வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த
குருமுதற்
பாசுரம்
காப்பு
குருமுதற் பாசுரங் கூறுமீ ராறா
வொருமுகத்தோன் சொல்லிவைத்த உண்மை
– வருமுளத்தார்
தந்தாட் பொடிசுமப்போர் தாளடிமை
யாகுமவர்
செந்தா ளெனது சிரம்.
நூல்
திருமலியப் பூவுலகிற் றேக மெடுத்து
வருமவர்க்கு மாதிகுரு வந்து – தருமமுற்றுஞ்
சொன்ன பொழுதிற் றுலங்குஞ் சுருதிகளு
மின்ன பயன்குறித்த தே.
(1)
குருவென்ற சொல்லைக் குறியாத மாந்த
குருவென் றெடுத்தபல னுண்டோ – சருவ
நலமுந் தரப்பெறலே நல்லுயிரின் றன்மை
குலமிழிந்த தென்றுமுன்னூற் கோள்.
(2)
சற்குருவைத் தேடித் தயங்குகின்ற சத்தியமே
நற்குரவ னாக்குவிக்கு நாட்டமாஞ்
– சொற்குறிக
ளெல்லாமொன் றன்றி யிலையென் றுணர்ந்துமகிழ்
வல்லாரும் போற்று வது.
(3)
சிற்றறிவு போதகனாஞ் சேனையுண்ட போறிவென்
முற்றறிவர் நின்ற முழுமுதலும்
- வெற்றறிவு
காணா வடிவமொன்று காட்டிடினே காதலறும்
வீணா குருபாத மே.
(4)
ஒருபாத முங்கருதா தூருக் குழைப்போர்
குருபாத மேகதியாக் கொள்ளா – ரிருபாத
மெக்குருவுங் கொள்ளு மியல்பறியா
ரீடழிக்கும்
பொய்க்குரவன் றாள்பணிவார் போய்.
(5)
தன்னை வணங்கெனுஞ்சொற் றாரானேற்
சற்குருவைய
பின்னை யெவர்புகழ்வார் பேதையீர்
– முன்னை
விதிநலத்தாற் காண்பதிது மெய்சொன்னோ
மேனாட்
பதியவனே பாரறிவிப் பார்.
(6)
வந்தாள் குரவன் மனிதனே யாயினுமென்
சிந்தா யனைத்துமவன் செல்வமே – யெந்தா
யெனறேத்தி ககரு திலினாகித் தோன்றுமொன்று
சாத்திரங்கள் கூறலித்தே தான்.
(7)
எந்த வடிவு மெடுக்கும் பொருள்தனை
மைந்தனெனக் காணில் வலிபோமோ – தந்த
மினமாகத் தோன்ற லெதற்கு நலமே
மனமா வடங்கலற்ப மா.
(8)
கற்பனையிற் கள்ளூரக் காண்ப திழிவென்னு
மற்ப மதியா லருட்குரவன் – பொற்பிருக்கச்
சிற்பிகவி நூன்மயக்கிற் சென்றிடினுஞ்
செப்பிடினு
நிற்பவர்க்குத் தோன்று நிசம்.
(9)
உலகந் தொழுங்குரவ னுண்டாகு நாளிற்
கலகந் தவிர்ந்து கருணைத் – திலகார
யெச்சமையத் தோருக்கு மிதயத் துயரொழிந்து
பொச்சமறுத் தாவார் பொது.
(10)
ஊனுண்ண லொன்றே யுயர்தீ தெனவுரைப்போன்
றானுண்மை வாழ்வு தருங்குருவா –
மானுவதிங்
கொன்றுமில்லை யாவுமொக்கு மோங்கார
முங்கடந்து
நின்றுவிளை யாடலவ னே.
(11)
கல்லார் குரவன் கழல்கருதிற் கற்றாரே
யல்லார கற்றாலும் வானறே – யெல்லா
மொருகுரவன் றன்செயலென் றுள்ளதுன்னி
நின்றால்
வருகுவதே வேண்டு வது.
(12)
தனி
வெண்பா
தெய்வக் குருவுஞ்
செயகுருவுஞ் செய்குருவுஞ்
சைவக் குருவுந் தவகுருவுங்
– முயவ
தறியார்க் குருவு
மனந்தங் குருவுங்
குறியாகக் கொண்ட
குரு.
குருமுதற்
பாசுரமென்னு நூன் முற்றிற்று.
குருவே
துணை.
குருபாதமே
கதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக