வண்ணச்சரபம்
தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த
சுப்பிரமணிய
நூல்
பாயிரம்
(நேரிசை
வெண்பா)
மெய்ப்பிரம மாகிநின்ற
வித்தினகத் தங்குரமாஞ்
சுப்பிர மணியநூற்
சொல்விளக்கு – மெய்ப்பிரம
மென்றெவர்தாஞ் சொல்லிடினு
மேகமதே
யென்றுரைக்கை நன்றெனக்கொண்
டாடு நலம்.
(1)
(ஆசிரியத்
துறை)
ஒவ்வொன்றுக்
கொன்பதுபா வரமுக் காண்ட முறைக்குமிந்நூல்
செவ்வொன்றுஞ் சுப்பிர
மணிய மாமிதிற் செப்புவன்
சவ்வொன்று மாவிரதங்
கவுமாரஞ் சமரசமா
மவ்வொன்று
முவ்வொன்று மலவொன்றுஞ் சேர்ந்த தறிவதற்கே.
(2)
(கலி
விருத்தம்)
சுப்பிர மணியமே துகளி
லாப்பரஞ்
சுப்பிர மணியமே தொண்டரி
யாவருஞ்
சுப்பிர மணியமே சொல்லுஞ்
சொல்லெலாஞ்
சுப்பிர மணியமே துணிவு
நல்குமே.
(3)
பாயிரம்
முற்றிற்று.
நூல்
மகாவிரத
காண்டம்
(எண்சீர்
கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
சைவமென்ற சிவசமயத்
தலைவன் பாகந்
தனிலிருக்கு முமையீன்ற கனிவேற் செவ்வேள்
கைவளர்மா முகன்றுணைவன்
புயநான் குள்ளான்
கலுழனொரு காலமஞ்சக் கன்னற் மூர்த்தி
மைவளருந் தோகையுட
னிடபத் தேறும்
வால்சுப்பிர மணியனென வனத்தோ னெப்போ
யேவற்கோங் குமராய
நம்வென் றோதி
யுருகுவாரு லகத்தோட்டு றைவார் தாமே.
(1)
தாமரைக்கண் னான்மருக
னென்பார் ஞான
சம்பந்த னாகவந்த சாமி யென்பார்
கோமளச்சுந் தரப்பருவ
நீங்கி டாத
குழவியென்பார் தமிழ்ப்புலவர் கோவா மென்பார்
மாமதுரைச் சங்கத்தோர்
கலகந் தீர்த்த
வணிகனென்ப ரருக்கிறனா வந்தோ னென்பார்
காமனுக்கு நாணளிக்கு
மழக னென்பார்
கனிக்குலகை வலமான கதைசொல் வாரே.
(2)
வாரணமா முகமுடைய
தமையன் செய்த
வஞ்சகத்தைச் சகியாமல் வடிவேல் கொண்டு
பூரணகும்பக் குடநோவ
யிற்றிறக் குத்திப்
புரிசடையோ னானதந்தை புலம்பு நீங்கிக்
காரணத்தால் வேடமிட்டுத்
தனிய னான
கடவுளென்ப ராரகமே கருதி வாழ்வர்
ராரணத்தைச் சேர்ந்தமகா
விரதர் போற்று
மாறுமுக னானதிவ னாமென் பாரே.
(3)
ஆமிந்தப் படிகருதுங்
குணத்தி னோர்க்கு
மகச்சமைய மாறுமுற வாகு மாகும்
போமிந்தப் பதங்கடந்து
மேலே சென்றோர்
புண்டரமாத் திருநீறு புனைவா ரெங்கோன்
பாமிஞ்சத் தொடுப்போருக்
கெளிய னென்பார்
பன்னிரண்டு தோளுடைய பால னென்பார்
நோமிந்தி ராதியரைக்
காக்க கதீக்கண்
ணுதலீன்ற முருகனென்பர் நூல்செய் வாரே.
(4)
செய்யநிறக் கலைபுனைவார்
சடையோ ராவார்
சிவயநம வோமென்றுஞ் செபிப்பா ரப்பா
லையமின்றிச் சரவணப
வாவென் றோது
மாறெழுத்தும்
பிரணவமு மன்றிச் சொல்லார்
கையணியை மூவிரண்டு
வதனச் சீரைக்
கழலாண்ட திருத்தாளைக் கருதச் சோம்பார்
பையனைய கடிதடத்தா
ரிருவ ரோடு
பச்சைமயி லாகுவெள்ளைப் புகடென் பாரே.
(5)
என்புமங்கை யாகவந்தோன்
முதலோ ரெல்லா
மெம்பிரான்க லையாமென் றிசைப்பா ரஞ்சார்
மின்புரையும் வேற்பூசை
யெந்திர பூசை
விதிவழியே செய்துசெய்து விருப்பங் கேட்பார்
தென்புலத்தான் றனைவிலக்கும்
வெண்ணீ றென்று
திடஞ்சொல்வார் மலைதோறுஞ் சென்று மீள்வார்
மன்புலமைப் பொதியமுனி
நாதன் பெற்ற
மகிமையே வலியதென்பார் வாதிப் பாரே.
(6)
வாதித்துச் சிவன்றவத்தாற்
பிரமந் தானே
வடிவமாவந் தவுணர் மடியத் தாக்கி
நீதிக்குத் தவராகா
வண்ணம் பொன்னூர்
நிலைநிற்கச் செய்தவனென் னேய னென்பார்
சோதிக்கத் துணியாத
கருணை தோய்ந்த
சுப்பிரம ணியனென்பார் தொன்னூல் வேதன்
பேதித்துச் குணமாறப்
புடைத்தே னென்பார்
பெருஞ்சேவற் கொடிபடைத்த பிரானென் பாரே.
(7)
பாருலகும் வானுலகும்
பிலமுங் காக்கும்
பண்ணவர்கோன் மகளிருக்குப் பரண்மே லன்றோர்
காருலவுங் குழற்பேதை
வடிவங் கண்டு
கரங்குவிக்க முனியான களிப்போ னென்பார்
மேருவுக்கு மேற்றிசையில்
வளர்ந்து நின்ற
வெற்பிடத்திற் கொலுவிருக்கும் வேந்த னென்பார்
சாருவுருக் கொண்டொருமெய்ப்
பத்தன் வாழுந்
தடம்புயத்திற் றிருப்புகழ்சேர் தமையென்
பாரே.
(8)
என்பதெல்லாஞ் சொல்லுகின்ற
சமையத் தோரு
மிதற்குமுந்திச் சொன்னதொரு சமையத் தோரும்
பொன்பணிகள் பலவான
விபரந் தோரார்
புகன்றாலுந் தெளிவல்லப் புண்ணி யத்தா
லன்பருளுங் கவுமார
மதத்தோ ராவா
ரதுசொல்வே னிதற்குத்த காண்டந் தன்னிற்
றன்பான சீரிவர்சொன்னால்
வெகுண்டி டாமற்
றனதங்க
மென்றுகொள்ளுஞ் சைவந் தானே.
(9)
மகாவிரத
காண்டம் முற்றிற்று.
கௌமார
காண்டம்
அகண்டபரி பூரணமே
நாத மாகி
யதுதானே விந்தாகி யனைத்து மாகி
யுகண்டமென்ற சத்தியையே
வேலர்க் கையி
லுறப்புனைந்த குமாரனெங்கோ னொப்பி லாதர்
நிகண்டனைத்துந் தாயாகக்
கருதும் வேத
நிசரூப னாகிநின்ற நீதிக் காரன்
றகண்டபகி ரண்டமெல்லாந்
தானா நின்றுந்
தனையொளித்த கள்வனவன் றானென் பாரே.
(1)
தானென்று சொல்வதன்றி
நானென் றோதார்
சருவபிர சாதநித்தந் தருவோ னென்பார்
கோனென்றுங் குருவென்றும்
வருவோ னென்பார்
குலிசவேள் முத்தலைவேல் கொற்ற வைவே
லானென்ற பரியுடையான்
முதலோர் வேண்டும்
பயவாதம் பொருந்து மண்ண லென்பார்
வானென்ற வெண்சேவற்
கொடியான் றோகை
மயிலுடையான் றகரூரும் வானென் பாரே.
(2)
பாரமலை யனையவெள்ளைக்
கரியி லேறும்
பரமகுரு நாதனென்பார் பழுதி லாத
வீரருக்கே யிவன்மகிமை
விளங்கு மென்பார்
வெண்ணீற்றை நனையாமன் மேனி யெங்குந்
தீரகுணத் தோடணிந்து
திரிவா ருங்கோன்
சிவன்மகனே யெனத்துணிந்து செப்பு வோரைக்
கூரறிவி லாச்சிறியோ
ரெனவுட் கொள்வார்
குருவென்று மகவென்றுங் குளறி டாரே.
(3)
குளறுகின்ற மனந்தவிராத்
தோடத் தாலே
குமரனான மகனென்றுங் குரவ னென்று
மிளநகைப்பா வையரிருவ
ருடையா னென்று
மில்லாத முனிவனென்று மியம்பு வோரை
யுளம்வலுத்தா லிந்நிலைக்கே
வருவா ரென்பர்
ருண்மைகண்டு தடுமாற லூழே யென்பார்
வளமிகுக்குங் குன்றுதோ
ராடுந் தெய்வம்
வலியதன்றென் றுரைப்பதென் மடமென் பாரே.
(4)
மடமகற்று மெஞ்ஞானத்
தெய்வங் கற்றோர்
மனவிருப்ப மதனையும் வழங்குந் தெய்வம்
கடவுளர்க்கெல் லாமாசாங்
கருணைத் தெய்வங்
கலங்காத வாழ்வளிக்குங் கடாட்சத் தெய்வம்
புடவியிடத் தான்மகனே
யென்று நாடும்
பொய்யருக்குந் தக்கவருள் புரியுந் தெய்வந்
திடமளிக்குங் குமாரனென்ற
நாமத் தெய்வந்
திருமுகமா றுடையதென்றுஞ் செப்பு வாரே.
(5)
செய்யரிய கோடாறு
கோடி மூர்த்தி
சிருட்டித்து விளையாடுந் தெய்வ மான
துப்பனைய வடிவுடைய
செவ்வே ளன்றிச்
சுயம்பான கடவுளில்லைத் துணிவே யென்பர்
ரிப்படிச்சொல் கவுமார
சமையங் கொள்வ
தெளிதல்லப்
பிறப்பறுப்போர்க் கெய்து மென்பர்
ரெய்ப்பதற்கும் பொதியமலைத்
தலைவ னார்க்கு
மீசனுக்கு மெய்தியதென் றியம்பு வாரே.
(6)
இயம்பரிய பெரும்பேற்றை
யுணர்த்துந் தெய்வ
மிகபாசா தனங்குறிப்போர்க் கினிய தென்பார்
சுயம்பிரகா சப்பொருளாஞ்
சுப்பிர மணியஞ்
சொல்லுவதே மெஞ்ஞானச் சுகமா மென்பார்
நயம்படுமா தவமிரக்க
முடைய தென்பார்
நரசெனனம் பலகோடி நண்ணு மானாற்
செயம்பொருந்துங்
கவுமார மேலா மென்று
தெரியுமென்பார் பாடலெல்லாஞ் செப்பு வாரே.
(7)
வார்புவியிற் புலைச்சமையங்
கோடி தாண்டி
வயிணவத்திற் பிறந்துமுற்றி மழுவொன் றுள்ளான்
சார்புகொண்ட சமையமதி
னின்றி தேறிச்
சரத்தேயஞ் சவுரவமுந் தாண்டி யப்பா
லோர்புனிதக் கொம்புடையான்
சமைய நீங்கி
யுறுவதிந்தக் கவுமார முயர்வா மென்பார்
பார்புகழு சித்தியோடு
முத்தி வேண்டும்
பருவத்தோர்க் காமிதென்றும் பகர்வார் தாமே.
(8)
பகருமிந்தக் கவுமார
முதிர்ந்து தானாற்
பழிக்கரிய மெஞ்ஞானப் பதமுண் டாகும்
நிகரில்லாச் சமரசமென்
றதற்குப் பேரா
நிகழ்த்துவேனி தற்கடுத்த காண்டந் தன்னிற்
சகளமொடு நிட்களமும்
பொருந்து மாற்கஞ்
சன்மதமுஞ் சண்முகமாச் சாற்று மாற்றாற்
றிகழுமது கவுமாரர்
சொல்லு மாறு
திசையிடத்து நிறைந்தபொருள் கண்டந் தானே.
(9)
கௌமார
காண்ட முற்றிற்று.
சமரச
காண்டம்
குருவடிவே சகளத்திற்
சிறந்த தாகுங்
குறிப்பறிந்த பெரியோர்கள் கொள்வார் தள்ளா
ரருவமே தெய்வமெனச்
சொல்லு வோமோ
சரனையொப்பு
கின்றதறிந் தார்க்குற் றோணு
மொருவடிவங் கொண்டுதெய்வந்
தோன்று மானா
லுரைப்பதெல்லாஞ்
சித்தியென்போ ருயர்ந்த மேலோர்
கருவதனிற் சேராத
முத்தி நல்குங்
கடவுளென்றே யெனத்தெளிதல் கடினந் தானே.
(1)
தானென்று நானென்றும்
பிரிக்க வொண்ணாச்
சமரசமே யெந்தெந்தச் சமையத் தோர்க்குங்
கோனென்று வருங்குரவன்
சொல்வ தாகுங்
குருவெல்லாஞ் சுப்பிரமணியக் கொழுந்தே யாகு
மேனென்று கருதறியா
மூடர் நெஞ்சி
லெண்ணிறந்த சமையங்க ளிசலித் தோன்றுந்
தோனென்ற மொழியுடைய
பெரியோர் நூலிற்
றெளிவுற்றோர் சமையமெல்லாஞ் சேர்ந்தொன்
றாமே.
(2)
ஒன்றான கடவுளுக்கே
சமையங் கோடி
யுள்ளதெனத் தெளிந்தோர்க ளுயிர்கொன் றூனைத்
தின்றாரவ முறுங்கொடிய
சமையத் தோரைத்
தீயரென்ப தன்றியவர் தேவொன் றுண்டு
நன்றாய்த லலவெனப்
பகரார் சற்றுந்
நாதவிந்து நாட்டமன்றி நாமங் கூறார்
பொன்றாத முத்தரென்று
முத்தி வீட்டிற்
புகுந்தவர்க்கே நாமமென்று புகல்வார் தாமே.
(3)
புகலுகின்ற சமையத்துட் குருவாத் தோன்றும்
பொருளென்னுங் கவுமார புனிதர் தாமே
திகழுமிந்த நிலைக்குரியா
ராவார் மற்றுஞ்
சிவசமைய ராதியருந் தெளிவா ரென்பார்
மகடெனப்போ புனைந்துயிரை
வருத்துந் தீயோர்
மகிதலத்திற் பிறந்திறக்கை மாறா ரென்பர்
ரிகதலத்துக் கதையெல்லாம்
பக்கு வத்தோர்க்
கிசைந்ததல்லப் பத்தியொன்றே யினிதென் பாரே.
(4)
இனியதொரு தெய்வமதன்
புதல்வ ராவோ
ரெவ்வுயிறு மெனப்பகரு மியல்பி னோரைத்
தனிமகிமை யுடையவரென்
றுணர்ந்தி டாமற்
சமையத்தோ ரிகழ்வதனாற் றாழ்ச்சி யுண்டோ
கனிமதுரங் காய்க்குண்டோ
தாயின் றன்மை
கனிக்குவரு மோசமையங் கடந்தா லன்றிப்
பனிமலரில் வாசமெனக்
கலந்து நின்ற
பரஞ்சோதி யதன்பெருமை பதிந்தி டாதே.
(5)
பதியென்றும் பசுவென்றும்
பாச மென்றும்
பகருகின்ற சித்தாந்தம் பதிந்த நெஞ்சே
நிதியென்ற வேதாந்தப்
பதமுந் தாண்டி
நிசமான சமரசத்தி னிலைத்து நிற்கு
துதிகொண்டு சமையகுரு
வானோ ருள்ளுந்
துட்டருண்டென் றுரைக்கவல்ல துங்கந் தோயுங்
கதியென்ப தூனருந்தாப்
பெரியோர் தங்கள்
கருணையாற் காண்பதெனக் கழற லாமே.
(6)
கழறரிய குருவாகத்
தோன்றி யாள்வோன்
கடவுளே யானாலுங் கடவு ளீன்ற
குழவியென்ப திசைவரமாற்
குமார னென்று
கூறுகின்ற கவுமாரன் குணத்தோ னானான்
றழலனைய கொடுங்குணத்தாற்
றன்னைப் போற்றுஞ்
சமையத்தோ னானாலுந் தவிர்ந்தோ னேனும்
விழவினுக்கு வாஞ்சைகொண்ட
கடவு ளார்பால்
விரும்புவது பெறிலவரை விலக்கெண் ணாதே.
(7)
ஒண்கொண்ட வேல்வாங்கிப்
பகைவென் றோரு
ழுலகாளச் சக்கரங்கை யுறப்பெற் றோரும்
பண்கொண்ட கவித்துணைக்கைம்
மணிபெற் றோரும்
பரமன்சே இயன்றுசைவன் பகரக் கேட்டேம்
வண்கொண்ட சமையகுரு
வானோர் தாமும்
வாங்குதற்கு வல்லவரே மனித ரெல்லாந்
திண்கொண்ட கருத்துடனோர்
சமைய மாகச்
செய்வோனே பொதுக்கடவுள் சேயென் பாரே.
(8)
பார்முழுதும் புரப்பவனே
மன்னர் மன்னன்
பணியனைத்துந் தங்கமெனப் பரனைக் காட்டுஞ்
சீர்முகத்தி லுடையவனே
குரவர் வேந்தன்
சித்தியுற்ற மெஞ்ஞானஞ் செல்வக் கோவென்
றூர்முழுக்கப் பகரவல்ல
சமச சத்தோ
ருயர்வுணர்ந்த வாறுரைத்தே னுலகோர் சொல்லும்
பேர்முகப்பாஞ் சுப்ரமண்ய
நாமங் கொண்டோர்
பெரியாருட பெரியானைக் குருவென் பாரே.
(9)
சமரச
காண்டம் முற்றிற்று.
நூற்பயன்
(கட்டளைக்
கலித்துறை)
சுப்பிர மணியநூன்
மூன்று காண்டத்திற் சொன்னகவி
தப்பில கருணை வடிவேயென்
றோதுந் தமிழ்ப்புலவன்
செப்பிய பாடல் பலகோடி
காலந் திகைந்துறினு
மொப்பிடு மேலவர்
கெல்லாச் சமைய முடையவரே.
நூற்
சிறப்பு
(கலித்துறை)
சுப்பிர மணியநூல்
சகித முள்ளது
சுப்பிர மணியநூல்
சூட்ச மானது
சுப்பிர மணியநூல்
சோகந் தீர்ப்பது
சுப்பிர மணியநூல்
சோதி ஞானமே.
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக