வண்ணச்சரபம்
தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த
நானிலை
சதகம்
காப்பு
(அறுசீர்
கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
மேனிலைத் தெய்வமே செய்து வியனருட் பெறலே வேண்டித்
தேனிலைத் தமிழின் மீதுஞ் சினங்கொளுஞ் சிறியேன் றன்னை
நானிலைச் சதக நன்னூன் வியன்றிடத் திருத்து கின்றோன்
றானிலைத் திருநீ றீய்ந்தோர் சாதமுன் னுரைத்துள் ளானே.
நூல்
(எண்சீர்க்
கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
சரியைகி ரியையோக ஞான மென்னச்
சாற்றுகின்ற நானிலையுந் தவமே யாகும்
மரியனவா மவைநான் குஞ்சம மென்பா
ருண்டாலு மொன்றினுக்கொன் றதிக மேயாங்
கிரியினிற் கரிந்தவனூர் நலமுங்
கைத்துக்
கிளர்கருணை மயமாகிக் கேடில் வீடே
பெரியப்ப யனென்றுணரு மவரே கொள்வார்
பிறப்பனந்தந் தரும்வினையோர் பேணி டாரே.
(1)
புத்தனமு தற்பூருவ மீமாஞ் சனீறாம்
புலைநெறியோர் புகன்மொழிகட் பொருளாக் கொண்டாற்
சுத்தபர முத்திவழி தூர்ந்தே போகுந்
தூயதவத் தோரிகழூன் றுய்ப்பார் தம்மிற்
செத்தபின்பே தினும்பவுத்தன் முதலே
யாவான்
செற்றுண்போ னிடையாவான் செந்நீர் தானு
மத்தசையிற் சேர்வதெண்ணிப் பீசந்
தொட்டேய்
சககொலைசெய் கருமிகடை யாவா னன்றே.
(2)
நரிநாய்வல் லியமுதலா மிருகம் போல்வார்
நானிலத்திற் தொன்றருந்து நாரென் றோர்ந்து
கரியாதி யெறும்பீறா முடல்க ளெல்லாங்
கருதுமுயிர்க் குறைவிடமாங் கணக்குள் வார்க்கே
சரிதாதி மார்க்கங்க ளினிய வாகுஞ்
சாத்திரங்கள் பலவாறு சாற்றி னாலும்
பெரியார்சொற் பிழையாம லொழுக வேண்டும்
யிணமருந்தா விரதமன்றிப்
பிறப்ப றாதே.
(3)
நல்லுயிர்கட் கொல்லாமை புலையா டாமை
நான்குநூ லருளாட்சி ஞானச் செல்வம்
புல்லுமவ ருக்கக்குறளா தியபன் னூலிற்
புகன்றுள்ளே னௌவைதெய்வப் புலவன் போல்வார்
சொல்லுமுன்னூல் களும்வியம்பு மவற்றைப்
போலும்
துணைசிறிதுந் தவநெறியிற் றோய்வார்க் கில்லை
யில்லுடையார் களுந்துறவார் களுங்கைக்
கொள்ளற்
கினிதாய சரிதாதி
யிசைக்கின் றேனே.
(4)
பூவலமாத் தீர்த்தங்கள் பலவு மாடிப்
புரதகன்ன ரிமுதலாப் புகலுந் தேவர்
யாவரையு மாலயங்க டோறுஞ் சேவித்
தேன்றமட்டின் மெய்யடியார்க் கேவல் செய்து
பாவமொரு சிறிதேனும் புரிந்தி டாமற்
பலவிரதா திகண்முயன்று பாடு பட்டுச்
சீவர்களுக் கெந்நாளு மிதமே நாடித்
திகழ்வதனைச் சரிதையெனச் செப்ப லாமே.
(5)
பருவதத்திற் கானகத்தி னகரிற் றோன்றும்
பலகோயில் றேவரையும் பணியச் செல்லு
மருமையுறு பெருஞ்சரிதைக் காரன்
வீணே
யசமாதி பலியிடுவா
ரால யத்தின்
மருவுகின்ற மூர்த்தியையும் வணங்கொண்
ணாது
வணங்கினா னெஞ்சகத்தி னமலின் மேறும்
பெருமைமலி சிவதலமா னாலுங் கொல்லும்
பிழையணுகிற் பேய்வசிக்கும் பீட மாமே.
(6)
ஆகமவே தங்களொன்றுஞ் சிறிதுங் கூறா
வவரந்தர்ப் பேருடைய தெய்வமா னாலுஞ்
சாகவுயிர்ப் பலிகொள்ளாத் தகைய தாகிற்
சத்தியமா யதைவணங் கறரும் மேயா
மேகமயங் காட்டுமகச் சமயக் கோயிற்
கினியவுற்ச வாதியினு மீனர் சில்லோர்
சேகரமாப் பலவுயிரைக் கொல்வா ரங்கு
சென்றாலுந் தவமுழுதுஞ் சிதறிப் போமே.
(7)
அரிதாய பரம்பொருளே யெங்க டெய்வ
மதற்கொருசிற் றுயிர்ப்பலியு மாகா தங்கே
பரிவாரத் தெய்வங்கட் காக வேண்டிப்
பலியிடலுண் டெனச்சிலபேர் பகர்வா ரானாற்
றெரியாமை யுடையாரைத் துணைக்கொள்
வான்போற்
சீரியதன் றென்றதையுஞ் சேவிக் கொண்ணா
தெரியோம்பு நெய்யெனநீர்ப் பெய்குவார்
போன்றே
னற்மட்டிற் பாடுபட்டு மிழ்ப்பா ருண்டே.
(8)
ஒவ்வொருநற் றெய்வமதைப் பொருளாப்
பற்றி
யுரைக்குமதற் தானதல மொருங்கு போற்றுஞ்
செவ்வையுறு நெறியாளர் பலபே ருண்டு
திகழுமொரு தலத்தினையே சேவிக் கின்ற
திவ்வியநன் னிலையுடையார் சிலர்மிக்
கேற்றந்
தேகத்தா லென்றபணி செயலே மேலாங்
கைவலியா லுழவாரப் பணிசெய் தன்றோர்
கவிப்புலவன் கடல்கடந்து கதிபெற் றானே.
(9)
பாவமற வேண்டுமெனச் சுற்றிச் சுற்றிப்
பணிந்தெழுவா ருலகிடத்திற் பலபேர் கோயிற்
றீபமிடத் தூபமிட மெழுகக் கூட்டச்
செழுமலர் மாலிகைய மைக்கத் தெளிவார்
சிவலோர்தா பதருந்தெய்வ வடிவென்னக்
காண்பார்
சரிதையே பயன்கொடுக்குந் தனது தெய்வ
நீபதறே லென்றுரைக்க நோவந் தாலு
நெறிபிழையோர் வேறுவித நினைப்பா ரன்றே.
(10)
ஆலயத்தின் பணிமுழுதுஞ் சரிதை யேயா
மதையன்றோ சால்நன்றென் றெளிவை சொன்னான்
மாலடைந்த மனமுடையார் கற்செம் பென்று
வாதிப்பா ரம்மொழியான் மயங்கொண் ணாது
சீலமுறும் விக்கிரத் தெய்வஞ் செய்த
செய்கைவ ரகுணன்முதலோர்
தெளியக் கண்டார்
பாலனைய கவுமார முறைமை நூலிற்
பலவிதமும் விரித்துநன்றாப் பகர்ந்துள் ளோமே.
(11)
சத்தியமாம் பத்தியொடு சரிதை மார்க்கந்
தன்னினின்று சாதித்தே தவிர்க்கொண் ணாத
முத்திவரை பெற்றவர்கள் சிலரே யாவார்
மூதுலகிற் பலர்க்குமது முதிரு மாகிற்
புத்தியினிற் றமதுகையார் பூசிக்
கின்ற
போதமுண்டா மதைக்கிரியைப் பொலிவென் பார்கள்
சித்தியந்த சரிதையினு முண்டென்
றாலுந்
திகழ்கிரியை போலதனைத் திறன்செய் யாதே.
(12)
தக்கதிரு வாலயத்தின் பணிக ளாய
சரிதைநிலை முற்றியபின் சரீரம் வீழ்ந்தான்
மிக்கபுகழ் சாலோக பதத்தில் வைத்து
வேண்டியபோ கங்களெல்லா மிகவு நல்கித்
திக்கரியக் கிரியைவழி முயல்கைக்
கான
தேகநல்கு முடியாமுன்
செத்தா ரானா
லக்கருத்தே யுதவியப்பாற் கிரியை
காட்டு
மளவில்வருஞ் சுகமுறைமற் றவைக்கு மாமே.
(13)
சாலோகத் துள்ளனவாம் போகக் கூட்டந்
தமநியநாட் டில்லையிது சாத மேனு
மேலோர்க்கே யதுருசிக்கு மற்றை யோர்க்கு
வேள்விமுயன் றும்பரிற்போய் மேட ரூபம்
பூலோகத் தினிலெடுக்கு மதுவே நன்றாம்
புகலுமந்தச் சாலோகம் போற்றுந் தெய்வ
மாலோகத் தினிற்குடியா மதுவே யாகு
மற்றதொகு மெனினுமுண்மை வழிபா டுண்டே.
(14)
இந்திரனு ரெனுஞ்சுவர்க்கந் தன்பால்
வந்தோர்க்
கியைந்தபுண் ணியத்தளவி லினிய போகந்
தந்திடுமே யல்லாது சிவனூர் விண்டுந்
சத்தியூர் கணபதியூர் தபனன் றன்னூர்
மந்திரச டாக்கரச்சண் முகனூ ராதி
வளநகர்போற் றவத்துணர்வும்
வழங்கி டாது
தந்திரர்க்கு மதுகிடைக்குஞ் கருணை
யாதித்
தகையுடையார்க் கலதிவற்றின் சார்பெய் தாதே.
(15)
இத்தகைய வாஞ்சரிதை மார்க்கம் பலவா
றியம்பவல்லா ரியம்பிடுவா றென்றிட் டாலு
மத்தனையு மித்தனைக்கு ளடக்க மேயா
மன்றெனினுங் கொலையின்றே லாகும் சொன்னேன்
சுத்தமிகை யாற்புரியுங் கிரியை
மார்க்கந்
துகளிக்கவு மாரமுறைமை யில்சொற் றுள்ளேன்
வித்தகச்சற் குருவாயாற் கேட்டுங்
கொண்டான்
மிகநன்றா மிதனிடத்தும் விரிக்கின் றேனே.
(16)
செய்தனவெல் லாங்கிரியை யெனப்பன்
னூலுஞ்
செப்பிடுமே யானாலுஞ் செழும்பூ வேந்தி
யுய்தமுட னுத்தமமாந் தெய்வ பூசை
யுஞற்றுவதே யுயர்வாகு முலகிற் பல்லோர்
பொய்தவிர முயன்றுபய னடைந்த வாறு
புராணமுற்றுங் கூறுமந்தப் பொலிவிற் சற்றே
கைதவமில் லாதுரைத்திட் டதனு பாயங்
காட்டுகின்ற னன்னிலையோர் களிக்கு மாறே.
(17)
அறுசமயத் தேவரையும் பூசித் தின்ப
மடைந்தவருஞ் சிற்சிலரிவ் வலகில் துண்டு
குறுமுனிவன் வியாசமுனி சங்க ரப்பேர்க்
குரவனினா ரவராவார் குறிக்கு மொன்றே
பெறுபயனெல் லாமளிக்கு மென்ன நம்பிப்
பேணியவர் பலர்வரிற் பெரியோ னென்று
மிறுதியில்லா வாயுளுற்ற மார்க்கண் டேய
னெனு மகவே யெனத்துணிவுற் றிசைத்த லாமோ.
(18)
மாலயனிந் திரன்முதலா தேவர் தாமும்
வாணனிரா வணன்முதலா மற்றை யோருஞ்
சீலமுறு முனிவர்குலத் தினிற்பல்
லோருஞ்
சீராமன் முதல்வேந்தர் சிலரு மன்றி
ஞாலமிசை மானிடரும் விலங்கும் புள்ளு
நல்லெறும்பி றாதியவர் நவில்வ யாவு
மாலமுண்டான் றனைப்பூசித் துயர்ந்தா
ரென்கை
யசத்தியமன் றவன்பூசைக் காசிப் போனே.
(19)
ஔவைமுத லாயபல பெரியோர் முன்னர்
ளானைமுக கணபதியை யருச்சித் துய்ந்தார்
செவ்வையுறு போகர்புலிப் பாணி யாதிச்
சித்தர்குகன் பூசனையாற் றிருத்தி யுற்றார்
கொவ்வையிதழ்க் கவுமரிமலர்ப் பதம்பூ
சித்துக்
கொங்கணனா தியாமனத்தின் குறைதீர்ந் திட்டார்
தெவ்வையடுந் திறனெடுமா யனைப்பூ
சித்துத்
திகழ்பிரக லாதனனோ சிலர்வாழ்ந் தாரே.
(20)
சூரியனைப் பலவாய் தெய்வத் தொன்றாச்
சொல்வாருண் டானாலுந் துகளி லாற்றற்
சீரியர்க்கே தன்மகிமை விளங்கு மங்கே
சிவன்முதலாந் தேவரெல்லாஞ் சேர்வா ரென்றே
யாரியமா தியகலைநூல் பலவுஞ் சொல்லு
மதைவணங்கிப் பலமலரா லருச்சிக் கின்றோர்
நீரியலும் பூதலத்து மீத லத்து
நினைத்தபடி வாழ்வடைவார் நிசஞ்சொன் னேனே.
(21)
அஞ்சனைசேய் குந்தலநாட் டாசன மங்கை
யாதியர்பற் பலர்பரிதி யதனைப் பூசித்
தெஞ்சலில் பேறடைந்தார் களிவை யல்லாம்
லெத்தெய்வம் போற்றிடினு
மிறைச்சி யோடு
நஞ்சனைய வெறிப்புனலும் படையா ராகி
நலம்பெறுவார் கருணையின்றி
நகுவேண் டிங்கட்
பிஞ்சனைய நுதற்கவுரி யடிமை யென்னப்
பேசுவம்பர் சிலரவற்றைப் பேணு வாறே.
(22)
கவிராச பண்டிதனை யபிரா மப்பேர்க்
கவிப்புலவன் றனையெடுத்துக் கழறிக் கண்பாய்
செவிமானே ருமைக்கிறைச்சி படைக்கின்
றோருந்
திண்ணன்முயல் பூசையெண்ணிச் சிவபி ரானுக்
கவியாமென் றூனமைக்கின் றவரு மன்னா
ரனைவர்களுந் தன்மையினா லசுரர் போல்வார்
புவிமாதுக் கரியபெருஞ் சுமையென்
றோர்வார்
பூசனையாற் பயன்முழுதும் பொலியு மன்றே.
(23)
அசடுபடும் பலகிரியைத் தன்மை காட்டி
பக்குவரைத் துயர்செய்வோ ரனேக ருண்டு
நிசமருவு பத்தியொன்றே யதற்கு மூல
நீர்மலர்நல் லுண்டிசுத்த நிறைய வேண்டும்
பிசகுபுரி தாதைதன்றா ளற்முன் செற்றோன்
பிடித்தநிலை பயன்றாலும் பெருக்குங் கன்மச்
சேவன்மகன் வேள்விபழிந் தாட்டுச்
சென்னி
கொண்டதுவு முனரினென்சொற் கொள்ளற் பாற்றே.
(24)
பூசைசெய்யும் பேராசை யில்லா தார்க்குப்
புகழில்லைக் கல்வியில்லைப் போத மில்லை
யோசைபடுந் தோத்திரமந் திரங்க ளெல்லா
முறுப்பென்றே கொளவேண்டு முலகோர் போற்றுங்
காசையொரு பொருளாக மதித்து வீணே
கழிவுபடக் கூடாது கையி லுண்டேற்
றோசைவி டையன்முதற் பலவுஞ் செய்து
துகளில்பஞ்ச வாத்தியமுந் தொகுக்க லாமே.
(25)
தானொருமூர்த் தியைக்குறித்துப்
படைத்த வுண்டி
தனைத்தானே கொள்னலமாச் சாற்று வார்க
ளானவிதி முக்கியமன் றெவர்க்கு நல்கி
யருந்தலே யுத்தமமா மணிச்சோ ணாட்டுக்
கோனொருவன் காளியுபா சனைசெய் தங்கே
குவித்தவுண வினிற்சிறிதுங் கொத்துண் ணாம
வீனமுற வேபுதைத்துக் கெட்டா னந்தோ
விதையறிந்தோ ரிந்நாளிங் கிருக்கின் றாரே.
(26)
ஊனும்வெறிப் புனலும்வைத்துப் பூசித்
தோர்க
ளுலகறியச் சித்திமிக வுஞற்றி னாரென்
றேனையர்பாற் சிலர்துணிந்து வாது
செய்வா
ரியம்புமந்தப் பூசனையை யேற்குந் தெய்வந்
தானடிக்கப் பலர்மாய்வா ரேக தேசந்
தயிரியத்தாற் சிலர்பிழைப்பார் சடலம் வீழ்ந்தால்
வானிடத்திற் பயனொன்று மெய்த மாட்டார்
மறுபிறப்பிற் படும்பாடும் வகுக்கொண் ணாதே.
(27)
திருவருணைக் கோபுரத்தின் கிளிமேற்
கோபஞ்
செய்துசம்பந் தாண்டான்வெந் திற்றகா ளிக்கும்
பெருகுதிரப் பூசையிட்டுப் பிணமாய்
வீழ்ந்தான்
பின்னொருவன் றொண்டியலப் பேறே பெற்றா
னருவருந்த பூசனையான் மாய்ந்தோர்
தம்மை
யறையவென்றா லாராலா மகிலந் தன்னின்
மருவுமின்னார் களுமொருவன் வராகி
மாலை
வட்டமென்றா னடுநடுங்கும் வழக்கோர் சான்றே.
(28)
விக்கிரகஞ் சக்கரந்தோய் தகடென்
றுள்ள
விதமிரண்டும் பூசனைக்கு மிகநன் றாகுந்
தக்ககும்ப பூசனையு நன்றே யானாற்
றனமிகவும் வேண்டுமந்தத் தண்ணீர் மூழ்கி
திக்கறியச் சித்தர்களிற் சேர்ந்தோர்
பல்லோர்
திருநிற்றாற் சந்தனத்தாற் செய்ய மண்ணா
லக்கணத்தில் வகுத்திறைஞ்சு மதுவு
மாகு
மானம்நிலை மூர்த்திநிலை யறிகின் றோர்க்கே.
(29)
உடன்வகுத்துப் பூசிப்ப தெளிதென்
றெண்ணி
யுலகத்திற் பலர்முயல்வா ருள்ளத் துண்மைத்
திடமிசையு மாகினன்றே யாகுஞ் சீவன்
றேகத்தி லுளபோதே சிரநொந் தாலுங்
கடனெனமற் றொருவனைக்கொண் டியற்றி
யன்னோன்
கைந்நீறு பெறுவரதைக் கருதிற் பாவ
மடவாலன் னார்கல்வி யுணவு தூக்க
மற்றையரான் டவிலதோர் வம்பன் றாமே.
(30)
சத்தியொடு பிரியமுள்ள மட்டும் பூசை
தன்கரத்தாற் செயல்போதுஞ் சாத மான
பத்தியுள்ளாற் கதுமுதிர்ந்து யேக
நாட்டம்
பதியின்னறி வெறுக்காது பகர்ந்த தாகு
மித்திறமைக் கிரியையொடு சரிதை யென்னு
மிரண்டினுக்குந்
தேகபலத் தேற்றம் வேண்டும்
முத்தியினுக் கணித்தான யோக ஞான
முறையினுக்கு மனபலமே முதன்மை யாமே.
(31)
தன்மனம்போ லருளாமை யெண்ணி யேனுஞ்
சாற்றுமற்றெவ் விதந்தேனுந் தவஞ்சேர் பூசை
நன்மையென்றென் றிகழ்ந்துவிட்டோன்
சிலநாட் சென்று
நடத்தினால வன்மனத்தா னாடுந் தெய்வம்
வனம்முற்று வெகுளாது கல்விப் போதின்
மனந்திருகி யூடியபெண் வலிய வந்து
கனமலைத்தோட் டுனைத்தழுவப் பெற்ற
கொண்கன்
கருத்துப்போன் றுவப்புறுங்கை கண்ட வாறே.
(32)
ஆசிரியன் பூசித்த மூர்த்தி தன்னை
யவன்சீடர் நிமித்தமொன்றா லாரா திக்கை
வீசியநீர்க் கடலுலகின் முறையே யாகும்
விளம்புமிக னேனைமட்டும் விகித மல்லத்
தேசிலங்கு மூர்த்திசுயம் பாமென்
றாலுஞ்
சிலர்முன்னாள் கொள்லேனுஞ் செய்ய லாகு
மேசிலுபா சகனிறந்தான் மூர்த்தி
தானு
மிறந்தென்பா ரந்தமொழி யேற்ற மன்றே.
(33)
தந்தைதாய் குரவன்முதற் பெரியோ ரெல்லாந்
தனதுபாச னைக்கடவு டானே யென்ன
வந்தாயகத் தினிற்கருதி யான வெல்லாம்
மைத்தினிது பூசைசெய்வ தழகே யாகுஞ்
செந்தமிழா தியபயன்க ளனந்த முண்டாந்
தியானமிருந் தாற்கடிது சித்தி யாகு
மிந்தநிலைக் கேயோதமெ னப்போ சொல்வர்
ரிதைவிட்டாற் புண்ணியமட் டிசையு மன்றே.
(34)
மேனியினின் றவன்கீழ் நிலையோர் தம்மை
வெறுத்திகழக் கூடாது மெய்மை யாயே
தானியைந்த மட்டில்வழி படலு மாகுந்
தகுகிரியை முடிவினின்று சரீரம் விட்டா
லானியிலா யோகநிலைக் கருக னாவான்
வனசரிதை கிரியையினு மதுவூ டாகும்
வானிடத்துச் சாமீப பதவி நீங்கி
வந்தவனா மவனளவின் மகிமை யோனே.
(35)
தானருச்சித் திடுமூர்த்தி யுலகி
லன்னோன்
சபையிடைவீற் றிருப்பதுசா மீப மென்ப
ரானவொரு பதவியினு நான்கு பேதம்
மையுமென்பா ரநுபவித்தோ ரறிவா னறிக
கானமறை யாதியநூல் கற்றோர் வீணே
கண்டவர்போற் பிதற்றுவதாற் கலக்கம் போமோ
தியனவநு பூதியினைத் தெளித்திட்
டாற்போற்
சிலவாறு யோகநிலை செப்பு வானே.
(36)
ஆலயத்து மூர்த்தியினைத் தியானித்
தாலு
மவனுமொரு யோகியென்றே யறைய வேண்டுஞ்
சீலமன நாட்டமொன்று மில்லா தாரே
திகழ்சரிதை கிரியையினிற் சேர்த்தோ ராவார்
மூலமதி னின்றெழும்பு மூச்சைப் பற்றி
முயலுகின்ற யோகமெல்லா முரட்டுத் தன்மை
நீலகண்ட னரியாதி மூர்த்தத் தொன்றை
நினைத்தசையா திருப்பதுநன் னிலையா மன்றே.
(37)
யோகமென்கை தியானமென நிகண்டுக் கார
ருரைத்திருந்துந் தனதுடல்விட் டொருநற் கிள்ளை
யாகமதுட் புகுமருணைப் புலவன் கந்த
னலங்கார மதிற்சிலவா றறைதற் கேட்கும்
வேகமுட னெழுமூச்சைப் பிடித்துக்
கட்டி
விடுதலே யோகமென்ன விரும்பு வாருண்
டேகனெண்ணப் படிவருவா னென்னத் தேறு
மியல்புடையார்க் கவர்பருவ மிளப்பந் தானே.
(38)
சூரன்முதற் றானவர்க ளீசன் றன்னைச்
சுரிகுழலா லொடுகருதித் தொன்மைத் தாகு
மீரமுற்றுப் பெற்றவரங் களைப்பின்
னாள்வ
விறைவனரு ளன்றிமற்றிங் கேவார் னாலுஞ்
சீரணிக்கச் செய்ததுண்டோ வதனான்
மூர்த்தித்
தியானமே மிக்கதெனத் தெளியொண் ணாதோ
பாரதனி லடையோகஞ் சாதித் தூறு
பட்டவர்க ளளவறும் பற்பல போன்றே.
(39)
எவ்வுயிர்க்கு முயிராவா னவையை யோரத்
தியங்குபிரம் படிபடவு மெலும்போர் பெண்மைச்
செவ்வுருவாய் கொடுவரவுங் கடலிற்
கல்லோர்
தெற்பமாமி தந்திடவுஞ் செறிபற் பெழலாய்த்
கௌவுகாரம் தலையினைத் தாவுஞ் செய்யுந்
தலையடன்மால் விடையுகைக்குந் தவள மேனி
வௌவுநர்க்கோ வாசியினைக் கும்பிக்
கின்ற
மாதவர்க்கோ வெனக்கருதார் மடமை யோரே.
(40)
தூணிடைவந் திரணியனைப் பிளந்த வாறுஞ்
சுரிகுழலொ ருத்திகலை தொலையா மாண்பும்
வாணிலவு சக்கரம்போல் முதலை யொன்றை
வகிர்ந்ததுவும் பதின்மாதமிழ் மறைக்கொப் பாகிச்
சோணிடத்துந் தொனித்தாலு மனைய கோடி
திருக்கத்து நன்குணரிற் தெளிந்த நெஞ்சர்
னீணிலமுற் றோடியால ளந்த கோல
நினைத்தபய னெனத்துணிந்து
நிகழ்த்த லாமே.
(41)
புலவர்களை யவமதிக்கும் பொல்லா னூர்மேற்
புயல்கருவி மண்மாரி பொழிந்த வாறு
மிலகுமுழு மதியம்மா வாசை நாளி
லெல்லோருங் காணுறவந் திட்ட வீறுங்
குலமறையோர் பலர்விழிபோய் மாய்ந்தி
டாது
கொக்கரிக்க நெல்லையினிற் குலுவுஞ் சேறுந்
திலகநுதற் பரையெனமெய்ப் பொருளை
யன்பாற்
சிந்தித்து வழிபடுநற் றியானப் பேறே.
(42)
வெட்டுள்ள பனையினொடு பலாவுங் காய்த்து
வியன்கனிமுன் னீந்ததுவும் விளங்குஞ் செஞ்சொற்
கட்டுற்ற திருமுறைகண் டெடுத்த வாறுங்
கண்கழலுந்த பார்ப்பனச்சேய் தளித்த பண்பு
மட்டுற்ற மலர்த்தடஞ்சூழ் வெண்ணெய்
நல்லூர்
மதலையுளத் தையமற்ற வகையுந் தேரிற்
குட்டுற்ற தலையினருக் கருளுஞ் செம்பொற்
குஞ்சரமாப் பரத்தைநம்பிக் குறித்த வாழ்வே.
(43)
கடல்குடித்து விட்டதுவுங் குன்றும்
பேயுங்
கணத்திலிடிந் திறந்ததுவுங் கவினார் பாண்டி
யடல்வழுதி மனைவியொடு சிவிகை தாங்கி
யதுவுமொரு கிளிபனுவ லறைந்த பாங்கும்
படவரவ மனையவல்குல் வணிகப் பெண்கை
பழையபடி முளைத்ததுவும் பகரிற் றொண்ட
ரிடர்களையும் வடிவேலு மயிலுங் கொளவே
ளெனப்பிரமந் தனைக்கருது மேற்ற மாமே.
(44)
சட்சமயத் தொண்டர்களும் பரிதி தன்னைத்
தங்கடங்கள் கடவுளெனச் சாற்றும் பண்பர்
லுட்சமயம் புறச்சமய மென்னக் கூறு
மொருபதிற்றோ ரிரண்டுநெறி யூடுள் ளார்க்கு
மட்சமதென் றறிந்தெதனைத் தியானித்
தாலு
மதினிறுத்தி முன்புவர வழைத்துப் போற்றும்
பட்சமுற்றார்க் கெய்தரிய பேரின்
றென்றே
பழமறையோ டாகமங்கள் பகரு மன்றே.
(45)
எவ்வகைய சமயத்துத் தெய்வந் தன்னை
யிறைஞ்சிடற்கு மிக்கநிலை யென்றொன் றுண்டிங்
கவ்வழிக்காம் பருவமெய்து மவரே கொள்வா
ரதையுரைத்தான் மனத்தகத்தி லையுற் றாலு
மெய்வழக்கென் றனைவர்களும் வாயா
லேனும்
விளம்புவது கடனேயாம் வெறுத்துப் பேசிற்
பௌவநிகர் பழிப்படைந்து கெடுவா ரந்தப்
பழையபொருள் குருபரன்போற் பதங்க டாமே.
(46)
குருபதமொன் றாகியிரண் டான ஞாயங்
கூறுமொழி யாலுணர்ந்து கொளக்கூ டாது
சொரூபமுற்ற தெய்வமுற்று மதுவே யாகுஞ்
சொல்லிறந்த பொருளுமதன் சோதி யேயா
மருவமெனப் பிஞ்சுவெம்பிப் பழுத்திட்
டாற்போ
லறைவாருண் டருச்சுனன்றா னந்நா ளாகொன்
றிருவடியி லிட்டமலர் சிவன்மேற்
கண்டான்
சிறியவர்தா மென்சொல்லினுந் தேறா ரன்றே.
(47)
சமயநெறி யத்தனையுந் தாண்டி யுண்மைச்
சமரசந்தோய்ந் தவர்குரவன் தன்மை தேர்ந்தோ
ரிமையவரிற் பெரிதுய்ந்தோ ரவரே யாவா
ரேதேனு மொருசமயத் திச்சை மீறிக்
குமுறுமிரு ளுடையவர்க ளெவரா னாலுங்
கொதுபட்ட நெஞ்சினரே கொன்றூ னுண்ணுந்
திமிரநெறி யோர்க்கறுவா ரெனினுந்
தீமை
செறிந்தரேயெ னத்துணிந்து செப்ப லாமே.
(48)
பொதுமுதலாய் குருவடிவைக் கருதத்
தக்க
புண்ணியமின் றாமாகிற் புகலு மூர்த்தத்
தெதுபெரினுஞ் சம்மதமே மனக்கண் கண்டா
லின்பமலிந் தந்நிலைவிட் டிடுதல் கூடா
ததுவிழிமுற் பிரசன்ன மாகி வேண்டு
மாடல்செய்து தன்னைத்தா னாக்கு மாகி
லிதுநமது காட்சியென்றும் கண்ட மென்று
மிருக்கலா மவசரத்தா லிழிந்தோ ருண்டே.
(49)
எங்கெறிந்த கல்லுநிலத் தினில்வீழ்ந் தாற்போ
லெவ்வுலகத் தியாவரெவ்வா றெண்ணி னாலு
மங்கவண்போ யருள்வதொரு பொருளே யாமென்
றறிந்தவரே யோகநிலை யாள ராவர்
ரிங்கிவண்வீற் றிருப்பதுநங் கடவு
ளென்பர்
ரிளம்பருவக் காரர்தெய்வ
மில்லை யென்பார்
தங்களையோ சிக்கிலிவர் தேவர் போல்வார்
சத்தியம்பின் னாளிலுண்மைத் தகைதோய் வாரே.
(50)
மங்கலமில் லாவிடினும் புருடற் சேர்ந்தான்
மகப்பெறலா மெனக்கருது மடமின் னாள்போற்
சிங்கமொல்குஞ் சாபநிக ராண்மைச்
சித்தி
செயலிகழ்ந்து முத்திபெறச் சிந்திக் கின்றோன்
பங்கமறா னெனத்தெளியு மவரே நல்ல
பக்குவத்தோ ரவர்புகழே பலநூல் சொல்லு
மங்கணிலத் தொடுவானு மவரை வேண்டு
மநுட்டான மநுபவஞ்சற் றறைகின் றேனே.
(51)
மானிடர்தாஞ் சொலுமரண மரண மல்ல
மறுக்கரிய முத்திநிச மான மாகு
நானிலத்து மன்னவருங் கொலையுண் பாற்கு
நண்ணுமவை யாவுமுண்ண நல்க லுண்டு
மேனியினி வாராமை விழைகின் றோர்க்கு
மெய்ப்பிரமஞ் சித்தாடும்
விறனல் காமற்
றானிரக்க மின்றிவிழுங் கிடுமோ வுண்மைச்
சற்குருவன் பணிபோலுந்
தவமொன் றின்றே.
(52)
அருந்ததியா தியமடவார் வசிட்ட னாதி
யவர்தொழும்பி லமைந்திடல்போன் றாசான் றாண்டிற்
பொருந்தியவர்க் கெய்தரிய பயனின்
றேனும்
புந்தியமை வரிதாமாற் போதத் துண்மை
திருந்தவுபா சனைபுரித னலமா மன்னோன்
றிருவுருவை மூர்த்தியொன்றைச் சிந்தி யாமல்
வருந்திவெளி வாசியெழுத் தாதி தொட்டு
மாழ்கவொன்ணா தவைசடமாம் வசனி யாவே.
(53)
சச்சிதா னந்தவடி வாக மூர்த்தி
தனையொருவன் சித்தித்துத்
தவஞ்செய் வானேன்
மெச்சியது கனவில்வந்து பலவாப் பேசி
விளங்குறுசர்க் கிரத்தனவில் விளம்பு மப்பா
னச்சியவா றிருவிழிமுற் காட்சி நல்கு
நானிலத்திற் றோன்றுமென்னி னகுவார் பல்லோர்
சிச்சியவர் வார்த்தைகளான் மயங்க
வேண்டாந்
தெரிசிக்க லாகுமென்கை திண்ணந் தானே.
(54)
நான்னந்த மூர்த்திகளைத் தியானஞ்
செய்தேன்
வில்லவன்முற் றொன்றெனவே நணுகிற் றவ்வா
றானதுமுற் பிறவிமுத லனேக முண்மை
யறிவித்த திறுமாப்பா லநுட்டா னத்தின்
மானம்வைத் துமுன்போல் முயலா துற்றேன்
வந்தவநு பூதிகளு மறைந்த வம்பர்
கோனடைதற் கரியபெரும் பேருங் கொள்ளுங்
குறிப்பறிந்த வுணர்ச்சியொன்றுங் குன்றிற் றின்றே.
(55)
யானுமொரு சீர்த்தியெனத் தெளிந்து
கொண்டே
னிந்நிலையிற் சகுணபத்தி யினைக்கை விட்டு
வானுருவ மாகக்கருதி கெட்டோர் பல்லோர்
மனவெளியில் வருஞ்சகள
வடிவந் தன்னைப்
பானுவெதிர் சாக்கிரமாம் வெளியிற்
கண்டு
பணியினன்றிச் சித்திமுத்தி
பலியா வென்னும்
வேனுறுமெய் யுணர்வசையா தமைத்த முன்னாண்
மெய்த்தவத்தி ளைவறிந்து விளம்பொண் ணாதே.
(56)
சிங்கமிசை யேற்றியுல கெல்லாம் வெல்லச்
செய்கிறதாக் கனவிடத்திற் செப்புந் தெய்வம்
பங்கமுற்று நனவதனிற் றவளை வாயாற்
பதைபதைக்கப் பார்த்தாலும் பார்க்குஞ் சொன்னேன்
புங்கவர்பற் பலர்சரிதங் கனவின்
மெய்மைப்
பொலிவுறலாத் திகழ்கைநம்பிப் புலர்ந்தே னந்தோ
வங்கவற்றை முழுமையும்பொய் யென்னத்
தள்ளு
மதுவுபாச னைத்தகையோர்க்
கடுத்த தன்றே.
(57)
தன்பலங்கொண் டம்பலத்தி லேறென் றிந்தச்
சகமுரைக்கும் பழமொழியைத் தழுவ வேண்டு
முன்பருளோர் வடிவாகித் தோன்றப்
பெற்றான்
மூவுலகு நடுநடுங்கு முத்தி வீடுந்
தன்பதம்போற் றுநாதமக்கு நல்க லாகுஞ்
சம்பந்தப் பிள்ளையொரு காட்சி முந்நா
ளன்பதனின் முழுத்துணிவுற் றடலே
னாதி
யாதியார்சிற் சிலருடல்விட் டவமா னாரே.
(58)
இங்குள்ள படியங்கு மென்று லோக
மியம்புகின்ற மொழியினைவிட் டிணையின் மோட்ச
மங்குபெறு வோர்களெல்லா மிங்குப்
பலவாற்
மருவாரெ னச்சொல்லவா ரந்த ஞாயம்
பங்குபடு பதமுத்தித் தனிமை யாகும்
பத்திநெறிக் கழகேமெய்ப்
பரம யோகந்
தங்குமவ ரெந்தவுல கினும்போய் மீண்டு
தடையறச்சித் தாடுவதே சாத மாமே.
(59)
முன்றனது மூர்த்தியினைக் குறித்து
மாய்ந்தோர்
மூதுலகிற் பலரெனுஞ்சொன்
மொழியக் கேட்டுங்
குன்றதிற்போ யிரவியொடு விண்ணு மண்ணுங்
குலைகுலைய வுருண்டுபல கோரைய் பட்டேன்
பின்றனித்தென் மூர்த்திவந்து காத்த
தாகப்
பேசினான கனவிலிதாற் பேருஞ் சில்லோ
ரன்றடைந்தா ரெனும்வழக்கு முளதா
னாலு
மதுமுறைய னறியோர்கமுயன் றழைக்கை நன்றே.
(60)
கொலைத்தொழிலை மிகவிளக்க வேண்டு
மென்னக்
குறித்தவனும் பலநாட்டிற் குரவ னான
நிலைத்தமனத் தினர்க்கமையா வலியொன்
றில்லை
நிசஞ்சொன்னே னொருநிலையி னின்று பெற்று
மிலைத்தபய னறுப்பத்திறந்தோ ரனந்தங்
கோடி
யெண்ணிறந்த திருவிளையாட் டியற்றி ஞானத்
தலைத்திறமுங் காட்டியதோர் கண்ணன்
போலுந்
தகையுடையார் சிலர்வாக்கோர் தடையு மின்றே.
(61)
எந்தவிதச் சமயத்து மூர்த்தி யேனு
மெழிற்குருவா மல்லதன்பா லெண்ணு வார்முன்
வந்தவிரதற் கவனமைத்த கோவ மாகு
மற்றொன்று மில்லையில்லை மயங்க வேண்டா
மிந்தமொழிய பக்குவர்க்கு வேப்பங்
காயி
லெண்மடங்கு கசப்பாகு
மியாமுஞ் சின்னா
ளந்தநிலை நின்றுள்ளே முண்மை யுண்மை
யாதலினாற் றியானமின்றி யருடோன் றாதே.
(62)
அறமுதலா முய்யனும் வேண மட்டும்
மநுபவித்துத் தன்னடியார்க் கருளத் தக்க
திறமுறினுஞ் சாக்கிரத்திற் றோன்று மூர்த்தித்
திருவுருவைக் கரைத்தருவர்
சிந்திக் கொண்ணா
திறவியொடு பிறவியெனப் பதிரெண்டுந் தீர்வ
தெளிதல்லக் கண்ணும்பின் னிகலோ
கத்தின்
மறமுடையார் குலமறுக்கக் குதிரைச் சென்னி
வாய்ந்துதிப்பா னெனவழங்கும்
வழக்கொன் றுண்டோ.
(63)
எவ்வகை சித்திசெய்வோ னெவனா னாலு
மிலங்குடன்மற் றொருவர்தொடர் தேற்ற தாகி
யிவ்வகிலந் தனிற்பிறக்கும் வினைமாய்ந்
தில்லா
னியற்பெயர்மா யோகியென்றே
யிசைக்க வேண்டும்
மவ்வகையர் நாட்கழித்து வெளியிற்
சோதி
யாதிகளிற் கலப்பாருண் டதுவு நன்றே
தெவ்வரொலகத் தோற்றமட்டிற் குலவும்
வாழ்வே
சிவபரமெஞ் ஞானநிலைத் தெளிவா மன்றே.
(64)
இலங்கிழைப்பார்ப் பதிகயற்கட் குமரி
போல்வார்க்
கின்பநல்கி னாரனையா ரெனினுந் தங்க
டுலங்குடன்மற் றொருவரெடுத் தடக்கஞ்
செய்யிற்
றொல்லுலகிற் பின்னும்வந்து தோன்று வாரென
றலங்குபொழில் விருத்தகிரித் தவசி
சொன்னா
னந்தமொழி மூக்கரையற் காடியே போன
மலங்குதுயர் னேகருக்கு விளைக்குஞ்
சீறி
வாதிடுவார் வாதவத்தின் வலியில் லாரே.
(65)
பாரூடு தெய்வமெனத் தக்க சித்தி
படைத்தசிவ யோகியரைப் பழிக்கொண் ணாது
சாரூபம் பெற்றவர்தாம் போற்றுந்
தெய்வத்
தன்மைமுற்று மநுபவிப்பார் தபனன் றிங்கள்
காரூரு நாள்வரையு மிருந்து பின்பு
கலந்தாலுங் கலப்பரந்தக் கடவு ளாரே
சீரூர மெஞ்ஞானநெறிக் குரியோர் மற்றோர்
சிற்றறிவாற் பிதற்றன்முற்றுந் திருட்டுச் சொல்லே.
(66)
புல்லறிவா லஞ்ஞானந் தனைமெய் யென்னப்
புலம்பிலன்பிற் றவஞ்சிறிதும் புரிந்தி டாராய்
நல்லசித்தி முத்திநிலை யுணர்ந்தோ
தம்பி
னாலிரட்டி திருத்தியெய்து நாரைச் சேரா
தல்லமனை வாதவூர முனியைப் போலும்
மலபர ஞானிகடம் மருமை சொல்வா
லில்லறத்தோ ராணாலு மவர்தம் பொற்றா
ளிடையுதிரமென் றுகள்சுமப்ப தேற்ற மாமே.
(67)
மானுறழகண் ணார்மயக்கு கின்றா ரென்கை
மனமயங்கு கின்றதென்றால்
வம்பா னாற்போற்
றானுலகிற் றோற்றமட்டாய் விளங்கு
வானேற்
றனக்குலக முழுமையுமத் தகைய வாகு
மூனுயிருக் கயலன்றே யெனுமு லோகா
யுதனுமவன் றனைத்தேவென்
றொப்பித் தாழ்வான்
பானுவொருங் குதித்தாலு மிடரின்
றென்னப்
பகர்ந்தவர்க னறிமற்றைப் படிறாக் கன்றே.
(68)
கானனீர் கயிற்றாவு கிளிஞ்சி வெள்ளி
கனவுகட்டைக் கள்ளன்விண்ணிற் கமல மென்ன
மானவுலகினைப் பழித்திட்டெழு தாத
தொல்லை
மறைவகுத்த மெஞ்ஞான வழக்குச் சற்று
மீனமுறாச் சொருபசித்தி யடைந்துள்
ளார்க்கென்
றினிதுணர்ந்து முயலாம லெடுத்த தங்க
ளூனதிற்சிற் றெறும்பூரச் சகியாத்
தன்மை
யுறும்போதே யதுபவம்போன் றுரைப்பா ருண்டே.
(69)
அந்நாளின் மெஞ்ஞானச் செல்வம் பெற்றிட்
டரியவீட்ட டைந்தவர்க ளன்றிப் பார
லிந்நாளிற் றவம்புரிந்து பேறு பெற்றோ
ரினத்திலந்தக் கன்னடநாட் டிறைவன் மட்டுஞ்
செந்நாவாற் சொரூபசித்தி விபரஞ்
சற்றே
செப்பினான வன்குருவுஞ் சீடன் றானுந்
தந்நாவாற் பேசவில்லை மாயா வாதச்
சழக்கருக்கந் நூல்கொழுத்த
சனியா மன்றே.
(70)
மண்டலத்துப் பாண்டிநன்னாட் டீசா
னத்தின்
மருவொருசிற் றூரினந்தா வனத்தி லென்பாற்
குண்டலக்கா துடனொருநற் றவசி வந்தான்
கும்பிட்டேன் வாய்திறந்து குழந்தாய் முன்னா
ளண்டமுகட் டினுக்கேகிப் போக நாத
னங்கிருந்த சொருபசித்தி யாளர் தம்மைத்
தெண்டனிட்டா ளிளஞ்சித்த னென்றார்
கண்டார்
தெரிந்துபிழை யெனவுரைத்தான்
றிடுக்குற் றேனே.
(71)
வள்ளமுலைத் துணைமடவார் விளையாட்
டொன்றில்
வயதுநவ கோடிமட்டும் வாழ்ந்த போக
ருள்ளமொலக விளஞ்சித்தன் றேற்ற வேண்டு
முறுதிவிடே லெனவுரைத்த வுயர்ந்தோ தாமு
மள்ளன்முன் நீர்மாநிலத்தி லிருந்தா
ரென்றா
லருண்மகிமை யித்தகைத்தென் றறியப் போமோ
கள்ளமற்ற சொரூபசித்தி யானா லன்றிக்
கருதுமுபா சனையதனைக் கழிக்கொண் ணாதே
(72)
சொரூபசித்தி யென்றுசெல்வ மெளிய
தல்லச்
சுத்தசாத கத்தமிழ்நூல் சொல்லுஞ் சற்றே
யருவமென்றா லருவாகு முருவ மென்றா
லப்படியா மாயையென்றா லந்த வாறாந்
திருவருளே யெனத்துணிந்தா லதுவாய்
நிற்குஞ்
சீவனென்றா லப்படியாந் தெய்வ மென்றாற்
பொருவிலதா மரிபிரமா பலபேர் கூடிப்
பொருதாலு மிடையூறு பொருந்தா தன்றே.
(73)
கத்திகொண்டு வெட்டிடிற்கை சோர நிற்குங்
கனற்கொளத்திச் சுடிற்சிறிதுங் கருதி டாது
பத்தியுள்ளார் விருங்பங்கண் முழுதுஞ்
செய்யும்
பலகோடி திருவுருவாப் பரந்து நிற்கு
மெத்திருவு மென்னதென்னு மியாது
மில்லே
னெனவுரைக்குந் தெய்வவடி வெல்லாங் காட்டு
நித்தியமெய்ப் பொருளடியார்க் கடிமை
யென்னு
நீணிலத்தி லினிப்பிறவா நெறிபெற் றோனே.
(74)
சீதளசந் திரனிடத்துங் கதிரோன் பாலுஞ்
சென்றுவரு மலையிலுள்ள சித்த ரெல்லா
நாதனிவ னென்றுகெஞ்சிப் பணிய நிற்கு
நானிலத்துக் கானபல நலமுஞ் செப்புங்
காதலற்ற பெரியோரைத் தன்னிற் சேர்க்குங்
கடலுலக மத்தனையுங் கணத்திற் சூழும்
வேதமுத லாயகலை யாவும் பேசும்
வினைமூன்று மிறந்துநின்ற மேனி யொன்றே.
(75)
மெய்யடியார் கூட்டமதின் னடுவே நிற்கும்
விளங்குசரா சரத்துளெல்லாம் விரவி மீளும்
வையமுற்றா ரின்பதுன்ப முழுதுங்
கொள்ளு
மற்றவற்றூ டொருசிறிது மருவா தோங்கும்
பெய்யவருங் கரியமுகி னாணத் தக்க
பெருங்கருணைத் தன்மையொடு பிறங்கும் பேணார்
நையவிட்டுக் கொக்கரித்துக் கூத்து
மாகு
நானிலத்தி லினிப்புறவா ஞானத் தோனே.
(76)
மலையனைய பேருண்டி யருந்திச் சற்று
மலசலந்தோன் றாதிருக்கு மலரைந் தேவுஞ்
சிலைநுதலார் பலர்க்குமொவ்வோ ருருவாய்
கொண்டு
சேர்ந்துமனு வளவுவிந்துந் தெளித்தி டாது
கொலையாக கானையாரைப் பொருதும் வெல்லுங்
குறித்தவிளை யாடலெல்லாங்
கூடு மன்றி
நிலையிதுதா னென்றொருவர் நிகழ்த்தப்
போமோ
நிழலுமடிச் சுவடுமின்றி நிலவு வாற்கே.
(77)
ஆனியிலாச் சொருபசித்தி யடைந்தோன்
றோற்றத்
தளவலது தூலசித்தி யாடற் கேற்ற
மேனியவற் கேதெனச்சிற் சிலர்வா திப்பார்
விருப்பமுற்றா லப்படியும்
விளங்கக் கூடு
நானிதுகற் பிக்கின்றே யென்ன வேண்டா
நலந்திகழ லலமனொரு பெண்ணணுகிச் சோகால்
வானில்வளைக் கையிலிப்ப நின்றா னதையான்
மத்தளமெப் படியடித்தான் மதித்துய் வீரே.
(78)
அல்லமனிவ் வுலகமுற்றுஞ் சென்று
பலவாற்
விரதருமெந் நெறியினர்க்கு மாசா னாகிக்
கொல்லல்புலா லுண்ணலென்னுந் தீமை
நீக்கிக்
கோதற்ற பரவெளியிற் கூட லாகும்
வல்லவச வண்ணன் மதலாய் மேலோர் மட்டில்
விளையாடி விட்டும றைந்தா னந்தோ
நல்லவருள் பெற்றவர்க ளியற்ற வேண்டு
நலமறிந்து செய்யாமை ஞாய மன்றே.
(79)
வாதவூர டிகளந்நாள் சொரூப சித்தி
வந்தவுட னந்தரத்தின் மறைந்து போனா
ரேதமிகப் பட்டவித மெண்ணி யெண்ணி
யிகதலத்தி லருவருப்புற் றிருந்த பண்பாற்
போதபிரா னந்தமுற்றோர் தம்மை யிந்தப்
புவிமாயை யென்னசெய்யும் புனிதச் சோதி
நாதனது சம்மதமப் படிக்கொல் லந்தோ
நாரிறைச்சி யருந்தாமை நாட்டி லாரே.
(80)
தனிப்பரஞ்சோ தியிற்பலரோ டயிக்க
மான
சம்பந்தப் பிள்ளைபின்னுந் தரையிற் சின்னாண்
மனித்தருய்யு மாறிருந்தா னலமே யாகு
மற்றவர்தம் மாவியெல்லாம் வானிற் றோயாத்
நித்தமத மடைந்தவென்பா ரறிவில் லாதார்ப்
படியாமா கில்வரங்க மெல்ல ரந்தோ
னித்தபுகழ்த் திருவாச்சர் புரத்தூர்க்
கோயிற்
சுற்றிடத்திற் கிடவாவோ தூநீ றாயே.
(81)
அருவுருவா மிலிங்கமதி டைந்த வப்பா
ரதியாதங் கதியெறிதெ னற்றை யொண்ணாத்
திருவுருவ முன்னையலும் பருத்த துண்டோ
திறக்கின்ற வாயுமொன்றைத் தின்னும் பணிவு
மருவியற்கைத் தன்மையதோ வாத லாற்றொல்
வானிடத்திற் கலந்தவென்றே மதிக்க வேண்டும்
பொருவில்பத்தி யதனிடத்திற் பொருந்து
மாற்றார்
புகுவதற்கோ ரிடமாகிய பொலிந்த தன்றே.
(82)
பாணாழ்வா னாதியவர்பெற்ற பேறும்
பழுதிலதே சிலசமயம் பதவி யென்ன
வீணாகச் சொலுமதனை நம்ப வேண்டா
மெய்யிலிங்க மாகுமுத்தி வீடு நன்றே
காணாம லௌவைமுதற் சிலரே போலக்
கவினுடலோ டெக்கலையுங் கழிக்கொண் ணாது
நாணாமற் புவியிலுடற் போட லொன்று
நற்கதியின் பகையெனவே நவில லாமே.
(83)
புகையேபோல் வானிடத்திற் கரையு முத்தி
பொருவிலதா முடலொடுவிண் போதல் கீழாந்
தகைசாலெம் முத்திகட்குந் தியான
யோக
சமாதியன்றித் துணையில்லைச் சாதஞ் சொன்னேன்
குகைதோறு மருவுசித்தர் கற்ப மாதி
கொடுசொரூப சித்திசெய்து கொள்வா ரன்பின்
மிகையானமெய் யருள்வடிவைக் கண்முற்
கண்டான்
மின்னிமைக்கு நேரமதில் விளங்கு மன்றே.
(84)
சித்தர்களைத் தேடிவம்பி லலைய வேண்டாஞ்
சிவசமய மாதியொன்றிற் சிந்தை நாட்டிப்
பத்தர்களைக் கூடிமிகப் பழகி யொன்றே
பரமெனத்தேர்ந் துருநாட்டம் பற்றி நின்மின்
முத்தமிழ்த்தென் பொதியையிற்போ யவரைக்
கூவி
முறையிட்டே னாணையிட்டேன் முன்வந் தாரின்
றத்தமிசை வேலணிவான் கனவிற் பலகா
லருணகிரி தானீயென்ற றைந்துள் ளானே.
(85)
என்றனொடு மவர்கள்வந்து பேசி லாரே
லிகதலத்தீ ருமைச்சிறிது மெண்ணா ரெங்கு
நின்றதெய்வ மேதுணையென் றுறுதி கொண்டு
நினைத்துய்வீ ரவர்பலரு நிருவி கற்ப
மென்றசமா தியிலிருப்பார் சிலர்போய்
வந்துண்
டிருந்தாலுங் கருணைசற்று மில்லா ராகித்
துன்றரும்வஞ் சகத்தினுக்கோர் பலம்போன்
றிந்தத்
தொல்லுலகிற் குதவியின்றித் துலங்கு வாரே.
(86)
எத்தனையோ வல்லரக்க ருலகிற் றோன்றி
யிடர்செய்தா ரவரைவென்றிட் டின்ப நல்கச்
சித்தனெவ னாயினுமுன் வந்த துண்டோ
சிவலோக மாதிகளிற் சேர்ந்து வாழ்ந்த
பத்தர்வந்து பிறந்தன்றோ வென்றா
ரின்னம்
பப்பலவர்ச் சொன்னாலும் பருவ மில்லார்
தத்தமக்காம் படிமுயல்வா ரேக தேசஞ்
சத்தினிபர் தம்பதிந்தோர் தழுவு வாரே.
(87)
ஒருவேனா சித்தனெவ னேனுந் தோன்றி
யொப்பிடினு முனைபாரென் றுபதே சிப்பான்
மருவார்போற் சோதனைகள் பலநாட் செய்வான்
மனமறிந்த தெய்வமென்றால் வஞ்சஞ் செய்யா
கருமாந்த சொருபசித்தி வட்டை தொண்ணூற்
றாறுதள்ளக் கற்பமுண்டே யடைய வேண்டும்
பொருவாத பத்தியத்திற் சோர்வு வந்தாற்
புகழுடம்பு மின்றியுயிர் போகு மன்றே.
(88)
சத்தியஞ்சத் தியமொடுசொற் பகரக்
கேண்மோ
தாரகத்தின் பொருளென்றோர்
சகுணந் தன்னிற்
பத்திசெய்தா லுடனுடனுங் தளிப்பு
நல்கும்
பாமருவே யெனப்பிஞ்சிற் பழுத்தி டாமற்
புத்தியினா னிலைத்துநின்றாற் கண்முற்
றோன்றும்
புதலத்துத் தொண்டர்முதற் புகலொண் ணாதே
முத்திபெற்றோர் களுமதுவே யாகி நிற்கு
மொழிந்தறியக் கூடாத முறைமை யீதே.
(89)
கரவறுநெஞ் சகவெளியிற் குகனைக் கண்டேன்
கண்டபடி சிவன்முதலங் கடவு ளாகும்
வரமுனிவர் பலர்தாமும் வந்தா ரந்த
வாறுநனவி னிலுமினி வருமென்
றார்ந்தேன்
றிரமுறுகர்க் கிரவெளியிற் காணு
முன்னந்
திருத்தியுறாத் தன்மையதே சிறந்த கொள்கை
பரமகுரு நாதன்விழிக் கருணை யில்லார்
பாழிலிறு மாந்துமிகப் பழிப்புண் பாரே.
(90)
கண்மதத்துத் தேவர்களுங் கனவிற்
றோன்றிச்
சந்தேக மின்றியுண்மை சாற்றக் கேட்டு
மண்மருவு மாந்தர்க்கு களவு மென்னை
மதிக்கவில்லை யாகையினான் மனக்கட் காட்சி
வெண்மதியோர் தங்களுக்கே திருத்தி
நல்கும்
வெளிமுழுது மொன்றாலது வெவ்வே றல்லத்
திண்மைபடு தவமுதிர்ந்தால் விழிமுற்
றோன்றுஞ்
சிறியவருக் கிந்தமொழி தித்தி யாதே.
(91)
கண்ணெதிரிற் சாக்கிரத்திற் றோற்றுங்
தெய்வங்
கணப்பொழுதில் வெளிவிடத்திற் கலக்குஞ் சின்னா
ளண்ணப்பதத் தானையெனக் கிந்த மட்டு
மநுபவமுண் டசையாம லமைந்து நின்றேன்
ளெண்ணமொத்துப் பேசன முதலாய் செல்வ
மெய்தவில்லை முயலுகின்றே னிடையின் முன்னாட்
பண்ணும்வினை யனையதடை யொன்று நின்று
படுத்துகின்ற ததுகடந்தாற் பயன்கொள் வேனே.
(92)
மாதவருக் கிகலுறவே தென்பார் பல்லோர்
மானமின்றேற் றவப்பயன் கைவந் திடாது
வேதமகனாம் வசிட்டன் றன்பாற் காதி
விரும்புமகன் பகைத்தனறோ மென்னம் பெற்றா
னோதலத்தை யென்றிகழ்வா ருண்டே யன்னோ
ருணர்வாருசற் றுள்ளாரே லொன்பான் மூன்றா
மேதமினாட் களிலநுக சமாதி யைந்து
மிடம்பெயர்ந்த விதங்கருதி யிசைய லாமே.
(93)
ஆழிவளை தருமுலக மாதி யாகு
மளவிறந்த கோடியுல கமைத்துக் காக்கும்
பாழியுடைப் பொதுக்கடவு ளொருவ னல்லாற்
பகர்பவரெல் லாமவன்றன் பத்த ரென்ன
வீழிதய முள்ளவனே தவஞ்செய் துய்யும்
வித்ததினுக்காம் பக்குவத்தோர் வேலு கொல்வார்
கோழிநிகர் பெருவீரத் தினரா னாலுங்
குவலயத்தோர் கதைகளெண்ணிக் குழம்பு வாரே.
(94)
என்றனது விருப்பம்போற் றெய்வ முன்னின்
றிடுமாகி லென்றிதுநா னெழுதும் போதி
லுன்றனக்கெவ் வளவுபயன் வேண்டு மேனு
முதவுகின்றேனென் றொருசொல்லொ லித்த துண்மை
முன்றமியேற் குரைத்தமொழி யனந்த
முண்டான்
முழுக்களிப்புற் றிடவிலைநான் முற்றிலி யாருங்
கொன்றருந்தா விரதமுறச் செய்தி டாமற்
குருவாகிப் பரவெளியிற் குறுகி டேனே.
(95)
முத்தியடை யானெனினுங் கொன்றூ னுண்ணா
முறைமனிதர்க் கமைப்பவனே முதல்வ னென்னும்
புத்தியெனக் களித்ததெய்வ மந்தப்
பேறு
பொருந்தாமற் கொன்றிடினும் போகின் றேன்பின்
சித்தியினார்ப் பிறக்குந்த வத்தோர்க்
கெல்லாந்
தெண்டனிட்டுச் சொல்கின்றேன் செகத்திற் புல்லே
நத்தியுண்கின் றவற்றினையா னாலுங்
கொல்லா
நல்நிறுவிப் பரகதியி னண்ணு வீரே.
(96)
கோளநாட்டி னிற்றனியாத் திரியும்
போதென்
கிளர்கனவில் வள்ளுவப்பேர்க் கிழவன் றோன்றிப்
பாரகத்தி லினிப்பிறகே மாட்டா யென்னப்
பகர்ந்தவுண்மை பொன்றுளதியான் பணியுந் தெய்வ
நோவிரந்திப் பிறப்பின்முத்தி யடைகின்
றோயோ
நினைத்தபடி கொலைமுழுது நீக்க வேண்டி
யீரமுட னூறுசெனம் மெடுக்கின் றாயோ
வெனக்கேட்டாற் றெரியுமென்ற னிச்சைப் பண்பே.
(97)
புல்லருந்தும் பசுமேட முயன்மீ தேனும்
பொருந்திரர்க்க மில்லாராய்ப் புலைக்கூத் தாமே
வல்லவர்க்க ராதியருங் கருணைச் செல்வ
மருவிடச்செய் வதினாகம் வந்திட் டாலு
நல்லதுதா னதுபுரியா தருமை யாய
நற்சொரூப சித்தியெய்தி ஞால மெல்லா
மல்லமனிற் சீரியனென் றிடப்பெற்
றாலு
மந்தமுத்தி யென்னளவும் சுத்தந் தானே.
(98)
ஆறுவகைச் சமயிகட்கும் பொதுவே யாகி
யயில்வேற்கைக் கவுமார
னபிமா னத்திற்
கூறுபட்டு நின்றபரங் குன்றின் கீழ்பாற்
கொடியனே னருகணுகிக் கூவி நின்று
மீறுதுக்கத் துடனாடொன்றழுத் தந்த
விபர
மெனக்கெனது தெய்வம்வி ளக்கிற் றன்பர்
னீறுபுனை தவனொருவன் றானும் வானு
நிலமகளும் பரிதியுமிந் நிசங்கண் டோரே.
(99)
தெய்வமரு மறைநெறியைத் தவத்தோர்
தம்மாற்
றிகழுலக நெறியைமன்னர் திரளா னாறாஞ்
செய்வதெனத் தெரியாதா ரெவரா னாலுஞ்
சிதடரேயெனப் பலத்தூல செப்பு மாற்றான்
மெய்வழக்க னெனச்சமய முழுதும் போற்ற
விளங்குமவன் முதற்குருவாம் வியன்பார் முற்றுங்
கைவசத்திற் கொள்ளுமவ னரசர் கோமான்
கழறுமிரு வருக்குமுயிர் கருணை யொன்றே.
(100)
நூற்பயன்
(கலி
விருத்தம்)
நானிலைச் சதகநூ னவிலச் செய்தது
பானிறக் கமலமேற் பழகுமங் கையோ
வானிடத் திருவ ரூட்மருப் பாலனோ
யானினா ரெனத்துணிந் திசைக்கொண்
ணாததே.
முற்றிற்று.
தெய்வமே துணை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக