வண்ணச்சரபம்
தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த
தண்டபாணி
அநுபூதி
காப்பு
(வெண்டளைக் கலி
விருத்தம்)
அண்டமா தவரந் தணர்க்கா ககமாந்
தண்டபா ணிதன தநுபூ தியை
விண்ட கணற வியன்றலத் துய்த்திடக்
கொண்ட கோலக் குருபதங் காவலே.
நூல்
மெய்த்தெய் வமலா துவெறுத் திகழல்
பொய்த்தெய் வமிலா மைபுலப் படுமுன்
னித்தெய் வமெனா தெனுமே ழைமையா
லத்தெய் வமசத் தெனவரா ததனனே.
(1)
எறிநீ ரெனவே வலிதிற் புணரென
பொறியா தியமங் கையர்போ கமுமுற
செறிமா தவசின் பயனென் றுதெரிந்
துறியாய் கரமால் புகழுன் னுதுமே.
(2)
சித்திக் கடலிற் றிரள்பே ரமுதே
முத்திச் சுகமென் றுணரா முனிவோ
ரெத்திக் கிலுளர் ரெனினும் பிழைதீர்
பத்தித் துறையிற் படியா தவரே.
(3)
நீசத் தனமுற் றுநிலத் தறவே
யாசற் றநலம் புரியா தவர்தாம்
பாசப் பிணிதீர் பதமெய் திடினுந்
தேசற் றழியுஞ் சிறுமா னிடரே.
(4)
புவியின் புறுமா றுபொதுப் பொருளைக்
கவிகொண் டுமிகழ்ந் துகடுஞ் சினமோ
டவிர்கின் றவெனா ருயிருக் கருளே
தவிசென் றுகொடுத் ததுசத் தியமே.
(5)
கொடுங்கோ லரசின் குடைநீ ழலிடைப்
படுங்கோ தறுமா றுபரிந் துழையர்
தொடுங்கோ கைவிரும் புநருள் றருளின்
றடுங்கோர் நமன்று ணையன னவரே.
(6)
சித்தேற் முயன்று திரும்ப ரும்வீட்
டித்தே கமோடே கலவிழைந் துளநா
னெத்தே வுமோரே பரமென் றுணரார்
தத்தே யுழல்கின் றசழக் கிலனே.
(7)
சிவனா தியர்செப் பியசொற் களெனக்
கவமா னமவிளைத் தலினஞ் சினன்மெய்
சவமா விழுசா வறுசித் தரினத்
தெவனே னுமேனோ டிசைகின் றிலனே.
(8)
பசுவுஞ் சிசுவும் பலர்கோ றலினிவ்
விசுவந் துயரெய் திடாவோ களைவான்
முசுகுந் தனமுதற் சிலர்போல் பவனன்
றசுவந் திகழ்சென் னியரென் னவனே.
(9)
கனவிற் றிகழுங் கடவுட் டிரளென
னனவிற் பயிலத் தகுநாள் வரினே
பனவப் பெருமா னுவல்ப ரழிமறைக்
கனகச் சுகமெய் துமலர் திலையே.
(10)
மறந்தோய் கொலைமுற் றுமறுத் துலவர்
வறந்தோ யருளம் புவிமே னிறுவர்
நிறந்தோர் பலநீ ணடுவாச் செயலாற்
சிறந்தோ ரெனினும் பிழைதீர்ந் திலரே.
(11)
மனமாம் வெளியூ டுவரும் பலதே
வினமா வனவும் பொயியம் பினவென்
றெனதா ருயிரெண் ணியிடைந் திடவுந்
தினமோர் வினைநின் றுதியக் கியதே.
(12)
வடலூ ரனமுதற் பலர்வந் தொளிர்க
கடல்சூழ் புவியின் றலைகண் டிடினே
யடல்கூ ரருளெய் தியதா மகிழந்
திடலுண் டொரியம் புரையென் மனமே.
(13)
நாமக கடலா டைகொண்ஞா லமுழுச்
சேமப் படுமா றுதினந் தினநன்
னேமத் திடைநிற் பவர்தம் பகையும்
காமக் கனலிற் கடிதொன் றிலையே.
(14)
சினமோர் முனிசெய் தவமா யதுபோன்
றெனதூ டெழுகா மமெலா மிறைவன்
றனதா டலகளா குமெனற் றரையோர்
மனவே தனைதீர் வகைசெய் குவனே.
(15)
துதிபெற் றருணல் கிருதொல் குணமெய்ப்
பதிகெட் டுறுநாள் படியிற் கடையோர்
கதியிச் சைகொள்வரார் கலியப் பயலஞ்
சதியற் புதம விழகுவா ரழியரே.
(16)
சிவமா னளினத் தினனா தியாமிக்
கவமா னமடைந் தனரா தலின்மற
றுவமா னமிலா நலமுய்த் திடமெய்த்
தவமா னதமுந் தயையுந் துணையே.
(17)
நீசர்க் குவகைக் கடனே ரவிடும்
பாசத் துறுசெம் பதுமத் தினளை
யேசத் தகுபோ றிவெய்தி னனமால்
கூசத் தகையுந் திறல்கொண் டிலனே.
(18)
கொலையும் புலையுங் குடியோ டவேலுந்
தலைவென் றிகொள்சற் குருதே சிகனே
மலைமங் கைமணா ளனுமா தவனுங்
கலைமின் புணர்காந் தனுமா குவனே.
(19)
எக்கோ லமுமெய் தவலா னொருவர்
சிக்கோ லமதே யியல்பென் றிகலும்
பொய்கோ லமதத் தினர்போர் கெடுமோர்
மெய்க்கோ லமிடுந் தகைமே வினனே.
(20)
என்னோ டியல்வர் ரெழுமூ வரெனர்
முன்னோர் கனவூ டுமொழிந் தபிரா
னன்னோ புலையச் செயன்ஞா யமதோ
மின்னோ வெனுமெல் லிடைவெள் ளனமே.
(21)
சந்தக் கவிபெய் திடுதா ரையிலா
மந்தப் புலவோ ருமவாம் பலதோ
யிந்தப் புவிமீ தெனையாள் கிலனே
வந்தத் திறைநல் லறமில் லவனே.
(22)
அருடந் தெனையா ளவலா னறியக்
கருடப் பறவைக் கவினா ரிறகென
னொருசென் னியலுற் றதுவீ லிமுனாண்
மருவுந் தலைமால் செயல்வந் துறவே.
(23)
மத்திப் பெருவாழ் விலமை ததுமாங்
கொத்திப் பறவைக் கொடியுந் தருகோ
னெத்திக் கிலுளா ருமிறைஞ் சிடவெண்
சித்தித் திறலிற் சிறிதீ கிலனே.
(24)
மயில்வா கனமுங் கொடிவா ரணமோ
டயில்வே லுமடைந் தறிகூர் தவனே
கயிலா யமுளார் தருகந் தனெனப்
பயில்வார் நிலைபா ரினரோர் வரிதே.
(25)
ஆமே டமுதற் பகரா ருயிர்கொண்
றேமே னிவளர்ப் பவரின் றியற்ப
பூமேல் விளையாடல் செய்புண் ணியரே
மாமே ருவளைத் தபிரான் மகரே.
(26)
கொல்வார் குடையிற் கொதிநீ ருலகம்
பலவா தனைபட் டுறுலா னினும்வீ
டொல்வான் முயல்புன றவர னமனக்
கல்வாய் கமழா துகுகன் கழலே.
(27)
பிணியைக் கலியைப் பிழையைப் பெரிதுய்த்
தணிமிக் கதவாய் கொலநீ தியனே
விணிலுற் றபிரா னெனின்மெய்க் கதியோ
டெணில்சித் தியுமில் லனசொல் லளவே.
(28)
எழுமா தவர்பத் தினிமார் நிறையும்
பழுதே துமிலா துயர்பண் பினவேன்
முழுநீ றணிவேன் மனமுன் னியவர்
றொழுகார் வமிவொண் புவியெய் துகவே.
(29)
கோமா மிசமுன் பவர்புன் குடையில்
பூமா துபுலம் பலர்க்க ருதாத
தீமா னிடரைச் சிறிதுந் தழுவார்
தாமால் கலைதங் கியமா தவரே.
(30)
அன்னைக் குயரவர் குமருட் பெருமான்
முன்னைச் சனனங் கணமொழிந் ததினும்
பொன்னைப் பெரிதென் றுணர்புல் லனிலென்
றன்னைத் துயர்செய் கைதகர் முறையே.
(31)
வீரம் பெருகார் பலர்வென் றிபெறச்
சீரன் றருள்செய் துளதெய வமிநாள்
கூரம் பனையார் சிலர்குன் றிடமிக
கீரந் தவிர்நிந் தனையீந் ததுவே.
(32)
நெஞ்சார் நெடும்பி ழையுஞ் செயுநா
னஞ்சா தருளாண் மைபெறக் கருதிச்
சஞ்சார் மொழிந்ததொ ரதலத் துறைதற்
கெஞ்சார் வுணர்வீந் தபிரா னுள்ளே.
(33)
கயிலா யவைகுந் தமுமோர் கனவென்
றயிலவே ளருளா லறிவுற் றவெனுட்
குயினோ மொழியார் குயமுங் கொலையே
பயில்வார் பகையும் பகலொத் தனவே.
(34)
இகலோ கரிடர்ப் பிணிதீர் தரவே
பகலோ டிரவுந் துயரப் படுநா
னகலோர் வெறியா மிறையன் பிலர்வாய்
நகலோ ரதலினைத் தலுமெய் தினனே.
(35)
ஆயுந் தமிழஞ் சுகநீ யெனவன்
றேயுஞ் சொலெனோ டினிதோ தினனே
தோயுங் கடவுட் டொகையென் றுணர்நா
னோயுஞ் சிறிதெய் திநுடங் கினனே.
(36)
தமிழா சைதனிற் சிவன்மான் முதலோ
ரமிழ்கா லமடைந் தவர்பே றுவிழைந்
திமிழ்நீர் புனைபா ரிலிடைந் துளநா
னுமிழ்வா ரையொறுக் கிலுவப் பவனே.
(37)
நூற்பயன்
தேளாகி வந்துந் தெளிவுணர்த்துந்
தெய்வத்தாற்
றாளாண்மை யொன்றுத லைக்கொண்டேன்
– வாளா
வுருச்செபித்து நாட்கழித்தற் குள்ளதா
னாருந்
திருச்செயலே மேலெனத் தேர்ந்தே.
(38)
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக