வெள்ளி, 25 செப்டம்பர், 2026

பதிக உந்தி

 

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த

பதிக உந்தி

காப்பு

அதிக மகிமையின தாகுமெனத் தக்க

பதிகவுந்தி நூலொன்று பாடத் – துதிகமழுஞ்

செந்தூர்க் கடலிற் றிகழ்வே லெறிந்துமகிழ்

சிந்தூர வாய்மலர்ந்த தே.

 

நூல்

தெய்வமொன் றென்னத் தெளிந்ததைச் சிந்தனை

செய்வதே மிக்கதென் றுந்தீபற.

செல்வத்தின் மேலதென் றுந்தீபற.

(1)

பெற்றா ரெனப்பேறு பெற்றும் பிறப்பில்வந்

துற்றா ரநேகரென் றுந்தீபற.

            வூழ்வலி யாமதென் றுந்தீபற.

(2)

ஞானமுற் றோரெலா நம்பரன் தன்னுண

வானதொன் றுண்மையென் றுந்தீபற.

            வவனவ ராவனென் றுந்தீபற.

(3)

பத்தியைச் சற்றும் பழுதென்று கூறாத

புத்தியோர் முத்தரென் றுந்தீபற.

            போதாந்த மெய்வரென் றுந்தீபற.

(4)

நாசிச் சரத்தை நடத்துங் கடவுளை

யாசிக்கை ஞானமென் றுந்தீபற.

            வறியார்கண் மூடரென் றுந்தீபற.

(5)

கொல்லாச் சமையக் குருநாதன் சொல்லையே

நல்லார் மதிப்பரென் றுந்தீபற.

            நரதேவ ராவரென் றுந்தீபற.

(6)

குக்கல்போ னம்பிக் குரங்குபோற் பற்றுவோர்

மிக்கமே லோர்களென் றுந்தீபற.

            வெறுப்புந் தவிர்வரென் றுந்தீபற.

(7)

ஒன்றான தேவைப் பலவென் றுரைப்பதாற்

குன்றாது மேன்மையென் றுந்தீபற.

            குருசொல்வ துண்மையென் றுந்தீபற.

(8)

ஓங்கார வித்தா மொருவனைத் தேறும்முன்

னீங்காது சோகமென் றுந்தீபற.

            நிசரூப மாமதென் றுந்தீபற.

(9)

சச்சிதா  னந்தச் சமரசச் செல்வமே

யுச்சிதர் காரமென் றுந்தீபற.

            வுண்மையி லுண்மையென் றுந்தீபற.

(10)

எல்லாத் தொழிலு மொருவ னியற்றிடும்

வல்லாண்மை மேலாமென் றுந்தீபற.

மனிதர்க்கு மெய்துமென் றுந்தீபற.

 

நூற்பயன்

(கலி விருத்தம்)

பதிக வுந்தி பதினொரு பாடலு

நிதியெ னக்கொடு நெஞ்சினுள் வைத்தவர்

சதியொ ழிந்திடத் தற்பரன் றன்னையே

துதிபு ரிந்து சுகம்பெறு வார்களே.

பதிக உந்தி நூல் முற்றிற்று.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக