்கழிவு பாராட்டுஞ்

செட்டி கலங்கவருஞ் சிந்து.

(9)

560.    கடலிலிட்ட பொன்னுங் கடிமனைக்கட் கண்டா

னடலையற்ற நாய்கனென்னு நாடு.

(10)

57. சிற்பம்

561.    தற்பரற்கும் பற்பல் சகளவுருச் செய்தளிக்குஞ்

சிற்பன் புகழெளிதன் றே.

(1)

562.    திகழுருவுஞ் சித்திரமுஞ் செய்யவல்லான் சிற்பஞ்

சகல தொழிற்குமொரு தாய்.

(2)

563.    கன்னமிடுங் கோலுங் கால்விலங்குஞ் செய்வானை

யென்ன வெனப்புகழ்வே மியாம்.

(3)

564.    பொன்முதன்மண் ணீறாப் புகல்பவற்றாற் செய்பமுற்றுந்

தொன்முறைச்சிற் பத்தின் றொழில்.

(4)

565.    சிற்ப னமைக்குந் திருவுருவ நாட்டத்தாற்

பற்பலர்சேர்ந் தார்மெய்ப் பதம்.

(5)

566.    சொற்பழுது செய்யான் றொழில்வல்லான் சோம்புகில்லான்

சிற்பனென்றா லெய்துஞ் சிறப்பு.

(6)

567.    விதிப்பிறழ்ச்சி யாயபணி வேந்தனையார் வேண்டிற்

கதித்தசிற்பன் செய்தல் கடன்.

(7)

568.    சிற்பன் மனக்களிப்பாற் செய்வதொவ்வா சிந்தையஞ்சிப்

பொற்பணத்திற் காச்செயும்வேல் பூண்.

(8)

569.    அழியாப் புகழ்ச்சி யளிக்கவல்ல சிற்ப

மிழியா வுலகறிந்த தே.

(9)

570.    அற்பர்முதன் மன்னர்வரை யாசித் தகமுழைக்கும்

பொற்பணமுஞ் சிற்பப் பொருள்.

(10)

58. பரதம்

571.    கைத்தொழிலும் வாய்த்தொழிலுங் காற்றொழிலு மாம்பரத

மெத்தொழிலை விட்டிருக்கு மே.

(1)

572.    அசைதன் முழுது மபிநயமா மென்பார்

திசையறிந்த மெய்க்கூத் தினர்.

(2)

573.    இந்துமுடித் தோன்முதலா மெத்தேவ ராடல்களு

மைந்து கருவி யகம்.

(3)

574.    ஆடுமா டாதியவு மாயு மபிநயச்சீர்

நாடுகிலா ரென்ன நரர்?

(4)

575.    புள்ளினமுங் கேட்கும் புகலு மிசையறியா

ரெள்ளன் மலிகா தினர்.

(5)

576.    தோலும் பறையாய்த் துடியாய் முழவாகி

யோலுமென்றாற் றாளமெளி தோ.

(6)

577.    முக்குணத்துத் தொல்பரத முத்திநெறிக் காஞ்செவியுஞ்

சக்குமிலார்க் காகா தது.

(7)

578.    நல்லிதயத் தந்தணர்க்கு நல்காதார் நாடகஞ்செய்

மெலியலார்க் கீவார் மிக.

(8)

579.    வானடைந்தார் காட்சி மகவா னவையின்மின்னார்

கானமிகச் செய்நாட கம்.

(9)

580.    இனங்கொடுக்கு மங்கைநல்லா ரின்பங் கொடுக்குந்

தனங்கொடுக்கு மீடில்பர தம்.

(10)

59. சேவகம்

581.    தன்னருமை கண்டுவக்கத் தக்கவரைச் சேவிப்பாற்

கின்னல் சிறிது மிலை.

(1)

582.    வல்லா னொருவன் மகிமையெண்ணின் மற்றலகத்

தெல்லாருஞ் சேவகத்தோ ரே.

(2)

583.    பாவிப்பார்க் கின்பம் பயிலும் பரனைநம்பிச்

சேவிப்பார் மன்னவர்க்கோர் தே.

(3)

584.    நம்புநர்தஞ் சொற்போ னடப்பா னிறைவனென்னி

லம்புவியிற் சேயையில்லா ரார்.

(4)

585.     பொன்விழைந்து தம்பெருமை பொன்றப் புலைக்கொடுங்கோன்

பன்விழைவார் சேவை மறம்.

(5)

586.    மாதர்மொழி யாடவர்பான் மற்றைவர்சொன் மங்கையர்பா

லோதவொல்கா ராவியென்கொல் லோ.

(6)

587.    சீவபதந் தேறார்பாற் சேவித்துப் பொன்பெறுதல்

பாவமெனச் சொன்னூல் பல.

(7)

588.    சிவிகை வரைதாங்கிச் சேவிப்பா ராகம்

புவிமகட்குந் தாங்காப் பொறை.

(8)

589.    மான மிழந்து மனமெலியச் சேவிப்பா

ரீனம் விரிக்கரியே மியாம்.

(9)

590.    மன்னர்த் தொழுமமைச்சர் மாழையினுங் கீரைவிற்பார்

பொன்னருமை யென்னும் புவி.

(10)

60. தீத்தொழில்

591.    ஈனர் புகழாதி யெழுது மிழிபுலவர்

வானகத்திற் செல்லாத வர்.

(1)

592.    கொத்துக் குழுது குறையோதக் குன்றுநனோர்

பித்துப் பிடித்த பிணம்.

(2)

593.    ஊனாதி கொண்டும்விற்று மொண்பொருளீட் டுங்கொடியோ

ரானா நரகத் தவர்.

(3)

594.    அற்ப வுயிப்பலிசெய் தாடுவார்க் கானசெய்யுஞ்

சிற்பருக்கா மாழ்நரகத் தீ.

(4)

595.    கொலைக்களத்திற் காம்பறையுங் கூத்தும் புரிவார்

வலைக்கைநம னூரிலுழல் வார்.

(5)

596.    வன்பாவத் தோரை வணங்கிப் பொருள்விளைக்கை

துன்பார்த்த பாவத் தொழில்.

(6)

597.    மாத்தொழில்கண் மேலோர் மகிழ்வனவா மற்றனைத்துந்

தீத்தொழில்க ளாகுந் திறம்.

(7)

598.    வல்லாரைச் சார்ந்தவர்தம் வாய்சொல் வழிநடவார்க்

கில்லாத தீமையொன்று மில்.

(8)

599.    பொன்றருவார்க் கின்பம்விற்கும் பூவையர்தம் பாவமொப்ப

தொன்றறையா தெந்தவுல கும்.

(9)

600.    தீய தொழின்முயன்று சீவித்து வாழ்வதினுங்

காயம்விட்டு மாய்தல் களி.

(10)

61. இறைமாட்சி

601.    பொருளிற் பொருளணரிற் போகமுத்தி யீவா

னருளிற் பொலியு மரசு.

(1)

602.    வௌவிமுகில் பெய்யு மழைத்துணையா மன்னனது

செவ்வி யுரைக்கின்முற்றா தே.

(2)

603.    மாதவமும் நீதி வழுவாத மன்குடைக்கீ

ழேதமின்றி நீடலுறு மே.

(3)

604.    ஆனியிலா மேலோ ரறிந்த தகண்டபர

மாநிலத்தோர் கண்டதெய்வ மன்.

(4)

605.    உடனுக் குடன்வினவு முற்சாகத் தெய்வ

மிடனகன்ற பார்க்காப் பிறை.

(5)

606.    மன்னன் வெகுண்டான் மறுதுணையொன் றில்லையென்கை

முன்னனந்த நூல்சொல் முறை.

(6)

607.    அரசன் செலுநெறியை யம்புவியி லியாரும்

பரசத் துணவார் பயந்து.

(7)

608.    உலகைக் கெடுப்பானு முத்தமப்பண் பெய்தி

யிலகச்செய் வானு மிறை.

(8)

609.    அலகிலுயி ரீந்தாற் கவையவமே போல்வா

னிலகுபுகழ்ச் செங்கோ லிறை.

(9)

610.    கேடில் பழமைக் கிழவ னருளின்றி

யீடிலுல காள்வா ரிலை.

(10)

62. தெய்வ சிந்தனை

611.    செய்குவல யத்தைநல் கறெய்வமே யென்றுணர்ந்து

கைகுவிக்கை மன்னன் கடன்.

(1)

612.    தெய்வ முளதென்னத் தெண்டனிட்டுப் போற்றாமன்

வைவலிவாட் கில்லை மறம்.

(2)

613.    பல்வேழங் கொல்லும் படைத்தலைவர் சூழிறைக்கும்

வெல்வேலை யீதறெய்வ மே.

(3)

614.    மன்னாம்நா மென்றுதெய்வ வாஞ்சையின்றி வாழுமவற்

கின்னா வனந்தமுண்டா மே.

(4)

615.    தெய்வ வருளே செயந்தருமென் றோர்ந்தமன்னன்

பொய்வளர்த்துச் சேகரியான் பொன்.

(5)

616.    தெய்வபக்தி யின்றித் திறல்வேல் படையைநம்பு

யைவளமை குன்றலுண்மை யாம்.

(6)

617.    முடித்தலைகள் பல்கோடி முன்னோன் சினத்தா

லிடித்தலறி வீழ்ந்துருண்ட வே.

(7)

618.    குடிகளொடு பொன்னாடு கொண்டமன்ன ருண்டே

யடிகளடி பேணுமன்பி னால்.

(8)

619.    அரசுரிமை யாபத்தென் றாய்ந்தறிந்த மனனே

வரனருளைச் சற்றும்மற வான்.

(9)

620.    முசுமுகத்த னாதியர்தம் முற்சரிதங் கேட்டாற்

கொசுகனையோ மென்றிருப்பான் கோன்.

(10)

 

63. பெரியோர் சொற்கொள்ளல்

621.    ஈசனருள் பெற்று மிருபதுதோ ளான்பெரியர்

பேசலிகழ்ந் துற்றான் பிழை.

(1)

622.    பெரியார் நுவலுமொழி பேணு மவனே

யரியா னரசர்க் கரசு.

(2)

623.    மேலோர்சொற் கொண்டுய்ந்த வேந்தர்சிலர் விட்டிழிந்த

மாலோர் பலராகு வார்.

(3)

624.    பாச மிழந்தாரைப் பல்காற் பணிந்தவைக்கண்

வாசமுறக் காண்பான் மன்.

(4)

625.    பாந்தட் கொடிபடைத்தோன் பாழ்ஞ்சவையில் வாழ்ந்தசில

ராந்தகையோர்ச் சேர்ந்திடலா கா.

(5)

626.    நூன்மொழியிற் சீர்த்தவென நுட்பமறிந் தோதவல்லார்

வான்மொழிகட் கொள்ளல் வழக்கு.

(6)

627.    சிறியார்சொன் னூல்களும்பின் சீரிய வாமா

லறிவார்சொற் கொள்வா னரசு.

(7)

628.    மெய்யாய வேந்தர்க்கு வீடுவிழைந் தியாதொன்றும்

பொய்யாதார் சொல்லே பொருள்.

(8)

629.    வேந்தகிலந் தன்சொல் விழைந்தாங்கு மெய்யுணர்ந்த

சாந்தமொழி வேட்கத் தகும்.

(9)

630.    தெய்வநம்பிக் கும்பன் றிருத்தாள் வணங்காமன்

கைவழுவை யானான் கணத்து.

(10)

64. பெருந்தன்மை

631.    சேயுயிரிற் பல்லுயிர்கட் சிந்தித்தூன் றின்னாத

வாயுடைய னாவான்கோ மான்.

(1)

632.    மற்றொருவ னில்லை வணங்குங் குலத்துதித்த

பொற்றொடியை வேண்டுமன்சீர் போம்.

(2)

633.    பூண்ணிந்து தன்னுடலைப் போற்றுதலில் கோடிபங்கு

மாணகிலங் காக்குமவன் மன்.

(3)

634.    எழிலிமழை பெய்யினன்றி யேற்றமின்றென் றோர்ந்து

கழியறஞ்செய் வேந்துலகின் கண்.

(4)

635.    யாவர் வினையினும்பங் கெய்துமெனத் தேர்ந்து

காவல்செய்கை மன்னன் கடன்.

(5)

636.    உந்திய மாதவர்தம் முள்ளமகி ழச்செய் மன்னை

யிந்திரன்கண் டொல்குவதுண் டே.

(6)

637.    தன்போலு மன்னன் றனைவணங்குந் தார்வேந்தற்

கின்போ ரணுவு மிலை.

(7)

638.    வணங்குமன்னர்த் தான்பெறுநன் மக்களொடு நாடுங்

குணங்கொளிறைக் கில்லைக் குறை.

(8)

639.    போரஞ்சா தொன்னார் புறங்காணும் பொற்புமன்னே

வாரம் பொலிந்ததிரு மால்.

(9)

640.    இறுமாப் புறாதமன்ன னெந்த நலமும்

பெறுவான்கண் கண்ட பிரான்.

(10)

65. கடமை

641.    மண்டு குடைநிழற்கீழ் வாழுலக முற்றுமன்னன்

கண்டு புரத்தல் கடன்.

(1)

642.    மந்திரி மார்தம் மதியை யளந்தறியும்

புந்திமகு டத்துயர்ந்த பூண்.

(2)

643.    போகத் தகாலிடத்தும் பொய்வேட மிட்டறிவா

னேகத்தக் கோனே யிறை.

(3)

644.    அரக்க ரணையாரை யான்றமன்னன் சற்று

மிரக்கமின்றிக் கொல்வ திசை.

(4)

645.    படையனைத்துந் தன்னைப் பகைத்தாலும் வெல்வே

லுடையமன்னன் மாண்பே யுயர்வு.

(5)

646.    கூழ்குறையிற் றன்பொன் கொடுத்துப் புரந்திடலே

யாழ்குணத்து வேந்தற் கணி.

(6)

647.    காண வருவார் கடைப்பட்டா ரென்றாலு

நாணமின்றிச் செல்வான்மன் னன்.

(7)

648.    வந்த வழக்கறுமுன் மாடொத் திரைநுகர்மன்

னிந்த வுலகத் திடர்.

(8)

649.     கொட்டிலிற்சேய் தன்னரசைக் கொள்ளினுங்கொள் வான்குத்தி

வெட்டியெனத் தேர்வானே வேந்து.

(9)

650.    புடவி சுமக்கும் புலவலண றற்கான்

கடனறிந்தா லெய்துங் கதி.

(10)

66. குடியோம்பல்

651.    முடியோம்ப வேண்டா முழுதுந் தனது

குடியோம்பு நாட்டமுடைக் கோன்.

(1)

652.    வளரு முலைகாக்கு மங்கையென் நாளுங்

கிளர்குடிகட் காப்பான் கெடான்.

(2)

653.    குடிவருந்தக் காணுமன்னன் கோலட் சனையாள்

படியின்மற்றோர் மன்கைப் படும்.

(3)

654.    குடிகள் களிகூரக் குன்றிடித்துங் காப்பா

னடிகள் வடிவா மரசு.

(4)

655.    மண்ணாட்டில் வாழ்குடிகண் மாட்சியுறச் செய்யுமன்னால்

விண்ணாடு மேன்மைபெறு மே.

(5)

656.    குடிக ளறமுதலாக் கோதின்முத்தி மட்டு

மடியின்றிக் காப்பவனே மால்.

(6)

657.    கன்னங் களவுகொலை கற்பழிவொப் பாம்பிறவு

மன்னன் பிழையால் வரும்.

(7)

658.    வேலிவ யனையமன்னன் வெண்குடைக்கீழ் மேயாரே

யாலியுண்ணுந் தேவரின்மிக் கார்.

(8)

659.    தன்னாட் பொருட்பேற்றிற் றாரணிகாக் கின்றாற்குப்

பின்னாட் புகழே பெரிது.

(9)

660.    இடிபோன்ற நிந்தையஞ்சு மேந்தவிடத் துண்டே

குடியோம்பத் தக்க குணம்.

(10)

67. செங்கோல்

661.    வெங்கோ லரசர்கல வேரறுத்துச் சீர்திருத்துஞ்

செங்கோ லுடையானோர் தே.

(1)

662.    பொல்லா நரகம் புகாவாறே நாடுமன்ன

னல்லா னவனாடே நாடு.

(2)

663.    ஏங்கு துயருலக மெய்தா திதமுயன்று

தாங்குமிறை பல்லுயிர்க்குந் தாய்.

(3)

664.    நீதிமன்னன் றன்பா னெடும்போர் விளைப்பாரை

யாதியருண் முன்னின் றடும்.

(4)

665.    சிறிது நெறிதவறாத் தேர்வேந்த னாளின்

மறிதிரைப்பார் காய்க்கு மணி.

(5)

666.    ஆர்க்குமணி முற்றத்தா னாளுநா ளம்புவியி

ரியார்க்குமொரு தீங்கு மிரா.

(6)

667.    உலகை மறந்தார்க்கு முள்ளுவகை யீவா

னிலகுதனிச் செங்கோ லிறை.

(7)

668.    பாதகமே நாளும் பயில்வார்க் கிகலாமே

கோதறும்வேந் தேந்தியசெங் கோல்.

(8)

669.    பூமடந்தை நாளும் புரியுந் தவம்போலுங்

காமருசெங் கோல்பிடித்த கை.

(9)

670.    செங்கோலாற் செய்யினன்றித் தெய்வமுநன் கெய்தாதே

பொங்கோத மன்ன புகழ்.

(10)

68. கொடுங்கோல்

671.    கோடுங்கோ லரசைக் குரக்கினமுங் கூடி

நடுங்காது வென்று நகும்.

(1)

672.    கோடுநெறிக் கோனைக் குணவானென் றோதுநர்க்கு

நீடும் நரகே நிலை.

(2)

673.    வித்திடாச் செய்க்கும் விளைநிலத்தின் கூறுகொள்வேந்

தெய்த்துறுந்தீ தோதுநரா ரே.

(3)

674.    பொய்யர் முதலாய புன்மையருக் கானந்தம்

வெள்ளமன்ன னாளின் மிகும்.

(4)

675.    கார்காலத் தும்புற் கரிக்குங் கருணையில்புன்

நீர்காட்டும் வேந்த னெறி.

(5)

676.    புலிகண்ட மான்போல்வார் பொய்நீதி செய்யும்

வலிகொண்ட மன்னெதிரா வார்.

(6)

677.    பாவமுயன் மன்னர் பகடுமற்றைப் பண்பினவ

ரேவவரு மாளா லிறும்.

(7)

678.    கொலைமுதலாந் தீமைக் குலம்வளர்க்கு மன்னா

லலையுடுத்த பார்மா தழும்.

(8)

679.    வழக்குக் கொடுவருவார் மாழைகவர் மன்வாழ்

விழக்குஞ் சிறிதுநா ளில்.

(9)

680.    வஞ்சத் தொழிற்கொடுங்கோன் மன்னனிகர் மற்றொருதீங்

அஞ்சத்தான் செய்யவறி யான்.

(10)

69. ஒழுக்கம்

681.    ஆன்றொழுக் கத்தரச மைந்தா லன்றியுல

கேன்றதனை மேற்கொண் டிடா.

(1)

682.    ஆசாரங் கல்வி யறிவடக்க மாண்மையன்ன

தேசார்வேந் தெய்துந் திரு.

(2)

683.    வெறியாடல் சூதாடன் மேடப்போர் காணல்

குறியா னொழுக்கமுடைக் கோன்.

(3)

684.    பொன்விருப்ப மாதர்ப் புணரான் புயம்விழைவா

ரின்விருப்பு நீட்டா னிறை.

(4)

685.    முன்னாளை மன்னர் முறையெனினுந் தீதேன்மன்

றன்னாளி னீக்கத்  தகும்.

(5)

686.    சொற்காத் தறங்காத்துத் தொல்புவியைக் காக்குமன்னன்

றற்காக்கு மீசன் றயை.

(6)

687.    ஆலயத்தை மேலோரை யாசில் புலவோரைச்

சாலநத்தல் வேந்தன் றகை.

(7)

688.    ஆனினங்க ளாதி யவற்றினுக்கு மார்வம்நல்குங்

கோனிகத் தோர்க்கான் குரு.

(8)

689.    செவ்வைறெறி யென்னத் தினந்தோறொவ் வொன்றுரைத்துக்

கௌவைசெய்யும் மன்னே நடை.

(9)

690.    அழுக்ககன்ற சிந்தை யரசர்பிரான் றன்பா

லொழுக்கமுற்றுந் தாமே யுறும்.

(10)

70. ஆட்சி

691.    மந்திரிசொற் காடு மரப்பாவை போலுமன்னைத்

தந்திரத்தால் வெல்லுஞ் சகம்.

(1)

692.    ஒப்ப மிடுஞ்சிட் டுரையு முணராமன்

னெப்படியு மோர்நா ளிறும்.

(2)

693.    மாயிரு ஞாலம் வருந்துறப்பொன் கொள்வதினு

நாயின் மலமருந்த லாம்.

(3)

694.    சிற்றரச ராகியர்தஞ் சீர்திருத்த மெப்போது

முற்றரசன் நாடன் முறை.

(4)

695.    நீதிவிட்டுப் பொன்சேர்க்கு நிட்டூரர் கைகளைவான்

கோதி லெழிற்செங்கோற் கோன்.

(5)

696.    கேளிப் பொழுதின்மணி கேட்கிற்போய் யாட்சிசெய்வான்

வாளிற் கிரையாம் மறம்.

(6)

697.    சழக்ககன்ற நீதிமன்னன் றானாளு நாளில்

வழக்கனந்தங் கோடி வரும்.

(7)

698.    துட்டரைத்தண் டித்துச் சுகநல்லோர்க் கீயுமன்னன்

கட்டமுறா னெய்துங் களி.

(8)

699.    மெய்கண் டலதுமன வேதனைதீ ராதமன்னன்

கைகண் டுவக்குங் கதிர்.

(9)

700.    சுற்றுவந்து பொய்யுரைப்பார் காதறுக்க மாட்டாவேந்

தெற்றுமுந்நீர்ப் பார்க்கோ ரிடர்.

(10)

71. அமைச்சு

701.    நல்லமைச்சொன் றெய்தினன்றி நாடாளும் வேந்தனுக்கு

வல்லபெருங் கீர்த்தி வரா.

(1)

702.    மந்திரி நெஞ்சை மதித்தறிந்தான் மன்னுலகோர்

புந்தி முழுதறிந்தாற் போல்.

(2)

703.    மெய்யமைச்சன் றன்வாய் விளம்பா விதியாற்றி

லையமுற வொண்ணா தரசு.

(3)

704.    மாக்கொளற்காப் போமமைச்சன் மாறுபாட் டால்வழுதி

மீக்கொள்பெரு வாழ்வடைந்தான் மெய்.

(4)

705.    அரசனெறி குன்றி லமைச்சனுறும் பொல்லா

நரகிலென்றார் பல்லோர்முன் னாள்.

(5)

706.    மன்வலிமை குன்றிடினும் மந்திரிதன் புந்தியிட

ரென்வரினுந் தீர்க்குமெய்மெய் யே.

(6)

707.    வியுரைக்கு மன்னருக்குப் போந்தவர்சொற் கேட்குஞ்

செவிகண்ணா மென்று தினம்.

(7)

708.    வெகுமன்னர் வாழ்விழந்து வெட்டுண்ணச் செய்தார்

சகுனி மகோதரனொத் தார்.

(8)

709.    தமைக்குறியாக் கொள்ளாத தார்வேந் தனைவிட்

டமைச்சர் விலகலரி தன்று.

(9)

710.    தாவி லிகபரமுந் தாங்குந் தனியரசற்

காவி யனையா னமைச்சு.

(10)

72. உளவறிவிப்பான்

711.    களவும் நிசமுங் கவினுலகத் தாராய்ந்

துளவறிவிப் பான்வேந் துயிர்.

(1)

712.    தேவாதி தேவன் றிருவருளா லெச்செயலு

மோவாதுணரு மன்ன ருண்டு.

(2)

713.    ஒருங்குணர்ந்த மேலவர்தம் மொண்மலர்த்தாள் போற்றி

வருங்குறியுந் தேர்தல் வழக்கு.

(3)

714.    மந்திரத்தா லுண்மையறி மாட்சியிலான் மானிடர்தந்

தந்திரத்தாற் றேரத் தகும்.

(4)

715.    கோனேயென் றியாருங் குறியாத வேடமிட்டுத்

தானே யறிதல்சிறி தாம்.

(5)

716.    மனைவியினும் வாஞ்சையுறு மாந்தர்சிவர் வாய்த்தா

லனையரைக்கொண் டொற்றாட லாம்.

(6)

717.    ஊர்தோறும் போய்ப்போ யுளவறிவா ரோர்வேந்தற்

சேர்தோ ளனைய சிலர்.

(7)

718.    உளவறிந்து கூறுமவ ரொக்குஞ் சிலருட்

களவு மறிதல் கடன்.

(8)

719.    ஒறுப்பார்க்குந் தன்னை  யுணர்த்தாத வொற்றன்

பொறுப்பா னளவில் புகழ்.

(9)

720.    வஞ்சமின்றி யுண்மைகண்டு வந்துரைப்பார் மன்னவருக்

கஞ்சன்நல்குந் தெய்வமனை யார்.

(10)

73. தூது

721.    கந்த னிராமன் கவுரவர்கோன் றூதரன்னா

ரந்தவிதத் தூதுக் கணி.

(1)

722.    வஞ்ச மறந்தொன்னார் மாட்டேகி வாய்திறந்து

நெஞ்சறியுந் தூதே நெறி.

(2)

723.    தக்கவரில் லாதமன்னன் றன்மைமறைத் தேகிவரு

மக்களைத்தூ தென்றனுப்பு வான்.

(3)

724.    தூதனைக் கொல்லத் துணிகின்ற மன்னனுட

னேதமுறச் செய்வ திசை.

(4)

725.    தன்னிடத்துள் ளாரிற் றலையாந் திறத்தினரை

முன்னிவிடுந் தூதே முறை.

(5)

726.    சாம முதலாகச் சாற்றுமொரு நால்விதத்தும்

வாய்மலர்வான் றூதே வலி.

(6)

727.    பணியின் முடிபோற் பரிசனத்தார் தம்மி

லணிபெறுவான் றூதனென்ன லாம்.

(7)

728.    தக்கபெருந் தூதன் றன்வாய் மொழியுணர்ந்து

மிக்க சமர்விளைப்போன் வேந்து.

(8)

729.    எந்த விடர்வரினு மியாக்கையிழ வாதுதன்பால்

வந்தடைவாற் றூதனுப்பன் மாண்பு.

(9)

730.    தூதன் பெருஞ்சீர் துகளில்வென்றிக் கேதனத்தின்

மீதவிரப் பெற்றிடலே வீறு.

(10)

74. படைத்தலைவன்

731.    வேந்துமனச் சோர்வுறினும் வேலாற்குத் துண்டிறக்கப்

பாந்துகிலான் சேனா பதி.

(1)

732.    கோனை மதியூக்கங் குன்றாது வைப்பதெண்ணிற்

சேனைத் தலைவன் செயல்.

(2)

733.    கொடைத்திறமை குன்றாத கோன்பெருமை யாவும்

படைத்தலைவன் கைக்கே பரம்.

(3)

734.    மன்னைவிட்டுத் தான்போய் வயம்பெறுசே னாதிபன்கை

மின்னைநிகர் வேற்படையே வேல்.

(4)

735.    வந்தார்க் கடங்காமை மாட்சியன்று மாற்றார்மே

லுந்தாண்மை யேமிக் குரம்.

(5)

736.    எளியார் தமையுறுக்க லேற்றமன்று மிக்கார்

களிமாந்தத் தாக்கல் கடன்.

(6)

737.    சேனைத் தலைவனொல்கச் செய்யுமன்னன் சீர்கெடுபர்

னேனைத் தலைவர்க் கிடைந்து.

(7)

738.    மானைப் புரைவார் வளமுலையு மன்னனுக்குத்

தானைத் தலைவன் றரல்.

(8)

739.    தன்மகுடஞ் சூடுந் தனையனினு மிக்கதுணை

மன்மனந்தேர் சேனைமுதல் வன்.

(9)

740.    பொன்னி லுடலிற் புகழ்மான மேற்றமென

வுன்னிடுவான் சேனையின்மிக் கோன்.

(10)

75. படை

741.    முற்ற மொருகுடைக்கீழ் மூதுவகை யாள்வாற்கும்

பற்று துணைநாற் படை.

(1)

742.    படைப்பெருக்க மில்லாது பாராளு மன்னன்

குடைப்பெருமை மாயுங் குறைந்து.

(2)

743.    யாவரையும் வென்றே மிகனமக்கின் றென்றுபடைச்

சேவகரையெள் ளல்பெருந் தீது.

(3)

744.    படைவருந்து மாறுசெய்யிற் பாரறிய வஃதே

யடையமுனிந் தோர்கா லடும்.

(4)

745.    கூலிப் படைவிழையுங் கொற்றவன்கைப் பற்றுமின்னார்

தாலிக்குண் டாமே சளம்.

(5)

746.    சேனை முழுதுந் திருத்தியுறச் செய்யுமன்ன

னேனை யரசர்க் கிடி.

(6)

747.    அன்னமிட்ட கோனை யரும்போரிற் கைவிடுவா

ரின்னல் விரிக்கவல்லா ரியார்.

(7)

748.    தடையறத்தன் னாவி சமனதெனத் தேறான்

படையிற் புகுதல் பழி.

(8)

749.    வீரச் சுவர்க்கமதின் மெல்லியரின் மிக்காரிப்

பாரகத்தின் றென்னூல் பல.

(9)

750.    போரின் முதுகீயும் புல்லியரி னல்லவர்தந்

நாரியர்சொற் றூதா நரர்.

(10)

76. அரண்

751.    எச்சமயம் போர்வருமோ வென்பதுண ரேந்தலையுள்

ளச்சமின்றிக் காப்ப தரண்.

(1)

752.    அரண்தனைப் பேணி யரசியற்றான் றன்னூ

ரிரணகள மாவ தெளிது.

(2)

753.    முரண்பேணி நீதி முறைபேணு மன்னர்க்

கரண்பேணி வாழ்வ தணி.

(3)

754.    அரியகலை நீத்துலவு மங்கனைக்கொப் பாவா

னுரிய மதிளிடித்திட் டோன்.

(4)

755.    வீட்டை மதியா வெறுந்தவசி போல்வானே

கோட்டை யினைமதியாக் கோன்.

(5)

756.    கனத்துயர்ந்து நீருடுத்துக் காடுசுற்றிக் குன்றி

னினத்துநடு வாவ தரணே.

(6)

757.    குன்றுமரண் போன்றாற் குணமாம மின்றாயினஃதே

யின்றுமதிள் வாழ்வ தினிது.

(7)

758.    ஆட்டைப் புலிமதித்தாங் காண்மையுள்ளா ரெண்ணுவது

கோட்டையில்லா வேந்தன் கொடி.

(8)

759.    எம்மன்மதிளே யிகலாமென் றெண்ணினனோ

வம்மன் விரைவி லறும்.

(9)

760.    கூடிழந்த புள்ளுங் குலப்பார்ப்புங் கோட்டையிடித்

தாடிறையுஞ் சேனைகளு மாம்.

(10)

77. வீரம்

761.    பாரனைத்து நீத்துப் பரிந்துதவஞ் செய்வதற்கும்

வீர முதற்றுணையா மே.

(1)

762.    வீர மணுவுமிலான் மெய்ப்புலமை யோனெனினும்

பாரறிய வீனப் படும்.

(2)

763.    எத்தகைய கைத்தொழிலோ னென்றாலு மேன்றுசெய்தற்

கத்தகைய வீர மணி.

(3)

764.    மெய்வீர மில்லாத வேந்தன் வியன்மகுடந்

தொய்வீழ் முலையாள் சுமை.

(4)

765.    புந்தி வலிபோற் புயவலியுந் தோய்ந்திருக்கு

மந்திரியைச் சேர்க்குமவன் மன்.

(5)

766.    போரவர் விஞ்சிப் புயம்பூரித் தார்க்குமடற்

றீரமுறு சேனைமன்னன் சீர்.

(6)

767.    நன்னிலத்தா னன்னீரா னல்ல குடிப்பிறப்பாற்

றுன்னிடுமே வீரமலி தோள்.

(7)

768.    வீர மிலாதார் வெறும்பிணத்திற் றாழ்வாரஃ

தாரழலிற் கஞ்சாமை யால்.

(8)

769.    கூரப் படைகைக் கொளுந்தேவர்க் கும்பிட்டால்

வீரப் பெருக்கமுண்டா மே.

(9)

770.    நீரறாப் பாரினர்க்கும் நீள்விசும்பி லுற்றார்க்கும்

வீரமே பல்குணத்தின் மேல்.

(10)

78. போர்

771.    சரசகுண மங்கை தனக்கழகா மாபோ

லரனுக்குப் போரே யழகு.

(1)

772.    போரஞ்சிச் சூது புரியும் புரவலர்க்கு

நாரணன்வே ளன்னார் நமன்.

(2)

773.    போர்க்கேகும் போதே பொருவில் புகழ்ச்சால்பொன்

னூர்க்கேயாம் போதுமென்பா ருண்டு.

(3)

774.    கட்டுண் டெதிர்பொருவான் கைவசத்தி லாவதினும்

வெட்டுண்டு வீழல்குண மே.

(4)

775.    அத்திரத்தி லாயிரம்பங் கான்ற தடர்ந்துபொருஞ்

சத்திரமே யென்னத் தகும்.

(5)

776.    இகல்வார் படைநடுவி லேமனொல்கச் செல்லுந்

தகவுடையான் போரே தலை.

(6)

777.    போர்க்களத்தார் காணப் புறங்காட்டும் புல்லியனீ

ரார்க்கு மருவருப்பே யாம்.

(7)

778.    போர்வரிற் றான்வேட்ட புதுக்கலவிப் பொற்புமங்கை

நேர்வரினுங் கைக்கை நெறி.

(8)

779.    காலமிட மாதி கருதிக் கலங்குவனோ

வேலணிந்து மெய்ம்மறந்த வேந்து.

(9)

780.    சயமங்கை மேற்கொடுள்ளான் றன்னே ரிகலோர்

புயவலியெண் ணுங்கோல்செய்யும் போர்.

(10)

79. செயம்

781.    மெய்வலிமை யாதியசீர் மேவிடினும் வேந்தருக்குத்

தெய்வந் தரலே செயம்.

(1)

782.    ஆணுடன்பெண் யாகியொன்று மாகா னருட்கண்வைத்துப்

பேணுமட்டு வென்றி பெறும்.

(2)

783.    வெங்கோன் மழைபொழியு மேகமன்னார் வில்வினையுஞ்

செங்கோல்வென் றெய்துஞ் செயம்.

(3)

784.    சத்தியமு நீதி தவறாத் தகையுமுள்ளா

னெத்தினத்து மெய்தும்வென் றியே.

(4)

785.    ஈச னருளுளதென் றீனக் கொடுமைசெய்யிற்

றேசழிந்து பின்புவருந் றீங்கு.

(5)

786.    தன்பா லவசெயமாந் தன்மையறிந் தாலுமன்னோர்

மன்பால் வணங்கான் மதித்து.

(6)

787.    வென்றி யடைந்தோன் விதிர்வேற்குத் துண்டிறந்தோ

னென்றிருவர் தாமும்வல்லோ ரே.

(7)

788.    வணங்கிப் பொருள்வழங்கு மானமின்மன் மட்டு

முணங்கி யவசெயம்பெற் றோன்.

(8)

789.    அவசெயம்பெற் றம்புவியி லாகஞ் சுமந்தா

ரெவர்நெடுநாள் வாழ்ந்தா ரினிது.

(9)

790.    கயவாய் கருடனழக் காலால் வெலுமாற்

செயமோர்ந் துரைப்பதரி தே.

(10)

80. பயம்

791.    தோள்வலிமை நாடிமிகத் துள்ளுமன்ன வர்க்கிறைவன்

றாள்வலிமை நல்குஞ் சளம்.

(1)

792.    கோரத் தவத்தர்கொடுங் கோபத்திற் பொல்லாதோ

வீரத் துயர்ந்தமன்கை வேல்.

(2)

793.    கற்புடைய மங்கை கனன்றொருசொற் சொல்லின்மன்னன்

பொற்புமுற்றும் பாழாகிப் போம்.

(3)

794.    மண்ணுலக மேங்க வருத்துகின்ற மன்றலைமேல்

விண்ணுரு மேறோர்கால் விழும்.

(4)

795.    கரவுபடு நெஞ்சகத்துக் காவலவன் கையி

லுரகம்வந்து கௌவினுங்கௌ வும்.

(5)

796.    நீர்தீகா னோய்மறலி நேர்வபல் கொல்லவல்ல

பார்தீங் குறச்செய்மன்னற் பாய்ந்து.

(6)

797.    ஆயிரங்கை மன்னன்முத லாவாரை யந்தணன்றன்

சேயிகலிக் கொல்லல்வம்பன் றே.

(7)

798.    எட்ச னொருவ னிடுந்துரும்பைத் தாமரைநே

ரட்சன்முதற் றேவர்வென்றில் லார்.

(8)

799.    எண்ணின்மன்னர் நீதிபிழைத் தீடழிந்த வாறுணர்வான்

விண்ணின்மன்னர் போற்றிசைக்கும் வேந்து.

(9)

800.    செயமேவும் வேந்தருக்குந் தெய்வமொன்றுண் டென்னும்

பயமே யுயர்ந்த பயன்.

(10)

81. குடி

801.    குடிதழைந்து வாழினன்றிக் கோயி லினமும்

நெடிது விளங்கா நிசம்.

(1)

802.    மாதவத்து மேலவர்க்கும் வாஞ்சித்த வாறியற்றி

யேதமறக் காணல்குடி யே.

(2)

803.    அந்தண ராதி யனைவருக்கு மாதாரந்

தந்தமதூர் மேயகுடி தான்.

(3)

804.    வடிவேலுஞ் செங்கோலு மன்னவர்க்குத் தத்தங்

குடியார் கொடுத்த கொடை.

(4)

805.    கடியாதீ செய்போழ்துங் கள்ளரக்குச் செந்நீர்

குடியார் குடியே குடி.

(5)

806.    குடிவாழ்த்தப் பெற்றுமகிழ் கொற்றவேன் மன்னன்

னெடிதூழி வாழு நிலத்து.

(6)

807.    குடித்தனத்திற் றோன்றுமக்கள் கூட்டத் தொருவன்

வடித்தவிதிர் வாள்பிடித்த மன்.

(7)

808.    இலவு புரையுமித ழேந்திழையா ரின்பங்

குலவுமனை யாவுங் குடி.

(8)

809.    ஈறு நினைத்தலையா தெம்மதிட மென்றொருவர்

கூறுமிட மெல்லாங் குடி.

(9)

810.    ஆழ்குணத்தா லாராய்ந் தறியுங்கா லன்னநல்குங்

கூழ்குறிப்பார் தாமே குடி.

(10)

82. கூழ்

811.    பைங்கூழ் முதற்றுணையாம் பண்பறியாப் பாழ்வேந்தன்

றங்கூர்கா டென்னத் தகும்.

(1)

812.    கூழ்விளைவி லியாதுங் குறைவின்றே யாகின்மன்னன்

வாழ்விலுண்டு நீதி வளம்.

(2)

813.    செய்கூழ் கருகின் மனைசேராரைச் சேர்ந்தாங்கு

நைகூர்மை வேந்தர் நலம்.

(3)

814.    மழைகுன்றிற் கூழொடுதன் மாட்சிகுன்ற லோர்வான்

பிழைதுன்றா மன்னர் பிரான்.

(4)

815.    மாந்தரையுங் கூழா மதிக்கு மதிமன்னன்

வாய்ந்தபுகழ் வெள்ளி வரை.

(5)

816.    கூழும் மகவுங் கொலையுண்ணா வாறளித்து

வாழுமவ னீதிகுன்றா மன்.

(6)

817.    கருப்பப் பயிரழிப்பார்க் காதியவை செய்வார்

விருப்பமுற்றக் கூட்டுவிப்போன் வேந்து.

(7)

818.    நன்செய்புன்செய்க் கூழழிக்கு நால்வாய் முதலவற்றை

மன்செயித்துக் காத்தல் வழக்கு.

(8)

819.    ஆனின மாதி யளப்பிலுயிர்க் கூழினையுந்

தானினைத்துக் காப்பவன் வேந்தன்.

(9)

820.    குடைநிழற்றிக் கூழ்காக்குங் கூலிப் பயன்மட்

டுடையமெனத் தேர்ந்தமன்ன ருண்டு.

(10)

83. வரி

821.    ஆறிலொரு பங்குவரி யன்றிமேற் கொள்ளுமன்னன்

வீறிழந்து வேறாய் விழும்.

(1)

822.    சிற்றரச ராறிலொன்றாச் சேர்த்தவற்றி லம்முறையே

கொற்றமகா வேந்தன் கொளும்.

(2)

823.    விளைந்தபண்ட மல்லாது வேறு விழைவான்

வளைந்தவலைக் கூற்றையொக்கு மன்.

(3)

824.    அமுதளிப்பார் பொன்கொண் டளிகூரு மன்னை

முழுது மிடிவருத்து மொய்த்து.

(4)

825.    பலவேறு வேறாப் பணவரியிட் டூரவரைக்

கொல்வேந்த னல்லதில்லை கூற்று.

(5)

826.    கள்ள வரியமைத்துக் காசினியைப் புண்செய்மன்ன

னெள்ளன்முற்றும் வாழ்க்கைக் கிடம்.

(6)

827.    பொன்னே விழைந்து புகழ்வெறுக்கும் பொய்வேந்தன்

றன்னேயம் பாவத் தழல்.

(7)

828.    செய்க்கும் மனையினுக்குஞ் சேவினுக்கு நாயினுக்குங்

கைக்குவரி கொள்வான் கடை.

(8)

829.    கூழில்செய்க்குப் பொற்பகுதி கொள்வேந்தைச் செய்வானே

லாழியிடை தாழ்க வயன்.

(9)

830.    வரியளவின் மேற்கொண்மன்னன் மாற்றாரா னொந்து

பரிசழிந்து நாசப் படும்.

(10)

84. அரசுரிமைப் பொருள்

831.    விலைக்கடங்கா மாணிக்கம் வேறெவர்பெற் றாலும்

நிலைக்கமன்னற் கீத னெறி.

(1)

832.    அளவின் மிகப்புதைபொன் னார்பெற் றிடினுங்

களவின்மன்னன் கொள்ளல் கடன்.

(2)

833.    இனமின்றி மாய்ந்தான்பொன் னெத்தனையா னாலு

மனகமன்னே கொள்வ தறம்.

(3)

834.    அவராதத் தெய்தியபொன் னத்தனையும் மன்னன்

றவறாது கொள்ளத் தகும்.

(4)

835.    மிடியொருக்கால் வந்தரசை வேதனைசெய் தாற்பொன்

குடியிடத்துங் கொள்ளல் குணம்.

(5)

836.    அரியபொரு ணல்கினற்றா னாள்புவியி லியார்க்கும்

பெரியசெல்வ னாக்கன்மன்னன் பீடு.

(6)

837.    அநாதப் பிரேத மடக்கலன்ன யாவுந்

தனாதுகட னாம்மன் றனக்கு.

(7)

838.    இனிய தகையினவ ரின்பமுற நாடித்

துனிகளைதன் மன்னன் றொழில்.

(8)

839.    கோயில் களுங்குடியுங் குன்றுங்கால் தன்பொருண்மிக்

கீயின்மன்னற் குண்டா மிசை.

(9)

840.    நவிலரிய பல்வாறா நன்றும் பிறவும்

புவிபுரக்கு மன்னன் பொருள்.

(10)

85. வேதி

841.    பொருளி லின்பந் தந்திரத்தாற் பொன்செய் தறத்திற்

றருவினம்போ னல்குந் தகை.

(1)

842.    வங்கம் புடமிண்டின் மாயாத பொன்செய்வா

னங்கணிலத் தெய்தருமிக் கான்.

(2)

843.    பொன்செய்யும் வித்தை பொருவில் குருநாதன்

றன்செயலா லெய்துவதே தான்.

(3)

844.    பொன்னதனைச் செய்துவிற்றுப் போகம் புசிப்பார்க்கு

மன்னன் பெரும்பகையா வான்.

(4)

845.    மண்ணதனைப் பொன்னாக்க வல்லசித்த ருண்டவர்தம்

மெண்ண மறிவதரி தே.

(5)

846.    உப்பினாற் சுண்ணாம்பா லுண்டாகும் பொன்னெனவே

செப்பிடுவார் நூலோர் சிலர்.

(6)

847.    அள்ள லுவர்ப்பாரி லன்பிலராற் காண்பரிதா

வுள்ளதென்பார் பொன்விளைக்கு முப்பு.

(7)

848.    தக்க வளலைதொட்டால் சாற்றுஞ் சரக்கனைத்து

மிக்ககுரு வாகுமென்பார் மெய்.

(8)

849.    கவனசித்தி காயசித்தி காஞ்சன சித்தித்

தவனினைத்தாற் செய்யத் தகும்.

(9)

850.    சக்கர வர்த்தி தனிற்கோடி பங்கதிக

மெக்கணத்தும் பொன்செய்கின்றோ னே.

(10)

86. வயித்தியம்

851.    மாழைசெய்வான் செய்யும் வயித்தியமே மேலாமென்

றேழையருஞ் சொல்லுவதுண் டே.

(1)

852.    கைம்மகிமை யன்பு கருத்துடைய னாமொருவன்

செய்ம்மருந்து நோய்தவிர்ப்ப தே.

(2)

853.    நான்கு வயித்திமு நன்கறிய வல்லானே

தேன்குளிர்தார்த் தன்மந் திரி.

(3)

854.    மனிதர்சுரர் சித்தர் வல்லவுணர் தந்நோய்த்

துனிமருந்தாற் றீர்கை துணிவு.

(4)

855.    நோயில்பெரும் பேறே நுடங்காத செல்வமென்கை

மாயிருஞா லஞ்சொல் வது.

(5)

856.    வாத முதலா வகுத்துளமுந் நாடிகளின்

பேத மறிதல் பெரிது.

(6)

857.    திரிகடுக மாதியவாச் செப்பு மவற்றிற்

குரியகுணந் தேர்வ துரம்.

(7)

858.    நோயின் றிறங்குறிப்பு நோக்கமிடை பாகமன்ன

வாயினவ னேவயித்தி யன்.

(8)

859.    வந்தநோய் தீர்த்து மகிழ்கூர வைப்போனே

யந்தண்மலர்ப் பீடத் தயன்.

(9)

860.    படாதவெந் நோய்தீர்க்க வல்யான்மை யன்றன்பாற்போய்க்

கொடானுங் கொடுக்குங் கொடை.

(10)

87. மை

861.    பாருட் கிடக்கும் பணப்புதைய லத்தனையு

மோரும் படிசெயுமை யுண்டு.

(1)

862.    பணங்காக்கும் பூதங்கள் பற்பலவிட் டோடுங்

குணங்காட்டு மோர்மைக் குறி.

(2)

863.    அரசர் முதலோரை யாளாக்கி வேண்டற்

றரமயக்கு  மோர்மைத் தகை.

(3)

864.    சாலவித்தை கோடி தரணியினிற் செய்துபொருட்

சீலமுறச் செய்தலுமைச் சீர்.

(4)

865.    உருவங் கரந்துகரந் தூர்தொறும்போய் வேண்டும்

பொருளடையச் செய்திலுமைப் பொற்பு.

(5)

866.    மைசெய் திடற்கா மகாமூலி யுண்டறியார்

பொய்செய் துயிர்வதைப்பார் போந்து.

(6)

867.    ஏட்டுள்வம்பர் சில்லோ ரெழுதிவைத்த பொய்மைசெய்து

கேட்டுளுற்றார் பல்லோர் கிடீர்.

(7)

868.    புதையல் விருப்பத்தாற் போயிறந்த மாந்தர்

கதையனந்தஞ் சொல்லுமுல கம்.

(8)

869.    உண்மையா மையொருவ னுற்றா லதுவுமருள்

வண்மையென்றே சொல்லல் வழக்கு.

(9)

870.    களிமலிந்து சித்தர்தொட்டுக் காட்டாமை யெல்லா

மெளிமை யெருமையன்ன வே.

(10)

88. தெளித்தல்

871.    பொன்செய்வே மென்று பொருள்கேட்பார்க் கீவாரை

யென்செயினும் பாவமில்லை யே.

(1)

872.    வேசைக் கிடும்பொனிலும் வேதிக்க லாமெனும்பே

ராசைக் கிடும்பொன் னவம்.

(2)

873.    மண்ணிலுழு துய்யாமன் மாழைவிருப் பாற்புகைத்துக்

கண்ணிழந்தா ரெண்ணில்பல்லோர் கள்.

(3)

874.    ஈசனுக்கு மீயா ரிரதவித்தை யுண்டெனும்பொய்

பேசவல்லார்க் கீவார் பெரிது.

(4)

875.    வேதிக்க வல்லான் விரைந்தொருவர் தம்பாற்போய்ப்

போதித்துக் கேளான் பொருள்.

(5)

876.    செம்பிரும்பைப் பொன்னாகச் செய்வான்றன் றேகத்தை

வம்பில்விட்டா லுந்திறவான் வாய்.

(6)

877.    வல்லவர்க்கு மெய்தரிதா மாழைவித்தைக் காரன்மனங்

கல்லனைத்து நாணுறும்பாழ்ங் கல்.

(7)

878.    பிண்டங் கரைத்துப் பெரிதிரத வாதமுயல்

வண்டர்கட்குத் தீங்கே வரும்.

(8)

879.    உந்தியசீர்ச் சித்தரு ரைப்பாரென் றூன்கொடுசெய்

தந்திரங்க ளெல்லாந் தவறு.

(9)

880.    ஏமம்வெள்ளி மைகண்மருந் தென்பனசெய் தின்புறுஞ்சீர்

தீமனத்தோர்க் கெய்தாத தே.

(10)

89. தெய்வீகம்

881.    பொருளின்முத்தி யெவ்வுலகும் போற்று மொருவ

னருள்வலியா லெய்து மது.

(1)

882.    சத்தமொடு பார்வையென்னுந் தன்மைகளால் வேதிக்கு

மத்த மருடாலே யாம்.

(2)

883.    உலவாக் கிழிபடிக்கா சொள்ளியபொற் செங்கல்

புலவோர் பெறலருளின் பொற்பு.

(3)

884.    சீட்டமையுந் தெய்வத் திருவெழுத்தாற் சில்லோர்முன்

னீட்ட லருடரும்பொன் னே.

(4)

885.    சொற்பனத்திற் றெய்வமொன்று சொல்லியத னாற்கிடைக்கும்

பொற்பணமு மேலாம் பொருள்.

(5)

886.    இதயம் வருந்தாதோ ரேதுவின்றி யெய்தும்

புதையலுதுந் தெய்வப் பொருள்.

(6)

887.    செலவழியிற் கண்டெடுத்த றேடித் தரன்முதலாம்

பல்வகைத்தாந் தெய்வப் பணம்.

(7)

888.    தானோர் முயற்சிசெய்து தட்டழியா முன்றகைசால்

வானோர் வழங்குபொன்னே வாழ்வு.

(8)

889.    கேட்டபொழு தெல்லாங் கிருபையொடு தெய்வநல்கும்

வாட்டனத்தை யெள்ளன் மடம்.

(9)

890.    தெய்வம்நல்கு மென்னநம்பிச் செம்பொன்முத லாவிரந்து

நைவதுவுந் தாழ்ச்சியென்னே நாம்.

(10)

90. பொருட்பெருமை

891.    பொருளா லடைவரிய போகமொன்றின் றென்பார்

தெருளாரிற் சீர்த்த சிலர்.

(1)

892.    வெங்க ணரவுமென்பு மேனியெங்கும் பூண்டோனுந்

தங்கவெற்பைக் கையிலெடுத் தான்.

(2)

893.    பிறங்கு பரிதியன்ன பீதகக்கா சின்றே

லறங்களொன்றுஞ் செய்தலரி தாம்.

(3)

894.    பாரா திகழ்ந்திடினும் பைம்பொன்னுடை யாரைமின்னார்

நேரா யிரப்பார் நிதம்.

(4)

895.    கற்ற புலவோருங் காஞ்சனமுள் ளார்களிக்குஞ்

சொற்றழையச் செய்வார் துதி.

(5)

896.    பொன்னு மணிக்குவையும் போதவுடை யானென்றான்

மன்னும் விழைவான் மதித்து.

(6)

897.    செத்த பிணந்தானுஞ் செம்பொனின்றிக் காடுபுகா

தித்தகைமை யோராதா ரியார்.

(7)

898.    இத்தறையிற் பேயினமு மேமப் பெரும்புதையல்

வைத்ததலங் காப்பதுண்டம் மா.

(8)

899.    கண்ணிமையா ரூருங் கமலத்தான் றன்னுடலும்

புண்ணினெடு மாலுரமும் பொன்.

(9)

900.    முன்னின் றனைத்துநல்கி முத்தியினுஞ் சேர்க்கவல்ல

பொன்னின் புகழே புகழ்.

(10)

91. கலிக்கொடுமை

901.    பாவக் கொடும்பேய் பலகோடி சூழ்ந்தியற்றுங்

கோவப் பயனல் குரவு.

(1)

902.    இருதாளு மன்பர்சிரத் தேற்று மொருவற்

கருதாரைச் சூழுங் கலி.

(2)

903.    கலியை யிகழாக் கவிஞரின்றென் றோதன்

மலிதிரைநீர்ப் பாரின் வழக்கு.

(3)

904.    கலிவேர் களையினன்றிக் காமஞ் சினநேர்

புலியாதி நீங்கா புறம்.

(4)

905.    மணிமா மகுடமணி மன்னரையும் பற்பல்

பிணிசாரச் செய்யுமிடிப் பேய்.

(5)

906.    எழுபிறப்புந் தேறுமுணர் வேயந்தோர் தமையுங்

கழுதொடொக்கச் செய்யுங் கலி.

(6)

907.    ஆதித்தன் போலு மறிவினையுங் கொல்லுமந்தோ

மேதிக்கோ னாணு மிடி.

(7)

908.    கனலவியு நீராற் கணத்திற் கலிச்சூ

டனகனரு ளின்றியவி யா.

(8)

909.    ஆனைக் களிறனையா னாகா மிடிப்பட்டாற்

பூனைக் குருளையொத்துப் போம்.

(9)

910.    மான மிழந்த மனத்தரையும் வன்மிடிப்பே

யீனமுறச் செய்யவல்ல தே.

(10)

92. மெய்

911.    இன்பத் தறம்பொறியா லெய்த லவற்றிறைவ

னன்பர் பதஞ சூடலுயர் வாம்.

(1)

912.    நீறேனும் மண்ணேனு நெற்றியின்மட் டேனுமிடும்

பேறே யொழிக்கும் பிணி.

(2)

913.    சந்தனங் கத்தூரி சவ்வா தனையவிடன்

மைந்தருக்கு மங்கையர்க்கு மால்.

(3)

914.    எழுதன் மலர்தொடுத்த லீசனைப்பூ சித்துத்

தொழுதலன்ன காயத் தொடர்பு.

(4)

915.    வாள்பிடித்தல் வேல்பிடித்தல் வம்பூடல் செய்யுமின்னார்

தாள்பிடித்த லின்பந் தரும்.

(5)

916.    மார்பி லிளமடவார் வள்ளமுலைச் சோடழுந்தச்

சேர்பிரியம் நீத்தார் சிலர்.

(6)

917.    மக்க டமைக்கரத்தால் வாரியணைத் தானந்த

மிக்கடைத்த லீனமல்ல வே.

(7)

918.    ஆவன் முழுதொழித்திட் டங்கையினி லேற்பானுங்

கோவண்மட் டேனுங் கொளும்.

(8)

919.    கல்லும் பரிச மறியுங் கருத்ததென்றாற்

சொல்லுமதை வெல்வதளி தோ.

(9)

920.    மானையன்னார் மென்றோண் மருவன்முத லாயமெய்ச்சீ

ரானையன்னார் கொள்வா ரறிந்து.

(10)

93. வாய்

921.    வாயா லருந்தும் வளங்குறையு மாயினுடற்

றீயாதி யுண்ணச் செலும்.

(1)

922.    உண்ணு மவற்று ளுயர்ந்தார்க ளுண்டமிச்ச

நண்ணு மதுவே நலம்.

(2)

923.    எல்லா வுணவினத்து மியாதோ ருயிரினையுங்

கொல்லா ருணவே குணம்.

(3)

924.    பாடுபட்டுச் சோறுணும்வாய் பாவமற்ற தாமிரந்து

கேட்டுகெட்ட சோறுணும்வாய் கீழ்.

(4)

925.    ஆயின் மறைதொட் டறையும் பனுவன்முற்றும்

வாயினது செல்வமெனும் வைப்பு.

(5)

926.    அன்போ டிசைவா ளதரமுத லாயவுண்ணு

மின்போர்ந் துரைப்பதரி தே.

(6)

927.    கையளைந்து மக்கள் கழித்தவுண வின்சுவையு

மையலறத் தேர்தன்மலர் வாய்.

(7)

928.    மாநிலஞ் செய்தான் மனையினைத்தன் வாயிடத்தி

லேனிருத்தி னானுயர்வா மென்று.

(8)

929.    மிச்சமாம் வாய்ச்சுவையின் வீறறிய வேண்டுமென்றே

மச்ச வுருச்சமைந்தான் மால்.

(9)

930.    ஓயாது நாடுமவ ருன்னுமுருக் கொள்ளுமொன்றும்

வாயா லளிக்கும் வரம்.

(10)

94. கண்

931.    மண்ணத் தனைக்குமொரு மன்னவனாம் வாழ்வுறினுங்

கண்ணற்றா னாயிற் கடை.

(1)

932.    கண்ணின் பெருமை கழறிடவும் வேண்மோ

வெண்ணி லுலகமுற்று மே.

(2)

933.    இரவுபகல் காண்பதற்கு மேற்ற கருவி

கரவிலறி வேயனைய கண்.

(3)

934.    இடமுணர்ச்சி யாமவற்றிற் கேயந்தகட்பே ரீந்தார்

நடலைமுற்றுந் தீர்ந்தகவி ஞர்.

(4)

935.    தெய்வ மெதிர்வரினுந் தெண்டனிடாத் தீயோரே

யைவகையிற் சீர்த்தகண்ணில் லார்.

(5)

936.    கொங்கை வனப்புங் குறுஞ்சிரிப்புங் காட்டுமின்னா

ரங்கையங்கட் காணன்மற்றொன் றா.

(6)

937.    கடல்வனப்புங் குன்றின் கவினா தியவும்

யடர்விழியல் லார்க்குரைக்கை பாழ்.

(7)

938.    எண்சாண் ணுடம்பு ளிசையுமுறுப் பெண்ணான்கிற்

கண்சால் புடையதொன்றா கா.

(8)

939.    விண்ணேயா யெங்கு மிளிர்வாற்கு மேலோர்தாங்

கண்ணே யிணையுரைத்தார் கள்.

(9)

940.    அதிக முடலில்விழி யாமெனற்கு வானிற்

கதிரு மதியுங் கரி.

(10)

95. மூக்கு

941.    நாற்ற மொடுமணமு நன்கறியு நாசியில்லாத்

தோற்ற மசரத் தொகை.

(1)

942.    உடலசைக்கும் வாயு வுலவுவது நாசி

யிடமெனின்மாண் பொன்றுரைப்பா னேன்.

(2)

943.    மரித்தவர்க்குந் தூக்கமன்ன வாய்ந்தார்க்கும் பேதந்

தெரித்திடுத னாசித் திறம்.

(3)

944.    பூவு நிணமுமொன்று போலும் புழைமூக்கின்

மேவுநல மில்லார்க்கு மெய்.

(4)

945.    முரக்கிதழ்வாய்ப் பூவையரை முத்தமிட்டு மஞ்சண்

மருக்கொளலு நாசியதன் மாண்பு.

(5)

946.    நாசிப் புழைக்காற்றை நம்பியெண்ணில் கோடிசித்த

ராசித்த வாறிருக்கின் றார்.

(6)

947.    மணங்கவரு நாசி வளியே யுயிரென்

றிணங்குகின்றார் பற்பலருண் டே.

(7)

948.    நாசி நுனியி னடம்புரிவா னாதனெனப்

பேசிடுவார் பல்லோர் பிடித்து.

(8)

949.    மணமின்றே லின்பமில்லை வானுலகு மில்லை

துணரெனினுங் கையாற் றொடார்.

(9)

950.    வாசனையை விட்டு மறைமுதலா நூலினமும்

பேசவல்ல தில்லைப் பிற.

(10)

96. செவி

951.    தேக்குஞ் செவியுணர்வின் சீரிலவர் செஞ்சொல்நுவல்

வாக்குமின்றி னமைகளா வார்.

(1)

952.    காதனைய தாகுங் கருவிமற்றொன் றில்லையென்கை

மாதவத்தோ ரேயறிகு வார்.

(2)

953.    விண்ணிடியுங் கேட்டறியா வெற்றுச் செவிமாந்தர்

கண்ணி லவரிற் கடை.

(3)

954.    கண்ணின்றிக் கற்றறிவார் காசினியி லுண்டுசெவித்

திண்ணிமையில் லார்க்கொவ்வா தே.

(4)

955.    குருமொழியுங் காதலுடைக் கோதை மொழியு

மருவுசெவி யில்லான் மரம்.

(5)

956.    ஏதேனும் பார்க்குங்கண் ணீக்குமுண்டு நாய்க்குமுண்டு

காதே யறிவுணர்த்துங் கண்.

(6)

957.    கல்லுருக வீணைதொட்டுக் கானமிசைத் தாலுமுணர்

வில்லுருவக் காதினர்க்கின் றே.

(7)

958.    பொன்னும் மணியும் புனைதல் செவிக்கணியன்

றின்னுரைகட் கேளா தெனில்.

(8)

959.    ஆகாத சொற்பலகொண் டாண்டா னருட்புகழ்ச்சி

போகாத காதோர் புழை.

(9)

960.    காதறி வுள்ளார் கடலுலகி லின்றாயின்

வேதமுத னூலிறக்கு மே.

(10)

97. காமம்

961.    ஐந்து பொறிக்கு மகத்தினுக்கு மானந்தந்

தந்துறுதல் காமத் தகை.

(1)

962.    காமப் பெருக்கமின்றேற் காய்கதிரும் வான்மதியு

நேமத் துலவா நிதம்.

(2)

963.    உண்ணும் பொழுது முளமுருக்குங் காமத்தா

லின்னுயிர்விட் டாரெண் ணிலார்.

(3)

964.    அஞ்சே லனையகண்ணா ராசையற்றார் போற்பகர்வார்

நெஞ்சே யறியு நிசம்.

(4)

965.    ஆடவர்க்கு மங்கையர்க்கு மன்புதவு மின்பமதே

தேடரிய செல்வச் சிரம்.

(5)

966.    பொற்றாள மன்னமுலைப் பூவையர்தம் போகநல்

மற்றா ருயிர்வெறும் பாழ்.

(6)

967.    காமன் பகைவனெனுங் கண்ணுதலோன் றன்னுருவே

யாமவன்சீர் காட்டு மணி.

(7)

968.    தாமதரு மாதவருஞ் சாற்று முயிர்பிறவுங்

காமங் கனிந்த கனி.

(8)

969.    கட்டிக் கரும்புமொல்குங் காமக் கடலிலையேற்

சிட்டித் தொழினடவா தே.

(9)

970.    பத்திமுதன் மூன்றினுக்கப் பாலாய்ப் பரத்தொடுசேர்

முத்தியதே காம முடிவு.

(10)

98. பொருத்தம்

971.    ஈச னருட்செயலே யேந்திழைக்குங் காளைக்கு

நேசமுதிப் பிக்கு நெறி.

(1)

972.    கண்ணாரக் கண்டு களிப்பதுவுங் காரணனுள்

ளெண்ணாம லெய்துவதின் றே.

(2)

973.    முன்னை வினைப்பயனே மோகித் துழைக்குமய

றன்னை விளைப்பதுண்மை தான்.

(3)

974.    எத்தகையார் தங்க ளெதிர்வரினுஞ் சிற்சிலருக்

குத்தமமாந் தீமையுமா கும்.

(4)

975.    பழகப் பழகப் பழுதுருவத் தாரு

மழகரெனக் கண்டரலுண் டால்.

(5)

976.    நாடநா டப்பருவ நாரியர்க்குங் காளையர்க்கும்

கூடல் விருப்பமுதிக் கும்.

(6)

977.    பிறந்தநாள் கோணிலையின் பெற்றிகளி னாலுஞ்

சிறந்தமைய லெய்தச் செயும்.

(7)

978.    வரைநாரத் தங்காயில் வாரியுப்புத் தோய்தல்

புரையுமருங் காமப் புணர்ப்பு.

(8)

979.    தொட்டமட்டின் முத்தமட்டிற் றோய்ந்துவக்கை கூடாமல்

விட்டவரு முண்டே மிக.

(9)

980.    இனந்தெரியா வாறாய் யிருட்டறையிற் கூடித்

தனந்தனிபோ வாருமுண்டே தாம்.

(10)

99. தலைவன்

981.    கந்தமலர்க் கோதையராக் காண்பார் பலரையுந்தன்

சிந்தனையால் வேட்டல்பெருந் தீது.

(1)

982.    காம னனையானுங் கள்ளமற்றோர் வள்ளமுலைக்

கோமளத்தை வென்றி கொளான்.

(2)

983.    தொடுத்தோர் வனிதையின்பந் துய்க்கிலான் றொன்னூ

லெடுத்தோதன் முற்றெய் திடான்.

(3)

984.    கண்ணபிரான் போல்வான் கணக்கிட் டுரைக்கரும்பல்

பெண்ணணைந்தா லில்லைப் பிழை.

(4)

985.    மருந்தா தியவற்றான் மானார் சிலர்க்கோர்

விருந்தாவா ருண்டுபுவி மேல்.

(5)

986.    வஞ்சமின்றி மின்னார் மனங்கலக்கும் வாழ்வுபெற்றா

லெஞ்சலில்சீர்க் காமனவ னே.

(6)

987.    குலம்பருவ மாதி குறித்துமையல் கொள்ளு

நலம்படைத்தோன் றானே நரன்.

(7)

988.    தெய்வத்தாற் பெற்றோரால் சேடியராற் றான்விரும்பும்

பெய்வளையைச் சேரப் பெறல்.

(8)

989.    அடல்காட்டுந் தோள்வலியின் றாயி னணங்கை

மடல்காட்டி யேனுமெய்து வான்.

(9)

990.    தன்விருப்பங் கண்டு சரசந் தொடுப்பாளுட்

பொன்விருப்பின் றேலவளே பொன்.

(10)

100. தலைவி

991.    இகமும் பரமுமெய்து மீடுடையா னெஞ்சிற்

புகவுருப்பெற் றாட்கே புகழ்.

(1)

992.    குடிப்பிறப்புக் கல்விதவங் கொற்றமுளான் றன்கை

பிடிக்க விழைவாளே பெண்.

(2)

993.    எழிலும் பருவமுமே யெண்ணிப் புணர்ந்து

பழியடைந்த மாதர் பலர்.

(3)

994.    இளமையொடு மெய்யுணர்வு மேய்ந்தவன்றோட் சேர்சீர்

கிளர்தவமுன் செய்தமகட் கே.

(4)

995.    கற்பறிவு கல்விகவி னாதியே யந்தமக

ளற்பன்மனை யாத லவம்.

(5)

996.    வெள்ளை யறிஞன் விழைந்தணையப் பெற்றநங்கை

பிள்ளையுமவ் வாறே பெறும்.

(6)

997.    நற்கொழுநன் றோளணையு நாரிதனைக் காணின்மற்றைப்

பொற்கொடியார் தாழ்வார் புகழ்ந்து.

(7)

998.    கொண்கன்மற்றோர் நங்கைமென்றோட் கூடிடினு மூடாமை

பெண்கள் குணத்திற் பெரிது.

(8)

999.    தன்போற் கொழுநன்மற்றோர் தார்விரும்பா னாதல்செய்யு

மின்போகம் விண்ணிலில்லை மெய்.

(9)

1000.உலகி லரும்பொருளா மொள்ளிழையார் தம்மிற்

பலரணைய வாழ்வாள் பதர்.

(10)

101. பாங்கன்

1001.தலைவன் விழைமின்னைத் தான்விரும்பாப் பாங்கன்

மலையனைய சிந்தை மகன்.

(1)

1002.தோழ னுடைத்தலைவ றோளொருநான் குள்ளானென்

றாழமுறு நெஞ்சரறி வார்.

(2)

1003.கந்தவேட் கைங்கரனுங் காமாரி சுந்தரற்கும்

வந்ததெண்ணிற் றோழனுயர் வான்.

(3)

1004.தோழனென்பான் காமத் துணைமட்டு மன்றொருவன்

வீழ லனைத்தினுக்கு மே.

(4)

1005.வேண்டத் தகாளை விரும்பில் விலக்குநனே

தூண்டக்க திண்தோட் டுணை.

(5)

1006.மடல்லூரும் மட்டும்விட்டு வம்புபடுந் தோழன்

கடல்சூ ழுலகிற் கடை.

(6)

1007.போர்புரிந்து வென்றேனும் பூவையன்னாட் சேர்ந்துவக்குஞ்

சீர்புரிவான் றோழனன்று தே.

(7)

1008.போர்க்கேகுந் தூதினிலும் பொற்கொடியைச் சேர்விக்குஞ்

சீர்க்கேகுந் தூதே திறம்.

(8)

1009.தலைவனையுஞ் செல்வியையுந் தம்மகராக் காணு

நிலைமையதே கேண்மையினன் னீர்.

(9)

1010.நெஞ்சறிந்து வஞ்சமின்றி நேரொழுகுந் தோழனன்பே

யஞ்சமன்னா ரின்பத் தணி.

(10)

102. பாங்கி

1011.தாயி லினியாளோர் தையலுக்குத் தூதெனத்தான்

மேயிறைவற் சேர்க்கவல்ல மின்.

(1)

1012.பாங்கி யருமை பலநூலுஞ் சொல்லு முற்று

மியாங்கிளத்தற் பாலதன்றன் றே.

(2)

1013.பாங்கிக் கொளித்தமையற் பண்புறுவாள் பாழ்த்தமன்

மேங்கிப் பரதவிக்கு மே.

(3)

1014.சேலனைய கட்டலைவி சிந்தையுவக் கச்செயலே

பாலனைய சொற்பாங்கி பண்பு.

(4)

1015.கூட்டுவதும் பிரித்துக் கோதுபடச் செய்வதுவுங்

கோட்டுமுலைப் பாங்கி குணம்.

(5)

1016.மைக்க ணெழிற்றலைவி வாயுரைகொண் டேகுநளோர்

சக்களத்தி யாத றவறு.

(6)

1017.தலைவிமயன் மேவிடினுந் தான்மறைத்துத் தக்கோ

னிலையறிதல் பாங்கிதன்னன் னீர்.

(7)

1018.சூழிருக்கு மாதரெல்லாந் தோழியரா கார்துயர்ப்பே

ராழிவிட்டு நீக்கமவ ளாம்.

(8)

1019.தழைதருங்கொல் லென்பா டலைவனைச்சேர்ந் துய்யும்

விழைவிசைப்பாள் பாங்கியரின் மேல்.

(9)

1020.கதிராய்ப் பனிமதியங் காயுமட்டும் பாரா

ளதிநேயத் தன்னையனை யாள்.

(10)

103. மோகம்

1021.பொண்ணன்று மோகப் பொருக்குதவும் பெற்றியது

கண்ணன்றோ காமக் கடல்.

(1)

1022.வல்லுருக்குப் போலு மனத்தா ரையுமடவார்

சொல்லுருக்கு மந்தோ தொடுத்து.

(2)

1023.முளைத்துவருங் கொங்கை முகங்கண்டார் நெஞ்ச

மிளைக்குந் தொடுநாளென் றென்று.

(3)

1024.மதுக்குடம்நேர் கொங்கைநல்லார் மையன்முற்றில் வாய்சற்

றதுக்கித் தலையசைப்ப ரால்.

(4)

1025.ஆண்மோகங் காண்ப தரிதன் றணியிழையார்

மாண்மோகங் காண்பரிதம் மா.

(5)

1026.மோகக் குறியறியார் மூட ரவர்முயல்வா

லாகத் தழிவுமுண்டா மால்.

(6)

1027.கள்ளமோ கத்ததாற் கபடம் புரிந்திகழ்வா

ரள்ளன்முந்நீர்ப் பாரிடத்துண் டாம்.

(7)

1028.எக்கியத்தின் றீப்போன் றெழுங்கொடிய மோகத்திற்

கைக்கிளையே பொல்லாக் கடை.

(8)

1029.போகத்து மில்லாப் பொருவரிய பேரின்ப

மோகத்துண் டென்கை முறை.

(9)

1030.ஆக முதலா மனைத்து மணுவாக்கு

மோகமே காம முளை.

(10)

104. பயிற்சி

1031.பேசாம லொல்கியகல் பெய்வளையா ரின்பமெய்தக்

கூசாது வேட்போன் குருடு.

(1)

1032.சற்றுமன நாணமின்றித் தன்னுரைக்கு மாறுரைப்பாட

பற்ற மவனோர் பதர்.

(2)

1033.ஓவின்றி நோக்கி யுதடுவர மூச்செறிவா

ணாவின்சொற் கேட்கை நலம்.

(3)

1034.காமரசஞ் சற்றே கலந்தமொழி கேட்டுமொல்கா

ளாம்வளைச் சற்றணுக லாம்.

(4)

1035.அணுகிற் பெரிதொதுங்கா தன்புறுவா டன்னை

நணுகிச் சிறிதுதொட லாம்.

(5)

1036.தொடுதற் கிசைவாளைச் சொல்லா லுருக்கி

விடுதல் சிலநாள் வினை.

(6)

1037.சின்னா டொடற்கிசைவாள் சீரறிறந்து தேற்றியெய்தல்

பன்னா கததல்குற் பயன்.

(7)

1038.முத்தமிடற் கொத்தபின்னு மூரிச்செவ் வாயமுகந்

துய்த்தலுக்கொப் பாதா ளுண்டு.

(8)

1039.ஆசை மிகினு மணங்கனையா ளம்பொன்வௌவும்

வேசையென மேற்போய் விழாள்.

(9)

1040.கன்னிப் பருவமின்னார் காதலள வுந்தெரிவான்

மின்னிற் றிகழ்வடிவேல் வேள்.

(10)

105. புணர்ச்சி

1041.புணர்ந்தொடும் போதோர்பொம் மையொத்துச் சாய்வாள்

பிணமனையாள் சிந்தையொவ்வாப் பெண்.

(1)

1042.செய்தன வெல்லஞ் செயத்தக்காள் சிந்தையினிற்

கைதவமில் வாராங் கனை.

(2)

1043.தொட்டவுடன் முத்தமிட்டுத் தோளிறுகப் புல்லுமவ

ளிட்டம் பெரிதுடையா ளே.

(3)

1044.வலியச் சருவியின்ப வாரி குளிப்பாள்

பொலிமதநூல் போற்றும் பொருள்.

(4)

1045.கலவி முடிவினிலுங் கையெடுத்துப் புல்லா

ணலம்விழையும் மானிடனே நாய்.

(5)

1046.அதரச் சுவையிலுயர் வாமோ வமரர்

சதமகனோ டுண்ணுமமு தம்.

(6)

1047.கொங்கைக் களிற்றைவென்று கோதில்ல குற்றேரூரார்

சங்கையற்றெல் லாமிழப்பார் தாம்.

(7)

1048.உயிரிரண்டொன் றாகவுட லொன்றுங் கலவி

யயிலுமவ ரேயறிய லாம்.

(8)

1049.தேனுறழ்சொன் மானாரைச் சேருமின்பத் தெள்ளமுதே

வானுலகிற் றேவர்பெரு வாழ்வு.

(9)

1050.ஓதி யொருவர்க் குணர்த்தரிதா மொண்கலவி

மேதினியிற் பலவுயிர்க்கும் வித்து.

(10)

106. பிரிவு

1051.கலந்தார் பிரிந்திருந்து காலங் கழிக்கு

மலந்தா னவற்றிலுயர் வாம்.

(1)

1052.வண்கல்வி பொன்போர் மதித்தேகி னாரைவௌவும்

பெண்கள்கண்ணீர் வேலைப் பெருக்கு.

(2)

1053.உரியார் தமைப்பிரிந்தா ருள்ளக்கண் கொண்டு

தெரிவார் கனவிற் றினம்.

(3)

1054.வருவா ரெனக்கருதி வாழ்வார்க்குச் சாவு

மருமாந்த பேருமம் மா.

(4)

1055.விதியாற் பிரிந்தகொண்கன் வேதனையு மெண்ணு

மதியாள்பெண் போலு மணி.

(5)

1056.வேறு படப்பிரிதல் வீணன் றவர்கலவிப்

பேறு மிகவும் பெரிது.

(6)

1057.பேசும் புணர்ப்பும் பிரிந்துபிரிந் தொன்றலென்ப

தாசுடைய நெஞ்சரறி யார்.

(7)

1058.எதுக்கேனும் போய்வருவா ரின்பத்தி லுண்டே

புதுக்கலவி நாணும் புகழ்.

(8)

1059.பிரியாம லன்றிலொடு பேடெனவாழ் வார்க்குத்

தெரியாது காமச் சிறப்பு.

(9)

1060.வாராப் பிரிவான் மடிந்த மடவாரை

யாரால் வகுத்துரைக்க லாம்.

(10)

107. ஊடல்

1061.உரிமை யுடையாளுக் கூட லொருக்கால்

வரினழகென் னும்புலவோர் வாய்.

(1)

1062.எத்தகைய நல்லா ளிடத்து மற்றோ ரேந்திழைதன்

னுத்தமச்சீர் சொல்லவொண்ணா து.

(2)

1063.ஏமப் பணியை யெறிந்திட் டிகழ்ந்தெழலுங்

காமத்தாள் ளூடுங் கணக்கு.

(3)

1064.தினந்தோறு மூடிமிகச் சீரழிக்கும் மங்கை

கனந்தோயா ளெய்துங் கழிவு.

(4)

1065.ஆடவர்தந் நெஞ்சத் தயாவகற்றி யாசைநல்கு

மூடற் குயர்ச்சியுண் டுண்டு.

(5)

1066.ஆயிழைபா லூடு மவனே யறிவில்கொடும்

பேயினத்திற் கேடுகெட்ட பேய்.

(6)

1067.நாணின்றி யூடுகொண்க னன்கிசையப் போற்றுமவ

ளாணின் குணத்தளென்ன லாம்.

(7)

1068.பொய்யூடல் காட்டுமிளம் பொற்கொடியைப் புண்படுத்தின்

மெய்யூட லாகி விடும்.

(8)

1069.கரநாய் முதலியவுங் காதலின் வாய்கா

லுரமாதி யவிழைவ துண்டு.

(9)

1070.ஆடவரி லேறணையா னங்கனைதன் சிந்தையிடத்

தூடல்வரின் மிக்கின் புறம்.

(10)

108. புலவி நீக்கம்

1071.புலவியற் நீக்கிப் புணருமின்ப மொன்றே

யலகிறவப் பேறாமம் மா.

(1)

1072.ஊட லொழிப்பதெண்ணி யொள்ளிழையார் தாள்வணங்க

லாடவர்தஞ் சென்னிக் கணி.

(2)

1073.ஊட லகற்று முணர்வுடையாற் சேர்வாட்கு

வாடலொருக் காலும் வரா.

(3)

1074.ஊடலறச் செய்யும்வண்ண மோங்கலப்பல வள்ளானோர்

வேடமின்னைத் தாழல்பொய்யோ மெய்.

(4)

1075.மூவர் முதலோரு மொய்குழலா ரூடிலவ

ராவல்வழி செல்வதுண்டம் மா.

(5)

1076.பல்கால் புணர்ந்த பனிமொழியா ளூடிடிற்சொல்

சொல்காவார்க் கில்லைத் துனி.

(6)

1077.வெறுப்பன்றே வூடலிச்சை மேலீடே யாமா

லொறுப்பதொன்று மாகாத து.

(7)

1078.அழப்பண்ணி மாதரின்ப மாரு மவரே

கிழப்பன்றி நாய்நரியிற் கேடு.

(8)

1079.ஊர்க்குருவிச் சேவலும்போட் டூடற் கொதுங்கும்விதம்

பார்க்குளறி யாரையென்னென் பாம்.

(9)

1080.ஊடியதாற் றோன்று முறுதி யுவந்தவர்தாங்

கூடியபின் கண்டு கொளல்.

(10)

109. போகச்சுகம்

1081.போகச் சுகமைம் பொறியுங் கடந்துமன

மேகத்து வம்பெறுத லே.

(1)

1082.காவை யனையசெங்கைக் காளையர்க்குங் கற்பழியாப்

பூவையர்க்கு மின்பம் பொது.

(2)

1083.ஆனந்த வாரி யவிரு மணிநகையார்

மானந் தரும்புணர்ச்சி வாய்.

(3)

1084.சங்கற்ப முந்தணந்து தன்மயமாச் செய்யுமின்பப்

பங்கற் குழலாரின் பம்.

(4)

1085.பொறியைந்துந் துய்க்கைமின்னார் போகமா மீற்றி

லறியுஞ் சுகமவற்ற தா.

(5)

1086.இருவர்களுந் தம்மை யிழந்ததலத் தன்றோ

திருவருளுண் டாக்கவரும் சேய்.

(6)

1087.பிறப்பறுக்கு மெஞ்ஞானப் பேரின்பச் சாட்சி

சிறப்பளிக்குங் காமத் திரு.

(7)

1088.சீவர்களாம் பெண்கடம்மைத் தெய்வமுஞ்சேர் கின்றதென்றா

லியாவரின்பங் கைக்கவல்லா ரே.

(8)

1089.இந்திரற்குஞ் செஞ்சிற் றெறும்பிற்கும் போகசுக

மந்தியத்திற் பேதமின்றே யாம்.

(9)

1090.தற்போதங் குன்றித் தனையிழந்து சாட்சியொடு

நிற்போர்க்கவ் வின்பே நிறைவு.

(10)

110. கனவு

1091.இன்பப் பொருடுயிலஃ தீரியல்பிற் றாங்கனவே

முன்பட்ட தென்கை முறை.

(1)

1092.நனவிற் கிடைக்கரிய நன்மைகளு நல்குங்

கனவை யிகழ்ந்திடலா கா.

(2)

1093.தற்பரனு முண்மைத் தவம்புரிவார் தாமகிழச்

சொற்பனத்திற் றோற்றுவ துண்டு.

(3)

1094.ஏமாறி நோவார்க் கிணையில் கனவுலகக்

கோமான் மகனையுநல் கும்.

(4)

1095.அஞ்சத் தணைகிடப்பா ரங்கியிற்சூ டுண்டழுதிட்

டெஞ்சச் செயுங்கனவுண் டே.

(5)

1096.கனவிலெய்தும் வேன்முதல் கன்னிநாட் டேந்த

னனவிலுற்று வென்றிபெற்றா னன்கு.

(6)

1097.சயந்தன் கனவினது சாட்சிகண்டாற் போலு

முயர்ந்தகதை பற்பல வுண்டு.

(7)

1098.கனவிற் புணர்ந்து கலிதமுற்ற விந்து

மனமட்டிற் போமோ மறைந்து.

(8)

1099.கனவிற் புலியடிக்கக் கண்டிறந்த மாந்த

ரினமிவ் வுலகறியு மே.

(9)

1100.கனவு நனவிற் கடையென் றிகழார்

தனதுடல மூன்றெனத்தேர்ந் தார்.

(10)

111. சுழுத்தி

1101.சுழுத்திச் சுகமே சுகமென் றறியார்

பழுத்தமதி யெய்திடினும் பாழ்.

(1)

1102.சுழுத்தி விழைவானைத் தோகைநல்லாள் கைதொட்

டிழுத்திடினுங் கோபம்வரு மே.

(2)

1103.அழுத்திமனம் வாயு வடக்குமின்ப மியாயுஞ்

சுழுத்தியின்கூ றென்கை துணிவு.

(3)

1104.நல்ல சுழுத்தி நனவில் வருமாகி

லல்லல்வினை தீர்வதுண்மை யாம்.

(4)

1105.சுழுத்தித் தெளிவே துரியமெனச் சொல்வா

ரெழுத்தறிந்த மேலோ ரெலாம்.

(5)

1106.பொல்லா மனக்குறும்பும் போஞ்சுழுத்தி யானந்த

மெல்லா நலத்துமிக்க தே.

(6)

1107.தன்னைச் சகபரத்தைச் சற்றுநினை யாச்சுழுத்தி

முன்னைநிலை யென்கை முறை.

(7)

1108.ஆவ தகல லருள்வயத்த தாஞ்சுழுத்தி

யாவருக்குஞ் சோர்வொழிப்ப தே.

(8)

1109.மரமுதலெச் சீவரையும் வௌவுஞ் சுழுத்தி

பரமனைத்தென் றோதப் படும்.

(9)

1110.சுகாதீசச் சாட்சி சுழுத்தியொன்றே யாகுந்

தகாதுமற்றொன் றோதிற் சரி.

(10)

112. மந்திர சித்தி

1111.இன்பத்தி லின்ப மிசைவரிய சித்திவகை

யென்பமுந்தன் மந்திரசித் தே.

(1)

1112.ஒன்றுமுன் றைந்தாறெட் டொக்குமுரு வத்தினவே

குன்றுறழு மந்திரத்தின் கூறு.

(2)

1113.எழுத்துருவு மோசையுமா யேய்ந்தவிந்து நாதங்

கொழுத்தமந்தி ரத்தின் குணம்.

(3)

1114.உருவேற வேற வுலகத் தரிதாந்

திருவேறன் மந்திரத்தின் சீர்.

(4)

1115.எந்திரத்துண் மந்திரமேய்ந் திட்டானன் றாகுமின்றேற்

புந்தியினுக் குண்டாம் புரை.

(5)

1116.மந்திர மில்லா மதமில்லை வஞ்சமனத்

தந்திரத்தார் நம்மியுய்யா தார்.

(6)

1117.சத்திய புத்தியில்லாச் சண்டாளர்க் காகாதே

சித்திமிகச் செய்மந்தி ரம்.

(7)

1118.பாம்பு கடிவிடத்தாற் பட்டா ரெழுந்திருக்க

வோம்புமந்தி ரத்தி னொலி.

(8)

1119.எண்ணியவா றாற்று மெழுகோடி மந்திரத்தின்

றிண்ணிமையுந் தெய்வச் செயல்.

(9)

1120.மோக்கம்வரை வேட்டோர் முழுமந் திரஞ்செபித்தால்

வாக்கணியுஞ் சித்தும் வரும்.

(10)

113. வாக்குச் சித்தி

1121.ஆக்க மனந்தத் தழியாத தாய்நிறைதல்

வாக்கமையுஞ் சித்தி வளம்.

(1)

1122.வாக்கழகில் சித்தர் வலிமிக்கா ரானாலு

மூக்கமலி கீர்த்தி யுறார்.

(2)

1123.மாணார் பனுவல்செய்யான் வண்மை யெடுத்தோதிற்

காணார்க் கதாமோர் கதை.

(3)

1124.வண்ணக் கவிப்புலவ னானாலும் வாக்குவலி

நண்ணப் பெறினே நலம்.

(4)

1125.பாலனைத்தாம் பாடற் பலிதமிலாப் பாவலவ

னால மிலாப்பெழ்வா யார்.

(5)

1126.சுட்ட வெலும்மைச் சுரிகுழற்பொற் றோகையென

விட்டதன்ன வாக்கின் விறல்.

(6)

1127.சித்திவிழை யான்புலமை சிற்றரையிற் கட்டுதற்கும்

வத்திரம்வேண் டாத மகள்.

(7)

1128.வாக்குடையார் வேல்வாள் வலியுடையார் மாய்ந்தொழியத்

தாக்குவரென் றோதத் தரும்.

(8)

1129.பாக்கிற் பிறங்குமுலைப் பாவையரும் பெற்றதுண்டே

வாக்கிற் பொலியும் வலி.

(9)

1130.வாக்கிற் பெரியான் மறைநுவன்ற வாறுணர்வார்

பாக்கியஞ்சொற் சித்திபெறும் பண்பு.

(10)

114. தெய்வ சித்தி

1131.சூரியனை நாடித் தொழுதுபா சிக்கினுள்ள

காரியங்க டோன்றுங் கணத்து.

(1)

1132.தாண்டும் விடைப்பாகன் றன்னைத் தியானிக்கில்

வேண்டுவன வெய்தும் விரைந்து.

(2)

1133.பாசாங்கு சக்கைப் பரையைப் பணிந்திறைஞ்சி

லாசார்ந்த மாயை யறும்.

(3)

1134.அல்லுருவ மாய னடியணிந்தா லாகாரை

வெல்லும் வலிமையுண்டா மே.

(4)

1135.கைக்கினிய கோடுங் கனியுமுளான் காறொழுதால்

விக்கினங்க ளெல்லாம் விடும்.

(5)

1136.பொருவா வடிவேற்கைப் புங்கவனைப் போற்றிற்

குருவாகு மேன்மையுண்டா கும்.

(6)

1137.குருபாத மேதுணையாக் கொண்டுதொழு வார்க்குச்

சொருபாநு பூதிவந்தெய் தும்.

(7)

1138.எத்தெய்வம் போற்றிடினு மேகமதென் றெண்ணிலுள்ள

மெய்த்தெய்வ மாவிளங்கு மே.

(8)

1139.உன்றெய்வ மென்றெய்வ மென்ப துபாசனைப்பண்

பன்றெஞ்சா நாட்ட மதே.

(9)

1140.தெய்வமே தேனுமொன்று சித்திக்கி னன்றியுயி

ருய்வதில்லை நம்புமினந் தோ.

(10)

115. திருவருட் சித்தி

1141.ஒருவருக்குந் தீங்கியற்றா வுள்ளமுடை யார்க்குத்

திருவருட்சித் தெய்வதுண் டே.

(1)

1142.ஒன்றே திருவருளென் றுள்ளபடி யோர்ந்தமைவார்க்

கன்றேமெய்ச் சித்திகளுண் டாம்.

(2)

1143.தெய்வம் பலவுந் திருவருடன் சிந்தனையாற்

செய்வதென்பார்க் குண்டாஞ் சித்து.

(3)

1144.திருவருளே சற்குரவன் றேகமெனத் தேர்ந்தாற்

சருவபிர சாதமுமுண் டாம்.

(4)

1145.காரணமாம் பூதமைந்துங் காரியமாம் பௌதிகமுஞ்

சீரருள்சித் தாடுந் திறம்.

(5)

1146.அத்துவர் வாறினுக்கு மப்பா லவிருமருட்

சித்துறுவார் பங்கே செயம்.

(6)

1147.கண்டத் துடன்கண்டா காரமுணர் வாரருளே

யண்டத் திறைவர்க் கரசு.

(7)

1148.அருளடைந்தார் செய்வரிதா மாற்றலில்லை யென்றா

லிருளடைந்தார் கண்டுகொள்ளா ரே.

(8)

1149.ஒன்றே யருளென் றுணரா னரைத்திடினு

மின்றே யெனப்போ ரிடும்.

(9)

1150.அருட்சித்தி யேயனைத்து மாமென் றறியுந்

தெருட்சித்தர் தாளென் சிரம்.

(10)

116. பாச ஞானம்

1151.பாச பதார்த்தமுற்றும் பாழா மெனவறித

லாசறுமின் பத்தின்முத்தி யாம்.

(1)

1152.அகலும் புவிமுதலா வாகாய மீறாப்

புகலன்முற்றும் பாசப் பொருள்.

(2)

1153.பாசமெனும் பேயே பசுவைப் பதியிடம்விட்

டாசடையச் செய்ததம்மம் மா.

(3)

1154.மாச மறவே பலகோடி மாதவரு

மீசனைத்தாழ் கின்றா ரினிது.

(4)

1155.நேசமிக் கியானென்னதென நித்தம் புகன்றுழலும்

பாசமே பொல்லாப் பகை.

(5)

1156.தத்துவமுஞ் சாத்திரமுந் தாணானென் றோதுவதும்

பித்துமலி பாசப் பிடிப்பு.

(6)

1157.பாசமுமெய் யென்னப் பகர்வார் பலரவரே

மாசரதற் கேயிரையா வார்.

(7)

1158.அருளன்றிப் பாசமில்லை யாமென் றறியுந்

தெருளொன்றி லெய்துந் திரு.

(8)

1159.கானற் சலம்போலக் காட்சிமட்டாம் பாசமென்பார்

வானத்தார் போற்று மகர்.

(9)

1160.பாசமன்றிப் பந்தமில்லை பந்தமன்றித் தொந்தமில்லைப்

பேசதன்றி யில்லைப் பிறப்பு.

(10)

117. பசு ஞானம்

1161.பதியின் பகுப்பே பசுவாமென் றோர்வான்

மதியே மறுவின் மதி.

(1)

1162.தன்னையறிந் தாளைத் தலைவன் புணருமென்கை

முன்னை யுலகின் முறை.

(2)

1163.எவ்வுயிருந் தன்னையொப்ப வென்றே யெளிதுணர்வான்

செவ்வுணர்ச்சி யொன்றே திறம்.

(3)

1164.தேவர் மனிதர் செடிமரங்கல் லென்பமுற்றுஞ்

சீவரெனத் தேர்கை தெளிவு.

(4)

1165.பாசத் திடத்தும் பதியிடத்தும் பல்காலு

மூசலென வாடு முயிர்.

(5)

1166.பாசத்தின் றீங்கும் பதியினல முந்தெரியு

நேசத் தினன்சீவ னே.

(6)

1167.சீவ ரருமை சிவனறிவான் சீவரவற்

பாவனையாற் காண்பார் பரிந்து.

(7)

1168.சடமாய பாசந் தனைச்சித்தாம் சீவ

னிடமாகக் கொள்வதிழி வே.

(8)

1169.சீவனாஞ்செம் பொன்மயற் றீங்கதனா;ற செம்பாதல்

பாவ வினையின் பயன்.

(9)

1170.உரையளவி லின்ப முறான்சீவா னுண்மைப்

பரையருளா லெய்தும் பதி.

(10)

118. பதி ஞானம்

1171.அதிகவித பேதத் தண்டபிண்டத் திற்கோர்

பதியெனவே தேர்தல் பயன்.

(1)

1172.பல்சமயத் தோரும் பலவாறு  வாதிடினுஞ்

சொல்சருவ சாட்சிய தொன்று.

(2)

1173.ஈசன் றனக்கயலொன் றில்லையென்றே வாழ்கின்றான்

பாசரறி யாதுசெய்வார் பங்கு.

(3)

1174.நட்டார் மனவெளியி னாடியவா தோன்றுமன்றி

யெட்டாதா னல்ல னிறை.

(4)

1175.எற்றென் றிறைவடிவை யெண்ணுவாரெண் ணம்வெற்பைச்

சிற்றெறும்பு நாடுந் திறம்.

(5)

1176.தம்ப முதலாச் சதுமுகனீ றாம்பலருங்

கம்பலையில் சோதிதன்மக் கள்.

(6)

1177.திசைகடைந்த போதத்தாற் றீண்டரியா னாகி

வசையிறந்து நிற்குமொரு வன்.

(7)

1178.ஆண்முதலா மூவகையா யாகாத தையடுத்த

மாண்முனிவோ ரியாமறிதெய் வம்.

(8)

1179.இல்லையென்பார்க் கன்றி யிகழ்வார்க்கு மீண்டருள்

றொல்லைமுத லாவான் றொழில்.

(9)

1180.கண்டாரைத் தன்னுட் காந்துமிழாக் கண்ணாமே

பண்டார்தம் பண்டைப் பரம்.

(10)

119. சாத்திர ஞானம்

1181.வருணாச் சிரம மதமுதலாச் சொன்னூற்

பொருனாடிக் கோடல் புகழ்.

(1)

1182.குருடாவார் பல்வாறு கூறிப் பொரினும்

புருடார்த்த நான்கே பொருள்.

(2)

1183.ஒன்றுண் டதைத்தானே யொவ்வோர்நூ லொவ்வோர்வா

றென்றும் புகன்றிகலு மே.

(3)

1184.தெய்வமே தஞ்சமெனச் சிந்திக்குஞ் சீரியநூல்

கைவரும்வாழ் வுற்றார் கருத்து.

(4)

1185.சற்குரவன் சொற்பெறினுஞ் சந்தேகித் தெண்ணில்பன்னூல்

கற்கு மவனே கடை.

(5)

1186.கோத்திர வாதனைமுற் கூறுமெந்த வாதனையுஞ்

சாத்திர வாதனையிற் றாழ்வு.

(6)

1187.பயிர்நூல் பலந்தவமாம் பண்பறிகின் றார்க்கே

செயிர்தீரு மெய்துஞ் சிவம்.

(7)

1188.மூன்றாகி யொன்றா முடிந்த முடிவறிவான்

றான்றானூன் முற்றுமுணர்ந் தான்.

(8)

1189.இன்னம் மகவா யெழுத்துருவுங் கல்லாமை

யுன்னவல்லா னூற்பொருளோர்ந் தோன்.

(9)

1190.கற்றாரிற் கல்லாருங் கல்லாரிற் கற்றாரு

முற்றா ருணர்வ துணர்வு.

(10)

120. அநுபவ ஞானம்

1191.தேறு நிலையிற் சிதைவின்றி நிற்கவொட்டா

தூறுமிடை யில்வர லுண்டு.

(1)

1192.ஊறு வரக்கண்டு லையா துடனுடனுந்

தேறுமவன் ஞானந் திடம்.

(2)

1193.தந்தேக மும்பரமாஞ் சத்தியந்தேர்ந் திட்டவர்க்குச்

சந்தேக மாகா தது.

(3)

1194.அழிக்கரிதா முண்மை யநுபவத்தார்க் கோர்கால்

பழிப்புவரிற் றாங்கும் பரம்.

(4)

1195.அறித லநுபவமன் றந்தவண்ண நீங்காச்

செறிவுறுதல் வேண்டுந் தினம்.

(5)

1196.பிரதிபந்த ஞானிக்கே பேரின்பத் தெய்து

மிரதந் துலங்குமெய்மெய் யே.

(6)

1197.ஞானநிலை யோரொருக்கான் ஞாலத்தை நாடன்மற்றோ

ரீனமறச் செய்திடெவென் றே.

(7)

1198.பூரணத்துட் புக்குவரும் புண்ணியத்தோர் சொற்களன்றோ

காரணத்தைக் கூறிடுநூல் கள்.

(8)

1199.பனுவல்கற்றுச் சொல்வாற்கும் பற்றிவிட்டுப் பற்று

மநுபவிக்குஞ் சாட்சி யவர்.

(9)

1200.அரும்பாகில் வீழீயொத் தானந்தத் தெய்தித்

திரும்பாது நிற்பார் சிலர்.

(10)

121. தத்துவ ஞானம்

1201.ஒன்றாய்ச் செயலற் றுறைவா னுயர்புகழ்ச்சீர்

நற்றா வுரைக்கறியேம் நாம்.

(1)

1202.அதுவாய்நம் புண்ணியத்திற் காவடிவாத் தோன்றும்

பொதுனடி வானவரூர்ப் பூ.

(2)

1203.இடிமழைபோற் பெய்திடினு மேக வடிவிற்

குடியிருப் பாற்கில்லைக் குறை.

(3)

1204.புலிபார்க்கு மான்கன்றிற் பூரணத்தைக் கண்டோர்

வலியிழந்து சாவாரம் மா.

(4)

1205.சாகா வுயிரொருக்காற் றற்பரத்துட் சென்றக்கா

லேகாந்த வாழ்வெய் திடும்.

(5)

1206.யாருமில ரியாவுமில் வேகமே யுள்ளதெனச்

சேரு முணர்வே சிவம்.

(6)

1207.அறிவுமறி யாமையுந்தீர்ந் தானந்த மெய்திக்

குறியிறந்து நிற்கை குணம்.

(7)

1208.எல்லாப் பிறப்புமொழிந் தியாக்கையினி யெய்தாத

வல்லார்க்கே ஞானம் வரும்.

(8)

1209.ஆமை யெனவடங்கி யந்நிலையு மற்றவின்ப

மூமை கனவையொக்கு மோ.

(9)

1210.அம்மாமெஞ் ஞான மயலின் றதுவதுவாய்ச்

சும்மா விருக்குஞ் சுகம்.

(10)

122. இன்பப் புகழ்ச்சி

1211.அன்ப ருணரு மகண்டபரி பூரணமு

மின்பமய மாயிருந்த தே.

(1)

1212.எவ்வுலகில் வீற்றிருக்கு மெத்தேவர் தாமுநித்தம்

வௌவுகின்ற தின்ப வளம்.

(2)

1213.மன்பதையே முன்னாக வாழுமெந்தச் சீவர்களு

மின்பமே வேண்டுகின்றா ரே.

(3)

1214.இன்பமுற்றும் புண்ணியத்தா லெய்துவன வாமெரிநேர்

துன்பமுற்றும் பாவத் தொடர்பு.

(4)

1215.துக்க மணுவுமில்லாத் தூயசுக்க மேவுதற்கே

முக்கணனாற் கீழிந்தான் முன்.

(5)

1216.ஆலங் கடலு மரங்காக வாழியங்கை

மாலுறங்க லின்பமெய்து மாறு.

(6)

1217.இன்பநல மின்றே லிகபரம்பா ழாமெவருந்

துன்பமுற்றி மாய்ந்தொழிவார் தொக்கு.

(7)

1218.ஈச னுவந்தருள்வ தின்பமே யென்றவுண்மை

பேசன்மறை யாவும் பிரித்து.

(8)

1219.அல்லுறழுந் துன்ப மலவனுவாச் சிற்றின்ப

மெல்லுறழும் பேரின்ப மே.

(9)

1220.அன்பர்தி ருக்கூட் டமருளாட லாகியன

வின்பநெடு வாரியமு தே.

(10)

123. துன்பத்திழிவு

1221.மனப்பொருத்தஞ் சற்றுமின்றி வஞ்சம் புரிவா

ரினப்பொருத்த மன்னதுன்ப மில்.

(1)

1222.உயிரனைய ராகு முறவோரை விட்டுப்

பிரிவதொரு துன்பப் பெருக்கு.

(2)

1223.கொடுங்கோ லரையன் குடைநிழற்கீ ழெய்திப்

படுங்கோர மோர்பெருந்துன் பம்.

(3)

1224.மிக்கிளைய மானாரை வேண்டிப் பரதவிக்குங்

கைக்கிளையோர் துன்பக் கடல்.

(4)

1225.வைதார்க்கு மின்பநல்கும் வான்வனை வாழ்த்தாதார்க்

கெய்தாத துன்ப மிலை.

(5)

1226.துன்பமே மிக்கதெனச் சொல்வாரு முண்டிறைவ

னன்பதனை மேற்படுத்த லால்.

(6)

1227.மெஞ்ஞானத் தன்றி விளம்பரும்ப லியாக்கைதரு

மஞ்ஞானத் துன்ப மறா.

(7)

1228.கொள்ளியினை நீப்பிற் கொதியடங்கு மாறுமைய

லெள்ளிலின்ன னோய்முற் றிறும்.

(8)

1229.இன்ப முறாவிடினு மீனமில்லை யெட்டுணையுந்

துன்பமொன்றே யாகாத து.

(9)

1230.என்பங்கீ தியானின்னா னென்றுரைப்பார் தங்குழுவிற்

றுன்பஞ்சா ரில்லையுண்மைச் சொல்.

(10)

124. சாலோகம்

1231.களிற்றிறைவற் காளாய்க் கரங்குவித்துத் தன்னை

யளித்திடலே வீட்டி னறம்.

(1)

1232.அண்டா பெருமா னமர்ந்தருளு மாலயத்தின்

றொண்டனைத்துஞ் செய்திட னன் று.

(2)

1233.வேள்வணங்கு மானார்தம் வேட்கைமுற்றும் விட்டிறைவன்

றாள்வணங்க னல்ல தகை.

(3)

1234.மடிவிலும்ப ராதியரு மன்னுபரஞ் சோதிக்

கடிமையெனத் தேர்வ தழகு.

(4)

1235.கைத்தொண்டும் வாய்த்தொண்டுங் காற்றொண்டுஞ் செய்வானே

மெய்த்தொண்டர் தங்களுக்கோர் வேந்து.

(5)

1236.பூலோக முற்றும் புகழ்மெய்த் தொழும்புசெய்வார்

சாலோகஞ் சேர்ந்துவப்பார் தாம்.

(6)

1237.சாலோக முத்தியென்கை தான்வணங்குந் தெய்வத்தின்

மாலோகத் தெய்திமகிழ் வாழ்வு.

(7)

1238.பொருதிகலும் பன்மதத்துப் புண்ணியரு நன்கு

கருதுங் கதிசாலோ கம்.

(8)

1239.தாசமார்க் கத்தோர் தமதாய சாலோகம்

பேசருமெய் வீட்டுண்முதற் பேறு.

(9)

1240.மாணமரர் கோமான் மனமொல்கும் வாழ்க்கையதே

காணருஞ்சா லோகக் கதி.

(10)

125. சாமீபம்

1241.வீட்டுப் பொருடனதா வேதமுடி மீதிருக்கும்

பீட்டுப் பொருளைப் பெறல்.

(1)

1242.மெய்வழக்கா வேண்டும் வியனனைத்துஞ் செய்வானே

தெய்வம்நல்குஞ் சற்புத் திரன்.

(2)

1243.பொற்பு மலியுமலர்ப் பூசைவிருப் போவானே

சற்புத் திரமார்க்கத் தான்.

(3)

1244.கொல்லு நெறியோர் குலைகுலையக் கொக்கரித்து

வெல்லுவதே நல்ல வினை.

(4)

1245.சகத்திலுள்ள நன்மைபுன்மைத் தன்மைகளை நாடி

யுலத்தல வருந்த லுறும்.

(5)

1246.ஈங்குதான் போற்று மிறைவன் சவையிலவன்

பாங்குறுத லேசாமீ பம்.

(6)

1247.சாலோகத் தார்களென்று சார்வமெனத் தக்கசெல்வ

மேலோங்கு சாமீப மே.

(7)

1248.சற்புத் திரநெறியோர் தங்களுக்கே யெய்திடுவ

தற்புதச்சீர்ச் சாமீப மாம்.

(8)

1249.சேய வடிமைத் திறத்தார் பலர்க்குமொரு

தாயனையார் சாமீபத் தார்.

(9)

1250.இறைவனரு கெய்தவல்லா ரியாதோ நிமித்தந்

தறையி லுதிக்குமவர் தாம்.

(10)

126. சாரூபம்

1251.தேசிலங்கு மீசற் றிருத்தோழ னாப்பெறலே

காசில்சகா மார்க்கக் கருத்து.

(1)

1252.புழுவேட் டுவனாதல் போலுந் தகைத்தே

வழுவாத யோத்தின் மாண்பு.

(2)

1253.இங்கொருசா ரூபமுள தியாக்கைவிட்டுப் போயினபின்

னங்கொருசா ரூபமுள தால்.

(3)

1254.ஆவலுற்ற வாறிறைவ னாடப் பெறுதலன்றோ

பாவமற்ற தாஞ்சாரூ பம்.

(4)

1255.மானாரைத் தன்கை வசஞ்செயற்குந் தூதாமே

வானாகி நின்ற வரன்.

(5)

1256.தன்னுருவு நல்குந் தலைவ னெதுநல்கா

னென்னு மறிஞர்சில ரே.

(6)

1257.சற்புத் திரமார்க்கத் தாருந் தலைவணங்கும்

பொற்பினர்க்கே மேலாம் புகழ்.

(7)

1258.உயிரிறைவன் றன்வடிவ மொல்லுவதுண் டென்னப்

பயிலுகின்ற நூல்கள் பல.

(8)

1259.சாரூபம் பெற்றுஞ் சகத்தினுக்கா நன்மைசெய்யார்

பேரூக முற்றும் பிழை.

(9)

1260.சாயுச் சியமடையத் தக்கார்மெய்ச் சாரூப

மேயுற் றவர்கண்மட்டு மே.

(10)

127. சாயுச்சியம்

1261.தெய்வமேதா னாகித் திகழும்சா யுச்சியச்சீர்

கைவரலே மேலாங் கதி.

(1)

1262.கசிவுறுபே ரன்பாற் கலந்துகலந் தொன்றா

மசிபதமே சாயுச்சி யம்.

(2)

1263.பிரணவமாந் தேகமெய்தப் பெற்றோனும் பேசா

வரகதிச்சீர்க் கான்பக்கு வன்.

(3)

1264.எத்தகைய வாகி யெதிர்தோற்ற லெல்லாமு

மைத்தகைய மாயா மயம்.

(4)

1265.ஏக பரத்துவத்து ளெய்தினன்றி யாரெனினு

மாக மெடுப்பதுண்டம் மா.

(5)

1266.பிரகிருதி தன்னைப் பிரமமென நம்பித்

திரமிழந்தார் பற்பலருண் டே.

(6)

1267.முத்திபெற்றா ரென்ன மொழியுமுல கிற்பிறந்து

பத்திசெய்வா ரெண்ணில் பலர்.

(7)

1268.சொற்க மடைவார்தஞ் சுத்தமர ணத்தினையு

மற்கடற்பார் முத்தியென்னு மால்.

(8)

1269.பொன்றாத சாவாம் பொருவின்முத்தி சேர்ந்தாரை

யொன்றாய் தெய்வமறி யும்.

(9)

1270.இதீதுமுத்தி யென்றா லிகல்வார் பலரா

லதீதமதா மென்ப தழகு.

(10)

128. முத்திப் பெருமை

1271.ஈசன் கொடுக்குநல மெல்லாவற் றும்பெரிய

தாசகன்ற முத்திய தே.

(1)

1272.திறமுறுவீட் டிச்சை சிறிதுமிலான் செய்யு

மறமுழுதும் பாவமொப்ப வாம்.

(2)

1273.இருளகன்ற முத்திபய ளென்றறியா னெய்தும்

பொருள்பலவு நன்குணரிற் பொய்.

(3)

1274.முத்தி விருப்பமில்லா மூடரின்ப முற்றும்வம்பென்

றுத்தியுள்ளார் தேறுவ துண்டு.

(4)

1275.பதமுத்தி யாவினிலும் பாருலகிற் றோன்றி

மதமனைத்துந் தாண்டல்பெரு வாழ்வு.

(5)

1276.பந்தி படுநரகின் பஃறுயரு மெண்ணுங்கா

லிந்திரனூர்ச் சேர்க்கையும்வீ டே.

(6)

1277.பாரின் பிறப்பே பலமுத்திக் கேதுவென்னுஞ்

சீரியர்தந் நெஞ்சே தெளிவு.

(7)

1278.முத்தியிச்சை யில்லான் முழுதுலகை யாண்டுறினும்

பித்தியைந்த நெஞ்சுடைப்புன் பேய்.

(8)

1279.சித்தி யடைந்துந் திரும்பாத வீட்டைமிக

நத்திமுய லாதவனோர் நாய்.

(9)

1280.சத்தியமாத் தேறுங்காற் சாவும் பிறப்புமிலா

முத்திபெறு வானே முதல்.

(10)

129. பந்தப் பழிப்பு

1281.எந்த வுலகத் திருக்கு மெவர்க்கும்வினைப்

பந்தமே பொல்லாப் பகை.

(1)

1282.பந்த மறலே பரகதியாம் வேறில்லைச்

சிந்தனையே பந்தஞ் செயல்.

(2)

1283.நெஞ்சகத்துப் பந்த நெருப்பெரியும் பந்தத்து

மிஞ்ச வலியுடைத்தா மெய்.

(3)

1284.என்னதெனப் பற்றுதலு மியானெனலுந் தீர்ந்தக்காற்

கின்னமுடைப் பந்தங் கெடும்.

(4)

1285.தாமரையா னாதியர்க்குந் தையனல்லார்ச் சேர்ந்துமகிழ்

காமமே கட்டுங் கயிறு.

(5)

1286.மின்னாசை முற்றுமற வென்றவர்தந் நெஞ்சகத்தும்

பொன்னாசை மெல்லப் புகும்.

(6)

1287.மண்ணதே பொன்னாய் மடந்தையரு மாமன்றி

யுண்ணலுறங் கற்றரல்வே றோ.

(7)

1288.அகல்வானத் தாசைமுழு தற்றார் தமக்கு

மகவாசை நீங்கரிதம் மா.

(8)

1289.தன்னாசை நீங்குந் தகவுடையா ரன்றிமற்றோர்

பின்னாசை நீங்கப் பெறார்.

(9)

1290.ஆசையன்றிப் பந்தமில்லை யஃதற்றா லாணவம்போ

யோசையுந்தீர் முத்திவந்தெய் தும்.

(10)

130. திருருட் சார்பு

1291.அறமுதலாம் நான்குநன் னான்கா மனைத்துநல்குந்

திறமுளதா மாறிலருட் சீர்.

(1)

1292.நெஞ்சகத்தை நம்பாம னீதியஞ்சு மெய்யருளே

தஞ்சமென்பா னுண்மைத் தவன்.

(2)

1293.சீர்வான் விழைந்துயிர்கொ றீமகஞ்செய் யாதருளைச்

சார்வானே நல்லந் தணன்.

(3)

1294.இணங்குந் திருவருளே யென்றனிறை யென்று

வணங்குமவ னேநீதி மன்.

(4)

1295.பொருளை மதியாமற் பொருவிலருட் சீரைக்

கருதுநனே யுண்மைவணி கன்.

(5)

1296.ஏரா தியைமதியா தீடிலருள் வாழ்வையெண்ணுங்

காராளன் பூமடந்தை கண்.

(6)

1297.அருள்விழைவா னாரெனினு மந்தணனே யல்லா

னிருளடைந்த பாழ்ங்குலத்தோ னே.

(7)

1298.அருவேட்கை யொன்று மதுதரினே யுண்டாந்

தெருள்வாய்ந்து மெய்தார் சிலர்.

(8)

1299.மோக்க வடிவா முதற்குமற்றை முப்பொருட்கு

மாக்கங் கருதி லருள்.

(9)

1300.அழியாத தாய்சச்சி தானந்தங் காட்டு

மொழியாத் திருவருளா மொன்று.

(10)

நூல் மாட்சி

1301.நிரம்பு மனுவிற்காம் நெறித்திருநூ லென்னுட்

பரம்புகுந்து சொல்லப் படல்.

முற்றிற்று.

குருபாதமே கதி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக