வெள்ளி, 25 செப்டம்பர், 2026

கௌமார தீபம்

 

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த

கௌமார தீபம்

காப்பு

(நேரிசை வெண்பா)

மெய்யபுலமை யுள்ளவரே வேண்டுவரென் றோர்ந்தெளியேன்

செப்புங் கவுமார தீபத்திற் – கிப்புவியிற்

றானாகத் தோன்றியருள் சற்குருவு மானவுண்மைக்

கோனா மவன்றுணை யாகும்.

நூல்

(கலி விருத்தம்)

முருகுடைக் கிழவனே யனைய முன்னவ

னருகுசென் றிரக்கு நெஞ்சகத் தினோரெலாம்

பெருகு சீருடை யவன்பெற்ற பாலரென

றுருகுமெய்க் குரியவ ருடைமை யாங்களே.

(1)

சத்திய வடிவமாந் தலைவன் றன்னையே

நத்திநின் றிறைஞ்சிடு நலம்பெற் றோரெலாம்

யுத்திதந் தருளவன் புதல்வ ராவரென்

றுத்திகொண் டுணர்பவ ருயர்ந்து ளோர்களே.

(2)

பல்வகை யுயிர்களும் படைத்துக் காக்குமோர்

செல்வனுக் குரியவர் சிசுக்க ளாமெனச்

சொல்வது கருதுமோர் தொண்டன் றோன்றிடி

னல்வழி மற்றதை நசியச் செய்யுமே.

(3)

கொலைத்தொழி லென்பது கூர்ப்பி லார்கொளும்

புலைத்தொழி லுடன்றப் போக்க வல்லவ

னிலைத்தொழி லுடையதோர் நிமலன் சேயெனிற்

கலைத்தொழிற் குரியவர் கனன்றி டார்களே.

(4)

தங்குரு விறையவன் றனைய னாமென

லெங்குறு மறிஞ ருமிசைந் மாற்றமாற்

பொங்குபோ ரழிசூழ் புவியெ லாந்தொழு

மங்குரு வவன்மக வாதலுண் மையே.

(5)

எக்குலத் தவர்க்குமோ ரிறைவன் றானெனும்

பக்குவ முதித்திடப் படியிற் றோன்றுவோன்

முக்கணங் கடந்ததோர் முதல்வன் சேயெனிற்

பிக்குரைப் பவரெலாம் பிறக்கு மூடரே.

(6)

அறமுயன் றவர்க்குநன் றருளுமண் ணயலாற்

பிறவிநோ யறுமெனப் பேசு மாதவர்

திறலுடை யவன்றருஞ் சேயென் றோதுவர்

மறமிகுந் திருக்கைவேல் வாங்கினோ ரையே.

(7)

வேற்படை யிறையவன் கொடுக்க வேண்டிநின்

றேற்பது கருதினோ ரிகத்திற் றோன்றிடிற்

பாற்பொரு தவள்நீ றணியும் பான்மையோர்

மேற்பொரும் வாகுலம் வெருண்டு தாழுமே.

(8)

நீற்றினை நனைப்பதே நெறியென் றுண்மையாத்

தோற்றிய சிறியவர் சூர னோடுபோ

ராற்றிய வறுமுகத் தவனுண் டென்றுளந்

தேற்றியா னவனெனத் தெளிவ துள்ளதே.

(9)

வெண்டகைப் பொடிமுழு தணியு மேலவர்

தண்டபா ணியனிறை தனைய னாமெனக்

கொண்டவ னானெனக் குறித்துத் தன்னுருக்

கண்டதோ டவனவர்க் கருதி வாழ்வரே.

(10)

கற்பனை முழுவதுங் கடந்த காரணத்

தற்பர மநுதினந் தன்னை வேண்டுவோர்

நிற்பதோர் நிலைப்படி நிகழு மல்லது

சிற்பநூ லுருக்கொடே திகழ்ந்தி டாதரோ.

(11)

எப்பொரு ளாயினு மிறைவ னாகிய

மெய்ப்பொரு ளுதவிட வேண்டிப் பெற்றுளர்

ரப்பொருட் புதல்வரென் றறிந்த மேலவர்

பொய்ப்பொருண் மயல்கொடு புலம்பி டார்களே.

(12)

சித்திர மனையவர் செய்த மேலவன்

சத்திரந் தரப்பெற் றசைவ ராதிய

வுத்திசேர் சமையிக ளுறவென் றுட்கொள்வார்

பொய்த்திறற் புலையர்தாம் பொன்று வார்களே.

(13)

எங்கணு மிருக்குமோ ரிறையென் றோதியுந்

தங்களுக் கினியவன் றனக்குப் பெரிதென்

றிங்கடற் புரிபவ ரெவருங் கைதொழுந்

துங்கமெய்க் குருவரிற் சுகத்திற் றோய்வரே.

(14)

பற்பல சமையநூற் பகுப்பிற் பாடுறு

சிற்பர னுளனெனச் செப்புஞ் சொல்லாற்

கற்பனை மற்றவை கண்டு தேறுமின்

னற்பணி யினர்பெறு நலமுண் டென்றுமே.

(15)

கடவுளே சதமெனக் கருதிக் கைதொழுந்

திடமுளா ரிகாருஞ் சீர்பெற் றோங்கலான்

மடமறுத் தொளிர்கவு மார மாதவா

புடவியோர் பொதுவெனப் புகல லாகுமே.

(16)

நூற்பயன்

(நேரிசை வெண்பா)

தேறுங் கவுமார தீபமெனச் செந்தமிழாற்

கூறுமீ ரெண்கவியுங் கூர்ந்துணரும் – பேறுபெற்றுத்

தெய்வமொன்றே யென்னுந் தெளிவுற்றோர் சிந்தையினும்

பொய்வருமோ மெய்வரும் பொய்போம்.

 

முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக