வண்ணச்சரபம்
தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த
கௌமார
லகரி
காப்பு
(நேரிசை
வெண்பா)
வண்டமிழோர் போற்றுகவு மார லகிரிநன்னூற்
றொண்டர்குழாம் வேண்டற் றுணையாமே
– விண்டலமும்
பாதலமும் பூதலமும் பல்லண்ட மும்படைத்த
காதலவன் செம்பொற் கழல்.
நூல்
(எழுசீர்
கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
பரிதி யும்பனி மதியும் வானோடு பஞ்ச பூதமு மியாவையுந்
தெரிய வைத்துள தன்றி மற்றொரு தெய்வம் வேறிலை யென்பவ
ரெரியெ னப்படா கோப முங்கட லெனமி குத்தெழு காமமும்
பெரிது டைத்தவ தேனு மப்பொருள் பெற்ற பாலர் களாவரே.
(1)
இந்த வாறென வோத ருந்துய ரெய்தி நெஞ்ச மிடைந்தார்
லெந்த வேளையு முள்ள மெய்ப்பொரு ளேக மென்ன வுணர்ந்தபின்
முந்த நம்பிய நாம ரூப முனிக்கு லத்துவி யாசனென்
றந்த நாளி லிருந்தி றந்த வனால்வி ளங்கிய தானதே.
(2)
சருவ வல்ல பமும்பொ ருந்திய தத்துவப் பொருளா கியவர்
ழொருவ னன்றி யிறந்தி டாத வருண்டெ னச்சொலும் வண்டரோ
டுருவ நாம முரைத்து ழன்ற தொழிந்த துண்மை யுதித்ததோர்
பருவ முற்றது கெருவ மற்றது பாச நாசமும் வந்ததே.
(3)
எங்கனும் பாவத் துநின்றதெ னப்ப லோரு மியம்பல் கேட
டிங்க ருந்துய ருற்று நாடு மெனக்கருட் செயலில் லையேற்
றுங்க வேழ மெனக்கு லாவு சுபாவ வாதிக ளாதியோர்
பொங்க ளிக்கட லிற்கு ளித்துடல் புளக மாவது புதுமையோ.
(4)
கொலையெ னப்பகர் தீய தன்மை குலைந்தொ ழிந்திருள் குன்றலாற்
புலையு மற்றுல கெங்கு மிக்குயர் புனித மேவவி யற்றுவோன்
றலைமை பெற்றுள தொண்ட னென்பது சாத மென்றுரை தந்திடார்
கலையு ணர்ச்சிய னைத்தும் வம்பெனல் கண்டு நெஞ்சு களித்ததே.
(5)
தொண்ட ரியாவரு மைந்த ரென்று சொலத்து லங்கிய தூயகோ
னண்ட பிண்ட மனைத்து முள்ளவ னாகி நின்ற தறிந்திலா
யண்டர் பற்பல தெய்வ முண்டென வாத மிட்டு வருந்துமால்
கொண்டல் போலுத வுங்கை கொண்ட குமார னாலறு மென்பதே.
(6)
எவ்வ கைப்படு சீவ ராசியு மெம்பி ரான்மக வென்னுநீர்
தெவ்வ ருக்கொரு தெய்வ முண்டெனல் செப்பு வார்கள தாகுமோ
செவ்வ கத்தின ராகி நின்றுயிர் செற்றி டாதுட றின்றிடா
தவ்வ வர்க்க வாத மமினத் தினராம் வாக்குள தாகுமே.
(7)
முன்ன வன்சி சுவல்ல வென்று மொழிந்தெ திர்ப்பவர் தாமெலா
மின்ன லங்கட லிற்கு ளிப்ப வியற்றி நிற்பவ னியாவனோ
வன்ன வன்புவி யெங்க ணுஞ்சு டர்மெனத் திகழ வானெனா
வென்ன கந்தனி லுற்று ணர்த்திய தில்லை யென்பவ ரீனரே.
(8)
அவன சைந்திடி னன்றி யோரணு வசைவ தின்றென லாமெனப்
புவன முற்று மொழிந்து மப்பொருள் பொய்யெ னச்சிலர் புகழ்வதேன்
கபமு நெஞ்ச மறத்து றந்தருள் கண்டு கொண்டு களிக்கவே
தவமு யன்றுடன் மெலிய வன்பு தழைத்த பேருணர் வாளரே.
(9)
மானி டத்தொகை முற்று நம்பி வணங்கி டச்செயல் செய்திடா
னானி றைக்கொரு மைந்த னென்று நவின்றி ருந்தமை நாடுவார்
கானி லத்தமை யச்செலா துழல கத்த பக்கடை தன்னைமேல்
வானி டைப்புக வல்லமா வென்னை மானு மென்கை வழக்கதே.
(10)
வேறு
(கலி
விருத்தம்)
விற்பனா னைவரும் விரும்ப மேவி
தற்பரன் றனதுமெய்த் தனையன் றோன்றிடி
லற்பர ரற்பல வகைத்தாகி மீறிய
பற்பல சமையமும் பாழ தாகுமே.
(11)
வல்வழக் குடையவர் வழுத்தும் பான்மைசேர்
செல்வனுக் குரியமெய்ச் செயவந் தீண்டுறிற்
கொல்வதூ னருந்தனோ கொடியசெய் கையோ
ரெல்வரிற் கெடும்புழு வினத்தைப்
போல்வரே.
(12)
சாற்றுமெய்ச் சமையமுந் தன்ன தாகுமென
றேற்றுவந் தருட்செயு மிறைவன் செய்தனைக்
கூற்று நாய்நரி நிகர்கொள்கை யோர்குலம்
போற்றுத லின்றியே பொருது மாளுமே.
(13)
தூயதோர் பொருடருஞ் சுதனென் றோதிடற்
காயமெய்த் தொண்டனோ டகிலத் தோரெலாம்
போயடற் புரியினும் பொருது கொன்றுயி
ரீயவும் வல்லவ னென்ன லாகுமே.
(14)
குஞ்சரம் பலபல கோடி சூழினும்
விஞ்சடன் மடங்கலை வெற்றிடா மைபோற்
செஞ்சாண் டருமொரு தெய்வச் சேய்தனை
வெஞ்சமர்ப் படைகளும் வென்றி டாதரோ.
(15)
அவ்வவர் குரவனை யமலன் சேயெனல்
பௌவநீர்ப் புவியினர் பான்மை யாகுமா
லெவ்வகைச் சமையரு மிறைஞ்சத் தோன்றுவோ
னெவ்வருங் கடவுளா ருடைய பாலனே.
(16)
தெய்வமொன் றடியவர் சேர்க்கை யொன்றலான்
மெய்வழக் குடையது வேறொன் றுள்ளதோ
பொய்வலிச் சமையநூற் புகழ்ச்சி யாவையும்
பெய்வளைக் குருகுவோர் பேசற் காகுமே.
(17)
நிலைப்பரி துடலென நினைந்து நீச்சலுந்
தலைப்படு தவஞ்செயுந் தகுதி வேண்டிடார்
தொலைப்படப் பொரும்விழிக் கோதை மார்களால்
வலைப்படுங் கயலென வருந்தற் காவரே.
(18)
இன்னலோ ருயிர்தனக் கியற்றொ னாதெனு
நன்னலந் தெரிந்துபுன் னாற்றந் துய்த்திடா
ரென்னபே ரெவ்வுரு வியம்பி யெய்வகைச்
சின்னமுற் றுலவினுந் தீய ரல்லரே.
(19)
ஐவகைப் பூதமு மமைத்துக் காக்குமெய்த்
தெய்வமு மானிடத் திரணமுற் றூனுனர்
துய்வது புரிவதற் குருகு வோனுமே
பொய்வழக் ககன்றவர் போற்றற் காகுமே.
(20)
வேறு
(கலித்துறை)
முந்த மாதவம் புரிந்துபே
றடைந்து பின்முதலா
மந்த வாரியிற் கலந்தவ
ரொருவ ரானாலு
மிந்த மானிட முழுமையும் புனித முற்றிருப்பர்
னொந்த வாவு டன்முயன்
றிலனி லுள்நேரமே.
(21)
சருகு காய்கனி முதலிய திருக்க வுந்மதரார்
விருக மாதிய தருந்திடக்
கண்டு ளம்வெதும்பி
முருகு தோய்தரு கிழவ
னேர்முத லொடுமொழிந்து
பருக லேகொ ளப்புரிந்
திடாத்தவ ரெலாம்பதரே.
(22)
எல்ல வர்க்கநன் றியற்றிட
விரும்பி நெஞ்சிடைவோன்
வல்ல பேறு பெற்றவப்
புளுதிறப் பினுமாண்பே
யல்ல தீயவ னளவிலா
வலிமை பெற்றாருஞ்
சொல்ல ருங்க தியடை
யினுமிழி வென்றுணிவே.
(23)
தனித்த ருந்துவோன்
சட்சுவைப் பெருக்க முந்தாழவே
யினித்த சொல்லுடன்
பகிர்ந்தகூ ழேற்ற மேயெனலான்
மனித்த னேயெனத் திரிதரு
ஞானி யின்வலியோன்
றொனித்த சீருடைக்
கிரியை யோனெனப் புவிசொலுமே.
(24)
இறந்து ளார்சில நாட்க
ழித்தெழப் புரிந்துவக்குந்
திறங்கொள் சீரிய
ராயினு மோரு யிர்செகுத்துண்
டுறவகு வாரெ னிற்தீ
யவர்தா மெனவரைத்துப்
பிறங்கு நாவி னாடித்
துகளென முடிபெறுமே.
(25)
வாழை யங்கனி பான றும்பா கென வழங்குங்
கோழை தீர்த மிழ்ப்பா
வராயி னுங்குறிக்கு
மேழை பங்கு டைபா
னடிச்சே கரமிலரே
லூழை வென்றபே றடைவுறார்
விருக மோடொப்பே.
(26)
மாத வப்பயன் குறித்தவ
ரனைவ ரும்வல்லோன்
பாத பங்கய மடைப வர்தா
மெனப்பகரும்
போத முற்றவர் சித்தியு
முத்தி யும்பொருந்தி
யேத மற்ற தோடது வெனக்கலப்
பதிங்கியல்பே.
(27)
மின்னும் வாளெயிற்
றாவினுங் கொடிய தாவிளங்கும்
பொன்னு ளார்தமைப்
புவியி னர்போற் றலேபோல
மன்னு சீரருட் பேறு
டையவர் தமைவையந்
துன்னு மால றத்துறந்
தவர்புகழ் வதுதொழிலே.
(28)
அந்த மாதியு நடுவு
மற்றிருந் தவனளித்த
மைந்த னானெ னக்கரு
திடுமா தவமணியோன்
கறிந்த மாநில முழுமையு
மொளிரு நாளென்றோ
வந்த வேளை யின்வலது
களிக்கு மோமனமே.
(29)
பொய்யா பற்பல ரிறைதரும்
புதல்வர் நாமென்று
வைய்ய முற்றவர் மயங்கி
டப்பரப் பியமாயை
மெய்ய னுற்றிடும் வேளை யிற்றொலை
வதுவிளம்பில்
வெய்யன் கிழக்கு தித்திட விருள்கெ
டும்விதமே.
(30)
வேறு
(கலி
விருத்தம்)
ஈகை யின்றி யிருப்பவர்
வாயிலிற்
போகை கொண்டு புலம்பிட
லாகுமோ
வோகை முற்று முதவு
மொருவனே
சாகை யற்ற தகையுணர்ந்
தோர்களே.
(31)
கள்ள றாமலர்க் கார்குழற்
பேதையார்
வள்ள மாமுலை மால்கொள
லாகுமோ
வுள்ள மொன்றிடத்
தோன்றிய வுண்மைகண்
டெள்ள றீர்கல மெய்த்தநிற்
போர்களே.
(32)
கொற்ற மேவு குமாரமென்
றோதுபே
ருற்ற நாத னுலகில்வந்
துண்மைநூல்
கற்ற வாணர் களிப்புறு
மாடல்கூ
ரற்ற மென்னகத் தாகுல
நீங்குமே.
(33)
வில்லும் வாளும்
விளங்குகடல் பேதைமார்ப்
புல்லுமா லுளம்புண்
படும்புன் மையோர்க்
கல்லுடன் பகலுந்
தவிரண் ணல்சீர்ச்
கொல்லு நூலின் சுவைப்பொருள்
கைக்குமே.
(34)
மைந்த நாளு மிருப்பவ
னீன்றதோர்
மைந்த னென்று வருந்தவ
மாமணி
சொந்த மாமெனச் சொல்பவ
ரியாவரு
முந்த வந்து முடிந்ததென்
பார்களே.
(35)
தன்ம மேவடி வாகி
யதற்ப
ரன்பன் மித்ததும்
பரந்தவ னாமெனா
வன்ம நெஞ்சர் வகுத்தபன்
னூல்களுங்
கன்ம மென்ற கடற்றிரை
யாகுமே.
(36)
மனிதர் கொண்ட மதத்தின்
வரம்பழிந்
தினிய தெய்வமொன்
றென்று வாதலாற்
றொனிமிகும் புகழ்த்தொண்
டானத் தொல்புவி
வனிதை கோனெனல் வல்லவர்
கொள்கையே.
(37)
வான மீனிகர் மாதவர்
பற்பவ
ரீன மிஞ்ச வியற்றிய
பன்மதங்
கோன தன்னகு மாரனைக்
கண்டகான்
மான மின்றி வணங்கிநின்
றுய்யுமே.
(38)
துங்க மேவுமெய்த்
தொண்டனைக் கண்டகாற்
றங்கள் புன்மைச்சமை
யத்தால் வாதம்
புங்க மோதிப் பொருந்தொழிற்
பூரியர்
ரங்க முற்று மலகை
யருந்துமே.
(39)
கொன்ற ருந்துபுன்
கொள்கையைக் கைவிடா
வன்றகைப் புன்மதத்
தினர்மார் பில்வேல்
சென்ற னைந்திடச்
செம்புனற் சிந்துசெய்
குன்ற மன்னவற் கும்பிடுங்
கைகளே.
(40)
வேறு
ஏறு மேடமொத் திலங்கு
பேருடற்
கூறு கொள்பவர் குலைய
மார்பகங்
கீறும் வேலுடைக்
கிழவ னாமகப்
பேறு ளார்தமைப் பெரிது
போற்றலே.
(41)
கொன்ற தோருயிர் கொன்று
தங்களைத்
தின்ற லுண்டெனத்
தோகி லாதவர்
மன்ற மேற்படு வழக்க
ராயினும்
புன்ற கைக்கழு கனைய
புலவரே.
(42)
தைய லான மலர்ச்சரன்
மேல்விழுந்
துய்ய வோர்மொழி யுரையென்
பாரினுங்
கையுவூ ணுகாக சடாதாழ்
வென்ற
கைய மில்லையென் றறைய
லாகுமே.
(43)
பூசை செய்யவும் பொருந்து
மன்னமே
லாசை யூணைவைத் தருந்தும்
பாதக
ரோசை வாய்க்கா ததுனவிற்
பூச்சியர்
மாசை யேபல வதளி கொள்வரே.
(44)
பொருவி லாதவன் புதல்வ
னாமவன்
றிருவிழா வுயிர்செ
குக்குந் தீயவர்
கருவி கோவெனக் கதறச்
செம்புல
லருவி காண்பதென்
றறைய லாகுமே.
(45)
கொலையெ லாங்கெடக்
குவலை யந்தனி
லுலைவிலா நலமு ஞற்று
முத்தமன்
றலைவ னார்தருந் தனைய
னாமெனிற்
கலையெ லார்மனங் கனன்றி
டாதரோ.
(46)
பூர ணப்பொருட் புதல்வ
னாவருங்
கார ணத்தனி கடவு
ளாமவன்
சீர ணப்படாத் திறமை
யாளனென்
றார ணத்தொகை யனைத்தும்
போற்றுமே.
(47)
இலகு போரு ளிறைவன்
சேயென
வுலகின் மேவிடு மொருவன்
வலதிங்
கலகி லாமத் தவரும்
போல்விழுங்
கலக மாக்கடல் கடப்பதி
யாவரே.
(48)
அவஞ்செ யர்நல் மறையு
நூல்வழித்
தவஞ்செய் வார்குலந்
தனக்குட் சீரிய
நவஞ்செய் வானறனை
நாடி னல்லது
பவஞ்செ யாப்பெரும்
பலன்கிட் டாதரோ.
(49)
நம்பு வார்மன நாட்ட
நல்கிடும்
மம்பு ராசி யொத்தவிரு
மெய்ப்பொருள்
வெம்பு தீவினை விலக்கு
மென்றொரு
தெம்பு வந்தெனைச்
சேர்ந்த தென்கொலே.
(50)
வேறு
(கலித்துறை)
எள்ளு மவர்கு மிரங்கு
மியர் புடையார்
கொள்ளு நலத்தைக்
குறித்து ணர்ந்து கூறுங்கால்
விள்ளு வதற்க டங்கா
மெய்ப்புகழ்ச் சிகொண்டபிரான்
கள்ளு லவுசெம் பொற்க
மலமலர்த் தாளாமே.
(51)
ஆக முடனே யருவு டைய
னாகிநிற்கு
மேக னொரு வநிலை யென்று
ரைப்போர்க்கும்
போக மருத்தும் போதுக்
கருணை தோயுமவன்
றாக முடன்வ ணங்கத்
தக்கவர்க் கென்செய்வானே.
(52)
நாயருந் தலுண்ணு
நானொ ருவனம் பேருமான
சேயவ னென்றெண் ணித்தி
ரிந்தாற் சிறியவரும்
பேய னெனவே பெரிதி
கழ்ந்து கல்லெறிந்து
தீய துயரக் கடலிற்
சென்றமிழ் செய்வாரே.
(53)
நந்தா முதல்வன் மகனா
னேயென் றோதிநின்று
வந்தார் மனக்க வலைமாற்
றியரு ளாதான
சிந்தா குலந்த விர்க்குஞ்
சீரருட் போறுற்றாலுங்
கொந்தார் குழலா ளகுல
மகுடம் பூண்டதொப்பே.
(54)
வீரம் பெருங்க ருணைமெய்
யருட்சீ ரிம்மூன்றுஞ்
சார விளங்கு நதவத்
தோனொ ருவனன்றி
யீர முடையார்க் கிரங்கி
யருத ளம்பெருமான்
சீரடி யார்போற் றிசைக்குஞ்
சேய்வே றிலையென்றே.
(55)
தன்பா டுபெரர்க்
குந்தவத் தோனடி மையென்பது
மன்பா லுலகத் தளவி
றந்தோர் வீடுபுகு
மின்பாங் கியற்று
மியல்பு டையான் மைந்தனென்று
முன்பா கிநின்ற முதல
வன்கு றிப்பானே.
(56)
கல்விக் கடலைக் கடந்
தோருக் கல்லாது
நல்வி றபன மாய்நம்
பெருமா னன்புலார்
தல்விட் டநெஞ்சே
ரடவ தார மானவர்க்கே
பல்வித் தைசெய் துபடி
புரக்கும் பண்புறுமே.
(57)
ஈனத் தொழிலோர்க்
கிரங்க ரவியல் புடையார்
வானத் தலைமை வழங்கு
தற்கும் வல்லாரே
ஞானப் புலமை நலமு
ணர்ந்த நாவல்லவர்
கானக் களிறுங் கலங்குங்
கவியினரே.
(58)
பொல்ல ரருற விற்பு
கழேவி ரும்பிநிற்கு
நல்ல ராபகை யுநல
மாகு மென்றுணர்ந்தோர்
கல்லா ரெனினுங் கடைக்கு
லத்தோ ரானாலும்
வல்லா ரேயென் கைவ
ழக்கென் றுணர்வரிதே.
(59)
பொய்பே றுபெற்றுப்
புவிபு கழவ ரழவதினு
மெய்ப்பே றுவேண்டி
மிகவ ருந்த னன்றாமா
லெப்பே றுபெற்றோ
ரெனினு மிகத லத்தேரா
துய்ப்பே தந்திரக்
கத்துணி வோனிற் றாழ்ந்தவரே.
(60)
வேறு
(கலி
விருத்தம்)
செல்லமுற் றுதவிடுந்
திருவருட் கடவுளார்
பல்வகைச் சமையமும்
பற்றிநின் றவரெனார்
சொல்வழித் துயருறுந்
துட்டர்தங் குலமெலாம்
வல்வழக் கினர்கள்
பால்வலி யிழந்துழலுமே.
(61)
மாடையங் கலசநேர்
வன்முலைத் துணையினர்
ராடையுட் குறியையே
யநுதினங் கருதுநெஞ்
சோடைவனக் களிறுபோ
லுறுதிகொண் டுயர்தவந்
தேடையந் தவிர்நலந்
தெளிவதொன் றரியதே.
(62)
மெய்யருட் பெற்றே
விழையுநல் விற்குளர்
ரையமென் றொளிரும்
வல்லகையோ டமர்புரிந்
துய்யநல் லுறுதிகொண்
டுயர்தவம் பெரிதெனச்
செய்யமுற் பவமதிற்
செயுநலந் துணையரோ.
(63)
தேகமே யுயிரெனுஞ்
சிதடார் யரிவைமார்
போகமே யினியதெனப்
புகல்பவர்க் கெளிதோ
வேகமெய்ப் பொருள்லா
லிலையெனத் தெளிதருஞ்
சேகரத் தவர்பெறுந்
திருவருட் புதுமையே.
(64)
வஞ்சகப் புலையார்
மடையருக் கருண்மதக்
குஞ்சரக் களிறுநேர்
குரவன் வந்தருளுமோ
சஞ்சலப் பிணியறத்
தவமுயன் றவனெழிற்
செஞ்சரண் புனைதருஞ்
சிரவனப் பினர்களே.
(65)
பலவகைப் பிறவியும்
பழுதெனத் தெறிதரும்
புலவருக் கருடரும்
புனிதனைப் பணிகுவோர்
குலவழக் குரைசெயிற்
கொலையுடன் புலையுமற்
றலவனிற் றிகழ்முகத்
தவர்மயக் கொழிவதே.
(66)
கஞ்சமா மலரெனுங்
கவின்மகத் தரிவைமார்
பஞ்சடிச் சுவடுறும்
பதகரிற் கொடியரோ
குஞ்சரக் களிறுநேர் குருபதத் துணையையே
நெஞ்சகங் கருதுநன்
னிலைபெறுந் தவர்களே.
(67)
ஊனருந் தாதநன் றுடையவர்க்
கடிமையென
றீனமற் றுறைசெய்வா
ரெவர்கொலோ வறிகிலே
னானவர்க் கடிமையர்
நலமுறக் கருதினேன்
வானகத் தொருபிரான்
மகவெனக் கவர்களே.
(68)
குஞ்சரம் பிளிறுமற்
குளிர்பொழிற் கிரிதொறுஞ்
சஞ்சரித் திடுபெருந்
தவர்குலம் பழுதுபட்
டெஞ்சலுற் றழியுநா
ளிறைகொடுங் கோலதாற்
பஞ்சமுற் றனைவரும்
படியினிற் சுழல்வரே.
(69)
அடியரா மவரெலா மருளெனுங்
கடலினிற்
படிவதே யல்லதிப்
பாரிற் றேகமோ
டிடிபெறுங் ககனமீ
தேகிவந் தராவமர்
மடிவிலா ருண்டெனல்
வம்பிலவம் பாகுமே.
(70)
வேறு
ஊடுங் குணமுள் ளவர்வள்
ளமுலைச்
சோடுண் டுதுயர்ப்
படுதொந் தமிலார்
நாடுங் குருநா தனருட்
செயலே
பாடுந் தெளிப்பற்
றுவத தம்மே.
(71)
இங்கங் கெனவின் றியிருந்
தபிரா
னங்கங் கொடுவந் திடினன்
றிமயற்
பங்கங் கெடவில் லையெனப்
பகருந்
துங்கம் பெறுதொண்
டருமுண் டெனவே.
(72)
எல்லா முமியற் றுமெழிற்
புகழ்சேர
வல்லா னொருமா னிடனா
வுருவம்
புல்லா தவனென் றுபுகன்
றுழலும்
பொல்லா தவர்கொள்
வதுபுன் மதமே.
(73)
மாளா தவன்மைந் தனெனக்
குலவுந்
தாளாண் மைபொருந்
தியசற் குருவின்
றோலா லுயிர்சே ராவெதிர்ப்
பருவங்
கோளா னதறும் புகழ்கொள் பவரே.
(74)
உலகந் தொழுமோர் குருவாய்
வாதங்
கலகந் தவர்கா ரணனா
மவனே
யிலகும் புகழ்சே
ரிறைவன் சுதனென்
றலகின் றியவே தமறைந்
திடுமே.
(75)
நஞ்சா யநலந் தருநா
ரியருக்
கஞ்சா மலருந் தவமே
முயல்வார்க்
கெஞ்சா வினையா வுமிலங்
குகன்ற
பஞ்சா கவெரிந் துபரந்
திடுமே.
(76)
அவமே துமிலா தவரா
கியிருந்
தவயோ கமுடிப் பவர்தம்
மையெலா
முவமா னமிலா தவனொண்
சுதரென்
றெவர்தா முமியம்
பவருஞ் செயலே.
(77)
வத்தென் றுவழங் குவதற்
கடியார்
சித்தென் றதுசெய்
வதுதிண் ணமெனிற்
பித்தென் றுபிதற்
றிடுமூ டரெலாம்
வித்தென் றுவிளங்
கி(ல்)லா தவரை.
(78)
வீரத் தனிவேல் வடிவான
முதலாங்
கூரப் படைகொண் டுகளித்
துலகைச்
சேரப் பெரிதாள் பவர்சிற்
சிலரு
மோரரத் தினனல் லவனான்
சுதரே.
(79)
மடியா தவன்மைந் தனெனத்
திகழ
பொடியா னவருமற் றையிலிப்
புவியிற்
கொடியா ருயிர்கொன்
றுணலற் றுநறுங்
கடியா ரிலைகாய் கனியுண்
பர்களே.
(80)
வேறு
மெய்வளர் ஞானம் விளங்கினோர்
போலத்
தெய்வமொன் றென்னச்
செப்புவார் கோடி
யைவர டங்க வரைக்கண்
மேனுஞ்
செய்வது செய்து செயலறி
யாரே.
(81)
அந்தரம் போலுற் றவிர்தரும்
பெம்மான்
மைந்தர்நா மென்னும்
வாயின ருண்டு
மெந்தலோ கத்து மிங்குசீர்
வேண்டிச்
சிந்தனை செய்யுந்
திறல்பொருந் தாரே.
(82)
வாட்டங் கண்ணா ரமையனோ
யற்று
வீட்டவர் வுற்று
மெய்ப்பு கழ்குடிக்
கோட்ட மில்லாத குருபதந்
தானே
நாட்டமென் றுள்ளா
ரநந்த மாரமே.
(83)
சிந்தனை போலத் திருவுருக்
கொள்வான்
வந்தனை கொண்டு மாதவஞ்
செய்யுஞ்
சுந்தர வேடத் தொண்டர்தஞ்
சொல்லாற்
செந்தழற் சூடுஞ்
சீதற மாமே.
(84)
அம்பது போலு ரரிவிழி
நல்லார்
வம்பவிர் கொங்கை
வந்துவந் துள்ளத்
தெம்பற் மோதச் சிந்தைநொந்
துள்ளார்
நம்பரன் றன்னை நாடரி
யாரே.
(85)
செவ்விதழ் வாயாற்
தீமயற் பாம்பு
கௌவினுஞ் சற்றுங்
கருத்தழி யாம
வௌவிய மில்லா னருட்செயல்
வேண்டில்
வௌவினைப் பேயை வென்றிட
லாமே.
(86)
பொன்னிகர் மேனிப்
பூவையர் மோகந்
தன்னினெஞ் சாழுந்
தாழ்வுறு டுன்னந்
தொன்னிலைப் பெம்மான்
ரொண்டராம் வல்லோர்
மன்னிய கீர்த்தி
வான்சுடர்க் கொப்பே.
(87)
வானம் பொழியும் வளமுறச்
செய்யுங்
கோனன் றிமற்றோர்
குரிசிலென் றென்னு
ஞானம் பொருந்திய
நல்லோர் மனத்தின்
மானம் புகுந்து வருத்திநில்
லாதே.
(88)
செங்கோல் கொடுங்கோல்
செலுத்திடும் வேந்தர்
தங்கோல் விற்ற யங்குந்
தரணி
பொய்கோ னருளா லியங்குவ
தென்போர்
நங்கோ வெனவே நாமுரைப்
போமே.
(89)
வானகம் போல்வான்
மகவெனத் திகழ்வார்
நானவ னென்று நவில்வதுந்
தகுமென்றான்
சீருண ருமறு வகைச்ச
மையத்
தீனமில் பெரியோ ரிலங்குவ
தியல்பே.
(90)
வேறு
(கலித்துறை)
ஒருநம்ப னுள்ளென்று
புகர்கின்ற சமையங்க ளுறவர்கிடர்
திருன்விஞ்சு பகைகொண்டு
பொருகின்ற தொழிலன்ப ரில்பாகுமோ
குருவென்ற பொருளன்றி
யிலையென்ற நிலைகண்டு குறியாகுமோ
ருருவொன்றி வளர்சிந்தை
கொடுதுங்க மிகுபண்பி லுயர்வார்களே.
(91)
பவமற்ற சுகமுற்று
கதிமிக்க தெனுமெய்ச்சொல் பகர்வாரெலா
மவமற்ற நிலைபற்றி
யுயர்வுற்ற தவந்ததிய டைவார்களோ
நவமற்ற செயல்பெற்று
மகிழ்வித்த ருறவற்றுந் வைதாவலோர்
துவமற்ற வுணர்விற்சொல்
பனுவற்கு ணினைவுற்ற துறவோர்களே.
(92)
பலகோடி விதமான வடிவாகி
யடியார்க பரன்மேவுவோ
னுலவாத புகழ்பாடி
மகிழ்வாகு முனிவோர்க ளோதார்களோ
நலமான விளையாடன்
மிகவாடி யுலகாசை நாடாததாம்
வலமேவு பரஞான வழிகாணு
மழியாத வாழ்வானதே.
(93)
வாடாத பாமாலை நாடோறு
மேசூடும் வராதாளினர்
னாடாளு வார்போல வீடாளுவான்
மீதுநரர் மேவுசேய்
கோடாதா மாநீதி யார்காணு
வாராவி கோறாதநீர்
தாடாண்மை யாமுக மாறாது
ளாரான தாராளரே.
(94)
வானென்று ளரனன்பி
னாலுயர்ந்து வாழுங்கு மாறாவென
தேனென்று கூறுஞ்சொ
லாருந்தொ னூல்கண்டு தோவார்களோ
மானென்ற சீர்கொண்டு
நாடுங்க னார்தங்கள் வாழ்வானதா
லூனென்ற தாயின்ப
மேயென்ற நுனம்பியோ யவரார்களே.
(95)
முத்தார்மு லைப்போகம்
விற்பார்த மைத்தேடி முத்தாடிபால்
வைத்தாரவ் முற்றாவி
யற்றூன்வி டுப்பார்தமக் காகுமோத்தாள
ரொத்ததே தெருத்தோறு
முற்றாவல் பெற்றா ணமைகூர
சித்தாடி முப்பாழி
னப்பாலு றறகான சிற்போகமே.
(96)
சிங்கார முஞ்சீரு
மங்காத தென்றாவல் சென்றாவமர்
யிங்காண்மை கொண்டேயி
ருந்தாரி றந்தார்களென் றேனுமூர்
நங்காணி யென்றோது
கின்றோர்க ளெங்கோனை நம்பாததால்
வங்கார மின்பூமி
கொண்டார்து றந்தேகல் வன்பாகுமே.
(97)
பரமெனுபொ ருளிருந்து
கலகமெங்க ணுநடம்ப யில்கின்றசீ
ரரணமென்ற ருள்வளைந்தி
டுமளந்தெ ளிவதெனிற் றையுஞ்சிலோ
ருரமிகுந்தொ ளிர்தன்பு
தல்வரென்று ணர்வுகொண்டு ணர்தொண்டர்பா
லிரதமுங்க ரியுடன்ப
ரியுமவன்ப டையும்வந் திகல்குன்றுமே.
(98)
அம்புயச் செம்பொருட்
டென்றபொற் கொய்கைகட் கன்பர்குவோர்
தம்புகழ்ச் சிந்துசெப்
புந்தொழிற் குண்டருட் சஞ்சாரமா
மெம்புழுக்கந் தவிர்க்கும்
பொருட்டிங் குதித்தெஞ் சாமைசேர்
தெம்புறக் கண்டுவக்குந்
திருத்தொண் டன்மெய்ச் சிந்தாமதே.
(99)
தருமவள்ள லெனுநல்ல
புகழ்கொள்ளு மியல்புள்ள தகைமன்னுசீர்
குருவல்ல ருதொருதெய்வ
வடிவில்லை யெனவுள்ளல் கொளுமுண்மைவாழ்
வொருசெல்வ முயிர்கொல்ல
லுறுசெய்கை விள்ளுமுயர் நன்மைநேர்
திருவெல்லை முழுதுய்ய
வருதுய்ய ரெனுமெய்யர் தெளிதன்மையே.
(100)
நூற்பயன்
(நேரிசை
வெண்பா)
மாதவத்தோர்க் கானகவு
மார லகிரியென்னும்
போதமுற்றோ ராகிநின்றும்
புண்ணியத்தோர்க் – கேதமலுற்
சித்தியெட்டுந் தோன்றுமதி
ரும்பாத வீடுமெய்தும்
புத்தியுள்ளார் காண்பார்
பொருளை.
(101)
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக