வண்ணச்சரபம்
தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த
தியானானுபூதி
பாயிரம்
நேரிசை
வெண்பா
வயாநீங்கற் காமுயலும் மாதவச்சீ
ராய
தியானாநு பூதிநன்னூல் செப்பத்
– தயாநாட்டங்
கொண்டகுரு வாதியபல் கோடிதெய்வ
மாகியொன்றாய்த்
தொண்டருள்வா ழுண்மை துணை.
கட்டளைக்
கலித்துறை
தமிழடி யாகு மெழுத்துரு வுஞ்சந்த
மாமுடியு
மிமிழ்திரைப் பாரி லெனக்கீந்த வெண்திரு
வின்பவெள்ளத்
தமிழ்பவர் வேண்டுந் தியானாநு பூதியு
மாங்களித்தாள்
சிமிழ்முலைப் பாலமு தங்கொடுத் தாளுந்
தினமுமுண்டே.
அறுசீர்க்
கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பலகலை தெரிந்திட் டாலும் பத்திமுன்
னாகச் சொல்லும்
நலமொரு மூன்றுற் றாலும் நண்ணுமா
றனைத்துஞ் செய்து
குலவுசீ ரெய்தி டாது குருவடி வாதி
யாகப்
புலவர்செய் தியான மொன்றிற் புக்கவர்
கைக்கொள் வாரே.
நூல்
எண்சீர்க்
கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
சித்திமுத்தி யென்னுமிரு பேறும்
பெற்றுத்
திரும்பாத வீட்டினிற்போய்ச் சேரு வார்க்குப்
பத்திவைராக் கியஞான மென்னும் மூன்றும்
பக்குவமே யவர்நடக்கும் பாதை தன்னைச்
சத்தியமாய் யோசிக்கிற் றியான மொன்றே
சகுணமே யதற்கிசைவாஞ் சார்ந்து நின்றாற்
புத்தியினுக் கடங்காநிர்க் குணமுந்
தோன்றும்
பூர்வதவப் பயனில்லார் பொருந்தி டாரே.
(1)
தற்சீவ சாட்சிகுரு வடிவ மென்னச்
சாற்றுநிலை சமரசத்தோர் தமக்கே யாகும்
முற்சீவன் செய்ததவ முதிர்ந்தா லுண்டா
மூவிரண்டு சமையத்து மூர்த்தி மாரை
நற்சீவ திசையாகத் தியானிப் போர்க்கு
ஞானமெய்தும் பற்பலரு நாடு மாறு
பிற்சீவர் செய்துவைக்கு முருவ நாட்டம்
பிடித்தோருந் தக்கபயன் பெறுவா ரன்றே.
(2)
சகுணபரம் பரைநாட்டம் பெற்ற பல்லோர்
தன்வீட்டிற் புக்கநலஞ் சாற்றக் கேட்டும்,
மிகுபனுவ லாய்ந்தமதி தன்னைக் கொண்டு
மேலான நிர்க்குணத்தை விரும்பி நாடற்
றகுதியல்ல முடிந்தபொரு ளதுவா னாலுஞ்
சகளத்தா லன்றியதைச் சாரொண் ணாது
வெகுவிதத்தெய் வங்களுண்டென் றுழல
வேண்டாம்
விளம்புமொன்றே பலவடிவா விளங்கு மாதோ.
(3)
நீராலங் கட்டியெனத் தடித்தல் போலு
நெய்யுறைந்து கையினிடை நிலவல் போலும்
பேராகங் கொண்டுதெய்வ நிற்கு மாகிற்
பெருமைகுன்று மெனக்கருதிப் பேசொண் ணாத
சீராரு நிர்க்குணமே யென்று கூவித்
திருவருட்சத் தியையிகழ்ந்து செத்துப் போவார்க்
கீராறு சமையத்தோ ரடையும் பேறு
மெய்திடாதெ னத்தெளிவ தெளிதன் றம்மா.
(4)
இகம்பரமென் றுரைக்குமிரு தலத்துள்
ளாரு
மேத்தெடுக்கும் பெருவாழ்விற் கிச்சை கொண்டோர்
திகம்பரமாம் பொதுவடிவைக் கருதொண்
ணாது
திருவுருவாத் தியானித்தே தேற வேண்டு
மகம்புறமென் றையமுற்று வருந்த வேண்டா
மவ்விரண்டு மனவெளியி லடங்கு மாற்றான்
முகம்பிரசன் னமதாகத் தோற்றும் வண்ண
முயலலாங் களங்கமற்ற முறையு மீதே.
(5)
எந்தவித மூர்த்தியையா னாலும் நேரே
யிருவிழியால் கண்டுதொழு திறைஞ்சி னன்றிப்
பந்தமறா தெனத்தெளிந்து துணிந்து
பாடு
படுமவர்க ளெல்லோரும் பகரக் கேண்மோ
வுந்தமக்கு மந்திரமோர் துணையன்
றேனு
மொழிப்பதியல் பன்றதனா லொருசொல் லாகிச்
சிந்தனையி னுதவியின்றி நாவுஞ் சொல்லுந்
திறத்தனதாம் பழக்கமிகச் செய்யி னன்றே.
(6)
கண்டனவெல் லாந்தனது தெய்வ மாகக்
கருதிவழி படுநிலைகை வந்திட் டாலுங்
கொண்டபிடி நழுவாமற் றியானஞ் செய்து
குறித்தவுருச் சாக்கிரத்திற் குலவப் பெற்று
விண்டமொழிக் குத்தாரம் விளம்பக்
கேட்டு
விரும்பியவர் முடித்தருளும் வீறுந் தோய்ந்து
மண்டலமும் விண்டலமு மதிக்க வாழ்ந்து
மாசற்ற வீடடைந்தோர் வல்லோர் தாமே.
(7)
அகண்டபரி பூரணநிட் களமாந் தெய்வ
மளவிறந்த நெறிதோறு மன்பர் நாட்டந்
திகழ்ந்தபடி தோன்றுமன்றிப் புராணஞ்
சிற்பஞ்
செப்பும்விதிக் கடங்காது தென்னா லூரிற்
சகம்புகழ வரும்விகட கவிமுன் னாகத்
தலையோரா யிரத்தொடிரு தடந்தோள் காட்டி
யகந்தைமொழி கேட்டவித முலகஞ் சொல்லும்
பக்குவத்தோர்க் குரைத்தாலு மறிந்தி டாரே.
(8)
சகளவுபா சனையாண்டான் றனது வேட்கைத்
தையலரு கடுத்தோருஞ் சாகச் செய்தா
னகளநிரா மயஞான நிட்டைத் தாயு
மானவனை யொருவனெடுத் தழலிற் சுட்டான்
குகனடிமை யாமருண கிரியன் றந்தக்
கோபுரத்திற் பூவருதற் குறித்தேத் தாமற்
சுகமதிற்புக் கேகியுட லிழந்தான்
கண்டீர்
தொண்டுசெய்யு நன்னெறியைத் துறக்கொண் ணாதே.
(9)
தெய்வமொன்றே யென்பதுசத் தியமே யாகுந்
தெளிவில்லார் பலவிதமாத் தியானித் தாலு
மைவகைப்பூ தமுங்கடந்தர வதுவவ் வாறங்
கவிர்ந்தறிவு முதிர்ந்ததற்பி னனைத்துந் தானாம்
பொய்வழித்தீ மையின்முயல்வார் மேலாந்
தெய்வம்
போற்றினுமே னையர்வணங்கும் புன்மைத் தெய்வஞ்
செய்வலிக்காற் றாதவித மநுப வத்திற்
றேறலன்றி வேறொருவர் தெரிக்கொண் ணாதே.
(10)
தானேதன் மூர்த்தியென்பார் சிலர்தா
னல்லாச்
சலமுமென் பார்சிலோர் தன்னே ரில்லாக்
கோனேயென் பார்சிலரெப் பொருளு மான
குருவென்பார் சிலரெந்தக் கொள்கை யோரும்
தேனேர்செந் தமிழ்ச்சுவையுண் டணிமா
வாதிச்
சித்திமிகச் செய்துமனத் திருத்தி யெய்தி
மானேர்கண் ணார்கலவிச் சுகமுங் கைத்து
மறுபிறப்பில் லாதொழிந்தான்
மாண்பி னோரே.
(11)
ஒருவனொரு மூர்த்தியினைத் தியானஞ்
செய்தா
லுரைக்கரும்பல் வடிவெடுத்துட் கனவிற் றோன்றிப்
பெருமைமிகு சாக்கிரசொற் பனத்தில்
வந்து
பேசலன்றிச் சாக்கிரத்திற் பிறர்வாய்ச் சொல்லா
மருவுமச ரீரியுமாய்ப் பேசுங் கேட்டு
மகிழ்ந்திறுமாந் திடவேண்டாம் வருத்துந் தோறு
மிருவிழிமுற் குலவுமட்டு முயல வேண்டு
மிளைப்புற்றா லநுபவமு மிழந்து போமே.
(12)
சாக்கிரத்திற் கண்டகுரு மூர்த்தி
வார்த்தை
தன்னைநம்பி யொருமுனிவன் தமிழ்த்தென் பாண்டி
காக்கவல்லான் முன்புபட்ட சளங்கேட்
டுள்ளார்
கனவாதி யவற்றைநண்ணிக் களிக்கப் போமோ
தேக்குதிருத் தியின்நலஞ்சந் தேக
மாகும்
திருவருட்சோ தனையைவெல்லுந் திறத்தோ ருண்டோ
நாக்கசையின் நாடசையும் பேறுற் றாரும்
நலிவதற்காம் விதமறிந்து நடத்து மன்றே.
(13)
தெய்வவரு ளேநலமென் றளவி லாற்றாற்
றெளிந்தபடி காண்பதற்காச் செபந்தி யானஞ்
செய்வதற்குத் துணியின்முழு மனமே
வேண்டுஞ்
சிறிதுகுறைந் தாலுமது சீர்ப டாது
மெய்வழக்கிற் பொய்கலக்குங் கொடிதுங்
காட்டும்
வெறுத்துவிடக் கூடாது விண்ணு மண்ணு
முய்வதற்காம் விதங்கருதுஞ் சரதந்
தோய்ந்த
வுள்ளத்தா ரிகழினும் தோவு றாதே.
(14)
இராகவன்கிட் டிணன்முதலோர் விண்டு
வென்று
மெழில்வேலுக் கிரன்காழிக் கிறைவ னன்னார்
குராவணிசே யென்றுநுவல் வதுபோற்
பல்லோர்
கூறன்முற்று மந்தந்தக் குறிதொட் டுய்ந்தோர்
தராதலமுய் வதனிமித்த முதித்த வாறாச்
சாற்றுமட்டுந் தேர்ந்தவுபா சகனா ரேனும்
பராவுமினன் னவன்றவம்வீண் போகி டாது
பரத்துவமு மவனமைத்த படியா மன்றே.
(15)
கனவினுஞ்சிற் சிலபலித மாவ துண்டு
கண்டனவெல் லாநிசமாகக் கருதிற் றுன்ப
மனவெளிகொள் ளாதுவரு மநுப வத்தில்
வந்தவற்றைக் கண்டமட்டின் மகிழ்த னன்றாந்
தினகரகோ டிகளனைய தெய்வ மொன்றே
தியானிக்கும் பலவடிவாத் திகழ்ந்திட் டாலுந்
தனதுநிலை யுங்குறிக்குந் நாம ரூபத்
தன்மையும்போற் பலாபலங்கள் சாற்றற் பாற்றே.
(16)
மண்முதலா மைந்துவகைப் பூதங் கட்கும்
மதிகதிர்க்கு முயிர்க்குமதிட் டான மாகு
மெண்மயமே தமிழ்வண்ணத் தியல்பின்
பேதத்
தெண்ணிறந்த கடவுளரா யிலங்கு மந்த
வண்மையர னாகமமா தியபன் னூல்கள்
வகுத்திடினுந் தவவலியே வலிய தாமா
றுண்மிளிர்மூர்த் தியுமனமுங் கல்லுஞ்
சாணை
யுருவமும்போன் றுரிஞ்சநிற்போ ருணர லாமே.
(17)
ஞானவரு ணெறிக்கடுத்த யோகத் தோரு
நலந்திகழ்சோ திடத்தோரு நவமென் றோதல்
போனவில்பன மதத்தோரு மவர வர்க்குப்
போந்தபடி வாதிப்பார் பொதுவை நாடிற்
கானமறை நெறியாறே யவைக லந்தே
கழிக்கரும தீதமொன்றுங் கவினுங் கண்டீ
ரீனமிகும் புலைச்சமைய மினியொன்
றுண்டா
யினுமதுவு மவ்விருமூன் றினது சார்பே.
(18)
காமியம்வேண் டினுங்கதிவேண் டினுமி
ரண்டுங்
கலந்துறவேண் டினுஞ்சிவன் மால்கவுரி யானை
சாமியெல்லோ னெனுமாறு தெய்வத் தொன்றைச்
சந்தேக மின்றிநண்ணத் தகுமம் மார்க்க
மியாமிதனிற் சொல்வதல்லக் குரவற்
றேடி
யினிதருளப் பெறவேண்டு மிசைத்து முள்ளே
மாமிசங்கள் ளரக்காதி யணுவு மாகா
மந்திரமுந் தந்திரமும் மனந்தான் மன்னோ.
(19)
அக்கரத்தாற் சக்கரத்தாற் கும்பந்
தன்னா
லாலயத்தா லாராதித் தனைத்துந் தாண்டும்
பக்குவத்தும் பாவனையை விடக்கூ டாது
பலநூலு மினிப்பிறக்கும் பாவத் தோரும்
முக்கியமீ தல்லவென்று விளையாட்
டாக
மொழிவதுண்டு நம்பிவிட்டான் மோசஞ் சொன்னேன்
றிக்கொருங்கு மிருந்ததலத் துணர
வல்ல
சிவயோகத் தோர்களுக்குந் தியான முண்டே.
(20)
எட்டுவகைச் சித்தியும்பொய் யான
மாயை
யெனச்சொல்வா ரகண்டமய மியானே யென்பார்
திட்டெனவோர் புலியேனு மரச னேவுஞ்
சேவகனா யினுமெதிர்த்தாற் றிடுக்கங் கொள்வார்
சுட்டகனற் போன்மிடியு நோயும் வந்தாற்
சொல்வானே னெந்தவிதத் துயருற் றேனுந்
தொட்டொருமூர்த் தியின்வடிவைத் தியானஞ்
செய்து
சுகமடைந்து தனிவீட்டிற் றோய்த னன்றே.
(21)
பலகலையின் மந்திரமும் பலிப்ப தெண்ணிப்
பார்த்துவா யிகமெனச்சொல் பதமுந் தாண்டிக்
கலகமிடுஞ் சமையவிகற் பமுந்தீர்ந்
தானை
கண்டகுரு டரைத்தேற்றுங் கவிதை பாடும்
புலவருக்கே மூர்த்தியுபா சனைச்சீ
ராகும்
புல்லறிஞர்க் கேதுசெய்யப் புழுத்துக் கொட்டு
மலமுதற்பார்க் குந்தமது கண்ணிற்
றெய்வ
வடிவுகண்டான் ஞானபங்கம் வருமென் பாரே.
(22)
சச்சிதா னந்தபரம் பொருளே யெந்தச்
சமையத்துந் திகழுமெனச் சாற்றுந் தன்மை
யுச்சிமணிச் சேடன்மக மேரு வெற்பை
யொருங்குபற்றல் போலுமொரு மூர்த்தி தானே
நச்சியவா றொளிறுமென்கை யொருபைந்
நாக
நவிலுமத னொருகுவட்டை நண்ணல் போலு
மெச்சியுரைத் தற்கரிதாந் தனிவீட்
டின்ப
மேவுமவர்க் கிவ்விரண்டும் விருப்ப மாமே.
(23)
என்கடவு ளேவுயர்ச்சி யென்று சொல்வா
னிறுமாந்து நாட்கழியா தேங்கி வாடித்
தன்கடவு டிருவுருவைக் காண வேண்டித்
தவித்தானேற் சமரசத்தோர் தம்மிற் சேர்வான்
பின்கடவுள் வேற்றுமைதோற் றாது சொன்னாற்
பிணங்கிடா னவரோடும் பேசிக் கொள்வான்
முன்கடவுள் வரக்கண்டும் புவியோ
ருய்யு
முறைகருதிப் பலவாறு மொழிவா ருண்டே.
(24)
சமையநெறி தொட்டுநின்று சாதித் துண்மைத்
தவம்புரிந்து தன்னறிவே சாட்சி யாகச்
சிமையமலை வாரிகனல் வாழுந் தெய்வத்
திருவருளாற் றாண்டியுய்ந்து சிந்தை வேட்கை
யமையநல்குங் குருவைநம்புஞ் சமர
சச்சீ
ரநுபூதி யுடையார்போ லகில மாலிற்
குமையுமவர் தம்மையெண்ணி னிறத்தின்
பெட்பாற்
குலயெகினம் போல்வமெனும் கொக்கொப் பாரே.
(25)
எத்தெய்வஞ் சீக்கிரத்திற் கருணை செய்வ
தெனவிசா ரிப்பவன்புண் ணியமட் டுள்ளோ
னித்தெய்வ மேயெனதென் றுரைப்போன்
முன்னா
ளேன்றமட்டி லுபாசித்தோ னேதே தெல்லாம்
பொய்த்தெய்வ மென்பவன்மா பாவி வானிற்
புலவர்பிரா னாதியராய்ப் புவியில் வந்தோர்
மெய்த்தெய்வ மேகுருவா யறிவி னின்று
விளக்குவதா லளவிலின்ப மேவு வாரே.
(26)
தெய்வவுருத் தியானநெறி சிறிது மின்றிச்
செபமொன்றே செய்குவது சிதடர் மார்க்க
மைவகையாம் பொறியுமடங் கிடச்சற்
றேனு
மசையாது குறியினிற்ற லான்றோர் கொள்கை
மெய்வழக்காஞ் சமரசந்தேர்ந் திரண்டுந்
தோய
விரும்புவது சித்தர்குண மேனாட் பூசித்
துய்வணுப்போன் றாயினும்பெற் றிருந்தோர்க்
கன்றி
யுயர்புகழ்த்தீஞ் சுவைத்துதிவாக் குதித்தி டாதே.
(27)
மலமான களிம்புறுசெம் பனைய நெஞ்சை
மாதவமாங் கனலிலிட்டு வல்லோர் சொல்லு
நலமான மருந்ததனால் வேதிப் போரே
நனவுகன வினிற்றிகழு ஞாய மெல்லாங்
குலமாற்றே சித்தியென்னும் வங்கத்
துக்குக்
குலையாம னிற்குமுன்னங் குதிக்க வேண்டாம்
பலகோடி பகையுண்டு பதறு வீரேற்
பழிப்புண்டா மநுபவத்தைப் பகர்ந்திட் டேனே.
(28)
கண்டமெனப் பலர்நுவலுஞ் சகள நாட்டக்
காரருக்குந் தனியகண்டா கார ஞான
முண்டதுதான் வேறுதெய்வ மிலையென்
றோர்த
லுயரகண்ட மெனப்பகர்நிட் களத்தை யுன்னுந்
தொண்டரினு மாயைவிராட் டாதி யாகச்
சொல்லுகின்ற கண்டபா
வனையோ ருண்டு
விண்டவித மிரண்டுமொன்றாய்க் கலந்த
ஞாய
மெய்த்தவத்தோர் சத்தியத்தில் விளங்கு மன்றே.
(29)
காளிகறுப் பண்ணன்முதற் சிலவற் றாயுங்
கடவுளேவி ளங்குகின்றான் கண்ணா டிக்கண்
ஞாளிமுகம் பார்க்கிலது சிங்கங்
காட்ட
ஞாயமுண்டோ வதுபோல நாடு வார்தந்
நீளியசென் மாந்தர்புண் ணியத்திற்
கான
நெறிதோற்று மாயினுமுன் னிகழ்த்து மாறும்
கோளிலவே வவற்றுளொவ்வொன் றினில்பன்
மூர்த்தங்
குலவுமந்த விபரமுற்றுங் கூறொண் ணாதே.
(30)
முக்கண்ணு மான்மழுவும் பொருந்து
மீசன்
முடியின்மயிற் பிலியணி முகுந்த னைந்து
கைக்கணநா யகன்வேலுந் தண்டுந் தாங்குங்
கரமுருகன் முலைமுதிராக் கவுரி கீழத்
திக்கதனி லெழுகதிரா மாறு மூர்த்தஞ்
சிறந்தனவென் றறிவறிந்தோர் செப்பக் கேட்டே
னெக்கடவுட் கெவருரிமை பூண்டுற்
றாலு
மெனக்கதுசம் மதம்முடிவி லேகந் தானே.
(31)
அறிவரிய தெய்வத்துக் குருவஞ் சொல்லி
னாண்பெண்ணெனு மிரண்டுவித மன்றி வேறு
குறியிலையாற் குகன்வாலை யென்ன நூலோர்
கூறுமிவற் றொன்றைநம்பிக் கும்பிட் டுய்வீர்
பொறிமயிலாங் குடிலைமிசை ஞான சத்தி
புனைந்தசெங்கைக் குரவனெனப் போற்று கின்றேன்
வெறிகமழ்மென் மலர்ப்பூசை பலநாட்
செய்து
வியன்தமிழான் மிகத்துதித்திவ் விரகுற் றேனே.
(32)
ஆயிரம்பொன் பெறுமானை தன்னைத் தந்திட்
டரைப்பணமே பெறுந்தொறட் டிதைநல் கார்போன்
மாயிருஞா லத்தின்மிகப் படுத்துந்
தன்மை
வழிபடுமூர்த் திகட்குரிய வழக்கங் கண்டீர்
காயிரும்புண் டிடுநீர்போற் போமா
றெண்ணிக்
கலங்காமற் றியானிக்கை கடனாஞ் சொன்னேன்
போயினது வந்ததென்பார் தமக்கு நீங்காப்
பொருளென்பார் தமக்குமிதோர் பொதுநூன் முற்றே.
(33)
நூற்
பயன்
நேரிசை
வெண்பா
செப்பத் துயர்போந் தியானாநு பூதியின்பா
முப்பத்து மூன்று முழுதுணர்ந்தோர்
– கொப்பத்துக்
குஞ்சரத்தில் வாடார் குறைதீர்ந்த
நெஞ்சகமாம்
பஞ்சரத்தில் வாழும் பரம்.
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக