வண்ணச்சரபம்
தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த
பிரணவாநுபூதி
காப்பு
நேரிசை
வெண்பா
மந்திர வித்தாம் பிரணவநு பூதிப்பனுவ
லிந்திரவிக் கப்பா லியம்புதற்குத்
– தந்திரஞ்சே
ராறு சமையத் தவர்வரும் வெவ்வேறாக்
கூறுமொரு தெய்வமுன் னிற்கும்.
நூல்
அறுசீர்க்
கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருவருள்வீ றுணர்ந்துபல சமையத்தோர்
பகருமொழித் தியக்கந் தீர்ந்து
கருவருளா தாண்டருளுங் குருபதமே
கதியாகக் கருதி நின்று
மருவருளோ டுருவாகி நனவில்வர
வேண்டுகின்றே னந்த வொன்றே
சருவருள்ளு நிறைந்ததன்றி வேறுதெய்வ
மில்லையில்லைச் சாதந் தானே.
(1)
வேதங்க ளாகமங்கண் முதலாய்நூல்
களெல்லாம்வி ளம்பத் தோன்றும்
போதங்க ளத்தனையுட் பொறியொன்றே
யன்றியெல்லாம் பொய்யாய்ப் போயு
நீதங்க ளுணராதார் பகைதவிரப்
பெறுகில்லே னிமல நாதன்
பாதங்க ளதிலிருக்கு மற்றவடி
வெண்ணுகின்ற படியா மன்றே.
(2)
ஒருதேவே யன்றிமற்றொன் றில்லையென
வுணர்ந்தாலும் முண்மை ஞானச்
குருசேவை கண்டவர்க்கே சித்திமுத்தி
முழுமையுங்கை கூடு மென்னும்
பெருநீதி யுடையோர்தந் தாளாய
மலருக்கும் பிரசஞ் சூடி
மருவாயந்த தலையுலகின் மாயாத
பேறுநண்ணி வருந்தி னேனே.
(3)
மானிடராய்ப் பிறந்துழல வயிலாமை
கொல்லாமை வாய்ந்து பன்னூன்
மேனிலையென் றுரைக்குமுழுத் துறவடைந்து
மருளாடல் விழைந்து மொன்றே
நானிலத்துச் சமையமெலா முடையதெனத்
தெளிந்துமன நலிவார் தம்மைப்
போனிலத்திற் றுயருடையோ ரிலையவர்தம்
விருப்பமுண்மைப் புகழ்மேற் போமே.
(4)
ஆணாகி பெண்ணாகி யலியாகி
முப்பொருளு மல்லா தாகு
மாணரும்பி ரணவச்சற் குருவையன்றி
வேறுதெய்வம் வகுத்திட் டாலுஞ்
சோணாதிக் குரியவதே யவைவடிவாத்
தோன்றுமெனுந் திறமை யோர்ந்து
வீணாய கதிவிளம்புஞ் சமையத்தோர்க்
கஞ்சியுள்ள மெலிகின் றேனே.
(5)
சீராரு பிரணவப்பாங் குணராமற்
பலகோடி தேவுண் டென்று
போராடுஞ் சிலர்க்குமருள் புரிந்ததென
வுலகினரும் புகலுந் தெய்வ
மாராதித் துளம்பதறு மடியனேற
கருள்புரியா தாயி னுண்மை
நீராளர்க் குரித்தாய சமையங்கள்
வருந்துபுன்மை நீங்கி டாதே.
(6)
நெஞ்சகமு தானாகி நிறைந்தமுதற்
காரணனா நிமல மூர்த்தி
அஞ்சலெனக் கூறியுநொந் தலமருவேற்
கருள்புரித லறமே யாகும்
வஞ்சருடன் கூடியென்னை மறக்கிலது
பாவமேவ ழங்கு மாற்றங்
கஞ்சமல ரனையமுக மட்டவாருக்
குருகுமவர்க் கருதொண் ணாதே.
(7)
சிற்றறிவைப் பொறிவென் றிறுமாந்து
நாட்கழியாத தெளிவுந் தொன்னூல்
கற்றவர்தந் திருமாப்பாற் றேறியவர்
நாடோறுங் கருது மாற்றைப்
பற்றவல்ல நன்னிலையுங் கொடுத்தபொரு
ளெதிர்தோன்றிப் பகைவர் நீறச்
செற்றருரிகூர்ந் துயர்வீட்டிற்
புகும்வாழ்வைத்
தருவதெண்ணித் தேம்பி
னேனே.
(8)
நீதிநிகர் பரிதியையுங் கருணைபொருந்
திங்களையு நியமித் தோங்குஞ்
சோதியெனக் குணர்த்தியசீர் தனைக்கருதிக்
களிகூர்வேன் றொன்னீர் சூழு
மேதினியோர் புகழுநல முதவாத
கொடுமையெண்ணி மெலிவே னெந்நா
ளாதியெழுத் துருவாகு மதுகுருவா
வரக்காண்ப தறிகி லேனே.
(9)
பெற்றகரிய சமரசமா முணர்வளித்துப்
பிரணவமாப் பிறங்குந் தெய்வ
மறத்தினிடத் தாவலுமற் றதனிடத்தில்
வெறுப்புமுடைத் தாமே யாகி
லிறப்பவரிற் சோரமற் றனதடி
யாருடன்கூட்டு மென்றே
யெண்ணித்
திறப்படுமென் மனக்கவலை யொழியுநா
ளெந்நாளோர் தெரிகி
லேனே.
(10)
பலபொருளுந் தானாகி யல்லாம
னிறைந்தொளிர்தற்
பரன்முற் றோன்றி
யுலகமெல்லா மறிந்துபுகல பெரும்புகழு
மெய்யுணர்வு முதவ வேண்டிப்
புலமுடையா ரிகழருமோர் மந்திரத்தால்
வழிபாடு புரிந்து மென்பாற்
கலகவிழிப் பேதைநல்லார் காதலவர்க்
கண்டுமனங் கலங்குற் றேனே.
(11)
வேலுடையான் கரிமுகத்தோன் விடையூர்வோ
னுமைதிருமால் வெய்யோ னென்னு
நூலுடையா ரறுவருக்கும் பொதுவாகி
நின்றுதவ நோற்பே றதந்நாண்
மாலுடையார் சிலர்க்குமருள் புரிந்தபொரு
ளுதவிசெய்ய மாட்டா தாயிற்
கோலுடையார் பதம்போற்றிக் கதியிகழு
மாந்தருள்ளங் கொதித்தி டாதே.
(12)
தொண்டரையு மன்னரையு மற்றுளபல்
லுயிரையுந்தன் சுதர்க ளாக்க
கொண்டபொரு ளொன்றிருக்கக் கோடாறு
கோடியெனக் குளறு மாந்தர்
கண்டகன வினுஞ்சிறிது மெய்யாகு
முலகினன்றக் கருத்துட் டோன்றி
விண்டமொழி யத்தனையும் பின்புயானால்
வேதமெல்லாம் வெறும்பொய் யாமே.
(13)
வன்சேனை சூழ்ந்தொலிக்க வருமிகலோர்
குலமழிக்கும் வண்மை யாலே
பொன்சேரு மார்பினன்போற் பூவுலகில்
வாழ்ந்துவிண்ணிற் புரமூன் றட்ட
பின்சேவி லெழுந்தருளும் பரமனைப்போல்
விளங்குமுயர் பெருமை யோர்க்கே
தன்சேவை யளிக்கவல்ல பிரணவச்சற்
குருவையெண்ணித் தவிக்கின்
றேனே.
(14)
பொன்னாலுந் திரண்டகொங்கைப் பொருப்பாலுங்
கடலாடை புனைந்த பூமி
தன்னாலும் வருந்துமவர் தம்மாலுந்
தளர்வடையுந் தமிய னென்பான்
முன்னாளிற் சிலவசன மொழிந்ததிந்நா
ளுணர்ந்தமுழு முதலே யாமா
லென்னாசைக் கமைந்ததிரு வுருவாவந்
தருளுமென விறைஞ்சுற்
றேனே.
(15)
எவ்வகைப்பே ருருவமுடைப் பலதேவுந்
தன்வடிவா மிணையின் மூர்த்தி
யவ்வவர்க்குத் தக்கநெறி யமைத்தபிரா
னென்னுடன்னற் றைந்த வாறு
தெய்வருளந் திடுக்கிடமற்றை யார்க்களிப்ப
புரிந்தடியார் சேவை காட்டிப்
பௌவநிகர் பிறப்பெழுந்தொ லைத்தருளிற்
றோய்ப்பதெண்ணிப் பரிவுற் றேனே.
(16)
தொகையேற்றி யுறவினருக் கொப்புவிப்ப
தெண்ணிமணி கழற்று
வேற்று
மிகையாய்ந லமுணர்ந்துங் குருபரன்மே
லொட்டாரம் விளம்பக்
கேட்டுப்
பகையாவர் ரென்செயலா மாகையினா
லவனருளைப் பணிந்து போற்றித்
திகைதீரக் கருதுவதே யுயர்தவமா
மென்விதியாற் றெளிந்தே மன்றே.
(17)
காத்தருள்வே னஞ்சலெனக் கழறுதற்கா
வொருகனவிற் கவின்ற நாத
னேத்தரிப்பு கழுணர்ந்து பெரிதிரக்குந்
தமியேனை யீனர் பாலும்
பூத்தபொரு ளீயெறும்பு நுகர்போகங்
கருதுமயல் பொருந்த வாட்டிப்
பாத்தமிழ்க்கு மிரங்காத கொடுமையை
மற்றாரொடு பகர லாமோ.
(18)
ஐந்துவண்ணச் சிகியேறி வெண்சேவற்
கொடிவிளங்கு மமல வேளை
யீந்துமுடித் தவன்சுதனே யென்போர்க்கு
மவன்குருவே யெனச்சொல் வோர்க்குந்
தந்துணையா மெனத்திகழுங் கவுமாரப்
பெருநெறியுந் தாண்டி யப்பான்
முந்துமறை முடிப்பாய்பி ரணவத்தி
னுயர்வுணர்ந்து மொழிந்தே மன்றே.
(19)
அறுவகைச மையமுந்தன் னவையவமா
மெனக்குலவு மானை
யன்றி
வேறுமொரு தெய்வமுண்டென் றுழல்வோரைக்
கனவினிலும் விரும்பா தார்க்கே
கூறுநர்க்கும் பொருளுணர்ந்து குறிப்போர்க்குந்
தக்கநலங் கொடுப்ப தாகி
மாறுபடா தொளிருமுயர் பிரணவத்தி
னொளியுருவா வயங்கு மன்றே.
(20)
சித்தாந்த வேதாந்த மெனப்பகரு
மிருபதமுஞ் சேர வாழும்
பத்தாந்தச் சைவமெனும் பெருங்கடலிற்
குளியாத பாவி யோர்க்கு
முத்தாந்தப் பிரணவத்தினுப் பரவுசற்றும்
விளங்காது முடிவிற்
றோன்றுஞ்
சத்தாந்தத் தனிநிலையுங் கிடையாது
கற்பனையாற் றயங்கு வாரே.
(21)
மான்றழும விழியாளை மலையனைய
முலைப்பாளை வையமி யாவு
மீன்றாளை யடிவருக்கெ ளியாளை
யிறைச்சியுண்ப ரீரல்
சூடு
மூன்றாய நெட்டிலைவே லுடையாளைப்
பயனுணர்ந்தாற்றுப் பாபோ மன்றே.
(22)
அளிப்பவன்றன் னுயர்வுணரா ராழியங்கை
தனைநாடா ராக்கர் வாழுங்
களிப்பழியப் போர்புரியுங் கருணையையுங்
கேட்டறியார் கமலை யன்பிற்
குளிப்பவர்தம் மிறுமாப்பைக் கண்டேனும்
பரவுகிலரா கூறொண் ணாத
வெளிப்படுமெய்ப் பொருளுடைய பிரணவமே
மறைமுடிவின் மிளிரு மன்றே.
(23)
கண்ணாரக் கண்டுமுண்மைச் சமையத்தோர்
பலர்புகழக் காதாற் கேட்டும்
விண்ணாய வெறும்பாழைக் கருதுநாக்குந்
துணையாய வெயிற்சூ டுண்டுந்
தண்ணாரும் தியைப்புண்டு குமிழ்சுடரே
முதன்மையெனத் தவஞ்செய் யாமற்
புண்ணாய மனங்கொள்வோர் பிரணவமா
நகரிமட்டும் போகா ரன்றே.
(24)
எந்தவகைச் சமையத்தோர் தங்களுக்குந்
தனித்தனிவே றியல்பு காட்ட
வந்தருளுங் குருவடிவே பிரணவமா
மெனவுணர்ந்து மயங்கு நாயே
னிந்தமகி தலமுழுதும் புகழ்கூற
விளையாடி யின்னந் தோன்றா
தந்தநலம் பெறவேண்டித் தளர்வதனை
யப்பொருளே யறியு மன்றே.
(25)
சத்தியமாத் தன்னறிவே காட்சியா
யொருகடவுள் சமையந் தோறும்
நத்தியவர் றொளிர்வதுமெய் யெனத்தெளிந்தோ
னெவனேனு ஞானா னந்த
நித்தியவீ டுடையவனே யவன்வடிவம்
பிரணவமே நிசநான் சொன்னேன்
பொல்லாரைத் திருத்துதற்காப் போர்பெரினும்
புண்ணியமே பொறியொன் றோர்ந்த
வில்லார்க்கே யிதுதோன்று மற்றையருக்
கொழியாத வழக்க தாமே.
(27)
எப்பேரு மெவ்வடிவு முடையானைப்
பலதேவென் றியம்பி வடிப
பொய்ப்பேதங் கருதிமிகப் போராடுஞ்
சமையத்தோர் புவியிற் றோயு
முப்பேருந் தனிவீடு மொப்புவது
கண்டுமகிழ முனிவர்க் காகுந்
துப்பேயந்தக் கரத்துணையாம் பிரணவந்தான்
பலகோடி சுருதி வித்தே.
(28)
பலசமையத் தலைவர்களுந் தேறியநன்
னிலையுணர்த்தும் பண்ப தாகிக்
குலவுதனிப் பிரணவமே வடிவாய
குருபதத்தைக் குறித்து நின்றோர்
கலகமிடும் புலைத்தொழிலோர் பெரும்படையிற்
புகுந்திரத்தக் கடலுண் டாக்கி
யலகையினங் களிகூரப் புரிவதற்கு
மஞ்சாரென் றறிந்தே மன்றே.
(29)
நீக்கரிய பிரணவமா நிறைந்தபரி
பூரணத்தி னிலைகண் டுள்ளார்
ராக்கமிகு திருவருட்பே றடைந்தொருவன்
பகர்மொழிகேட் டமைவா ரன்றிப்
போக்கலரு மாயையோர் பொருளாகச்
குறித்தவன்பாற் பொருந்து மாண்டு
பாக்கனைய முலையார்தம் வயிற்றிலின்னம்
பிறந்தழுது பரிவு றாரே.
(30)
அருளாண்மை பெற்றுடையார் தன்வடிவே
யெனத்தெளிவு மறிஞர்க் காகும்
பொருளாய பிரணவத்தைக் கருதாதா
ரெனுமொன்றிற் பொருந்தா ரெல்லா
மிருளாருங் குழலுடையார் கருப்பத்தே
புகுவதுண்டென் றிசைவா ராயிற்
றெருளாக்க முதவுமதாற் சிறந்துள்ளார்
மனஞ்சிறிதுஞ் சினந்தி டாதே.
(31)
தாமுணரும் பிரணவத்தை யிகழாதார்
தங்களுக்கோர் தாய்போல் வாழு
மாமுனிவர் பதத்துக்காத் தினம்புனையும்
பேறுபெறும் வருந்து மென்னைக்
காமுகருங் கொன்றருந்திக் களிப்போரு
மீகையிலாக் கயவ ராதித்
தீமுகத்தோர் பலருநிந்தை செப்புவது
தீர்வதென்றோ தெரிகி லேனே.
(32)
எத்தனையோ சித்தர்களைக் கண்டதுணைச்
சுடராதி யெண்ணின் மீனுஞ்
சுத்தவெளி யாதியைந்து பூதமோர்
தவவீரன் றோன்றி யாருஞ்
செத்தபிணம் புசித்தாலுயிர் வருத்தலின்றி
வாழும்வண்ணஞ் செய்யக் கண்டா
லத்தனிவீட் டைகுவனென் றிருப்பவனே
பிரணவமென் றறிந்தேனி யானே.
(33)
பிரணவத்தின் பொருளாரு வாறுணர்ந்தத
னாலிறுமாந்து பிழைசெய் யாமற்
கரணமொரு நான்குமைந்து புலனுமொடுங்
கியநிலையைக் கண்டு நாடிச்
சரணருடல் பொருளாவி கவருமொன்றோ
டுரையாடித் தான்றா னாகி
மரணமொடு பிறப்புமின்றி யிருப்போனே
மெஞ்ஞான வாழ்வுற் றோனே.
(34)
பக்குவந்தோன் றுதனிமித்தம் பாடிவைத்த
பலநூலிற் பரந்தி டாமன்
முக்குணமுங் கடந்தமுழுப் பொருளுணர்ந்து
பிரணவத்தை மொழிந்து தேறி
யெக்குருவுந் தன்வடிவா மெனத்திகழு
மொருவடிவத் திக்சை பூண்டு
சிக்குமுழு வதுந்தவிர் விளையாடும்
பேறுபெற்றோர் சிறந்து ளோரே.
(35)
வேதாந்தஞ் சித்தாந்த மெனுமிரண்டாற்
றடுமாறி வெதும்பி யப்பாற்
போதாந்தப் பிரணவத்தைக் குறித்திறைஞ்சி
யருட்பார்வை பொருந்த லாலே
பாதாந்தங் கலந்தொளிருங் சமரசத்திற்
புகுந்துநின்று பார்க்கப் பார்க்க
நாதாந்தந் துலங்கியுயர் குருபாதங்
காட்டுமென நவில்வ ரன்றே.
(36)
நூற்
பயன்
(நேரிசை
வெண்பா)
மாதவருக் காம்பிரண வாநுபூ திப்பனுவற்
போத முடைய புனிதரெல்லா – நீத
முணர்வா ரருளாண்மை யோங்கி மகிழ்வார்
புணர்வா ரொழியாப் புகழ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக