வண்ணச்சரபம்
தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்த
ஞானவந்தாதி
காப்பு
(நேரிசை
வெண்பா)
நானவனென் றெண்ணி
நலியாத நாட்டநல்கும்
ஞானவந் தாதி நவில்வதற்கு
– தானவரே
அன்ன கொடியோ ரழிய
விளையாடும்
மன்னர்மன்னர் கோன்துணையா
வான்.
நூல்
(கட்டளைக்
கலித்துறை)
ஒன்றுநின் றாடுமியல்பே
முழுதுமென் றுன்னியுண்மைக்கு
யென்றும் குறைவு
வராதென்று கூறி யிரவுபகல்
துன்றுதல் யென்னநலந்தீதும்
காலத்திற் றோய்தல்கண்டு
கொன்றுதின்
னாதநல் நோன்பேகைக் கொள்வதில் குற்றமின்றே.
(1)
குற்றமில் லாததுமெய்
ஞான மென்றுங் குறியறிந்து
பற்றறுக் கின்றவர்க்
கேசொந்த மென்னும் பகையுறவு
மற்றவ ரேபெரி யோரென்று
மாண்மை யறிந்துசெய்யக்
கற்றவல் லோருல கோர்க்குயி
ராமென்றும் கண்டனமே.
(2)
கண்டத்தில் பத்திசெய்
தாலன்றி யாவும் கடந்துநின்ற
தொண்டர்க்குந்
தோன்றும் பொருளான ஞானச் சுடர்விளங்காது
அண்டத்த கண்டம் பலவாகத்
தோன்று மறிந்தவர்க்குப்
பிண்டத்து மண்டத்து
மொன்றாகி வேறும் பிரிந்திடுமே.
(3)
பிரியாம
லெங்கெங்கு மெல்லாப் பொருளையும் பெற்றவொன்று
சரியான தெய்வம்மற்
றெல்லாம் சமயத் தலைவர்தம்பேர்
மரியாதி ருப்பதவ்
வொன்றன்றி வேறில்லை மற்றதுதான்
கிரியாதி மூன்றுமொன்
றாநிலை யால்வருங் கேடற்றதே.
(4)
கேடற்ற தெய்வமொன்
றேயெந்த வாறு கிளத்திடினும்
பாடற்கி சைந்த படிபாடிப்
போடினும் பற்றிநிற்கும்
நாடத் தகுமுரு வெல்லா
மெடுக்குந் நலமிரந்து
தேடத் துணிந்தவர்
நெஞ்சில் நின்றாடும் செயலுள்ளதே.
(5)
செயலுள்ள தென்றுமது
இல்லாத தென்றும் திகழுமொன்றை
மயலுள்ள நெஞ்ச ரறிவார்க
ளோநல்ல மானிடனென்று
அயலுள்ள மாந்தரும்
சொல்லக் குலாவி யறிவில்நின்று
கயலுள்ள
கண்ணியர்க் கேங்காதி ருப்பவர் காண்பதுண்டே.
(6)
காண்பது மல்லது மாநின்ற
வொன்றைக் கருதிநிற்கும்
மாண்பரி தாகிய பேறல்ல
வோசற்றும் வாய்மையின்றி
வீண்டுபடு காலங்
கழிக்கின்ற பேரும் விரும்புவதோ
நாண்படு நெஞ்சத்து
மின்னார்க்கஞ் சாத நரர்கொள்வதே.
(7)
நரரர்ப் பிறந்தும்
தவம்புரி யாமலிந் நானிலத்தி
லரம்நேரும் கண்ணியர்
மோகக் கடலி லழுந்துமவர்
பரமான தன்றிமற்று
வோர்தேவு மின்றென் னும்பத்தியது
சிரமே
யனையதென் றோர்ந்துமெய் வீட்டினுள் செல்வதின்றே.
(8)
செல்வமுங் கல்வியு
மானந்த வாரித் திவலையென்னச்
சொல்வது கொண்டவர்
ஞானாநு பூதிச் சுடரினுக்குள்
எல்வந்து போதலு மல்தந்து
தீர்தலு மிந்துதித்துப்
பல்வண்ண மாகத் திகழ்தலுந்
தேறும் பரிசுநன்றே.
(9)
நன்றென்றெ வரெவர்
சொல்கின்ற தேவுந் நமதுதெய்வம்
என்றென்று கூறத்
துணிந்ததென் நாவன் றெனையடைந்தது
ஒன்றென்ற போதலா லோதே
னுரைத்து ளுணர்ந்தபின்பே
கன்றென்று தம்மைக்
குறித்திருந் தோர்நிலை கைவந்ததே.
(10)
கைவந்த வுண்மையை
நெஞ்சத் தேகண்டுங் காசினியின்
வெய்வந்து
தோன்றிடக் காணாமைக் கஞ்சி வெகுளியென்னும்
பொய்வந்த மூடரைப்
போலலைந் தாலும் பொறியுடையார்
தெய்வம் தனைமற வாதுன்னி
வாழும் திருவினரே.
(11)
திருவருள் பேற்றினு
ளெல்லா மடங்கிய சீருணர்ந்து
பொருள்பல வாவரு மொன்றெனத்
தேர்ந்து புவியிடத்தின்
மருவுஞ் சமயங்க ளெல்லாங்
கடந்து மயலுடையார்க்
கொருவிதச் சார்புடை
யாரெனத் தோன்றுந ருத்தமரே.
(12)
உத்தமத் துத்தம மாம்பேறு
வேண்டி யொருபொருளை
நித்தமுந் நாடிப்
பலதேவுண் டென்னும் நினைவைவிட்டுச்
சுத்தமெய்ஞ் ஞான
மிதேயென்று நாளும் துணிந்துநிற்கும்
பத்தருக் கன்றியு
ளஞ்சாருக் கஞ்சும் பழவினையே.
(13)
பழகிய தாய சமையத்
ததீதம் பதிந்திடினும்
அழகிய மூர்த்தி யடியார்
வடிவமென் றன்புசெய்து
தழல்நிக ராம்தொழில்
செய்யுஞ் சமையம் தனைவெறுத்துக்
கழலணி வீரருங் கைதொழ
வாழ்தல் கடினமன்றே.
(14)
கடியாரும் பூம்பொழில்
நேர்குழ லார்முலைக் காதல்கொண்டு
மடியா
திருக்கின்ற மாண்பெளி தோவுண்மை வாழ்வைநம்பிச்
செடியாரும் மேனியை
நானென் றிடாத்திறன் சேரநிற்கும்
அடியாருக்
கெய்துமற் றோர்க்கெய் திடாதென்னு மம்புவியே.
(15)
அம்புவி முற்றும்
படைத்தளிப் போன்றம தண்ணலென்று
நம்புவ தற்றுப் பலவாறு
கூறும் நார்தமக்கும்
தெம்புவந் தொன்றிடச்
செய்யுமெங் கோனவன் சீருணர்ந்தும்
வெம்புசந் தேகப்
பிணியால் வருந்தல் விதிவசமே.
(16)
விதியே வலிதென்று
வீண்நாள் கழிப்பதும் வீறுகொண்ட
மதியே யுயர்வென்று வல்லோ னருளை மறப்பதுவும்
சதியே விளைக்குமென்
றோர்ந்தோர் சமரசச் சத்தியமாம்
நிதியே மெய்ஞ்ஞான
மறிவா ரறிகின்ற நிச்சயமே.
(17)
நிச்சய மெங்கள் சமையமொன்
றேயென்று நீள்நிலத்துப்
பொய்ச்சம யத்துப்
புகுந்தோருஞ் சொல்வர் புலால்விரும்பி
அச்சமற் றொன்றினைக்
கொல்லா திருக்கு மவர்சமயம்
மிக்கமல் லான்மற்ற
தெல்லாச் சமையமும் வெந்நரகே.
(18)
நரகுஞ் சுவர்க்கமுந்
தீதே யெனக்கண்டு நம்பெருமா
னிரவும் பகலு முடையானெங்
கெங்கு மிருக்குமெனப்
பரவுந் திருவுடை
யார்களி கூர்ந்து பகர்வதெல்லாம்
விரவும் சமரச போதமெய்
ஞானம் விளக்குதற்கே.
(19)
விளக்கும் ஒளியு
மென்ஞானம் சித்தொடு மேவுமென்போர்
துளக்குஞ் சிரத்தின
ராம்படி பேசுந் துணிவுடையார்
அளக்குந் தகுதியு
மல்லாதெங் கெங்கு மமர்ந்தவொன்றை
வளக்குங் கும்முலை
யாரினும் சிற்சிலர் வாழ்த்துவரே.
(20)
வாழ்த்தலில் தேர்ந்தவர்
சிந்தனை செய்யின் மகிழொருவன்
பாழ்த்த வினைக்கு
மருந்தாக நின்ற பயனறிந்து
காழ்த்தநெஞ் சாளர்
பகையாந் தவத்தினர் காசினியில்
தாழ்த்த லுள்ளலிழிவு
வன்னவர்க் கேயென்று சான்றுமினே.
(21)
சாற்றுகை நாதமும்
விந்துங் கலந்த தனியெழுத்தே
போற்றுகை யெண்ணப்
படியேவந் தாண்டருள் பூரணமே
ஏற்றுகை யொன்றையுங்
கொல்லா விரதத் தியல்தவமே
மாற்றுகை வஞ்சச்
சமையங்கள் தீர்க்கரும் வன்பவமே.
(22)
வன்பவம் தன்னை யிறப்புடன்
தீர்த்து மறுக்கரிய
தன்பதம் நல்கும்
பெருமா னொருவன் தனியனென்பது
என்பர மார்த்தமெனக்
கூறும் ஞானிக் கிகதலத்தோர்
துன்பம் தவிர்ப்ப
தரிதோகற் றாய்ந்து துறந்தவரே.
(23)
துறந்தோர் இருக்கத்
துறவா தவர்க்குத் தொழும்புசெய்யப்
பிறந்தோர் தமக்குஞ்
சிறிதார்வம் நல்கும் பிரானருளை
மறந்தோர் சமையக்
குழியூ டுழலும் மனிதரெல்லாம்
இறந்தோ ருடலெடுத்
தாலும்மெய் வீட்டினி லெய்தரிதே.
(24)
எய்தற் கரிய பெரும்பேறு
பெற்றன மென்றிருப்போர்
செய்தற் கரிய செயல்வேண்டு
மென்று தினமுரைப்போர்
உய்தற் குரிய விதியாள
ரென்று முணர்வுடையார்
நைதற் குரியவ ராவர்கொல்
லோஇந்த நானிலத்தே.
(25)
நானென்று நீயென்று
அவனிவ னென்று நவின்றிடினும்
வானென்று நின்ற பெருமானை
நாடி வணங்குமவர்
தானென்று நின்ற பொருளே
யிருந்துந் தனையொளித்த
வேனென்று
வுணர்ந்தவர் கொள்ளும்மெய் ஞானத்தின் மேவுவரே.
(26)
மேவலர் தாமு மவனே
யெனச்சொல்லும் மெய்யுணர்ந்தே
பரவலர் தாமுங் குருவே
துணையெனும் பத்தர்களும்
காவலர் கோவும் துதிகூறி
யஞ்சிடக் கைநொடியில்
பூவலம் செய்திடும்
வல்லாருஞ் ஞானம் புனைந்தவரே.
(27)
புனையாத் தனிமுடி பூண்டாலுங் கற்பெனும் போதமுற்ற
மனையாளைச் சேரினும்
பல்கோடி சேனை வளையினும்போர்
வினையாற் செகுக்கும்
வலியால் களிப்பினும் மெய்க்கடவுள்
அனையா ளனையவொன் றேயென்னுஞ்
ஞான மறிவரிதே.
(28)
அறிவாற் சமையங்க
ளெல்லா மெடந்த தீதமுற்று
செறிவாயெங் கெங்கும்
விளையாடுந் தெய்வச் செயலுணர்ந்து
குறியான தொன்றில்நின்று
ஓரெழுத் தோதிக் குவலயத்தில்
நெறியே விளைத்திட
நத்துமெய் ஞானிகள் நித்தியரே.
(29)
நித்திய மாம்பொரு
ளன்புந் தவமும் நிறைந்தவல்லோர்
நத்திய வாறு திகழுமென்
றோர்ந்து நவிலரிய
சத்திய மான வடிவங்
கருதித் தவம்புரியும்
முத்தியி னார்தெய்வ
மோதருந் தன்மை யுடையவொன்றே.
(30)
நூற்பயன்
(கலி
விருத்தம்)
நான்ந வின்றிடு ஞானவந்
தாதிநூல்
ஆன பாடல்க ளாறைந்துங்
கற்றுளார்
மோனம் முற்றி மொழியிறந்துண்
மைவீட்டு
ஈன மின்றி யிருந்துவப்
பார்களே.
ஞானவந்தாதி
முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக